…
…

…
திரு.ப.சி. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைப்பற்றி, இந்த தளத்தில் முன்னதாக நிறைய கருத்துகள் கூறி இருக்கிறோம். அந்த அபிப்பிராயங்கள் /விமரிசனங்கள் அப்படியே தான் இருக்கின்றன….அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டிய எந்தவித அவசியமும் இப்போது ஏற்படவில்லை….
ஆனால், இப்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு கொஞ்ச நாட்களுக்கு அவரைப்பற்றிய தனிப்பட்ட விமரிசனங்களை தள்ளி வைத்து விட்டு, நாட்டின் பொது அரசியலை கவனிக்க வேண்டிய அவசியம் இப்போது நேர்ந்திருக்கிறது…
கூர்ந்த மதிநுட்பம், ஆழ்ந்த அரசியல் அனுபவம் … எந்த பிரச்சினையையும் – மிகத்தெளிவாக அணுகும் அணுகுமுறை,
அது தமிழிலாக இருந்தாலும் சரி, ஆங்கிலத்திலாக இருந்தாலும் சரி – சொல்ல வந்ததை சுருக்கமாகவும், கேட்பவர்களுக்கு மிக எளிதாக புரியும்படியும் – எடுத்து விளக்கக்கூடிய பக்குவம் –
இவையெல்லாம் திரு.ப.சி. அவர்களின் தனிச்சிறப்பு.
தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டே “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியை நடத்திய விதம் வேறு விதம்.
இந்த தடவை, அந்த வாய்ப்பு தந்தி டிவியின் தலைமை இணை ஆசிரியர் சலீம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தி இருக்கிறார் சலீம். தென்றல் போல் வருடிக்கொடுக்கும் விதத்தில், ஆனால் – எதையும் விட்டுக்கொடுத்து விடாமல், ஆழமான கேள்விகளை கேட்கிறார் சலீம்.
பல முக்கியமான தலைப்புகள் –
சிபிஐ டைரக்டரை பாஜக அரசு நடத்தும் விதம்…
பொருளாதார ரீதியிலான, புதிய 10 % இட ஒதுக்கீடு…
சபரிமலை விவகாரம்…
ரஃபேல் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்…
ராமஜென்ம பூமி விவகாரம்…
முத்தலாக் – விவகாரம்…
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்கள் …
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அடுத்த பிரதமர் வேட்பாளர்…
மற்ற கட்சிகளுடன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அணுகுமுறை…
-இப்படி பல முக்கியமான தலைப்புகளில் தனது கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறார் திரு.ப.சி.
மொத்தத்தில் ஒரு நல்ல, தெளிவான, பயனுள்ள பேட்டி….!!!
தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நண்பர்களின் வசதிக்காக கீழே அதனை பதிந்திருக்கிறேன்….
இது வரை, பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க பரிந்துரைக்கிறேன்…..
கருத்து கூற விரும்புபவர்கள் வழக்கம்போல் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.
…
…
.
————————————————————————————————————-



I watched this interview recently and indeed he raised some really tough questions (especially on Rafael, CBI were spot on) and i am sure BJP would not have valid answers for most of the questions.