…
…

…
கொஞ்ச நாட்கள் முன்னதாக, மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத்
மாநிலங்களவையில் பேசும்போது, ‘கிரிக்கெட்டில் கடைசி ஓவர்களில் –
அதாவது ஆட்டம் முடியும் நேரத்தில் தான் சிக்ஸர் அடிக்கப்படுகிறது.
இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை …?” என்று கேட்டார்.
எனவே, போகிற காலத்தில் சங்கரா சங்கரா என்று
கூப்பிடுவது – அல்லது கூப்பாடு போடுவது –
எந்த விதத்திலும் தவறு இல்லை… அது எங்களுக்கு இயல்பானது தான் என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், மக்களும் அப்படி நினைக்க வேண்டுமே…!!!
கடந்த 3 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டின் போதும்
நடுத்தட்டு மக்கள் வருமான வரி குறைந்த பட்ச வரையரை உயர்த்தப்படும்
என்று மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்; விரும்பினார்கள்.
ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை….
எனவே தொடர்ந்து 3 வருடங்களாக ஏமாந்தார்கள்…!!!
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உயர்த்தப்பட்ட அளவின் பலனும்
தற்போதைக்கு யாருக்கும் கிடைக்காது… இது 2019-20 நிதியாண்டு சம்பந்தப்பட்டது… எப்படியும், மே 2019 தேர்தலுக்குள்
கிடைக்கக்கூடிய பலன் அல்ல…!!!
—-
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்புகளும் அப்படியே…
கடன் தள்ளுபடி ஒன்று தான் அவர்களை திருப்திப்படும்.
ஆனால், அந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குறை கூறும்போது கடன் தள்ளுபடி சரியான தீர்வு அல்ல என்று பாஜக சொல்லி விட்டபடியால், இப்போது
நிலையை மாற்றிக் கொள்ள முடியாது.
எனவே தான் ” மாதம் 500 ரூபாய் பாக்கெட் மணி ” அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் முடிவடைவதற்குள், சம்பந்தப்பட்ட
விவசாயிகள் நொந்து நூலாகி விடவே வாய்ப்பு அதிகம். தேர்தலுக்குள்
எப்படியாவது, விவசாயிகளின் கையில் 2000 ரூபாய்
(மூன்றில் ஒரு பங்கு) பாக்கெட் மணி கொடுத்து விட்டால்,
அதன் பலனை ஓட்டு வடிவில் எதிர்பார்க்கலாம் என்று பட்ஜெட் போட்டவர் நினைத்து, அதற்காகவே டிசம்பர் 2018 முதல் ஸ்பெஷலாக இதனை மட்டும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் –
நடைமுறையில் இது மிகவும் கடினம்….
இந்தியா முழுதும் – 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அதை நிரூபிக்க எத்தகைய ஆவணங்களை, எங்கே, எப்படி தர வேண்டியிருக்கும் என்கிற விவரங்கள், நடைமுறைகள் – உருவாக்கப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புரிகிற முறையில் சென்றடைய வேண்டும்…
பின்னர், விவசாயிகள் தங்கள் “ஜன்தன்” வங்கிக்கணக்கு விவரங்களை
தெரிவித்து, பாக்கெட் மணிக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளில்
விண்ணப்பம் கொடுக்க வேண்டியிருக்கும்….
இதற்குள் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டு,
நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு போய்ச்சேர வேண்டும்…
பாவம் – நிதியமைச்சர் நினைத்த வேகத்திற்கு
இங்கே செயல்பாடு இருக்காது
என்பது தான் நடைமுறை…
எனவே, தேர்தலுக்குள் விவசாயிகளுக்கு “பாக்கெட் மணி” கிடைக்கவும்
வாய்ப்பில்லை…!!!
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்…
“ஊரான் வீட்டு நெய்யே – என் பெண்டாட்டி கையே” பழமொழி
கேள்விப்பட்டிருப்பீர்கள்…
மேற்படி சமாச்சாரத்திற்காக, பட்ஜெட்டில் எப்படி நிதி திரட்டப்படுகிறது
என்பதற்கான உத்தேசங்கள் எதுவும் இல்லை…
இந்த செலவை ( சுமார் 75,000 கோடி ரூபாய்…) ஈடுகட்ட,
புதியவரிகள் எதுவும் உத்தேசிக்கப்படவில்லை…
எனவே இந்த பணத்தை திரட்டும் பொறுப்பு அடுத்து வரும் அரசாங்கத்தின்
தலையில் தான் விழப்போகிறது…!!!
தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகள் இந்த விவரங்களை
எல்லாம் அழகாக விளக்கி , மக்களுக்கு தெளிவூட்டும் என்று நம்பலாம்….
அவர்களே சொல்லி விட்டார்கள் – கடைசி காலத்தில் சங்கரா சங்கரா
என்று சொல்வதில் தவறேதும் இல்லை…
உண்மையில் அப்போது தான் சொல்ல வேண்டுமென்று வேறு சொல்லி விட்டார்….( refer -திரு.ர.ச.பி -யின் கடைசி ஓவரில் சிக்சர்…!!! )
அப்புறமென்ன…. “சூப்பர் பட்ஜெட்” –
( என்று பாஜகவினர் மகிழ்ந்து கொள்ளலாம்…!!! )
———————-
எதற்கும் இவர்கள் கட்கரிஜியையும் கன்சல்ட் செய்திருக்க வேண்டுமோ…?
( ஒரு வேளை அடுத்த இன்னிங்க்ஸை அவர் ஆட நேர்ந்தால்.. 🙂 🙂 )
.
————————————————————————————————–



தன்னைத் தானே பாராட்டிக் கொள்பவரை பார்த்ததுண்டா ?
பட்ஜெட் உரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டபோதெல்லாம், அதற்கு காரணகர்த்தராக இருந்தவர் அவ்வப்போது மேஜையைத் தட்டி, தனக்குத்தானே பாராட்டு தெரிவித்துக் கொண்டே இருந்த காட்சி அருமை. இதற்கு முன்னர் இந்த பதவியில் இருந்த யாரும் செய்யாத புதுமை.
/// இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உயர்த்தப்பட்ட அளவின் பலனும்
தற்போதைக்கு யாருக்கும் கிடைக்காது… இது 2019-20 நிதியாண்டு சம்பந்தப்பட்டது… எப்படியும், மே 2019 தேர்தலுக்குள்
கிடைக்கக்கூடிய பலன் அல்ல…!!! ///
/// மேற்படி சமாச்சாரத்திற்காக, பட்ஜெட்டில் எப்படி நிதி திரட்டப்படுகிறது
என்பதற்கான உத்தேசங்கள் எதுவும் இல்லை…
இந்த செலவை ( சுமார் 75,000 கோடி ரூபாய்…) ஈடுகட்ட,
புதியவரிகள் எதுவும் உத்தேசிக்கப்படவில்லை…
எனவே இந்த பணத்தை திரட்டும் பொறுப்பு அடுத்து வரும் அரசாங்கத்தின்
தலையில் தான் விழப்போகிறது…!!! ///
இவர்கள் முடிவே செய்துவிட்டார்கள், தாம் அடுத்து வரப்போவதில்லை. வேறு யார் வந்தாலும் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிட்டு போகலாம் என்ற நல்ல எண்ணத்தில் இந்த பட்ஜெட்டை, இல்லை தேர்தல் அறிக்கையை, கொண்டு வந்திருப்பார்களா இருக்கும்.
அவ்வளவு நல்லவர்கள் தானே இவர்கள்.
எப்படியோ போய் தொலையட்டும்.
See where they are getting money from.
https://tamil.goodreturns.in/news/2019/02/01/again-central-government-is-demanding-interim-dividend-from-rbi-013403.html?c=hgoodreturns
KM Sir please read this.
Piyush Goyals cruel lie in his budget speech.
https://tamil.goodreturns.in/news/2019/02/01/piyush-goyals-cruel-lie-his-budget-speech-013352.html
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு – பொரிந்து தள்ளிய பொருளாதார நிபுனர் ஜெயரஞ்சன் அவர்கள்.
அங்கால முருகராஜ் என்பார் youtube-ல் பொய்யாமொழி மோடியின் இத்துனை ஆண்டுகால பொய் வாக்குறுதிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அது இந்த பட்ஜெட் சமயத்தில் இங்கு தருவதில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதாவது, இந்த பட்ஜெட்டும் இப்படித்தான் பொய் வாக்குறுதிகளாக பரினமிக்க போகின்றது என்று குறிப்பால் உணர்த்துவது என்பதாக கொள்க.
/// Angala murugaraj
❌❌ பாரதிய ஜல்சா கட்சி மற்றும் மோடியிடம் இருந்து ஆட்சியை மீட்டெடுப்போம்
✅✅ 2013ல் இருந்து நம்மை எப்படியெல்லாம் மோடி முட்டாள் ஆக்கி இருக்கிறார் பாருங்கள்..
