…
…
மூன்று வருடங்களுக்கு முன்னர் –
ஏப்ரல் 8, 2015 அன்று ஒடிஷா சென்ற பிரதமர் மோடிஜி, அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, ரூர்கேலா அரசு பொது மருத்துவ மனையை (General Hospital) சகல உயர்வசதிகளும் கொண்ட ஒரு “சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்” ஆக ( அதாவது நம்ம ஊர் மதுரை “எய்ம்ஸ்” மாதிரி…? ) மாற்றிக் காட்டுவதாக அறிவித்தார்….
3 ஆண்டுகள் கடந்த பின்பும், அதற்கான எந்த நடவடிக்கையும்
தொடங்கப்படாததால், மோடிஜிக்கு, அவரது வாக்குறுதியை
நினைவுபடுத்துவதற்காக, 2018, ஏப்ரல் 16 அன்று, ரூர்கேலாவிலிருந்து
டெல்லி வரை கால்நடையாகவே புறப்பட்டார் முக்திகாந்த் என்கிற ஒரு
அப்பாவி ஒடிஷா வாலிபர்.
ஜார்கண்ட், பீஹார், உத்திரப்பிரதேசம், ஹரியானா வழியாக,
1350 கிலோமீட்டர் நடந்தே கடந்த அவர் ஒருவழியாக டெல்லி
சென்றடைந்த பிறகு,
– மோடிஜியை சந்தித்தாரா…?
அவரது வாக்குறுதியை நினைவுபடுத்த முடிந்ததா…?
மோடிஜி என்ன சொன்னார்….?
இது போன்ற சுவாரஸ்யமான திருப்பங்களை -வெள்ளித்திரையில் –
மன்னிக்கவும் –
கீழே ABP செய்தி தொலைக்காட்சி காணோளியில் காண்க….
—————–
……………….
என் கவலை வேறு – இதே போல் தமிழ்நாட்டிற்கு – மதுரையில்
எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை அமைக்கப்போவதாக
அறிவித்தார்களே …. அதன் கதியும் இதே தானோ என்று….!!!
..

..
அங்கேயாவது பரவாயில்லை…. ஒரு இளிச்சவாயர் முக்திநாத்,
கால்நடையாகவே கிளம்பி விட்டார்… இங்கிருந்து யார் கிளம்புவார்கள்…? அதுவும் மதுரையிலிருந்து டெல்லி 2609 கிலோ மீட்டர் தூரம்… இடையே மொழியே புரியாத மாநிலங்கள் வேறு… நாலைந்து மாதங்கள் சப்பாத்தியே சாப்பிட வேண்டியிருக்கும்…!!!
நமது தமிழக அரசியல்வாதிகளில் யார் இதற்கு பொருத்தமானவராக
இருப்பார்….? யாராவது சொல்லுங்களேன்…!!!
……………………………
பின் குறிப்பு –
“இளிச்சவாயர்” என்று ஏன் சொன்னேன் என்று கேட்கிறீர்களா…?
இப்படியெல்லாம் செய்து மோடிஜியிடம் காரியம் சாதித்துக் கொள்ளலாம்
என்று ஒருவர் நினைத்தால்…. அவரை வேறெப்படி அழைப்பது….?
ஹிந்தி சுத்தமாகத் தெரியாதவர்களுக்காக ஒரு சிறு உதவி …
தொலைக்காட்சிகளில் இந்த செய்தியை பார்த்த – ஒடிஷாவை சேர்ந்த
மத்திய மந்திரி ஒருவர், முக்திநாத்தை தனது இல்லத்திற்கு கூப்பிட்டு
விட்டு, சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலுக்கு தான் ஏற்கெனவே –
“அடிக்கல்” நாட்டியாகி விட்டதே….
அதற்கு மேல் வேறேன்ன
எதிர்பார்க்கிறாய்….?
என்று கேட்டு, அவரை உடனடியாக, சொந்த ஊர் திரும்பிச்செல்ல அட்வைஸ் செய்திருக்கிறார்….!!! 🙂 🙂
———————————————————————————



” தெர்மாேகாேல் விஞ்ஞானி ” …?
…… இசை ?
இளிச்சவாயர்….??? 🙂 🙂
இதற்கு தமிழ்நாட்டில் இரண்டுபேர்கள் பொருத்தமானவராக இருந்திருப்பார்.
1. கருணாநிதி – இவர் நடப்பதைப்போல் மக்களை நம்பவைத்து காலில் துணி கட்டிக்கொண்டு, சினிமா இரத்தம் தெளித்துக்கொண்டு, கூட அடிப்பொடிகள் சூழ நடப்பார். ஆனால் அது வெறும் விளம்பரத்துக்குத்தான். அதனால் சில வாரங்கள் பத்திரிகைகளுக்குச் செய்திகள் கிடைக்கும். ஆனால் பலன் அவருக்கும், நமக்கும் எதுவும் இருக்காது (திருச்செந்தூர் வைரவேல் காணாமல் போய்விட்டது என்று நடைப்பயணம் மேற்கொண்டு, அதன் பிறகு வைரவேலை மறந்ததுமட்டுமல்லாமல் அதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எம்.வீ அவர்களைத் தன்னோடு கூட்டுச் சேர்த்துக்கொண்டது ஞாபகம் இருக்குமே)
2. வை.கோபாலசாமி. இவர் நேர்மையாக, ஒரு காரணத்துக்காக நடைப்பயணம், மேடைப் பேச்சு, அழுகை எல்லாம் கலந்து சுவாரசியமாக ஆனால் நேர்மையாக நடைப்பயணம் மேற்கொள்ளுவார். ஆனால் பாருங்க, இவர் எந்தப் போராட்டம் நடத்தினாலும், மக்கள் ஆதரவு சுத்தமாகக் கிடைக்காது, மேற்கொள்ளும் எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது, பிறகு, யாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கஷ்டப்பட்டாரோ அவர்கள் காலடியிலேயே வீழ்ந்துகிடப்பார்.
வேறு யாரும் ‘நடைப்பயணத்துக்கு’ உகந்தவர்கள் போல எனக்குத் தெரியவில்லை. ஹாஹாஹா.