கேமேன் தீவிலிருந்து வந்த 8,300 கோடி ரூபாய் யாருடையது…?



மோடிஜி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிக்கொண்டே இல்லாவிட்டால் இந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு உறக்கமே வராது போலிருக்கிறது….

எந்தவித ஊழல் புகாரிலும் சிக்காமல், நல்ல பெயருடன் ஆட்சி நடத்தி வரும் மோடிஜி அரசின் பெயருக்கு களங்கம் உண்டாகும் வகையில் ஒரு புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ்.

இதை Economic Times, Times Now மற்றும் the Hindu செய்தி நிறுவனங்கள் வேறு வெளியிட்டுள்ளன….

அவர் கூறியுள்ள குற்றச்சாட்டின் சாராம்சம்….

கேமேன் தீவு….பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு சொர்க்கபுரி (tax
hawala heaven)…. கேமேன் தீவு என்பது உலகில் இருக்கும் ”வரி சொர்க்க”
பகுதிகளில் ஒன்றாகும். இது போன்ற பகுதிகளில் வரி மிக மிக குறைவாக இருக்கும். சில இடங்களில் சுத்தமாக வரி இருக்காது.

இங்கு பணம் முதலீடு செய்வது, சட்டப்படி தவறான விஷயம் கிடையாது….
இந்த தீவுகளில் முதலீடு செய்பவர்களை, அந்த அரசு நிர்வாகம் – அநாவசியமாக கேள்விகள், விவரங்கள் கேட்டு தொந்தரவு செய்வதும் கிடையாது.

ஆனால், ஜெயராம் ரமேஷ் கூறுவது, இந்தியாவில் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள், தங்களது சட்டவிரோத பணத்தை, – எந்தவித கேள்விகளும் கேட்காத நிர்வாகத்தை உடைய – கேமேன் தீவுகளில் கொண்டு போய் முதலீடு செய்து விட்டு, பின்னர் மீண்டும் அதை வெளிநாட்டு முதலீடு (Foreign Direct Investment – FDI ) என்கிற பெயரில் இந்தியாவுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர் என்பதே…..

அவரது குற்றச்சாட்டின்படி,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.தோவலின் மகன்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார்.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 13-வது நாளில், நவம்பர் 21, 2016 அன்று,
அவருடைய மகன் விவேக் தோவல் கேமேன் தீவில் ‘GNY Asia’ என்கிற பெயரில் ஒரு hedge fund ( an offshore investment fund, typically formed as a private limited partnership, that engages in speculation using credit or borrowed capital…) உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார்.

மேலும் ஜெயராம் ரமேஷ் கூறுவது –

RBI -ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2000 ஆவது ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில்,

இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு மூலதனத்தின் மொத்த மதிப்பு சுமார் 8,300 கோடி ரூபாயாக இருக்கையில், அதே அளவிற்கான தொகைக்கு 2017-2018 நிதியாண்டிலிருந்து மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது…!

16 ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு இணையான அவ்வளவு பெரிய தொகை பண மதிப்பிழப்பீடு செய்ததற்கு அடுத்த ஒரே நிதியாண்டில் FDI முதலீடாக வந்ததன் பின்னணி என்ன….?

ரிசர்வ் வங்கி, விவேக் தோவலின் கம்பெனியான “GNY Asia” – இதில் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டும்…

கேமேன் தீவிலிருந்து – 2000-ஆவது ஆண்டு முதல், இதுவரை FDI – வெளிநாட்டு முதலீடு என்கிற வகையில் இந்தியாவில் பெறப்பட்டதொகைகள் சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் ரிசர்வ் வங்கி உடனடியாக வெளியிட்டு, இந்த விவகாரத்தை தெளிவு படுத்த வேண்டும்….

