திமுக, அதிமுக -இரண்டு கட்சிகளுக்கும் ஒரு சவால்… ஏற்றுக் கொள்பவர்களுக்கு கண்களை மூடிக்கொண்டு ஓட்டு போடலாம்…!!!




திமுக, அதிமுக – இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன…

இரண்டு கட்சிகளும் தங்கள் அறிக்கையில் சொல்லி இருக்கும் விஷயங்களில் பெரும்பாலானவை மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடியவை…

இந்த இரண்டு கட்சிகளும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இல்லை. அதை தெரிந்துகொண்டே தான், வேண்டுமென்றெ தான் இந்த வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கின்றார்கள்….
என்ன நினைப்பில்…?

தேர்தல் நடக்கப் போவது பாராளுமன்றத்திற்கு.
பாராளுமன்றத்தில் எந்த கட்சி பெரும்பான்மையை பெற்று,
மத்தியில் ஆட்சி அமைக்கிறதோ – அந்த கட்சி மட்டுமே இந்த
வாக்குறுதிகளை செயல்படுத்தும் சக்தியை பெற்றிருக்கும்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில், பாஜக, காங்கிரஸ் – ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் இல்லை… எனவே மத்தியில் நிச்சயமாக கூட்டணி ஆட்சி ஏற்படவே வாய்ப்பு.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்றால் – அதில் திமுக இருக்கும்.
பாஜக கூட்டணி ஆட்சி என்றால் – அதில் அதிமுக இருக்கும்.

-இந்த நிலையில், இந்த 2 கட்சிகளும் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை
தமிழக மக்கள் உண்மை என்று நம்ப வேண்டுமானால் –

இவை, ஒரு சவாலை ஏற்க முன்வந்து –
தமிழக மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் அமையக்கூடிய ஆட்சியில்
தாங்கள் பங்குபெறக்கூடிய சூழ்நிலை உருவானால் –

தாங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதாக / செயல்படுத்துவதாக, மத்தியில் ஆட்சியமைக்கும்
கட்சி ஒப்புக்கொண்டால் மட்டுமே தாங்கள் மத்திய அரசில்
சேருவோம் / ஆதரவு அளிப்போம் … இல்லையேல் மத்திய
அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டோம்….

– என்று ஒரு வாக்குறுதியை தேர்தலுக்கு முன்னரே,
இப்போதே – கொடுக்க வேண்டும்.

அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கும் பட்சத்தில்,
கொடுக்கின்ற கட்சிக்கு, தமிழக மக்கள் –
கண்களை மூடிக்கொண்டு ஓட்டு போடுவார்கள்……

இந்த சவாலை ஏற்று வாக்குறுதி கொடுக்க எந்த கட்சி
முன் வரப்போகிறது…? திமுகவா, அதிமுகவா…?

இரண்டுமே முன்வராது…!!! மத்திய அரசில் சேரக்கூடிய வாய்ப்பை
தியாகம் செய்யவா அவர்கள் இத்தனையும் செய்கிறார்கள்…?

அத்தகைய சூழ்நிலையில் –
இந்த தேர்தல் அறிக்கைகளால் –

தமிழக மக்களுக்கு என்ன பயன்…?

இவை எதற்கு லாயக்கு …?

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திமுக, அதிமுக -இரண்டு கட்சிகளுக்கும் ஒரு சவால்… ஏற்றுக் கொள்பவர்களுக்கு கண்களை மூடிக்கொண்டு ஓட்டு போடலாம்…!!!

  1. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    அந்தந்த கட்சி வேட்பாளர்கள் கூட இவற்றை படித்திருக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. ஒரு சாங்கியம். அவ்வளவுதான்.

