…
…

…
சீனாவின் ஷாங்காய் நகரத்தைப்பற்றி, சீனர்கள் மிகவும் பெருமை கொள்கிறார்கள். பாரிசுடனும், நியூயார்க்குடனும் போட்டி போடும் அளவிற்கு, ஷாங்காய் சிறப்பாக, நவீனமாக வளர்ந்திருப்பதாக கூறிக்கொள்கிறார்கள்.
சீனாவின் மிகப்பெரிய, அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் ஒன்று
ஷாங்காய். 2018 கணக்கீட்டின்படி மக்கள் தொகை 2.41 கோடி…!!! ஷாங்காய் நகரம், சீன மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
ஷாங்காய் பற்றி பல திரைப்படங்களிலும், வீடியோக்களிலும் பார்த்திருப்போம்… விண்ணை முட்டும் உயரத்திற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், வண்ண வண்ண விளக்கு அலங்காரங்கள் நிரம்பிய வீதிகள், மிகப்பெரிய மால்கள்…., அதி நவீன வியாபார ஸ்தலங்கள்,
இவையெல்லாம் ஷாங்காயின் ஒரு பக்கம் ….
நாம் அதிகம் அறிந்திராத ஷாங்காயின் மறுபக்கமும் இருக்கிறது. டூரிஸ்ட்டுகளை கவரும் இடங்கள், பெரிய பெரிய மால்கள், நவீன தொழிற்சாலைகள், வணிக இல்லங்கள் – இவற்றைக் கடந்தது –
அந்தப் பக்கம்… ஷாங்காய் மக்கள் அதிகமாக வாழும் பகுதி….
தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது தானே நமது நோக்கம்.
எனவே, ஷாங்காய் தெருக்களின் கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்க, கொஞ்சம் தேடினேன்…. கிடைத்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே தந்திருக்கிறேன்….
மனதில் ஒரு திருப்தி…. நம்ம ஊர்களை விட அந்த ஊரின் தெருக்களும்
கலாச்சாரமும் எந்த விதத்திலும் உயர்ந்ததாகத் தெரியவில்லை…..!!!
கையேந்தி பவன்கள் –
ப்ளாட்ஃபாரம் கடைகள்,
காயலாங்கடைகள்,
சின்ன சின்ன பாத்திரக்கடைகள்,
எலெக்டிரானிக் ரிப்பேர் கடைகள்,
பழைய துணிகள் வியாபாரம்,
தெருவிலேயே பாதி குடித்தனம்,
உடைந்த சாமான்கள் தெருவெங்கும் சிதறிக்கிடப்பது,
தெருவெங்கும் நீட்டி விரித்துக்கொண்டு வீட்டுத்துணிகள் உலர்த்தல்,
மிகக்குறுகிய தெருக்கள், சந்துகள் –
அழுக்கான, அரைகுறை கட்டிடங்கள் –
அரதப்பழசல் உடைகளோடு மக்களின் நடமாட்டம்
தெருவிலேயே ஓட்டல்கள்,
திறந்தவெளி சமையல் –
நீங்களே பாருங்களேன்…..
ஒரே நகரத்தின் ஒரு பகுதி இப்படியும், இன்னொரு பகுதி அப்படியும்
இருந்தால் … அதற்குப் பெயர் வளர்ச்சியா அல்லது வீக்கமா…?
“எந்த ஊரு சென்றாலும் -அது நம்ம ஊரைப் போலாகுமா..?” 🙂 🙂 🙂
….
…
.
———————————————————————————————————



// “எந்த ஊரு சென்றாலும் -அது நம்ம ஊரைப் போலாகுமா..?” //
ithu dhaan sir correct.
//எந்த ஊரு சென்றாலும் -அது நம்ம ஊரைப் போலாகுமா..?//
இது ஓரளவுதான் சார் உண்மை. வெளிநாட்டு வாழ்க்கையில் நாம மிஸ் பண்ணுவது நெருங்கிய உறவுகளின் நல்லது கெட்டதில் பங்கேற்பது, நம்ம பாரம்பர்ய விழாவை நம்ம சூழல்ல கொண்டாடுவது-நம் கலாச்சாரத்தின் அறிமுகம், நம்முடைய உணவு-to some extend. (என் பசங்க, இதை ஒரு விஷயமா எடுக்கறதில்லை)
ஆனா வாழ்க்கைல, செளகரியம்னு பார்த்தா அது வெளிநாட்டு வாழ்க்கைல அதிகம். நாம அரசின் அங்கம் என்று நம்மை உணர வைப்பது வெளிநாட்டு வாழ்க்கைதான். 50 ரூபாய் வரியா கொடுத்தோம்னா, நமக்கு 30 ரூபாயாவது எந்த விதத்திலாவது உபயோகமா இருக்கும். சாலைகள், விதிகள், காவல், அரசாங்க பணிகள், நம் செளகரியம் என்று எல்லாமே இதில் அடங்கும்.