முக்கியமாக, பண மதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பெறப்பட்ட தொகைகள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கேமேன் தீவுகளிலிருந்து வரும் முதலீடுகள் சந்தேகத்திற்குரியவையே
என்பதை மத்திய அரசும், பாஜகவும் ஏற்கெனவே 2011 -ஆம் ஆண்டிலேயே
ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஜெயராம் ரமேஷ் இத்துடன் விடவில்லை…

இன்னொரு மகனாகிய ஷவுர்யா தோவல் சம்பந்தப்பட்ட Zeus Strategic Management Advisors Pvt. Ltd., என்கிற இதே கேமேன் தீவில் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு கம்பெனிக்கும், அவரது சகோதரராகிய இந்த விவேக் தோவல் கம்பெனியான “GNY Asia” வுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்…

ஜெயராம் ரமேஷ் கூறும் புகார்கள் சம்பந்தப்பட்ட Times Now செய்தி வீடியோ ஒன்று கீழே பதியப்பட்டுள்ளது…

இதுவரை, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எத்தகைய மறுப்போ, விளக்கங்களோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் இத்தகைய ஊழல் புகார்கள் வெளிவருவது மோடிஜியின் otherwise clean அரசுக்கு நல்லதல்ல என்பதால், மத்திய அரசே உரிய விசாரணையை உடனடியாக மேற்கொண்டு, முழு விவரங்களையும் வெளியிடும் என்று நம்புவோமாக.

டைம்ஸ் நவ் – தொலைக்காட்சியின் சம்பந்தப்பட்ட செய்தி வீடியோ கீழே ….

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ajit-dovals-son-opened-hedge-fund-in-cayman-islands-after-note-ban-congress/videoshow/67583377.cms

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to கேமேன் தீவிலிருந்து வந்த 8,300 கோடி ரூபாய் யாருடையது…?

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! ஐந்தே நாட்களில் சுமார் 745 கோடி செல்லா நோட்டுகளை மாற்றியவர்களும் — செய்தி வெளியானவுடன் நீக்கப்பட்டது பற்றியும் நமது தளத்தில் : // திருவாளர் அமீத்ஷா பற்றிய நெகடிவ் செய்திகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள்…
    Posted on ஜூன் 25, 2018 by vimarisanam – kavirimainthan // என்று தாங்கள் பதிவிட்டிர்கள் …!
    … பண மதிப்பிழைப்பை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டவர்களும் யார் — யார் என்றும் — ஒரே ஆண்டில்
    ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் 2014-2015-ஆம் ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்தநிலையில், ஒரே வருடத்தில், அதாவது 2015-2016-ஆம் ஆண்டில் 16,000 மடங்கு (80.5 கோடி) அதிகரித்ததாக, ‘தி ஒயர்’ இணையத்தளம் கட்டுரை வெளியிட்டதும் …. மக்கள் அறிந்ததே …

    தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.தோவலின் மகன்கள் பற்றிய செய்தியும் வந்துள்ளது — இந்த கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகளும் — கார்பொரேட் முதலைகளும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதால் — மக்களாகிய நமக்கு பல புதிய நாடுகளின் பெயர்களும் — புது – புது சொகுசு புரி — சொர்க்கபுரி தீவுகளின் பெயர்களும் — அங்கே உள்ள வரிகளின் போக்கும் நமக்கும் தெரிய வைத்து — விளங்க வைக்கும் இவர்கள் தேசத்தின் பக்தர்கள் — உத்தமர்கள் … அப்படித்தானே …?

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இந்த மாதிரி செய்திகள் உருவானவுடனேயே தடுப்பதில் கில்லாடிகள் அவர்கள்.

    ஒன்று கோர்ட்டுக்கு போய், இதைப்பற்றி எந்த ஊடகத்திலும், செய்தி, விவாதம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவு பெற்று விடுவார்கள். குஜராத்தில் செய்த மாதிரி.

    அல்லது உடனடியாக மறுப்பு செய்தி வெளியிடுவார்கள்.

    ஜெயராம் ரமேஷின் பேட்டி வெளியகி இன்று 3-வது நாள். ஆனால் இன்னமும்
    ஆட்சியிலிருந்தோ, கட்சியிலிருந்தோ பேச், மூச் இல்லை.

    எங்கேயோ வசமாக சிக்கி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    நண்பர்கள் காமை ஐயா, செல்வராஜன், அரவிந்தன் ஆகியோகிருக்கு,

    ஆமாம், இதில் மோடி அவர்கள் எங்கு சம்பந்தபட்டு இருக்கிறார் என்று சொல்கிறீர்கள். அவர் கரை படியாத கரத்திற்கு சொந்தகாரர் இல்லையா? அவரும் திண்ணமட்டார், வேறு யாரையும் திண்ணவிடமவுமாட்டார், தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஆட்சியும் அதுபோலத்தான், ஆமாம்…!