  2. Rajagopalan's avatar Rajagopalan சொல்கிறார்:

    இது இரண்டுமே தமிழகத்தின் சாபக்கேடுகள்.
    இந்த இரண்டிலிருந்தும் நாம் என்றைக்கு விடுபடுகிறோமோ அப்போது தான் தமிழ்நாட்டிற்கு சாப விமோசனம்.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    தமிழக மக்கள் விரோத திட்டங்களை அமல் படுத்த மாட்டோம் என்றும் — ஒண்ணே ஒன்னு இந்த ” எட்டு வழி சாலை திட்டம் ரத்து ” என்று கூட அறிவிக்கும் கட்ஸ் இல்லாதவர்கள் …! திமுக — அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான அதிக வித்தியாசம் இல்லாத தேர்தல் அறிக்கை — மக்களை ஏமாற்றுவதில் இருவருமே கில்லாடிகள் தான் … இவர்களால் இதில் எதையுமே செய்ய முடியாது — அனைத்தும் மத்தியில் இருப்பவர்கள் கையில் …! அடுக்கு — அடுக்கு என்று அடுக்கி தள்ளிவிட்டார்கள் — ஒரு வேலை எடப்பாடி அல்லது ஸ்டாலின்
    இவர்களில் யாராவது ஒருவர் மத்தியில் பிரதமர் ஆனால் நடக்கும் என்கிற நினைப்போ — ?

    நீட் — ட்ராய் — பெட்ரோல் டீசல் — தேசிய நெடுஞ்சாலை — சுங்க கட்டணம் — ரயிலில் இலவச பாஸ் இதெல்லாம் மத்திய அரசு சார்ந்தது — இவர்களால் நடக்குமா … நடக்காது என்று தெரிந்தே மக்களை ஏமாற்றி ஓட்டு பொறுக்க கூறும் வெத்து வேட்டு தேர்தல் அறிக்கைகள் … ஏமாற்றாதே — ஏமாற்றாதே — ஏமாறாதே — ஏமாறாதே ..!!!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    திமுக, மத்திய அரசில் வரவுள்ள துறைகளில் மந்திரிப் பதவியை 2009ல் பெற்றது. அதனை காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு என்று சொன்னால் மிகையாகாது.அவர்கள் 2009ல் கொடுத்த ‘தேர்தல் அறிக்கை’ யின் முக்கிய பாயிண்டுகள் கீழே உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றாவது நிறைவேற்றினார்களா இல்லை 2ஜி ஊழல், தொலைக்காட்சி ஊழல், கேபிள் திருட்டு இவற்றில் மட்டும் ஈடுபட்டார்களா என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அவர்கள் நிறைவேறக்கூடிய இடத்தில் இருந்தும், தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எப்படி ஊழலிலிருந்து தப்பிப்பது, கைதிலிருந்து வெளியே வருவது, எப்போ திகார் ஜெயில் திறக்கும் என்று அங்கேயே தவமிருந்ததை நாம் பார்த்தோம்.

    நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
    இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
    சேதுகால்வாய் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
    கச்சத்தீவில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
    திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ள சாயபட்டறைகள் மற்றும் ஆடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து கடலில் கலக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    சேலம், தஞ்சை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ விமான தளங்களை பயணிகள் விமான நிலையங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
    தமிழகம் முழுவதும் குழாய் மூலம் எரிவாயு சப்ளை செய்யப்பட வேண்டும்.
    மாநிலங்களுக்கு மத்திய அரசின் ஒட்டுமொத்த வரிவருவாய் 60 சதவிகிதத்தை அளிக்க வேண்டும்.
    சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை முன்னோடி திட்டமாக தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
    புலம்பெயர்ந்தோர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
    சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை விரிவுபடுத்த வேண்டும்.
    சென்னை- கோவை, சென்னை- மதுரை ஆகிய இடங்களுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

    இந்த லட்சணத்தில் வெட்கம் ஒன்றும் இல்லாமல், வெள்ளையும் சொள்ளையுமாக வந்து ‘தேர்தல் அறிக்கை’ என்று ஒன்றை வெட்டி வேலையாக தயாரித்து அதற்கு ஒரு விழா நடத்துவதற்கு திமுகவுக்கு மனது வந்ததற்குக் காரணம், ‘தேர்தல் அறிக்கை’ என்பது வெட்டி வேலை, மக்கள் முட்டாள்கள் என்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதி அறிக்கையாகக் கொடுத்துவிடலாம் என்ற மமதைதானே.

  5. dawnpages.wordpress.com's avatar marubadiyumpookkum சொல்கிறார்:

    good post…our democracy never cares…but I accept this post. becoz I want to tell the same and having similar opinion.

  6. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    from 2004 to 2014 for two five year terms dmk was part and parcel of congress govt. they never did
    anything for Tamilnadu. most of the time were spent to wriggle out of criminal cases and expatrating the loot to foreign countries as investments and transfering the funds to their benamis.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.