இந்த பொய்ச்செய்தி உருவானது, வெளியானது எப்படி …..?


அண்மையில் ராகுல் காந்தி துபாய் சென்றிருந்தார்.
அங்கு நடந்த ஒரு சம்பவமாக தினமலர் நாளிதழ் கீழ்க்கண்ட செய்தியை
வெளியிட்டிருந்தது –

———————————————————————————

சிறுமி, “இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி
செய்வீர்கள்?”…

இதைக் கேட்டவுடன் ராகுலின் முகம் மாறியது. சிரித்த முகமாகவே இருந்தார். மேலும் அந்த சிறுமி, ‘நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பின்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இனியாவது நீங்கள் ‘மதவாதம்’ என பிரசாரம் செய்யாமல் ‘ஊழல் இல்லாத இந்தியா’ என ஓட்டு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பர்’ என்றார்.

சிறுமியின் பேச்சை பார்வையாளர்கள் பாராட்டினர். இதற்கிடையே சிறுமியின் துடுக்கான கேள்விகளை தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கான நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

————-
இவ்வாறாக செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.

——————————————————————————-

கிட்டத்தட்ட இதே போன்ற செய்தி, மை நேஷன், போஸ்ட் கார்டு, தினகரன் ஆகிய செய்தி தளங்களிலும் வெளியாகி இருக்கிறது…

இந்த செய்தி உண்மையா அல்லது எந்த அளவிற்கு உண்மை என்று அறியும் முயற்சியில் நடுநிலையான,பிபிசி.காம் செய்தித்தளம் முயற்சித்துள்ளது….

அதில் வெளியான உண்மைகளையும் பிபிசி.காம் பிரசுரம் செய்துள்ளது….

கீழே –
பிபிசி.காம் – வெளியிட்டுள்ள உண்மைத் தகவல் –

——————–
( https://www.bbc.com/tamil/india-46859709)

கையில் மைக்குடன் ராகுலிடம் கேள்வி கேட்பதாக இருக்கும் அந்த சிறுமி, உண்மையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை.

அந்த சிறுமியின் புகைப்படம் ஒரு யூ- டியுப் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

..

..

பாலின பாகுபாடு குறித்து அந்த காணொளியில் அந்தச் சிறுமி பேசுகிறார்.
அந்த காணொளியானது, KidsandShare யு- டியூப் சேனலால் தரவேற்றப்பட்டுள்ளது.

——————————————————————-

உண்மையில் அங்கு நடந்தது என்ன?

ராகுல் மூன்று இடங்களில் உரையாற்றி இருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில்,
தொழிலாளர் சமூகத்துடன் –
மற்றும் ஆயிரகணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச
கிரிக்கெட் மைதானத்தில்-




பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
———

தொழிலாள சமூகத்துடன் முதலில் பேசிவிட்டு பின் அந்த மக்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

———-

ஆயிரக்கணக்காணவர்கள் கூடியிருந்த துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பேசினார்.

———————————————–

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் அவ்வாறான கேள்வி எழுப்பப்படவில்லை.

துபாயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிலால் அலியாருடன் பேசினோம்.அவர், “துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த நிகழ்வில், உண்மையில் அந்த நிகழ்ச்சியில் யாரும் கேள்வி கேட்கவே இல்லை.

வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணிக்கு ராகுல் பேச தொடங்கினார். அந்த பேச்சில் சகிப்புத்தன்மையின் தேவை, இந்திய வளர்ச்சியில் என்.ஆர்.ஐ-இன் பங்கு குறித்து பேசினார்”என்றார்….

(இடதுபுறம் இருப்பவர் பிலால் அலியார்…)

——————————————–

அந்த நிகழ்வில் வேறு யாரேனும் கேள்வி எழுப்பினார்களா என்ற நம் கேள்விக்கு, ” முறையான கேள்வி பதில் அமர்வு எல்லாம் இல்லை.

ஆனால் உரை முடிந்த பின் ஒருவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று சொன்னார்” என்று பிபிசி தமிழிடம் கூறினார்.

செய்திதாள்களில் வெளியிட்டது போல அந்த சிறுமி இந்த நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளவில்லை என்றார் பிலால்.

———————————————————————————

அப்படியானால், இந்த சிறுமி ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்டு அவரை
திணற அடித்ததாக வந்த செய்தி உருவானது எப்படி….?