காட்சி 1: 2013-2014
👉லோக்பால் அமைப்போம்,
👉 ராமர் கோவில் கட்டுவோம்,
👉 டீ வித்தவர், ஏழை,
👉100 நாட்களில் சுவிஸ் கறுப்புப்பணம் மீட்பு,
👉ஒருவருக்கு 15 லட்சம்,
👉1 டாலர் = 30 ரூபாய்,
👉1 லிட்டர் பெட்ரோல் = 40 ரூபாய்,
👉ஊழல் ஒழிப்பு,
👉கறுப்புபண ஒழிப்பு,
👉சீனா/ பாகிஸ்தானை அடக்குவது,
👉வருஷத்துக்கு 2 கோடி வேலை,
👉காஷ்மீர் பிரச்சனை தீர்வு,
👉காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்,
👉2020ல் இந்தியா வல்லரசு,
👉 குஜராத் மாடல்,
👉அகண்ட பாரதம்,
👉தீவிரவாதிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்,
👉விவசாயத்துக்கு முன்னுரிமை,
👉விவசாயிகள் வருமானம் இரண்டுமடங்காகும்,
👉அனைவருக்கும் வீடு,
👉 நதிகள் இணைப்பு,
👉நதிகள் தூய்மை ஆக்கப்படும்,
👉சிறப்பு தனி நீதி மன்றம் அமைத்து ஒரே வருடத்தில் அனைத்து கிரிமினல் அரசியல்வாதிகள் சிறையில் அடைத்து அரசியலை தூய்மை ஆக்குவோம்,
காட்சி 2: 2014-2015
👉”தூய்மை இந்தியா”
👉 “தூய்மை கங்கா”,
👉”யோகா தினம்”,
👉”மேக் இன் இந்தியா”,
👉 “ஸ்கில் இந்தியா”,
👉”ஸ்மார்ட் இந்தியா”,
👉 “டிஜிட்டல் இந்தியா”, இன்னும் நூற்றுக்கணக்கில் _____இந்தியா திட்டங்கள்,
👉 “மறுபடியும் ராமர் கோவில்,
👉 டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன்,
காட்சி 3: 2016-2017
👉 “புதிய இந்தியா”,
👉 “பண மதிப்பிழப்பு”,
👉 “ரொக்க பரிவர்த்தனை இல்லா இந்தியா (cashless india)”,
👉”குறைப்பிரசவ GST”,
👉 “அனைவருக்கும் வீடு”,
👉 “புல்லட் ரயில்”,
👉 “மன்மோகன் சிங் பாகிஸ்தான் கைகூலி”,
👉 “மறுபடியும் ராமர் கோவில்,
👉அழுகை,
👉நேரு தான் இந்தியாவின் இன்றைய பிரச்சனைக்கு காரணம்,
காட்சி 4: 2017-2018
👉 எல்லோருக்கும் வீடு,
👉 விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காகும்,
👉 போபர்ஸ் ஊழல்,
👉1984 சீக்கியர் படுகொலை,
👉 1 லட்சம் கோடி கல்விக்கு முதலீடு,
👉 இந்தியாவின் வளர்ச்சி இரண்டு மடங்காகும்,
👉Urban Naxal,
👉மோடியை கொலை செய்ய திட்டம்,
👉மறுபடியும் ராமர் கோவில்,
👉 அய்யப்பனை பாதுகாப்போம்,
👉மறுபடியும் டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன், அழுகை,
👉நேரு & இந்திரா தான் இந்தியாவின் இன்றைய பிரச்சனைக்கு காரணம்
காட்சி 5: 2018-2019
காட்சி 4ல் பேசியதெல்லாம் பொய், பித்தலாட்டம், போலியான வாக்குறுதிகள், வெறும் வெட்டி விளம்பரங்கள் என்று நாம் உணர ஆரம்பிக்கும் போது….
👉 Accidental Prime Minister,
👉 மோடி வாழ்க்கை வரலாற்று குறும்படம் திரைப்படம்,
👉விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்கு ஆக்குவோம்,
👉 எல்லோருக்கும் வீடு கட்டுவோம்,
👉ஊழல் ஒழிப்போம்,
👉 கறுப்புபணம் மீட்போம்,
👉 காங்கிரஸ் தான் பிரச்சனைக்கு காரணம்,
👉 அய்யப்பனை பாதுகாப்போம்,
👉 மீண்டும் மீண்டும் டீ வித்தவர், ஏழை, ஏழைத்தாயின் மகன் மற்றும் பல ஜூம்லா..