    நீங்கள் எல்லாம் காங்கிரஸின் கைகூலிகள். உங்கள் சொல்லையெல்லாம் நாங்கள் எதற்கு பொருட்படுத்தனும் சொல்லுங்கள்.

    நாங்கள் கூடிய சீக்கிரம் இதற்கு பதில் சொல்லுவோம்.

    பாருங்கள், Demonitisation,GST, Rafael இவைகளின் போதும் மற்றும் தேர்தல் காலங்களிலும் நாங்கள் பொய்களை யோசித்து யோசித்து சொன்னது போல் இதிலும் பொய்யை அவிழ்த்து விட எங்களுக்கு கால அவகாசம் வேணாம்…! ரொம்ப அவசரப்படுத்தினால் எப்படி?

    எல்லாம் தேச துரோகிகள்.

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    அமெரிக்க அரசாங்கம் கடந்த ஒரு மாத காலமாக செயல்படாமல் வேலை நிறுத்தத்தில் இருக்கிறது. இதனால், அமெரிக்க அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை இன்றைய தமிழ் ஹிந்துவில்,

    ”ட்ரம்பின் பிம்பம் சிதைகிறதா? – ஜெ.சரவணன்”,

    என்ற தலைப்பில் விவரிக்கிறார். அந்த கட்டுரையில், அவர் ட்ரம்ப் பற்றி கூறிய கருத்துகள்… நம் நாட்டில் இப்போதுள்ள நிலைமையோடு பொருந்துகிறது என்று தயவுசெய்து யாரும் கூறாதீர்கள்.

    அது ரொம்ப தப்பு.

    அந்த பொருந்தா பகுதி கீழே,

    /// மக்கள் இதையெல்லாம் மறந்துவிடுவார்கள், பிடிவாதமாக இருந்து நினைத்ததை சாதித்த ட்ரம்ப்பை நினைவில் கொள்வார்கள். இப்படி ஒரு தலைவன் நினைக்கும்போது, அந்த நாடு எப்படிப்பட்டதாக இருக்கும். என்னால் முடியும் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே எதையும் செய்ய நினைக்கும் தலைவர்களிடம் நாடு சிக்கினால் இதுதான் கதி என உணர்த்துகிறார்.

    தவறும் செய்துவிட்டு, தவறையும் ஒப்புக்கொள்ளாமல், தன்னை திருத்தியும் கொள்ளாமல் இருக்கும் தலைவனால் எத்தனை பெரிய ஆபத்து வரும் என்பதை விரைவில் அமெரிக்கா உணரத்தான் போகிறது. அமெரிக்காவைப் பார்த்து பயந்தவர்கள், இனி அமெரிக்காவைப் பார்த்து பரிதாபப்படும் நிலையும் உருவாகலாம்.

    ஒருமுறை ஜெயித்துவிட்டதால் மட்டுமே என்ன செய்தாலும் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தை இந்த அரசியல்வாதிகளுக்குக் கொடுப்பது யார்? ///

    https://tamil.thehindu.com/business/business-supplement/article26049499.ece?utm_source=HP&utm_medium=hp-supplement

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! இப்பவே கண்ணைக்கட்டுதே … இன்னும் வருங்காலத்தில் என்ன நிலையோ …? // இந்தியாவின் 9 கோடீஸ்வரர்களிடம் நாட்டின் 50 சதவீத சொத்துகள்: கடந்த ஆண்டில் மேலும் 18 புதிய பணக்காரர்கள் // https://tamil.thehindu.com/india/article26048262.ece இந்த செய்தியில் மேலும் …//

    மத்திய, மாநில அரசுகளின் மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றின் வருவாய் மற்றும் செலவுகள் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 166 கோடியாகும். இது முகேஷ் அம்பானியின் ரூ.2.80 லட்சம் கோடியைக் காட்டிலும் குறைவுதான்.என்றும்

    இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் நாட்டின் 77.4 சதவீத ஒட்டுமொத்த சொத்துகளையும் வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் மட்டும் நாட்டின் 51.53 சதவீத சொத்துகளையும் வைத்துள்ளனர்.