பொய்யான, புகைப்படத்துடன் – இட்டுக்கட்டப்பட்ட கதையை,
செய்தியாக அந்த செய்தி நிறுவனங்கள் வெளியிட்டது எப்படி….?
அவர்களுக்கு அந்த so called செய்தியை தயாரித்துக் கொடுத்தது யார்…?

அதன் பின்னணியில், யார் / எந்த கட்சி / எந்த செய்தி நிறுவனம்
இருக்கிறது…?

தமிழ்நாட்டில் இன்னும் சிலவாவது பொறுப்பான, நடுநிலையான செய்தி தளங்கள், தொலைக்காட்சிகள் இருக்கின்றன என்றே நம்புகிறோம்.

யாராவது இதன் பின்னணியை கண்டுபிடித்துச் சொல்வார்களா…?

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இந்த பொய்ச்செய்தி உருவானது, வெளியானது எப்படி …..?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    வேறு யார் செய்திருக்க முடியும் ?
    இந்த பொய்ச்செய்தியை பரப்புவதால் யாருக்கு லாபமோ, அவர்கள் தானே
    செய்திருப்பார்கள் ?
    ஆனல், இந்த பொய்ச்செய்தியை பொய்யென்று அறியாமல் அந்த ஊடகங்கள் வெளியிட்டிருந்தால், உண்மை நிலவரம் தெரிந்த பிறகு, வருத்தம் தெரிவித்திருக்க
    வேண்டும்.
    மேலும் தங்களுக்கு இந்த நியூசை கொடுத்த நிறுவனம் எது என்பதையும் அவர்கள்
    வெளியிட்டிருக்க வெண்டும். இல்லையென்றால், அவர்களுக்கும் இந்த பொய்யில்
    பங்கு உண்டு என்று தான் அர்த்தம்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா….! // செய்திதாள்களில் வெளியிட்டது போல அந்த இறுமி இந்த நிகழ்ச்சியில்
    கலந்துகொள்ளவில்லை என்றார் பிலால். // இதில் ” அந்த இறுமி ” என்பதை மாற்றவும் …. !
    தவறு என்பது தவறி செய்வது… ” தப்பு ” என்பது தெரிந்து செய்வது ..சிறுமியின் கேள்வி ஏற்பாடு தெரிந்தே செய்த தப்பு தானே …?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி செல்வராஜன்.

      1)என் கவனத்தையும் தாண்டி அந்த typographical error நிகழ்ந்து விட்டது. சரி செய்து விட்டேன்.

      2) தவறு – தப்பு என்பதையெல்லாம் தாண்டி இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு குற்றம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மைனர் பெண்ணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்… இது ஒரு கிரிமினல் குற்றம். இந்த செய்தியை உருவாக்கியவர் மீது கிரிமினல் சட்டப்படி தாராளமாக நடவடிக்கை எடுக்க முடியும்.

      எதிர்க்கட்சிகள் தூங்குகின்றன… அவ்வளவு தான் சொல்ல முடியும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Jksmraja's avatar Jksmraja சொல்கிறார்:

    கீழே உள்ள வெப் சைட் பாருங்கள்
    ttp://avargal-unmaigal.blogspot.com/2019/01/sankibhakth-should-masturbate-regularly.html?m=1

  4. venkat's avatar venkat சொல்கிறார்:

    news can be created/fabricated by anybody.. power lies with those who control media outlets…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      வெங்கட்,

      // news can be created/fabricated by anybody.. //

      முற்றிலும் உண்மை… ஆனால் இப்படி ஒரு பொய்ச்செய்தியை உருவாக்கி பரபரப்பாக வெளியிடுவதால் – ராகுல் காந்தியின் இமேஜை – கெடுப்பதால் யாருக்கு லாபம் உண்டாகும்…?

      அந்த லாபத்தைக் கருதித்தானே இந்த பொய்ச்செய்தி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது…?

      ஒரு மைனர் சிறுமியின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, பொய்ச்செய்தியை உருவாக்கியது கிரிமினல் குற்றமா இல்லையா…?

      அந்த குற்றத்தை செய்தவர் யார் என்று கண்டுபிடியுங்கள் என்று தானே நான் எழுதி இருக்கிறேன்…?

      அந்த குற்றவாளியை கண்டுபிடிப்பதில் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு சம்மதம் இல்லைபோல் இருக்கிறதே –

      நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்து… 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // எனக்கு எதிராக சதி: மோடி // https://minnambalam.com/k/2019/01/16/23 ….தேர்தல் நேர ஜுரம் …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.