…
…
அரக்கோணம் திமுக வேட்பாளர், இலங்கையில்,
மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பல்லாயிரக்கணக்கான கோடிக்கு முதலீடு செய்திருப்பதாக –
பிரமிக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையின் சரித்திரத்தில், இதுவரை செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளிலேயே – இது தான் மிகப்பெரிய முதலீடு என்று சொல்லப்படுகிறது…
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருவது
“சில்வர் பார்க் இண்டர்நேசனல்” நிறுவனம்-
இதன் இயக்குநர்கள் பெயர்கள் –
சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும்
அனுசியா ஜெகத்ரட்சகன் என்று குறிப்பிட்டு
சென்னை முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
இம்மூவரும் அரக்கோணம் தொகுதியின்
திமுக வேட்பாளர் திருவாளர் ஜெகத்ரட்சகனின்
மகன், மகள், மற்றும் மனைவி ஆவார்கள் என்று இந்த
தகவல் சொல்கிறது.
3.85 பில்லியன் அமெரிக்க டாலர்களில் அமைய இருக்கும் அந்த சுத்தகரிப்பு நிலையத்தின் 1887 மில்லியன் டாலர்கள் நேரடி முதலீட்டில்,
சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டர்நேசனல் தருவதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
( மூன்றரை பில்லியன் அமெரிக்க டாலர் என்றால்
எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இந்தியப்பணம்…?
நான் களைத்து விட்டேன்…தயவுசெய்து,
நண்பர்கள் யாராவது கணக்குபோட்டு, பின்னூட்டத்தில்
தெரிவியுங்களேன்…!!! )
இலங்கையின் சரித்திரத்தில், இதுவரை செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளிலேயே – இது தான் மிகப்பெரிய முதலீடு என்று பெருமையோடு சொல்லப்படுகிறது…
இதில் இந்தியர் முதலீடு செய்திருப்பதாக இலங்கை தெரிவிக்கவில்லை…
ஆனால், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள “சில்வர் பார்க் இண்டர்நேசனல்” என்கிற நிறுவனம் முதலீடு செய்கிறது என்று தான்அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சில்வர் பார்க் யாருடையது என்பது தான் மேலே விளக்கப்பட்டிருக்கிறது.
——————–
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஏற்கெனவே,
கடந்த காங்கிரஸ்+திமுக கூட்டணி அரசில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியதும், அதன் விளைவாக மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனதும்
தமிழக மக்கள் அறிந்ததே…
இவர் ‘கலைஞரின் கஜானா’ என்று அன்போடு கழகத்தவரால்
அழைக்கப்பட்டதும் தமிழக மக்கள் அறிந்ததே…
இப்போது, இது விஷயத்தில், நமக்கு தெரிந்தது மிகக் கொஞ்சம்…
தெரியாதது எக்கச்சக்கம் என்றே தெரிய வருகிறது…!!!
தேர்தல் சமயமாயிற்றே –
பொது மக்களுக்கு சில சந்தேகங்கள் வரக்கூடும்…
எதிர்க்கட்சிகளும் கேள்விகள் கேட்கும்…
– இத்தனை ஆயிரம் கோடிகளும் ( மூன்றரை மில்லியன் டாலர்…? )
இந்தியாவில் சம்பாதித்ததாகத்தான் இருக்கும்…..
– அத்தனைக்கும் நேர்மையாக கணக்கு காட்டப்பட்டு, அதற்குரிய
வரிகளும் கட்டப்பட்டிருக்கும்…
– சிங்கப்பூருக்கு இந்த பணத்தை கொண்டு செல்லும்போது –
கண்டெயினரிலும், கப்பலிலுமா – கொண்டு செல்ல முடியும்…?
