…
…

…
the best joke – “எடப்பாடி சிறைக்கு சென்றால் தனக்கு மீண்டும் முதல்வர்
பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில்
பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார்…..
-திரு.ஸ்டாலின் …!!!
—————————————-
2nd best joke – ” எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி
நிறைவேற்றி வருகிறார். மோடி தான் இத்தனை ஆண்டுகளாக
எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றி வைத்துக் கொண்டு
இருக்கிறார்.”
– திருச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் …
.
————————————————————————————————————–



OPS தனக்காக யாகம் பண்ணாமல், ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்றா யாகம் செய்வார் ? ஆனாலும் ஸ்டாலினுக்கு இத்தனை பொறாமை கூடாது..
ஸ்டாலினுக்குத்தான் அவரது துணைவியார் இருக்கிறாரே கோவில் கோவிலாகச் சென்று யாகம் செய்ய !
ஓபிஎஸ் அவர்கள் யாகம் நடத்தியதற்கான ஆதாரங்கள் எதாவது இருந்தால்
ஸ்டாலின் வெளியிடலாம். இல்லையேல் இந்த குற்றச்சாட்டு காமெடியாகவே
கருதப்படும்.
ஒருவருக்கு ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்’, எதைச் செய்தால் முதல்வர் பதவியை அடையலாம் என்ற பதவி வெறி. அதனால் கொள்கையைப் புதைத்துவிட்டு, மனைவியை வட நாட்டுக்கு அனுப்பி எல்லா இடங்களிலும் வேண்டிக்கொள்ள, யாகம் செய்ய அனுப்பிவைக்கும் தந்திரம்…
இன்னொருவருக்கு, முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதற்குப் பதிலாக, பூசனித் தோட்டத்தையே சோற்றில் மறைக்கும் அவசரம். அதிமுக, அவர்களின் கொள்கைகளுக்கு மாறாக, பாஜகவுடன் சேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ‘கொண்டுவைத்தானொரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ என்பதுபோல் அதிமுகவை ஆக்காமல் இருந்தால் சரிதான்.
அய்யா .. ! நாட்டில் நிறைய ஜோக்ஸ் நடந்துகொண்டே தான் இருக்கிறது — சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திரு.ஸ்டாலின் அவர்கள் கேரளாவில் ” சத்ரு சம்ஹார யாகம் ” நடத்தினார் எதற்கு நாட்டு மக்களின் நலனுக்கா ..? இவரும் நைனா இருக்கும்போதே முதல்வர் ஆகணும் என்கிற ஆசையினால் தானே ..? என்ன பன்னீர் தலைமை செயலகத்தில் செய்தது தான் ஸ்டாலின் அவர்களுக்கு பிடிக்கல …! —- நல்ல வேலை நிர்மலா மேடம் இப்பவாவது முகத்தில் ” கடுப்பு யோகா ” பண்ணாமல் சிரித்துக்கொண்டே ஜோக் அடித்ததை நம்பி சிரிக்கலாம் … !!
அந்த வரி — இந்த வரி சாப்பாட்டுக்கே வரி என்றெல்லாம் போட்டு பணத்தை வாரி கஜானாவை நிரப்பும் போதே : // மோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட் //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/india-s-debt-increased-50-modi-s-five-year-governance-339170.html இப்படியும் ஒரு செய்தி — இது ஜோக் ரகத்தில் சேராது …?
ஸ்டாலின்மனைவி துர்க்கா காசியில் கோவிலில் பூஜை செய்யும்போது
ஓ பி எஸ் பூஜை செய்வதில் ஒன்றும் தப்பில்லை. இந்து கடவுள்களை
இழிவு படுத்தி விட்டு மனைவி மூலம் பரிஹாரம் தேடுவதுதான் தப்பு.