…
…

…
கடந்த வாரம் வடக்கே ஒரு சுருக்கமான பயணம் போயிருந்தேன்.
நேற்று தான் திரும்ப வந்தேன்… இந்த பயணத்தில் முக்கியமாக பகிர்ந்து
கொள்ளப்பட வேண்டிய அனுபவங்கள் – என்று வாரணாசி( காசி )யையும், பிரயாகையையும் சொல்லலாம்….
வாசக நண்பர்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய – இந்த இரண்டு இடங்களைப் பற்றிய – சில அனுபவங்களை அடுத்த சில இடுகைகளில், பகிர்ந்து கொள்ளலாமென்றிருக்கிறேன். முதல் இடுகை – நேற்றிரவு பதியப்பெற்ற யமுனை ஆற்றிலே – ஈரக்காற்றிலே…!
கங்கை நதி எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது… சில இடங்களில் ஆனந்தத்தையும், சில இடங்களில் அதிர்ச்சியையும் தருகிறது.
ரிஷிகேஷ்-ல் நாம் பார்க்கும் – கங்கோத்ரியிலிருந்தும், மந்தாகினியிலிருந்தும்
மிகுந்த வேகத்துடன் பெருக்கெடுத்தோடி இறங்கி வரும் – கங்கை நீர்
100 சதவீதம் சுத்தமானது… அற்புதமானது…மிக மிக குளிர்ச்சியானது.
தொடர்ந்து, உத்திரப் பிரதேசத்தின் – கான்பூர், லக்னோ போன்ற பெரிய பெரிய நகரங்களினூடே பாய்ந்து வரும்போது நகரத்தின் கழிவுகள், சாக்கடைகள் அத்தனையும் கங்கையில் கலக்கப்பட்டு, வாரணாசிக்கு வரும்போதே 60 சதவீதம் சாக்கடையாகி விடுகிறது. வாரணாசி தன் பங்கிற்கு மேலும் 30 சதவீதத்தை கூட்டி, 90 சதவீத கங்கை நீர் மாசுபட்டதாகவே இருக்கிறது.
இதை இப்போதைக்கு இப்படியே விட்டு விடுவோம்…
கங்கை – கரையில் நின்று கொண்டு, ஆற்றையும், அதில் விரைந்து செல்லும் படகுகளையும் பார்ப்பது ஒரு அனுபவம் என்றால்,
படகில் பயணித்துக்கொண்டு, கரையையும், அதன் உயர்ந்த படிக்கட்டுகளையும் பார்ப்பது இன்னொரு சுகமான அனுபவம்.
இரவில் இது இன்னொரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.
அக்டோபரில் இங்கெல்லாம், மாலையில் ஆறு மணிகெல்லாம் இருட்டி விடுகிறது. கங்கைக்கரையில் குறைந்த பட்சம் 10 ‘காட்’கள் (கரையோர மேடைகள்) இருக்கின்றன.
ஆறரை மணியளவில், இந்த ‘காட்’ களில்
கங்கைக்கு ‘பூஜை’ செய்து பாடல்கள் பாடி, ஆரத்தி எடுக்கிறார்கள்.
சுமார் அரைமணி நேரம் இந்த நிகழ்வு நீடிக்கும்.
இந்த நேரத்தில், படகுகளில் நதிக்கு நடுவே சென்று அங்கிருந்து, அனைத்து ‘காட்’களிலும் நிகழும் ‘கங்கா ஆர்த்தி’களை பார்த்துக் கொண்டு வருவது இன்னொரு இனிமையான அனுபவம்.
இங்கே கீழே நான், ஆற்றில் படகில் இருந்துகொண்டு படம் பிடித்த-
‘தசாஸ்வமேத் காட்’ -ல் நிகழ்ந்த ஒரு ‘ஆர்த்தி’யை, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
இங்கிருந்தே அருகில் இருக்கும் மற்ற சில ‘காட்’களில் நிகழும்
ஆர்த்தி’யும் தெரியும்….
…
…
————————————————————————————————————-



கங்கைக்கரையில் 64 கட்டங்கள் உள்ளன. படகிலேயே சென்று ஒவ்வொரு கட்டத்திலும் குளித்துச் சமைத்துப் பிண்டம் போடுவது உண்டு. புரோகிதரிடம் ஏற்பாடு செய்தால் அவங்களே அடுப்பில் இருந்து அரிசி, பாத்திரம் வரை எல்லாம் எடுத்து வருவார்கள். இப்போது சிலர் கங்கையின் மேல் அக்னி மூட்டக் கூடாது எனச் சொல்வதாயும் கேள்விப் பட்டேன். அனைத்துக்கட்டங்களிலும் பித்ருக்களுக்குப் பிண்டம் போடுவது உண்டு.
திருமதி கீதா சாம்பசிவம்,
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.
ஆனால், நான் இந்த தடவை,
இந்த கடமையை நிறைவேற்றுவதற்காக செல்லவில்லை.
எனவே, அந்த திசையில் கவனம் செலுத்தவில்லை.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
do you see any effect of ‘clean up ganga’ project?
aaga moththam modi gangaiyai clean pannallai..