…
…
இன்று காலை கூட அலைச்சல் முடியவில்லை பல கட்சிகளுக்கு.
இது தேவலையா… அது பெட்டரா…?
அங்கே இன்னும் offer ஓபனாக இருக்குமா…?
எங்கே அதிக தொகுதி கிடைக்கும்…?
எங்கே ராஜ்ய சபா சீட் கிடைக்கும்…?
எங்கே எம்.எல்.ஏ. பாக்கேஜும் சேர்த்து கிடைக்கும்…?
எங்கே “பெட்டி” பெரியதாக கிடைக்கும்…?
அய்யோ பாவம் … பிறந்தாலும் அரசியல்வாதியா
பிறக்கவே கூடாது…. 🙂 🙂 –
அப்படி பிறந்து விட்டால்….
எவ்வளவு தான் அலைச்சல்…
எவ்வளவு தான் டென்ஷன்…!!!
————————–
இவை எல்லாவற்றிற்கும் சுலபமான தீர்வாக
ஒரு விளம்பரம் பார்த்தேன்…
(நன்றி லலிதா ஜுவல்லரி…. 🙂 🙂 🙂 )
ஒரு நல்லெண்ண உதவியாக
தமிழக அரசியல்வாதிகளுக்கு சமர்ப்பணம் –
………………….

…………………….
.
—————————————————————————————————————



//நாங்க ஒரு எஸ்டிமேட் தர்றோம்// – இந்த விளம்பரம் பொருத்தமா இல்லையே…கூட்டணிக்கு பெரிய கட்சிகள்தான் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு காத்திருக்கற மாதிரி தோணுது. கிடைக்கலைனா, வயித்தெரிச்சல்ல சாபம் விடற மாதிரியும் தெரியுது.
நாம நினைத்த இடத்துல வேலைக்குப் போகறதுக்கு, வேற ஒரு கம்பெனில ஆபர் வாங்கிட்டு அதைக் காண்பித்து இன்கிரிமெண்டோ இல்லை புதிய ஆஃபரோ வாங்கற மாதிரி, நிறைய சீட்டுக்காகவே இதுமாதிரி சேரப்போகாத கூட்டணியிலும் ஆஃபர் என்ன என்று பார்த்துக்கறாங்களோ? அதிலும் ராஜ்யசபா சீட் கேட்கறது அநியாயமா இருக்கு (நகைக் கடைல பேரம் பேசும்போது, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் சேர்த்துத் தரணும் என்பதுபோல)
விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வரமாட்டார்னு தெரிஞ்சும் இரண்டு கட்சிகளும் அவங்களை எதிர்பார்க்கறது டைஜஸ்ட் பண்ண முடியாம இருக்கு. எது எதுக்கோ கூட்டணி வச்சிக்கற மாதிரி (ஏலத்துல), இரண்டு பெரிய கட்சிகளும் உதிரிக் கட்சிகள் எல்லாவற்றையும் (காங்கிரஸ், பாஜக, விசி, பாமக, தேதிமுக கடைசியா கம்யூனிஸ்டுகள்… இதுல பச்சமுத்து, ஏசி சண்முகம், தமாக… போன்ற கட்சிகளையெல்லாம் சேர்த்து மத்தவங்க வயித்தெரிச்சலை நான் கொட்டிக்க மாட்டேன்) புறக்கணித்துவிட்டால், ஓரிரு தேர்தல்ல இவங்கள்லாம் கடையை மூடிட மாட்டாங்களா? (இல்லை… காங்கிரஸும் பாஜகவுமே சேர்ந்து கூட்டணி வச்சிக்கிடுவாங்களா?)
சார்… நம்ம லெவல்ல, நாம எத்தனை வருஷம் உயிரோடு இருப்போம் என்பது தெரியாததால், எவ்வளவு பணம் சேர்த்துவைக்கணும் என்பதை அனுமானிக்க முடியவில்லை. செலவழிக்கவும் மனது வருவதில்லை (ஒருவேளை 75+ இருந்தால், இல்லை 90+ இருந்தால் என்று).
மக்கள் மனநிலையை சரியாக கணிக்க முடிந்தால், பெரிய தலைவர்களுக்கு இந்த மாதிர் தேர்தல் சமயத்தில் டென்ஷன் வராது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
1. அதிமுக கூட்டணி 22% வாக்குகள் மட்டும்தான் வாங்கியது என்று வைத்துக்கொள்வோம்… அப்போ எடப்பாடி மற்றும் ஓபிஎஸ், எதுக்குடா பாமகவைச் சேர்த்துக்கிட்டோம் அல்லது குறைந்தபட்சம், தேதிமுகவை ஏந்தான் சேர்த்துக்கொண்டோமோ என்று நினைப்பார்கள். அல்லது தைரியமாக, உன்னால் ஆனதைச் செய் என்று பாஜகவை கழட்டிவிட்டிருக்கலாம் என்றும் நிச்சயம் பேசுவார்கள்.
