…
…

…
நான் வடக்கே இருந்தபோது, சீக்கிய நண்பர்கள் நிறைய இருந்தார்கள்…..
பொதுவாகவே சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள்…
அவர்களூடே பிச்சை எடுப்பவர்களை பார்க்கவே முடியாது.
கொண்டாட்டமானவர்கள்…. உழைப்பு, கோபம், ஆனந்தம் –
எல்லாவற்றிலுமே extreme – ஐ பிரதிபலிப்பவர்கள்… உணர்ச்சி வசப்படுபவர்கள்.
ராணுவத்தில் இன்றும் சீக்கியர்கள், பெரிய அளவில் பங்கு பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் மெட்ராஸ் ரெஜிமெண்டை போலவே Sikh ரெஜிமெண்டும் புகழ் பெற்றது.
நவீன பண்ணை எந்திரங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவது, ஆட்டோமொபைல் விற்பனை/ ரிப்பேர் – ஆகியவை –
இப்போதெல்லாம் எலெக்டிரானிக்ஸ் பிசினஸ் கூட –
அவர்களின் முக்கிய விருப்பம்.
டெல்லியில் நிறைய சீக்கிய டிரைவர்களை பார்க்கலாம்.
இப்போது நிறைய பேர் கனடா செல்கிறார்கள்…
சில குடும்பங்கள் கூட்டாக சேர்ந்துகொண்டு – ஆப்பிரிக்க நாடுகளில்,
பெரிய அளவில் நிலம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு –
பிரமாதமாக அக்ரிகல்சுரல் பிசினஸ் செய்கிறார்கள்…
ஒரு வீடியோ கிடைத்தது… ஒரு சீக்கிய தம்பதி…
திருமணமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி
ஒரு விழா நடக்கிறது…
70-75 வயதில் விழா நாயகனும், நாயகியும்
ஆடுவதைப் பாருங்களேன்…
…
…
.
—————————————————————————————————–



[…] […]