தந்தி டிவியின் ” கேள்விக்கென்ன பதில்..? “…. திரு.ப.சி. அவர்களின் – சிறப்பானதொரு பேட்டி….


திரு.ப.சி. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைப்பற்றி, இந்த தளத்தில் முன்னதாக நிறைய கருத்துகள் கூறி இருக்கிறோம். அந்த அபிப்பிராயங்கள் /விமரிசனங்கள் அப்படியே தான் இருக்கின்றன….அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டிய எந்தவித அவசியமும் இப்போது ஏற்படவில்லை….

ஆனால், இப்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு கொஞ்ச நாட்களுக்கு அவரைப்பற்றிய தனிப்பட்ட விமரிசனங்களை தள்ளி வைத்து விட்டு, நாட்டின் பொது அரசியலை கவனிக்க வேண்டிய அவசியம் இப்போது நேர்ந்திருக்கிறது…

கூர்ந்த மதிநுட்பம், ஆழ்ந்த அரசியல் அனுபவம் … எந்த பிரச்சினையையும் – மிகத்தெளிவாக அணுகும் அணுகுமுறை,

அது தமிழிலாக இருந்தாலும் சரி, ஆங்கிலத்திலாக இருந்தாலும் சரி – சொல்ல வந்ததை சுருக்கமாகவும், கேட்பவர்களுக்கு மிக எளிதாக புரியும்படியும் – எடுத்து விளக்கக்கூடிய பக்குவம் –
இவையெல்லாம் திரு.ப.சி. அவர்களின் தனிச்சிறப்பு.

தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டே “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சியை நடத்திய விதம் வேறு விதம்.

இந்த தடவை, அந்த வாய்ப்பு தந்தி டிவியின் தலைமை இணை ஆசிரியர் சலீம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தி இருக்கிறார் சலீம். தென்றல் போல் வருடிக்கொடுக்கும் விதத்தில், ஆனால் – எதையும் விட்டுக்கொடுத்து விடாமல், ஆழமான கேள்விகளை கேட்கிறார் சலீம்.

பல முக்கியமான தலைப்புகள் –

சிபிஐ டைரக்டரை பாஜக அரசு நடத்தும் விதம்…
பொருளாதார ரீதியிலான, புதிய 10 % இட ஒதுக்கீடு…
சபரிமலை விவகாரம்…
ரஃபேல் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்…
ராமஜென்ம பூமி விவகாரம்…
முத்தலாக் – விவகாரம்…
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனங்கள் …
காங்கிரஸ் கட்சியின் சார்பில் அடுத்த பிரதமர் வேட்பாளர்…
மற்ற கட்சிகளுடன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அணுகுமுறை…

-இப்படி பல முக்கியமான தலைப்புகளில் தனது கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறார் திரு.ப.சி.

மொத்தத்தில் ஒரு நல்ல, தெளிவான, பயனுள்ள பேட்டி….!!!

தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நண்பர்களின் வசதிக்காக கீழே அதனை பதிந்திருக்கிறேன்….

இது வரை, பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க பரிந்துரைக்கிறேன்…..
கருத்து கூற விரும்புபவர்கள் வழக்கம்போல் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தந்தி டிவியின் ” கேள்விக்கென்ன பதில்..? “…. திரு.ப.சி. அவர்களின் – சிறப்பானதொரு பேட்டி….

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஐயா,

    ஒரே இடுகை இருமுறை. ஒன்றை நீக்கி விடுங்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி அறிவழகு.

      ஒரு டெக்னிகல் பிரச்சினை. நீக்குவதற்குள், இரண்டிலும் பின்னூட்டங்கள் வந்து விட்டதால், இப்போது நீக்குவது
      சரியாக இருக்காது. எனவே, பொறுத்துக் கொள்வோம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ப.சி. அவர்கள் மீது மட்டும் இந்த பாழாப்போன ஊழல் குற்றச்சாட்டு மட்டும் இல்லை என்றால்…