    அடிமட்டத்தில் உள்ள 60 சதவீத மக்களிடம் நாட்டின் 4.8 சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன. நாட்டின் 9 பணக்காரர்களின் மட்டும் நாட்டின் 50 சதவீத சொத்துகள் உள்ளன.// என்றும் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …. ஏழைத்தாயின்புதல்வர்கள் நாம் என்ன செய்ய முடியும் …?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      செல்வராஜு சார்… இதற்கான சிறந்த தீர்வு, தந்தை சம்பாத்தியத்தில் மிஞ்சி இருப்பதில் (அவரது வாழ்நாளுக்குப் பிறகு. அதற்கு முன்பு அவர் ரத்த சம்பந்தமில்லாத சாரிட்டிக்குக் கொடுக்கலாம்) 50% அரசுக்குச் சேரும். இது அசையும் அசையாச் சொத்துக்கும், கம்பெனிகளுக்கும் பொருந்தும். (கம்பெனினா, 50% ஷேர்ஸ் அரசுக்குப் போகும்). கொடுத்த 50%, அவரது மகன் காலத்துக்குப் பின், அரசாங்கத்தைச் சேரும் என்று ஒரு சட்டம் போட்டால்தான், பெரிய லெவல் ஊழல் ஒழியும்.

      10 ரூபாய், 500 ரூபாய் லஞ்சத்தைத் தடுத்து எந்த புண்ணியமும் கிடையாது.

      நம்ம ஊரில் 40,000 கோடி என்றெல்லாம் ஊழல் பணத்தைச் சேர்த்து பல தலைமுறைகளுக்கும் கொண்டுபோயிடறாங்க. 80% ஏழைகள் அன்னாட உணவுக்கே அல்லல் படறான். அவனுக்கு இந்த ஹை லெவல் திருட்டுகள் எப்படிப் புரியும்?

  6. Mani's avatar Mani சொல்கிறார்:

    ரொம்ப சிம்பிள்.
    மீண்டும் தாமரைக்கு ஓட்டு போட்டு மோடிஜியை பிரதமராக தேர்ந்தெடுங்கள்.
    மிச்ச 4.8 % சதவீதமும் போய் விடும்.
    நிம்மதி for ever.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      தேர்தல் ஆணையம்தான் எத்தனைமுறை அழைப்பு விடுத்திருக்கிறது, வந்து நிரூப்யுங்கள் (யார் வேண்டுமானாலும்) என்று. பரபரப்புக்கான அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகள் இவை.

      இந்த மாதிரி வாக்குப்பதிவு யந்திரக் குற்றச்சாட்டு சிறிதும் நம்பகத் தன்மை இல்லாதது. இப்படி வாய்ப்பிருந்தால், பலவித ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான காங்கிரஸ் அந்தத் தேர்தலில் இதனையும் செய்திருக்காதா?

      அதே சமயம், ஒரு டெக்னாலஜியில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதனை நீக்கும் வழிமுறைகளை ஆராயலாம். அதற்கு முதலில் என்ன என்ன ஓட்டைகள் இருக்கின்றன என்று தெளிவாகச் சொல்லணும்.

  7. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா .! வித்தைகளில் பலவகை உண்டு — அதில் மற்றவர்கள் [ குறிப்பாக மக்கள் ] தன் மீது பரிதாபம் — பச்சாதாபம் பட வேண்டும் என்று வித்தைகள் காட்டுபவர்களை எந்த வகையில் சேர்ப்பது …? இந்த செய்தி அப்படிப்பட்ட ஒன்றுதான் :— // Modi never sold tea, just a gimmick to gain sympathy, says Praveen Togadia // …. https://www.indiatoday.in/elections/story/praveen-togadia-hopes-to-end-modi-rss-regime-with-new-party-in-2019-build-ram-temple-1436118-2019-01-21 … இன்னும் பலதும் தேர்தல் நெருங்க — நெருங்க வெளி வருமோ ….?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.