காட்சி 6:- தேர்தலுக்கு முன் அடுத்த காட்சியை எப்படி அரங்கேற்ற என்று இந்த நாடகத்தின் இயக்குனர்கள் கார்ப்பரேட், RSS, அமிட்ஷா & மோடி இப்போது முடிவு செய்து கொண்டு இருப்பார்கள்.
நாமும் இதெல்லாம் நாடகம் என்று தெரியாமல் மோடியின் போலியான தேசபக்தி வசனத்தை உண்மை என்று நம்பிட்டு உக்காந்துட்டு இருப்போம்.
இப்ப காட்சி 1ல் இருந்து மறுபடி படிக்கவும்.. நாம் எப்படி முட்டாள் ஆக்கப்பட்டோம் என்று புரியவரும். இன்னும் புரியவில்லை என்றால் காட்சி 6 ஆரம்பிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும்.. அப்புறமும் புரியவில்லை என்றால் கடைசிவரை நீங்கள் மோடி பக்தராக இருப்பதே நல்லது.
👉 குறிப்பு: மோடியின் ஆயிரக்கணக்கான வாக்குறுதிகள் இங்கே எழுத நேரமில்லை.. நீங்களே google செய்து படித்து புரிந்துகொள்ளவும். ///
உங்க கதறலை பார்க்கும் போது ஆனந்தமாக இருக்கு அறிவழகு என்னும் பெயரில் மறைந்திருப்பவரே
இந்த கதறலை மீண்டும் அடுத்த ஆண்டும் பார்ப்பேன்
பொய்யர்களுக்கு பொய்யர்களே ஆதரவு.
ஆனால், அடுத்த ஆண்டு மட்டுமல்ல எப்போதும் நீங்கள் அனைவரும் பொய்யர்களாகவே தொடர்வீர்கள். அதில் மாற்றம் ஏற்பட்டாலொழிய இந்த நாட்டிற்கு விமோஷனமில்லை.
@முகமூடி அறிவழகு
என்னுடைய பிஜேபி ஆதரவு உங்க சமூகத்துக்கு அவர்களை பிடிக்கவில்லை என்னும் காரணத்துக்காக
எதிரிக்கு எதிரி நண்பன்
ராஜு,
உம்ம கூட்டமே சொல்லபடுற விஷயத்திற்கு கருத்தை சொல்லமாட்டீங்க. மாறாக மேலே விழுந்து பிராண்ட மட்டும் தான் செய்வீங்க.
நான் உம்மையும் அந்த பிராண்டுற கூட்டத்தில ஒன்னா கருதிக்கிறேன்.
Scene 6 may be this.
— RSS chief Mohan Bhagwat urged seers to be patient for 4 more months for the construction of the Ram Temple.
https://tamil.oneindia.com/news/india/ram-mandir-construction-work-will-begin-4-months-says-rss-chief-mohan-bhagwat-340247.html?c=hweather
— The execution plan is
https://minnambalam.com/k/2019/02/01/53
Mercy,
மதக்கலவரம், அது தான் திட்டமே. அதுக்கு இங்கால ஒன்னு முயற்சி செய்துக்கிட்டு இருக்கு பார்த்தீர்களா?
உச்ச நீதிமன்றம் சரியான தருணத்தில் அதை உணர்ந்து விசாரனயை தள்ளிபோட்டிருக்கு.
அந்த வாய்ப்பை கொடுக்காததால் உச்ச நீதிமன்றத்தையே வானரக்கூட்டம் மிரட்டுற விதத்தில் கூச்சல் போட்டுகிட்டு இருக்கு.
Raj –
ஒரு வேளை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரி அறிவிக்கப்பட்டால், உங்கள் நிலை என்னவாக இருக்கும் ?
ஏற்றுக்கொள்வீர்களா அல்லது மோடி இல்லாத பாஜக அரசு வேண்டாமென்று
தூக்கில் தொங்குவீர்களா ?
லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க கூடாது
மோடியோ வேறு யாராவது ஜாடியோ வரலாம்
பாஜக ஒன்னும் காங்கிரஸ் திமுக மாதிரி குடும்ப நிறுவனம் அல்ல
ஆக மொத்தம் நீங்க பாஜக ஜால்ரா, தொண்டரடிப்பொடின்னு
ஒப்புக்கிட்டீங்க. மகிழ்ச்சி.
அய்யா … ! சும்மா ஒரு விவரத்திற்கு பழைய இடுகை ஒன்று : // மோடிஜி சர்க்காரின் ” ஜன கண மன ” ……!!!