    இன்று இருக்கும் நாட்டின் நிலைமைக்கு அவர் முதல்வராகவோ பிரதமராகவோ வர முழு தகுதிபெற்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! பண்பட்ட அரசியல் வாதி மற்றும் நோக்கர் … அருமையான கருத்துக்கள் — ஆல் ரவுண்டர் … ! தமிழகத்தில் காங்கிரஸ் தவறவிட்ட ஆட்சி அமைக்கும் காலங்களின் தொகுப்பு அபாரம் — ரபேல்பற்றிய மூன்று முத்தான கேள்விகள் — கூட்டுக்குழுவில் முடிவு வருகிறதோ இல்லையோ – செய்தியாகவாவது மக்களுக்கு தெரிய வருமல்லவா என்றது நெத்தியடி சிபிஐயின் நிலை — முத்தலாக் பற்றி கணவனை மூன்றாண்டுகள் சிறை என்னும் சட்டப் பிரிவு பற்றிய விளக்கம் ஏற்க தக்கது ..
    அதிமுக யாருடைய கைப்பாவை என்றும் — காங்கிரசின் உட்கட்சி வலுவைப்பற்றியும் கூறியது — 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி என்று மோடி கூறுவதற்கு தக்க விளக்கம் — சில கேள்விகள் தேவையில்லாதது என்று கூறியது — வேட்டி கட்டிய தமிழன் சிவகங்கை தொகுதி பற்றி வேதனையோடு கூறியது — திரு . வாஜ்பாய் என்ற பரந்த மனது பெற்ற மனிதர் அவர் திறந்த கதவின் வழியே உள்ளே நுழைந்தவர்களில் திமுக வையும் இணைத்தது சூப்பர் — ஆனால் தற்போது மோடியின் கூட்டணியில் இருந்து ஒவ்வொன்றாக வெளியேறுவது பற்றி கூறியது — கூட்டணி அமைக்க வேண்டும் .. கூட்டணி வெற்றிபெற வேண்டும் — வென்ற பிறகு கூடி யார்பிரதமர் என்பதை முடிவெடுக்க வேண்டும் —
    மனதில் சலனம் இல்லாத மனிதர் …?
    காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான அமைப்பு கிடையாது என்ற உண்மை நிலையை கூறியது — வேதனையான வரலாறு என்றதும் எதார்த்தம் — திரு சலீம் அவர்கள் ஆரவாரம் – கூச்சல் – குழப்பம் – படபடப்பு ஏதுமின்றி எளிமையாக கேள்விகளை தொகுத்தது வரவேற்க தக்கது … !!!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ப.சி கருத்துக்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரே கணிப்புதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’.

    காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அமைப்பு இல்லை என்று சொல்லும் இவர், மத்திய அமைச்சராக இருந்த அத்தனை ஆண்டு காலங்களிலும் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு என்ன செய்தார்? மற்றவர்களின் ஊழலைப் பற்றிச் சொல்லுமுன், அவருடைய மகன் அபரிமிதமாக 5000 கோடிகளுக்கும் அதிகமாக 3-4 ஆண்டுகளில் பணம் சம்பாதித்தது எப்படி? இவர் நிதியமைச்சராக, பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் இருந்தபோது என்னவிதமான நன்மைகளைச் செய்துள்ளார்?

    அதனால் இவர் பாஜகவைக் குற்றம் சொல்லும்போது அவைகள் வலுவிழக்கின்றன என்பது என் அபிப்ராயம்.

  5. Mani's avatar Mani சொல்கிறார்:

    உங்களுக்கு தான் பாஜகவை யார் குறை சொன்னாலும் பிடிக்காதே.

    கே.எம்.சார் தான் இடுகையில் ஏற்கெனவே சொல்லி விட்டாரே –

    //ஆனால், இப்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு கொஞ்ச நாட்களுக்கு அவரைப்பற்றிய தனிப்பட்ட விமரிசனங்களை தள்ளி வைத்து விட்டு, நாட்டின் பொது அரசியலை கவனிக்க வேண்டிய அவசியம் இப்போது நேர்ந்திருக்கிறது…// என்றூ.

    அப்புறம் எதற்கு அதையே பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும் ?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      அப்படி இல்லை மணி… நாட்டின் பொது அரசியலைக் கவனித்தாலும், இவங்களுக்கு வாக்களிக்கலாம் என்று சொல்லும்படி எனக்கு ஒரு கட்சியும் இப்போ கண்ணுக்குத் தோன்றவில்லை. நிச்சயம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வாக்களிக்கமாட்டேன். அவங்க அஜெண்டாவே, திரும்ப 2004-2014 கொள்ளையை திரும்ப அரங்கேற்றுவதுதான் திட்டமாக இருக்கும்.. அவங்க அவங்க மேல உள்ள எல்லா கேசுகளையும் ஊத்தி மூடுவதாகத்தான் இருக்கும். வேற யாரு புதிதாக அரசியல் அரங்கத்துக்கு வர்றாங்கன்னு பார்க்கலாம்.

  6. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    Mr P Chidambaram may be a intellectual and a good economist .But as a Minister he does not
    do anything to Tamilnadu , and not even to Sivaganga his own constituency. His only contribution is opening more and more nationalsied banks near karaikudi area and force the bank managers to give lot of loans to his own congressmen who cheated all the bank branches by not paying their loans..His son Karthi is involved in so many cases. His wife nalini appeared as an advocate favoring NEET exam . Preaching is easy , but practising is difficult.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.