நீங்க சொல்லும் இந்த இன்னொரு பகுதி இல்லாத நாடே கிடையாது. அதிலும் சைனாவில். ஆனா அந்த தேசங்களின் எதிர்பார்ப்பு, இந்தத் தலைமுறை இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறை கல்வி அறிவு பெற்று சுபிட்சத்தை நோக்கி நடப்பாங்க என்பதுதான். அதுனால மீன்பிடி கிராமங்களாக இருந்த ஹாங்காங் போன்றவற்றின் வறுமையான பக்கங்கள் இருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. இது ஒரு பெரிய குறை கிடையாது. அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் என்று எல்லா வளர்ந்த நாடுகளிலும் இது உண்டு.
நீங்கள் குறிப்பிட்டதுபோன்ற பகுதிகளை நான் ஃபிலிப்பைன்ஸிலும், ஹாங்காங், தாய்வானிலும் ஏன் பாரிஸிலும் பார்த்திருக்கிறேன்.
நம்ம சென்னையையே எடுத்துக்கோங்க. இதில் சாலை, அடுக்கு மாடி வீடுகள், ஹாஸ்பிடல்கள், பள்ளிகள் என்று நாம வளர்ச்சியை நினைத்துப் பெருமைப்படறோம். ஆனால் இந்த இடத்தின் பூர்வ குடிகள் எங்கே? 6ல் 4 பேர் சென்னைக்காரங்களே கிடையாது. எல்லாரும் புலம்பெயர்ந்து வந்தவங்க. சென்னையின் அழுக்குப் பகுதிகளில் சென்னையின் பூர்வ குடிகள் அடையாளம் தெரியாது அல்லல் படறாங்க.
அப்போ வெளி நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் என்ன வித்தியாசம்? தலைவர்களின் தரம், மக்களின் தரம். இதில் நாம வெகு வெகுவாகப் பின் தங்கியிருக்கோம். பெரும்பாலான தேசங்கள்ல, நம் உதவிக்கு எந்த அரசாங்க அலுவலகங்களையும், காவல் துறையையும் தைரியமாக அணுகலாம். இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை. அங்கு ‘குடிமக்களின் உரிமை’ மதிக்கப்படுகிறது (கம்யூனிச நாடுகளைத் தவிர). இங்கு அப்படி ஒன்று இல்லவே இல்லை.
புதியவன்,
உங்கள் பின்னூட்டத்தை நான் வரவேற்கிறேன்.
இந்த இடுகையை எழுதும்போதே, இந்த விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்க ஒரு வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தோடு தான் எழுதினேன். நீங்கள் சொல்லும் கருத்துகளிலும் ஓரளவு கனம் இருக்கிறது என்பது நிஜமே…
இருந்தாலும்…….
என்னால், ஒரேயடியாக இந்தப்பக்கமோ அல்லது ஒரேயடியாக அந்தப்பக்கமோ போக முடியவில்லை…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உண்மையை பொட்டில் அறைந்து சொல்லி இருக்கின்ரீர்கள்
உங்களைத்தான் ஆர் எஸ் எஸ் என்று இங்கே ஒரு கும்பல் வசைபாடிகிட்டு இருக்கு என்று நினைக்கும் போது மன வருத்தமாகவும் இருக்கு
வெளிநாட்டு வாழ்க்கை தரம் என்பது இங்கு இல்லை என்பது மிகவும் நிதர்சனமே.
ஒருவேளை வெளிநாட்டில் இருப்பது போல், இங்கும் வாழ்க்கை தரம், நாகரிகம், கட்டமைப்பு உயர்ந்தால் , உண்மையில்,,நாம் அப்பொழுது நமது கலாச்சாரம், குடும்ப கட்டமைப்பு, உறவுகள் கட்டமைப்பு அனைத்தையும் இழக்க வேண்டிய சூழலும் கூடவே ஏற்படும்.
அதற்கு ஏங்கும் பட்சத்தில், கலாசார அழிவை பற்றி கவலை படுவதில் அர்த்தம் இருக்காது. அது ஒரு உப இணைப்பாக கூடவே வரும்.