…
…
நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் கூடவே வருவது யார்…?
அம்மாவா…?
அப்பாவா…?
மனைவியா…? கணவனா…?
மகளா…? மகனா…?
உறவினர்களா…? உற்ற நண்பர்களா…?
நாம் நினைப்பது போல் இவர்கள் யாருமே இல்லை…? நமது சொந்த உடல் மட்டுமே நம்முடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது… கூடவே வருகிறது….!
நமது உடல் செயல்படுவதை நிறுத்தியவுடன், இவர்கள் அத்தனை பேருக்கும் நம்முடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது.
நாமும், நமது உடலும் மட்டுமே – நமது வாழ்நாள் முழுவதும் சேர்ந்து பயணிக்கிறோம்.
நமது உடலின் மீது நாம் எத்தனைக்கெத்தனை அதிகம் அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ, அத்தனைக்கத்தனை நமது உடலும் நம் மீது அக்கறை கொள்கிறது…
நாம் என்ன சாப்பிடுகிறோம்…
எத்தகைய பணிகளில் ஈடுபடுகிறோம்..
உடலுக்கும், மனதிற்கும் எந்த அளவிற்கு ஓய்வு கொடுக்கிறோம்..
என்பதை எல்லாம் வைத்தே நமது உடல் நம்மை பாதுகாக்கிறது.
நமது நிரந்தர விலாசம் நமது உடல் மட்டுமே –
என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்..
நம்முடைய சொத்து, நம்முடைய கடன் – இரண்டுமே
நமது உடல் தான். இந்த சொத்தை வேறு யாரும் சொந்தம்
கொண்டாடவோ, பங்கு போட்டுக்கொள்ளவோ வர முடியாது.
இது நமக்கு மட்டுமே சொந்தமானது…
இதை நம்மால் மட்டுமே பாதுகாக்க முடியும்..
இந்த விலாசம் அழியாமல் இருக்கும் வரை தான் நாம் இருப்போம். எனவே, இந்த உடம்பை பத்திரமாக பாதுகாப்பது, அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்வது நமது முதலும், முக்கியமானதுமான கடமை அல்லவா..?
சுவரை வைத்துக் கொண்டு தானே சித்திரம் எழுத முடியும்…?
உடல் இருந்தால் தானே – நாம் இருப்போம்…?
பணம், சொத்துக்கள், வரும்… போகும்.
உறவுகள், சொந்தங்கள் – வருவார்கள்.. போவார்கள்…
ஆனால், இவையெல்லாமே – இந்த உடல் இருக்கும் வரை தானே சாத்தியப்படும்…?
எனவே – இந்த உடலை பாதுகாக்க தேவையானது அனைத்தையும் செய்ய வேண்டியது நாம் தானே…?
நுரையீரலை பத்திரமாக வைத்துக்கொள்ள – தினமும் – பிராணாயாமம்
(மூச்சுப்பயிற்சி…)
மனதை பக்குவப்படுத்திக்கொள்ள – தினமும் தியானம்…
ஆன்மாவிற்கு அமைதி தர – நல்ல எண்ணங்கள்…
உடலின் அவயவங்கள் சரிவர இயங்க – தினமும் உடற்பயிற்சிகள்…
இதயத்திற்கு இதமாக – தினமும் நடைப்பயிற்சி…
குடலுக்கு இதமாக – நல்ல உணவுகள்…
உலகிற்கு உகந்தவனாக இருக்க – நல்ல செயல்கள்….
இவற்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு இயங்கலாமா…?
———————————————————————
பின் குறிப்பு –

…
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே….
திருமூலர்- திருமந்திரம் நினைவிற்கு வருகிறதா…?



Excellent, very true!
மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ரொம்ப தெளிவா இதனைப் படித்துத் தெரிந்தாலும், ஓரளவு ப்ராக்டிஸ் செய்தாலும் நம்மை மீறி உடம்பு ரிப்பேர் ஆகிவிடுகிறது.
நீங்கள் சொல்லியிருப்பது அருமையான பாயிண்டுகள். இரு நாட்களுக்கு முன்பு வள்ளலார் சொன்ன வாழ்க்கை நெறி (அவருடைய சீடர்களுக்குச் சொன்னது) என்பதனைப் படித்தபோது எனக்குத் தலை சுற்றாத குறை. அவர் முக்கியமாகச் சொல்வது, இந்த உடலை வைத்துத்தான் நாம் முன்னேற முடியும் (ஆன்மீகமாக). அதனால் அதனை எப்படி பாதுகாப்பது (காலை எழுந்திருப்பது முதல் நம்முடைய எல்லா செயல்களிலும் எப்படி நடந்துகொள்வது என்பது வரை தெளிவாக) என்று எழுதியிருக்கிறார். வாய்ப்பு இருக்கும்போது அதன் ஹைலைட்ஸை மட்டும் குறிப்பிடுகிறேன்.
Who travels with us until our end? Probably, many of us like me would say it is the spouse. Only recently I too came across a WhatsApp message which said that It is none other than the body that comes along with us from birth to death. This very simple thought makes a lot of sense. Along with body, the mind and soul, and above all, our thoughts (surprisingly, thoughts travel backwards and jump decades, all in a moment!) come along with us till we depart. KM very clearly put this idea into so many crisp pointers that are worthy of absorption and action.