திரு.ஹெச்.ராஜா உலகப் புகழ்பெற – உடனடியாக கற்றுக் கொள்ள வேண்டியது….. !!! ( இது தேர்தல் காலம்….)


திரு.ராகுல் காந்தி நன்றாகத்தான் பேசினார்…
ஆனால், அதைவிட அதிகம்
பாராட்டப்படுவது, ரசிக்கப்படுவது தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு தான்….!

மோடிஜி அடிக்கடி தமிழகம் வருகிறார்…
மொழி பெயர்க்கும் அதிர்ஷ்டம் எப்போதும் ஹெச்.ராஜாவுக்கு தான்
கிடைக்கிறது.

ஆனால், இத்தனை தடவை மொழிபெயர்த்த,
ஹெச்.ராஜாவுக்கு கிடைக்காத பாராட்டையும், புகழையும் –

ராகுல் காந்தியின் பேச்சை ஒரே ஒரு தடவை
மொழி பெயர்த்த தங்கபாலு பெற்று விட்டார்….

எனவே, அதிகம் பாராட்டப்பட, ரசிக்கப்பட –
ஹெச்.ராஜா செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

தங்கபாலுவின் வீடியோவை ( கீழே தந்திருக்கிறேன்…)
அடிக்கடி போட்டுப் பார்த்து,
அந்த தந்திரத்தை, ஸ்டைலை, ஃபார்முலாவை –
கற்றுக் கொள்ள வேண்டும்…

ராகுல் காந்தியாவது நல்ல ஆங்கிலத்தில் பேசினார்…
ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஏற்கெனவே புரிந்திருந்தது….!

ஆனால், மோடிஜி….?
ஆங்கிலமானாலும் சரி, ஹிந்தியானாலும் சரி –
யாருக்கும் ஒன்றும் புரியப்போவதில்லை …

எப்படி மொழி பெயர்த்தாலும் –
யாருக்கும் ஒன்றும் தெரியாது…!!!
எனவே ….ஜமாய்ங்க ராஜா …!!!

ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் ஹெச். ராஜா ….

….

….

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திரு.ஹெச்.ராஜா உலகப் புகழ்பெற – உடனடியாக கற்றுக் கொள்ள வேண்டியது….. !!! ( இது தேர்தல் காலம்….)

  1. Aravinthan's avatar Aravinthan சொல்கிறார்:

    Ha Ha Haaa

  2. Siva Shankaran's avatar Siva Shankaran சொல்கிறார்:

    என்ன தான் ராகுலுக்கு ஆங்கிலம் பேச தெரிந்தாலும்
    புத்தி கூர்மை ரொம்ப மட்டு

    ஆங்கிலம் தான் தகுதி என்றால் ஸ்டாலின் மாடு மேய்க்க கூட லாயக்கு இல்லை

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! நல்ல வேலை ஹெச் .ராஜாவைப்போல ” சிறு நீர் பாசனம் ” என்று மொழி பெயர்க்காதது நாம் செய்த பாக்கியம் …

    சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒலித்த ஒரு வார்த்தை ” மோடியா — லேடியா ” என்பதுதான் அதை உருவாக்கியவர் இல . கணேசன் அவர்கள் — தற்போது அவர் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதே தெரியவில்லை – ஒரு செய்தியும் இல்லை..
    அது ஒரு பக்கம் இருக்கட்டும் — தாங்கள் நல்ல நகைசுவையோடும் — முக்கிய கருத்துகளோடும் பதிவிட்ட சென்ற 2014 தேர்தலின்போது வந்த இடுகை ஒன்று : —

    // Why it is “Modi” V/s “Lady” …? – Should it not be “Modi plus Lady.”…???
    Posted on ஏப்ரல் 23, 2014 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2014/04/23/why-it-is-modi-vs-lady-should-it-not-be-modi-plus-lady/ அதில் மொட்டைகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளது செம நகைசுவை ..!