– உரிய விதத்தில், கணக்கு வழக்குகள் காட்டப்பட்டு,
ரிசர்வ் வங்கியிடம் முறைப்படியான
ஒப்புதல் பெற்று தான் கொண்டு செல்லப்பட்டிருக்கும்…
– சம்பந்தப்பட்டவர்கள், (மகன், மகள், மனைவி …)
இத்தனை ஆயிரம் கோடிகளை சம்பாதிக்க, பாவம்…
எத்தனை எத்தனை துன்பங்களை மேற்கொண்டார்களோ ..?
– இப்பேற்பட்ட மாபெரும் தொழிலதிபர்களை, திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கி இருப்பதற்கு தமிழக மக்கள் பெருமை கொள்ள வேண்டும்…!!!
– இருந்தாலும், தேர்தல் நேரத்தில், பலரும் பலவித சந்தேகங்களையும்
எழுப்பக்கூடும்….
அதனாலென்ன – நமது செய்தியாளர்கள் மேற்படி விஷயங்களில் எழக்கூடிய சந்தேகங்களை –
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் கேட்டு விளக்கம் பெற்று –
தமிழக மக்களுக்கும் தெரிவித்து விட்டால், சந்தேகங்கள் எல்லாம்,
வெய்யிற்கால மேகக்கூட்டங்கள் போல காணாமல் போய்விடும்…!!!
ஒரு பச்சைத்தமிழரை, இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபராக்கி இருப்பது, திமுகவை பொருத்த வரையில் – எப்பேற்பட்ட சாதனை…?
இத்தகைய ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்திக்காட்டி, அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பல சாதனைகளைப்புரிய வேண்டும் என்கிற உயரிய லட்சியத்துடன் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இடம் கொடுக்க முன்வந்த திமுக தலைமை பாராட்டிற்குரியது…!!!
அவர் மீண்டும் அடுத்த ஆட்சியிலும் மத்திய அமைச்சராகி,
திமுக தலைமைக்கும், தன் குடும்பத்திற்கும் – புகழும், பொருளும்,
பெருமையும் சேர்க்க வாழ்த்துவோமாக…..
.
—————————
பின் குறிப்பு – ஒரே ஒரு சின்ன பிரச்சினை..
சுமார் 3 வருடங்களுக்கு முன்னதாக, ஜூலை 2016-ல்,
அவரது இல்லங்களிலும், அலுவலகங்களிலும்
300-க்கும் மேற்பட்ட வருமானவரி மற்றும் அமலாக்கப்பிரிவு
அதிகாரிகளால் – ரெய்டு செய்யப்பட்டு, ஆவணங்கள் பல
கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின…( கீழே…).
…

…
இந்த சோதனைகளின் முடிவுகள் என்று –
எதுவும் இதுவரை வெளியாகவில்லை….
வழக்குகள் எதுவும் தொடுக்கப்படவும் இல்லை…
அதனாலென்ன –
இந்த ரெய்டுகள் வழக்கமானவை தான்…
அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுவதற்காக,
அடிக்கடி இந்த மாதிரி எதாவது ரெய்டுகள் நடத்துவது வழக்கம்….
இதுவும் அத்தகைய ஒன்று தான் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டால் –
இந்த ரெய்டுகளின் விளைவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும்
சில முட்டாள்களின் முகத்தில் கரியை பூசிய மாதிரி இருக்கும்…
காதில் பூ சுற்றிய மாதிரியும் இருக்கும்….!!!
.
