தலைவருக்கு பயம் வந்து விட்டதா…? 3-ஆம் பானிபட் யுத்தத்திற்கும், 2019 தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்…. ?


பாஜக அகில இந்தியத் தலைவர் வெள்ளிக்கிழமை டெல்லியில் பாஜக தொண்டர்களிடம் பேசும்போது கூறுகிறார் –

” 2019-ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் 3-ஆம் பானிபட் யுத்தத்திற்கு சமமானது. இது வெறும் சாதாரண தேர்தல் அல்ல…
இது நமது தலைவிதியை, எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது….இந்த தேர்தலில் பாஜக தோற்றால், அடுத்த 200 ஆண்டுகளுக்கு நாம் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும். ”

வெற்றி, தோல்வியின் விளைவுகள் நிரந்தரமாக பயமுறுத்துவதற்கு, தேர்தல் – ஒரு போர்க்களம் அல்ல…

ஜனநாயகத்தில், எப்படியும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்
வரப்போகிறது… தோற்றால், மீண்டும் ஜெயிக்க ஒரு வாய்ப்பு வரத்தான்
போகிறது…

ஆனால், பாஜக தோல்வியடைந்தால், அதன்
தொண்டர்களின் எதிர்காலம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்று தலைவர் ஏன் இப்படி பயமுறுத்துகிறார்…?

தோல்வியின் விளைவுகளைப் பற்றி சொல்லி, தலைவர் தமது தொண்டர்களை பயமுறுத்துவது இதுதான் முதல் தடவை…..!!!

இது குறித்த NDTV செய்தி கீழே –
———————-

Losing 2019 Would Be Like Marathas’ Defeat In Panipat, Says Amit Shah

—————

( https://www.ndtv.com/india-news/2019-like-3rd-battle-of-panipat-amit-shah-at-big-bjp-meet-in-delhi-1976550 )

Amid a challenge from the likely opposition unity and the BJP’s defeat in the
recent state polls, Mr Shah sought to reassure the party cadres about its
prospects, describing PM Modi as an “invincible warrior” he has known since
1987 and under whom not a single election has been lost.( இது சரியான தகவலா…? )

Under king Shivaji, the Marathas had started freeing different parts of India and
won over 131 battles under various kings before losing the third battle of Panipat in 1761.

Comparing the 2019 elections to the 1761 battle of Panipat, Mr Shah said, “It
was not merely a loss in one battle… India was sunk in slavery for 200 years and the English ruled us for two centuries. It was a decisive battle.”

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தலைவருக்கு பயம் வந்து விட்டதா…? 3-ஆம் பானிபட் யுத்தத்திற்கும், 2019 தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்…. ?

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு “பயம் ” ? காங்கிரஸ் கட்சியின் மோசமான ஊழல்கள் காரணமாக, வாக்குச் சாவடிக்கு சென்று மோடிக்கு வாக்களித்தவர்கள் . இன்று …? திரு .அம்தஷா அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தின் காரணம் –மக்கள் மோடியை நன்கு புரிந்துக் கொண்டார்கள் என்பதாலா ?. மோடி மட்டுமில்லாமல் அவர் அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் வாயால் மட்டுமே பேசுகிறார்கள் என்பதாலா . ? ஸ்திர தன்மையற்ற விலைவாசி ஏற்றம் — எரிபொருளுக்கு தினம் ஒரு விலை நிர்ணயம் — ஜிஎஸ்டியின் குளறுபடிகள் போன்றவைகளாலா ..?

    மக்கள் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ன ஆகுமோ என்று அஞ்சுவதாலா ?. சாதாரண மக்களே இப்படி எண்ணுகிறார்கள் என்றால், சிறுபான்மையினரைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் கடுமையான அச்சத்தில் இருப்பதாலா …?. நாட்டில் எதிர்க்கட்சிகளையே இல்லாமல் செய்வேன் என்று மோடியும் அமித் ஷாவும் கூறுவதாலா இந்திய ஜனநாயகத்தின் நிலை என்னவாகுமோ என்று மனசாட்சி உள்ள இந்திய குடிமக்கள், இந்நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சப்படுவதாலா …? தன் மீது உள்ள பல வழக்குகளின் போக்கு மாறும் என்பதாலா ..? —- ஏன் இந்த பயம் ….?

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      நண்பரே,

      கடைசி வரியில் வைத்தீரே ஒரு பஞ்ச். அது தான் பிரதான காரணமாக இருக்கும்.

      ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் படாவிட்டாலும் அந்த கலங்கம் நீங்கப் போவதில்லை 200 வருஷங்கள் ஆனாலும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.