    இந்த பதிவில் என்ன காரணத்திற்காகவோ தாங்கள் எழுதிய இந்த வரிகள் : // நஷ்டம் அடையப்போவது …..?
    தமிழ் மக்களும்….தமிழ் நாடும்….தமிழ்நாட்டின் முன்னேற்றமும்.
    கூடுதல் விளைவு – போகப் போகத் தெரியும்… // போகப் போக தெரிந்துக் கொண்டோமோ …?

    // நரேந்திர மோடி ஒரு நல்ல நிர்வாகி.
    ஊழலுக்கு இடம் கொடுக்க மாட்டார்.
    தேசப்பற்று உள்ளவர். நம் நாட்டை அமெரிக்காவுக்கோ,
    இத்தாலிக்கோ அடகு வைக்க மாட்டார்.
    ‘கோமா’வில் கிடக்கும் இந்த நாட்டை எழுந்து நின்று,
    நடந்து, பின்னர் உலக அரங்கில் ஓடச் செய்வார் என்று
    நம்புவோம் – அவர் அனைத்து பிரிவினரையும் அணைத்துச் செல்வார்
    என்று நம்புவோம்.// …. நம்பினோம் — ஆனால் …? என்ற கேள்வி பலருக்கும் ஏற்படுவதை போல தங்கள் மனதில் தோன்றுகிறதா …?

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      அய்யா செல்வராஜ்,

      அதே // Why it is “Modi” V/s “Lady” …? – Should it not be “Modi plus Lady.”…???
      Posted on ஏப்ரல் 23, 2014 by vimarisanam – kavirimainthan //
      கட்டுரையில் இருக்கும் இந்த பகுதிகளையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

      // 2ஜி ஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு ஊட்டி ‘சீட்’டை விற்ற தமிழக பாஜகவின்
      அயோக்கியத்தனத்தை நாம் ஏன் கண்டுகொள்ளாமல் விட வேண்டும்…?

      காவிரி நீருக்கு வாக்குறுதி கொடுப்பீர்களா என்று கேட்டால் –
      இதோ – நதிகளை இணைத்து விட்டால் – காவிரியில்
      தண்ணீர் தானாகவே வந்து விடும் என்று –
      மோடி அலை வீசுகிறது என்கிற திமிரில் – பதில்
      கூறும் தமிழக பாஜகவை நாம் எதற்காக ஆதரிக்க வேண்டும் ..?

      மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு மீட்பு, இலங்கைத்தமிழர் பிரச்சினை,
      முல்லைப்பெரியாறு – என்று எதைக்கேட்டாலும்
      கண்டு கொள்ளாமல், குஜராத்தில் பாலாறு ஓடுகிறது, தேனாக சொட்டுகிறது
      என்றால் என்ன அர்த்தம் …?

      குஜராத்தில் 24 மணிநேரமும் மின்சாரம்….. இங்கே …?
      என்று இல.கணேசன் கிண்டலாகக் கேள்வி கேட்கிறாரே –
      அங்கு மின்சாரம் யுனிட் விலை என்ன தெரியுமா ?
      ஒரு யுனிட் மின்சாரம் 7ரூபாய், 9 ரூபாய் என்றால் தமிழகம்
      என்ன ஆகும் …? நமக்குத் தாங்குமா …?

      வீட்டில் குழாயைத்திறந்தால் தண்ணீர் கொட்டும் …… இங்கு ..?
      என்று மீண்டும் மேடைக்கு மேடை கேட்கிறாரே கணேசனார்…..
      அங்கு குழாய்த்தண்ணீருக்கும்
      ஒரு நாளைக்கு, ஒரு ஆளுக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் தான்
      என்று ரேஷன் உண்டு என்பது தெரியாதா ?
      அந்த தண்ணீருக்கும் மீட்டர் உண்டு – ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும்
      விலையும் உண்டென்று கணேசனுக்கு தெரியும் தானே ?
      அதெல்லாம் இங்கு யாருக்கும் தெரியாது என்கிற
      நினைப்பு தானே மேடைக்கு மேடை கேள்வி கேட்கச்சொல்கிறது ?