Posted on மார்ச் 1, 2015 by vimarisanam – kavirimainthan // இதில் வரும் // மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மோடிஜி சர்க்காரின்
இரண்டு பட்ஜெட்டுகளும் ‘ரிலீஸ்’ ஆகி விட்டன…// ஒன்று ரயில்வே — மற்றது பொது பட்ஜெட் … ! அதை படிக்க : https://vimarisanam.wordpress.com/2015/03/01/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3/
இறுதியில் சூப்பரான பினிஷிங் வரிகள் தங்கள் பாணியில் // எப்படியோ –
கோட்டுப் போட்ட ஸ்ரீமான் நரேந்திர தாமோதர் தாஸ்
மோடிஜியை நம்பி ஓட்டுப் போட்டு,
தனி மெஜாரிடியை –
கொடுத்து விட்டது தேசம்.
அடுத்த நாலேகால் ஆண்டுகளுக்கு வருவதை அனுபவிக்க
வேண்டியது தான்.
“உரலுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டு –
உலக்கைக்கு பயந்தால் முடியுமா … !!! // …. இவர்களது ஆட்சியின் கடைசி இடைக்கால பட்ஜெட்டும் வெளிவந்து விட்டது … இந்நிலையில் — வந்ததை அனுபவித்து விட்டோமா ..? உலக்கை அடி எப்படி என்று பதிவாக்குவீர்களா … ?
தோழர் S.Raman, Vellore அவருடைய தளத்தில் பட்ஜட் பற்றிய கருத்தை அவருடைய கோணத்தில் சில தகவல்களும் சேர்த்து பதிவு செய்துள்ளார். அது கீழே,
/// மோடி ஜும்லா பட்ஜெட்
விரிவாக எழுத வேண்டும். அதற்கு முன்பாக இது இடைக்கால விமர்சனம்.
வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என்று நம்பி கடந்த வருடம் வரை ஏமாந்தவர்களுக்கு இந்த வருடம் வித்தியாசமான ஏமாற்றம்.
வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவில்லை. ஐந்து லட்சம் ரூபாய் வரைக்குமே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு.
ஆனால் அவசரத்தில் ஊடகங்கள் அறைகுறையாக செய்தியை வெளியிட அதை நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம். நம்பியவர்களை இப்படி எல்லாம் ஏமாற்ற மோடியால் மட்டுமே முடியும்.
ஆறரை லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் சேமித்தால் வருமான வரி கட்ட வேண்டாமே என்று யாரும் சொல்லாதீர்கள்.
சேமித்தால் – ஆம் சேமித்தால் மட்டுமே.
விவசாயிகளுக்கான பட்ஜெட்டாம்.
இவர்களிடம் என்ன கேட்டோம்? இல்லையில்லை, என்ன செய்வதாக சொன்னார்கள்?
உற்பத்திச்செலவை விட கூடுதல் 50 % சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது.
என்ன கொடுத்துள்ளார்கள்?
குடும்பத்திற்கு மாதம் ஐநூறு ரூபாயாம். அதுவே கைக்கு வரும் நாள் வரை நிச்சயமில்லை. இந்த தொகையை வைத்து பூச்சி மருந்து வேண்டுமானால் வாங்கலாம். அதைத்தான் மோடியும் விரும்புகிறார் போல.
மாதம் நூறு ரூபாய் கட்டி முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மூவாயிரம் ரூபாய் பென்ஷன் என்ற திட்டத்திற்கு அண்ணன் “என்னத்த கன்னையா “வசனம்தான் பொருத்தம்
வரும். ஆனா வராது.
ஹரியானாவில் இருபத்தி இரண்டாவது எ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனை அமைக்கப்படுமாம்.
ஹலோ, இருபத்தி இரண்டாவது அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும்னு சொல்லுங்க.
இதுவரைக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்த எதுக்கும் நிதியே ஒதுக்கலை. மதுரைக்கும்தான்.
வாயால் வடை சுடுவது எப்படி என்பதை உலகில் உள்ள ஆட்சியாளர்கள் எல்லாம் மோடியிடம் கற்றுக் கொள்கிறார்களாம்.
பட்ஜெட் உரையை முழுமையாக படிக்க வேண்டும். அதிலும் பொடி எழுத்துக்களில் யாருடைய கவனத்திற்கும் வராதது போல ஏதாவது இருக்கும். அதில்தான் மோடி தன் எஜமானர்களுக்கான விஸ்வாஸம், பேட்ட எல்லாவற்றையும் காண்பித்திருப்பார். ///