————————————————————————————————————



அய்யா … // இவர் ‘கலைஞரின் கஜானா’ என்று அன்போடு கழகத்தவரால்
அழைக்கப்பட்டதும் தமிழக மக்கள் அறிந்ததே…// என்று தாங்கள் இன்று குறிப்பிட்டுள்ளது பற்றி நம் தளத்தில் !// கலைஞரின் கஜானா – ” ஜெகத் “……!!! சொல்வது ( மாறனின்..? ) ஜூ.வி.//
Posted on ஜூலை 19, 2016 by vimarisanam – kavirimainthan என்று முன்பே ஒரு இடுகை வெளி வந்துள்ளது https://vimarisanam.wordpress.com/2016/07/19/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/ — இன்னும் நிறைய தலைப்புகளில் முன்பே பலமுறை இவரைப்பற்றி தளத்தில் உள்ளதை படித்தாலே இன்றைய இடுகைக்கு –இலங்கையில் பல்லாயிரம் கோடி முதலீடு என்பது இவருக்கு சாத்தியமே என்பது விளங்கும் — அடுத்து இன்றைய சுவாரஸ்ய செய்தி :
// டாப் அரசியல்வாதிகள் – இந்தியா //
Read more at: https://tamil.oneindia.com/politicians/
இந்த லிங்க்கில் சொடுக்கினால் முக்கிய தலைவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் சொத்து — கடன்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன அதில் மு.க.ஸ்டாலின் என்பதில் அவரது சொத்து…. // சொத்துக்கள்₹5.84 CRORE கடன்கள்₹N/A // என்று இருக்கிறது — நம்பலாம் …?……. மேலும் பலரைப்பற்றியும் துரைமுருகன் உட்பட நிறைய அன்பர்களின் தகவல்கள் கொட்டிக் கிடந்து நமக்கு வியப்பது அளித்து — நம்பிக்கை நட்சத்திரங்களாக ஏற்றுக்கொள்ள ? வைக்கின்றன …????
மூன்றரை பில்லியன் டாலர் இந்தியா ரூபாயில் எவ்வளவு என்று கண்டு பிடிப்பதற்க்கே
நமக்கு தலை சுற்றுகிறது, இந்த பணத்தை என்ன தொழில் செய்து ஜெகத்ரக்ஷகன்
சம்பாதித்தார் என்று அவர் அவருடைய தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அவர் விளக்குவார்
என்று நம்புகிறோம். இப்போது திமுகவினர் கூறும் நீரவ் மோடி விஜய் மல்லயா
போன்றவர்கள் மோடி வருவதற்கு முன்னமேயே 2009 வாக்கில் கடன் பெற்றவர்கள் என்று அறிகிறோம். ஆக பெரும்பாலும் மெகா ஊழல்கள் காங் திமுக கூட்டணி ஆட்சி நடக்கும்போதே
நடந்து விட்டன. தாங்கள் ஆட்சி நடத்தும் போது நடந்த ஊழல்களை மோடி ஆட்சியில்
நடந்ததாக பொய் பிரசாரம் செய்வதில் காங் மற்றும் திமுகவினர் மிகவும் வல்லவர்கள்.
அதுவும் இவ்வளவு பெரிய முதலீடு இலங்கையில் நடை பெற ஏராளமான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசின் உதவி இல்லாமல் நடந்திருக்க முடியாது. ஆக தமிழின விரோதிகள்
ஆட்சி செய்யும் இலங்கையில் திமுக பிரமுகர் ஒருவர் இவ்வளவு பணம் முதலீடு செய்வது
தமிழக வாக்காளர்களை நிச்சயம் யோசிக்க வைக்கும். திமுகவினருக்கு கடல் கடந்தும் சொத்துக்கள் இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை .
மாஃபியா கும்பலின் தலைவனுக்கு 20% ஷேர் இருக்கும். அவனின் தளபதிகள் எந்த விதத்திலும் சம்பாதித்துக்கொள்ளலாம். இப்படித்தான் கருணாநிதி ஆரம்பகாலத்திலிருந்து நடந்துவந்திருக்கிறார். ஸ்டார் குழுமத்துக்கு மார்ச்சுவரி, பாலங்கள் கட்டச்சொன்னதிலும் அவருக்கு பங்கு உண்டு.