      அங்கு இன்று இலகுவாகக் கிடைக்கும் நர்மதை தண்ணீருக்கான வேலை
      40 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது, அதில் 50 சதவீத வேலை
      மோடி வருவதற்கு முன்பே முடித்தாகி விட்டது என்கிற உண்மையும்
      இங்கு யாருக்கும் தெரியாது என்கிற தைரியம் தானே …?

      12 ஆண்டுகளாக ஒரே நபர் முதல் அமைச்சர் பதவியில் இருந்திருந்தால் –
      ஒரு வேளை இங்கும் கூடத்தான் அதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கலாம்.!
      ஏன் – முதலமைச்சராக தமிழ்நாட்டில் காமராஜர் சாதிக்காததா ? //

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        மணியாரே … ! எல்லாவற்றையும் காட்ட லிங்க் கொடுக்க வேண்டிய அவசியமில்லை –!! நண்பரே … ! அப்போதைய நிலவரத்தை காட்டவும் — கட்சிகளின் யோக்கியதையயை தெரிந்துகொள்ளவும் தானே தவிர .. வேறெதுவும் இல்லை ..! திரு கா.மை . அவர்களின் இந்த பதிவில் சர்வமும் இருக்கிறது — பாகு பாடுக்கு அவசியமில்லை .. இதில் ஹைலைட் // போகப் போக தெரியும் // என்பதே — இதே வார்த்தைகள் தற்போதைய தேர்தலுக்கும் சேர்த்துதான் …!!!

    • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

      அய்யா …! தங்களின் இந்த மறு மொழி நன்றாக பொருந்துவது எம்முடைய மற்றும் நண்பர் மணி அவர்களின் பின்னூட்டத்திற்கு தான் என்பது எமது அபிப்பிராயம் — தங்களுக்கு மறுப்பு ஏதும் இருக்காது என்பதால் அது இங்கே
      // // கேள்வியின் நாயகனே
      இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா

      இல்லாத மேடை ஒன்றில்
      எழுதாத நாடகத்தை
      எல்லோரும் நடிக்கின்றோம்
      நாமே…. எல்லோரும்.
      பார்க்கின்றோம் //

      யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே கதை தான்…
      காங்கிரஸ் மோசம் என்று பாஜகவை கொண்டு வந்தோம்…

      இன்று பாஜக மோசம் என்று வேறு யாரை கொண்டு வருவது…? // சரிதானே …?

  4. vic's avatar vic சொல்கிறார்:

    Purushoth P
    2 dagen geleden
    Vedivel sir acted 10 movie’s comedy is equal to this memes..Really Mass…

  5. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    This Man Thanga baalu is running several educational institutions in Tamilnadu. I pity the students
    of his colleges because their founder is very weak in English and he is not able to grasp and remember what his leader has told the people. But the main thing is his alliance leader in Tamilnadu is also ignorant of what is going on because he himself is an illiterate as far as english is concerned. These people are our leaders, that is our misfortune.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      தமிழ்மணி – உங்க பாயின்டுல எனக்கு விமர்சனம் இருக்கு.
      1. தங்கபாலு அவர்கள் மொழிபெயர்ப்பாளராகப் போனது தவறு. தனக்கு வராததை அவர் செய்ய மெனக்கெட்டிருக்கக்கூடாது. பீட்டர் அல்போன்ஸ் இன்னும் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பார். (ஆனால் கிறிஸ்துவர், கிறிஸ்துவக் கல்லூரி, மொழிபெயர்ப்பாளரும் கிறிஸ்துவர் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தங்கபாலு அவர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம்)
      2. அவருடைய ஆங்கிலப் புலமைக்கும் அவருடைய கல்லூரிக்கும், அதன் தரத்துக்கும் சம்பந்தமில்லை. பனிமலர், சத்யபாமா போன்ற கல்லூரிகளின் தாளாளரான ஜேப்பியாருக்கும் ஆங்கிலத்துக்கும் பலகாத தூரம், ஆனால் அது அவர் கல்லூரியை நடத்துவதை பாதிக்கவில்லை. அவர் நினைத்தபடி அந்தக் கல்லூரிகளை கண்டிப்புடன் நடத்தினார்.
      3. ஸ்டாலின் படிப்பு வாசனை அறவே இல்லாதவர். (படிப்பைப் பற்றிச் சொன்னால் உடனே எல்லோரும் காமராசரை உதாரணம் காட்டுவார்கள், என்ன சொல்லுகிறோம் என்பதையே புரிந்துகொள்ளாமல்). ஸ்டாலினுக்கு சுயபுத்தியும் இல்லை, சொல்புத்தியும் இல்லை. அவர் எதில் எக்ஸ்பர்ட் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    https://www.dinamalar.com/news_detail.asp?id=2236837

