…
…
வாரணாசியின் பெரும்பகுதி சந்துகளால் ஆனது….
முக்கியமாக கங்கைக்கரையை ஒட்டிய பகுதிகள் மிகவும் குறுகிய சந்துகள்… எந்தவித வாகனமும் செல்ல முடியாத சந்துகள்…
உங்களை குழப்பி விடக்கூடிய சந்துகள்.
உள்ளூர்க்காரர் துணை இல்லாமல் தனியே போனால், மாட்டிக் கொள்ள
வேண்டியது தான்…. திசையே தெரியாது….வெளியே வர
பல மணி நேரம் ஆகலாம்….!!! திரும்ப திரும்ப உள்ளுக்குள்ளேயே
சுற்றிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்…எங்கேயும் எந்தவித அறிவிப்பு பலகையும் கிடையாது…
ஆனால் இங்கேயும், சில உள்ளூர் இளைஞர்கள் – டூவீலரை தைரியமாக
ஓட்டிக்கொண்டு போகிறார்கள்….நாம் தான் பயந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது.
அதற்கு அடுத்த வெளிவட்டம் – அவையும் குறுகலானவையே…
ஆனால், 15-20 அடி அகலமுள்ள குறுகிய சாலைகள்…
ஊருக்குள் பஸ் போக்குவரத்து அறவே கிடையாது.
எங்கேயும் ட்ராஃபிக் சிக்னலும் கிடையாது…!!!
ரோடு சந்திப்புகளில், எல்லாரும் எல்லா பக்கமும் போய்க்கொண்டிருக்கிறார்கள்….பல சமயங்களில் போக்குவரத்து
தடைபடுகிறது… ஆனால் அவர்களே அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள்.
ட்ராஃபிக் போலீஸ் என்று யாருமே கண்களில் தென்பட மாட்டார்கள்.
ஆனால், முக்கிய தெருக்களில், ஒருமணிக்கொரு தடவை, 4 குதிரை
போலீஸ் மட்டும் நடைபழகுகிறது…!!!
தடுக்கி விழுந்தால் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்,
சைக்கிள் ரிக்ஷாக்கள் கிடைக்கின்றன… போக்குவரத்து செலவு மிகவும் மலிவு…
ஆட்டோக்காரர்கள் மிக நியாயமாகவே காசு வாங்குகிறார்கள். தைரியமாக எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் ஆட்டோவில் போகலாம்.
இங்கே மோடிஜியின் ” ஸ்வச்ச பாரத் ” திட்டம்
எப்படி செயல்படுகிறது…?
நான் சொல்வானேன்…. கொஞ்சம் சாம்பிள் தருகிறேன்…
நீங்களே பார்த்துக்கொள்ளுங்களேன்…!!!
ஊர் முழுவதும், தெருக்களின் இரண்டு புறமும் திறந்த சாக்கடைகள்
ஓடிக்கொண்டிருக்கின்றன…
பாதாள சாக்கடைத் திட்டம் இவர்கள்
கேள்விப்படாத ஒன்று…-எனவே அத்தனை சமாச்சாரமும்
திறந்த சாக்கடைகளில் தான்….
…
முதல் 3 படங்களும் – முக்கிய சாலைகள்….!!!

..

..

..
அடுத்த 4 படங்கள்- சாம்பிளுக்கு சில சந்துகள்…
…

..

..

..

…
கீழே – மோடிஜியின் புகைப்படம் தெரிகிறதா…?
இங்கே ஹிந்தியில் எழுதியிருப்பது இது தான் –
” ஸ்வச்ச பாரத் மிஷன் ” –
“ஸ்வச்ச காஷி……சுந்தர் காஷி “…!!!
( நான் அர்த்தம் சொல்ல வேண்டாமே…?…)
இங்கேயிருந்து பார்த்தால் இதன் மகிமை விளங்காது…
side angle -ல் சென்று இரண்டு புறங்களிலிருந்தும் இதைப் பார்த்தால் தெரிந்து விடும்….!!! ( இதற்கு அடுத்த 2 படங்கள் )

——————
..

..

ஸ்வச்ச பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள டாய்லெட்…
அநேக தெருக்களில் தென்படுகின்றன…
இவை இரண்டு பக்கமும் திறந்திருக்கின்றன.
முன்பக்கம் மட்டும் ‘கவர்’ செய்யப்பட்டுள்ளது.
இந்த டாய்லெட் இணைக்கப்பட்டிருப்பது, இதன் பின்னால் இருக்கும் திறந்த சாக்கடையுடன்… எனவே, உள்ளே “வெளியேற்றப்படும்”
– சமாச்சாரங்கள் எல்லாம் உடனடியாக இங்கே திறந்த வெளி சாக்கடையுடன் சங்கமமாகி தொடர்ந்து ஊருக்குள் பயணிக்கும்…
————-
“ஸ்வச்ச காசி….. சுந்தர் காசி..”
.
———————————————————————————



கொடுமை! உதட்டளவு சேவை என்பது இது தான்! கூசாமல் எப்படி இப்படி கதை விடுகிறார்களோ!
அய்யா …! தாங்கள் // ஒரு quick trip – ஆக வடக்கே போய் வரலாமென்று உத்தேசித்திருக்கிறேன்….// என்று மறுமொழியில் கூறியிருந்திர்கள் .. குயிக் ட்ரிப் க்கே இப்படியா வெளுத்து வாங்குவிங்க — !! உண்மையை கூறினாலும் தப்பு என்று … வேறு விதமாக அந்த ஆட்சியில் மட்டும் நறுமணம் வீசியதா என்று கேள்வி கேட்பார்கள் …! இதுவரை விளம்பரத்திற்கு செலவு செய்த தொகை …? …. அடுத்து ஒரு செய்தி —
// மெட்ராஸ் ஐஐடி மாணவர்.. புலனாய்வில் புலி.. சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஷ்வர் ராவ் யார் தெரியுமா? //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/who-is-m-nageshwar-rao-the-new-interim-cbi-chief-332607.html டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ள மத்திய அரசு,….. கட்டாய விடுப்பில் அனுப்பினால் மட்டும் போதுமா … ?
“முக்கிய தெருக்களில், ஒருமணிக்கொரு தடவை, 4 குதிரை
போலீஸ் மட்டும் நடைபழகுகிறது…!!!” Hahahaha!!
This is sad!
நாடு பூராவும் சென்று சுவச்ச பாரத் பற்றிபேசுகிறார். தான் இந்தியாவையே மாற்றப்
போவதாக பறையடிக்கிறார். ஆயிரக்கணக்கான கோடிகள் இவரது படத்தைப் போட்டு, சுவச்ச பாரத் விளம்பரம் செய்வதில் செலவிடப்படுகின்றன.
தன் சொந்த தொகுதியை சீர் செய்வதில் அக்கரை வேண்டாமா ? வாரணாசி தொகுதி முழுவதும் சாக்கடை ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறதே.
எல்லாம் வெறும் வாய்வீச்சோடு சரியா ?