2. திமுக கூட்டணி 48% வாக்குகள் வாங்கினா, ஸ்டாலின் நிச்சயமா, விசி, வைகோ மற்ற துண்டு துக்கடாக்களை அனுமதித்திருக்கவே கூடாது என்றும், காங்கிரஸுக்கு 4 சீட்டுக்குமேல் கொடுத்திருக்கவேண்டாம் என்றும் நினைக்கலாம்.
அது தெரியாததால்தான் இவ்வளவு அல்லாட வேண்டியிருக்கு. வேஸ்ட் பேக்கேஜ் என்று யாரையும் நினைக்காமல் (கள நிலவரம் அப்படி இருந்தாலும்) அவங்களுக்கும் ஒன்று இரண்டு சீட்டுகள் கொடுக்கவேண்டியிருக்கு.
புதியவன்,
// மக்கள் மனநிலையை சரியாக கணிக்க முடிந்தால், பெரிய தலைவர்களுக்கு இந்த மாதிரி தேர்தல் சமயத்தில் டென்ஷன் வராது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.//
ஒரு விஷயம் புதியவன் –
இந்த மாதிரி சமயங்களில் தான் “பெரிய்ய்ய்ய தலைவர்” என்று சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எவ்வளவு “பலவீனமானவர்கள்… தன்னம்பிக்கை இல்லாதவர்கள்”
என்பது வெளியில் தெரிகிறது… இல்லையா…?
இன்னும் ஒரு விஷயமும் இதில் சேர்ந்தே இருக்கிறது.
சம்பந்தப்பட்ட, அந்த “மக்களுக்கே” இன்னமும் தெரியாது… தாங்கள் தேர்தலின்போது எப்படி behave பண்ணப்போகிறோம் என்று..!!!
ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள் தானே அதிகம்…!!!
இதில் எந்தவித involvement -உம் இல்லாமல் ஞானி போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தான் நல்ல பொழுதுபோக்கு…. 🙂
இன்று மாலை “புன்னகை மன்னர்” – வி.கா.வை போய் பார்த்திருக்கிறார்…
அந்த (தற்காலிக)ஹீரோ வீட்டுக்குள்ளேயே கூலிங் கிளாசுடன், உட்கார்ந்த நிலையிலேயே, பொன்னாடை, பூங்கொத்து எல்லா மரியாதைகளையும் பெரிய மனது பண்ணி ஏற்றுக் கொள்கிறார்…
ரொம்ப தமாஷாக இல்லை…?
தேர்தல் காலம்…. !!! 🙂 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அன்றைக்கு ஜெ இருந்தபோது, நமக்குத் தெரியாமல் இவர்கள் விஜயகாந்தைச் சந்தித்திருக்கலாம். இருந்தாலும் ஜெ. தன்னுடைய கம்பீரம் குறையாமலும், விஜயகாந்த் இன்னும் கெத்தாகவும் நடந்துகொண்டனர் (சேர்ந்து ஒரே மேடையில் ஏறவில்லை).
இன்று வாக்கு வங்கி இல்லாதபோதும், விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வரவே முடியாது என்ற போதும், ஏன் இந்தப் பணிவுன்னு புரியலை. விஜயகாந்த் உட்கார்ந்து ஓபிஎஸ் நின்றுகொண்டு இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். விஜயகாந்திற்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை. ஜெ. இல்லாததால் ஓபிஎஸ் இப்போது இதனைப் பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அனேகமாக தேதிமுகவுக்கு இதுதான் கடைசி வாய்ப்போ?
ஆசை வெடகமறியாது.இந்த வெட்கெங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு அது எப்போதும் இருந்தது இல்லை.
நமக்கு இந்த மாதிரி ஒரு நிலையை அளிக்காத இந்த மானங்கெட்டவர்களை புரிந்து அவர்களிடமிருந்து விலகி இருக்கும் அவர்களுக்கு எந்த விதத்திலும் பரிந்து கூட பேசாத ஒரு தெளிவை தந்துள்ள வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.
மக்களின் மனநிலை என்னவென்று கவலைப்படாமல் — கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை தவிர்க்க – கட்சிகள் ” தனித்தே போட்டியிட வேண்டும் ” என்று உத்தரவு இட தேர்தல் கமிஷனுக்கு திராணி உண்டா …?