2004-2014வரை, வகைதொகை இல்லாமல் காங்கிரசும், திமுகவும் இந்தியாவைச் சூறையாடியது. அந்தச் சமயத்தில்தான் பல்லாயிரம்கோடி டி.ஆர் பாலுவும் சம்பாதித்தார் (ஆனால் % சரியா கொடுக்காததனால் அடுத்த முறை அமைச்சராகவில்லை).
நமக்குத்தான் சிங்களம், தமிழினம், தமிழர், இந்தி, கன்னடம் என்றெல்லாம் பாகுபாடு. அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் கிடையவே கிடையாது. அவர்களுக்கு ஒரே ரூல், ‘வரவு’. ‘நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்’? நமக்கு நிறைய விஷயங்கள் தெரிவதில்லை. அதனால், இவங்க ‘நேர்மை’, இவங்க ‘திருடர்கள்’ என்று நமக்குச் சாதகமாகவே நினைக்கிறோம் (நான் உள்பட). வைகோ மதுவிலக்கிற்காக அதீத ‘நாடகம்’ நடித்திராவிட்டால் நமக்கு, அவருடைய மகன் மாதம் 25-50 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் சிகரெட் ஏஜெண்ட் என்பது தெரியுமா இல்லை திமுக பிரமுகர்கள் பலர் இதுபோல ஏஜென்சி எடுத்து சம்பாதிக்கிறார்கள் என்று தெரியுமா? டி.ஆர்.பாலு/கனிமொழி இவர்களுக்கு மது ஆலையில் பங்கு இருக்கிறது என்பதை வெளியிட்டதனால், அவர்களைப்பற்றியோ ஆ.ராசா பற்றியோ விகடன் குழுமம் எழுதக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெற்றது தெரியுமா? வரும்காலத்தில் ‘வைகோ, ராஜபக்ஷே உடன் கூட்டுச் சேர்ந்து இலங்கையில் பெரிய தொழிற்சாலை நடத்துகிறார்’ என்று தெரிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதனால்தான் கனிமொழி, திருமாவளவன், டி.ஆர் பாலு போன்றவர்கள் ராஜபக்ஷேயைப் பார்த்துப் பல் இளித்து பரிசுகள் (இல்லை.. தொழில் தொடங்க அனுமதி போன்றவை இருக்கும்) பெற்று வந்தது.
பாஜகவின் கிரெடிபிலிட்டி பல்லிளிப்பது இதுபோன்ற ஊழல் விஷயங்களில்தான். அவர்கள் நினைத்தால் ‘ரெய்டு’ என்று படம் காண்பித்ததும், ‘ரெய்டு’க்கு அப்புறம் ஒன்றுமே செய்யாததும் பாஜகவின் மீதான நம்பகத்தன்மையை இல்லாமல் செய்துவிடுகிறது.
திமுக இந்தியாவில் ஊழலுக்கு ஒரு உச்சத்தையே காண்பிக்கும் கட்சி. ஊழலில் பலப்பல சாதனைகளைப் புரிந்துள்ள கட்சி, ஸ்டாலின் உள்பட. காங்கிரஸ், சொல்லவே வேண்டாம். அகில உலக ஊழல் கட்சி அது.
பாஜக – ஊழலைப் பற்றிச் சொல்லுவதற்கு அருகதை இல்லாத கட்சி. எந்த ஊழலையும் வெளிக்கொண்டுவந்ததில்லை. அவர்கள் கட்சி உறுப்பினர்கள் உட்பட, எந்தவிதமான ஊழலையும் அவர்கள் சமரசம் செய்துகொண்டே வந்திருக்கிறார்கள், பொலிட்டிகல் மைலேஜுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி/ஓபிஎஸ்/மற்ற அதிமுக பிரமுகர்கள் ஊழல் செய்தார்கள் என்று சொல்வது, பிக்பாக்கெட் திருடனை ப்ரொஜெக்ட் செய்வது போன்று. யார் அப்படிப் ப்ரொஜெக்ட் செய்கிறார்கள்? திமுக, காங்கிரஸ் போன்ற சம்பல் கொள்ளையர்கள்.