    கா.மை சார்…. இந்த அமலாக்கத்துறையிலும் சிபி.ஐயிலும் இருப்பவர்கள் படித்தவர்கள்தானா? பொது அறிவு அவர்களுக்கு உண்டா? (காமன்சென்ஸ்). இவர்கள் இதுவரை எந்த கேஸை சரியாக ஹேண்டில் செய்திருக்கிறார்கள்? அல்லது ஒருவேளை பாஜகவுக்கு அல்லது காங்கிரசுக்கு எதிராகச் செய்யத் துடிக்கிறார்களா? இது பாஜகவுக்கு நஷ்டத்தைத்தான் தரும் என்பதை குருவி மூளை உள்ள அரசியல்வாதிகூடச் சொல்லிவிடுவானே.

    கண் முன்னால் நடந்த கேபிள் திருட்டு 1000 கோடி அபேஸ், 2ஜி கொள்ளை, தொலைக்காட்சி 200 கோடி லஞ்சம், காமன்வெல்த் ஊழல், ப.சி./கார்த்தி ஊழல், சொத்துக்குவிப்பு, சோனியா/குலாம்நபி ஆசாத் போன்றவர்கள் வாங்கிய கமிஷன் போன்ற எதையுமே நிரூபிக்கத் தவறியிருக்கிறார்கள். எத்தனை ரெய்டுகளை நாம் செய்திகளில் பார்க்கிறோம் (இந்த 5 வருடங்களில்). ஒன்றாவது நிரூபிக்கப்பட்டதா?

    தேர்தல் சமயத்தில் எதற்காக வாத்ராவை கைது செய்யவேண்டும்? இந்த 5 வருடங்களில் எந்த வனத்தில் இவர்கள் தவம் செய்துகொண்டிருந்தனர்? என்ன ஆதாரங்களை இதுவரை அவர்கள் சேர்த்துவைத்திருக்கின்றனர்?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      கவிஞர் ஏற்கெனவே கேட்டு விட்டாரே….

      // கேள்வியின் நாயகனே
      இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா

      இல்லாத மேடை ஒன்றில்
      எழுதாத நாடகத்தை
      எல்லோரும் நடிக்கின்றோம்
      நாமே…. எல்லோரும்.
      பார்க்கின்றோம் //

      யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே கதை தான்…
      காங்கிரஸ் மோசம் என்று பாஜகவை கொண்டு வந்தோம்…

      இன்று பாஜக மோசம் என்று வேறு யாரை கொண்டு வருவது…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    I tried to translate Rahul’s speech The language was very simple. I don’t know why Mr.T.Balu made

    so many mistakes. In every sentence he unnecessarily referred Modi’s name though Rahul
    did not mention it. Probably he was in a tension on seeing such a huge gathering of girls students.
    As Mr.Puthiyavan said Mr.Peter Alphonse is the best choice.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.