புதியவன் சார்,
நான் சரியாக எடிட் செய்திருக்கிறேனா ?
// எடப்பாடி/ஓபிஎஸ்/மற்ற அதிமுக பிரமுகர்கள் ஊழல் செய்தார்கள் என்று
திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சொல்வது,
பிக்பாக்கெட் திருடனை சம்பல் கொள்ளையர்கள் ப்ரொஜெக்ட் செய்வது போன்று
உள்ளது. //
திருடர்களுக்கு துணை போவது போல் முதலில் பாவ்லா காட்டுவது — விஷயங்களை தெரிந்துகொள்வது –அதைவைத்து படிய வைக்கப்பார்ப்பது — படிய முரண்டு பிடித்தால் ரெய்டு பூச்சாண்டி காட்டி தன் வலைக்குள் விழ வைப்பது — இது ஒரு விதமான கொள்ளையர்களை விட படு மோசமான பேர்வழிகளின் தூய செயல் … ! இது எல்லாக்காலத்திலும் உள்ளது தான் — பாம்பின் கால் பாம்பறியும் … ?
தனது நிரந்தர ஃபைனான்சியரான ஜெகத்’திற்கு அரக்கோணத்தில் சீட் கொடுத்த
முன்னாள் தளபதி தான் சேலத்தில் டாக்டர் ராமதாஸை டயர் நக்கி என்று
நாக்கில் நரம்பில்லாமல் ஏசுகிறார்.
செய்தியாளர்கள் ஜெகத் விஷயத்தில் சைலண்டாக இருப்பது ஏன் ?
இலங்கை பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடு பற்றி கேள்வி கேட்காமல் இருப்பது ஏன் ?
கண்ட கண்ட குப்பை விஷயங்களை எல்லாம் மாலை/இரவு
விவாதத்தில் கேள்வி கேட்கும் ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஊமையாகிப் போனதேன் ? பணம் பத்தும் செய்யும் என்பதாலா ?
இலங்கையில் ஜெகத்ரக்ஷகன் செய்துள்ள 26000 கோடி முதலீடு செய்துள்ளதை
இன்று இரவு நியூஸ் 7 தொலைக்காட்சி கருத்தாய்வு செய்யுமா? உப்பு
சப்பில்லாத செய்திகளுக்கு ட்விட்டர் போடும் இது இன்று இரவு கலந்துரையாடல்
ஒளி பரப்புமா ? நடுநிலை என்று சொல்லிக்கொண்டு திமுகவுக்கு கூஜா தூக்கும்
ஊடகங்கள் இதை ஒளிபரப்புமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி .
தமிழ்மணி, “பணம் பத்து+ ஒன்றும் செய்யும்”
+ஒன்று = ஊடகங்களை விலைக்கு வாங்குவது.
நியூஸ் 7 -ல் விவாதம் நிச்சயம் நடக்காது.
புதிய தலைமுறையிலும் நடக்காது – இந்த தேர்தலில் பு.த.அதிபர்
திமுக கூட்டணியில் வேட்பாளராக நிற்கிறார்.
இந்து தமிழ் செய்தித்தளத்தில் இப்போது வந்திருப்பது –
//ஜெகத்ரட்சகன் விளக்கம்
இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘இதில், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. இப்போதுதான் விண்ணப்பித் திருக்கிறோம். அதன் மீது அரசு பரிசீலனை செய்து வருகிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர்’’என்றார்.//
மறுக்கப்பட முடியாத நிலையில் செய்தி வெளிவந்த பிறகு ஒப்புக்கொண்டு தானே
ஆக வேண்டும் ?
அது சரி, அந்த முதலீடு – 26,000 கோடி ரூபாய் – அதை இவர் எப்படி சம்பாதித்தார் என்பது தானே முக்கிய கேள்வி. அதையும் விளக்கினால் தேவலை.