..
..

திரு.ஸ்டாலின் திமுகவின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து நடந்த சில அநாகரிகங்கள் –
புதிய தலைமை குறித்த நமது கருத்து சொல்லல்களையெல்லாம் நிதானமாக வைத்துக்கொள்வோம் என்று தான் நினைத்தேன். ஆனால், நேற்று கண்ணில் தென்பட்ட சில அநாகரிகங்களை மட்டும், உடனே சொல்வது தான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது….
1) திரு.ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து,
வெளியே திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் – சரம் சரமாக
10,000-வாலா பட்டாசுகள் வெடித்து பஸ்களை நிறுத்தி, மகிழ்ச்சி
ஆரவாரத்தோடு பொதுமக்களுக்கு இனிப்புகளை கொடுத்தார்கள்….
ஊரெங்கும் குத்தாட்டங்கள் ஆரவாரத்தோடு தொடர்ந்தன…
இது சென்னையில் மட்டுமல்ல…
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் நடந்திருக்கிறது.
ஸ்டாலின் தலைவர் ஆனது எந்த பின்னணியில் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்…
– கடந்த பல ஆண்டுகளாகவே, ஸ்டாலின் பலமுறை வற்புறுத்தி
கேட்டுக்கொண்டும், தான் இருக்கும் வரை, கலைஞர் ஸ்டாலினுக்கு தன்னுடைய தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க சம்மதிக்கவில்லை….
எனவே, கலைஞர் இருக்கும் வரைக்கும் ஸ்டாலின் தலைவர் பதவியில்
அமர முடியாது என்பது தான் நிஜமாக இருந்தது …
செயல்தலைவர் பதவி கூட, கலைஞரால் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில், இவர்களாகவே உருவாக்கிக்கொண்டது தான்.
கலைஞர் மறைந்ததால் தான் ஸ்டாலின் தலைவராக ஆக முடியும்
என்கிற நிலை தான் நிலவியது.
இந்த சூழ்நிலையில், கலைஞர் மறைந்து
ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவருக்கான இரங்கல்கூட்டங்கள் சென்னையில் கூட இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில்,
ஸ்டாலின் தலைவரானதை இப்படி வெடித்துக் கொண்டாடுவது,
மறைமுகமாக – கலைஞரின் மறைவை கொண்டாடும் விதமாக
தெரியவில்லை…?
இந்த வெடி வெடிப்பு, குத்தாட்டம், இனிப்பு போன்ற – படாடோப
கொண்டாட்டங்களை தவிர்த்திருக்க வேண்டாமா…?
2) ஜெயலலிதா அவர்கள் மறைந்ததோடு, அதிமுகவில் தலைவர் காலில் விழும் கலாச்சாரமும் மறைந்தது….
திமுகவினர், குறிப்பாக திரு.ஸ்டாலினே பல மேடைகளில் அதிமுகவில் நிலவிய, காலில் விழும் கலாச்சாரத்தை கிண்டலடித்திருக்கிறார்கள்….
கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்.
ஆனால், நேற்று மாலை, கலைஞரின் அறையில் ஸ்டாலின் அவர்கள்
பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, வாழ்த்த வந்த திமுகவினரில்
குறைந்தபட்சம் 100 க்கு 70 பேராவது ஸ்டாலினின் காலில் விழுந்து
எழுந்தனர்… (அவர்களில் சிலர் ஸ்டாலினை விட வயதில் மூத்தவர்கள்…)
அதை ஸ்டாலினோ, அவர்கூட இருந்தவர்களோ தடுக்கவே இல்லை.
சில மாதங்கள் முன்னதாகவே திமுக உள்கட்சி கூட்டங்களில்
ஸ்டாலின் சொல்லியிருந்ததாக செய்திகள் வந்திருந்தன –
திமுகவில் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வர, தானும் ஜெயலலிதா பாணியை பின்பற்றப்போவதாக….
எல்லாரையும் காலில் விழச்செய்வது தான் அதற்கான வழி என்று
புதிய ஸ்டாலின் தீர்மானித்து விட்டாரா…?
ஒரு அசிங்கமான, அவமானகரமான அரசியல் கலாச்சாரம் தலைவரின்
கால்களில் நிர்வாகிகளும், தொண்டர்களும் விழுந்து எழுவது…
அதிமுகவில் – ஜெயலலிதா அவர்களின் மறைவுடன், நல்லவேளையாக
அந்த கலாச்சாரமும் மறைந்தது.
ஆனால் நேர்மாறாக திமுகவில், கலைஞர் மறைந்ததும்,
புதிய ஸ்டாலின் உதயமானதும்,
அந்த அசிங்கமான கலாச்சாரமும் புதிதாக துவங்கி விட்டது.
ஸ்டாலின் அவர்கள் நினைத்திருந்தால்,
அரங்கத்தில் மற்ற அறிவிப்புகள் செய்யப்பட்டது போல்,
வாழ்த்துச் சொல்ல வரும் யாரும் காலில் விழக்கூடாது என்று முன்னதாகவே வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கலாம்.
ஸ்டாலின் தன் கால்களில் மற்றவர்கள் விழுவதை தடுக்காமல்
வெறுமனே இருந்தது – தொடர்ந்து அனைவரும் அதைச்செய்வதையே
அவர் விரும்புகிறார் என்று நினைக்கவே தோன்றுகிறது.
.
——————————————————————————–



பிங்குபாக்: நேற்று நடந்த சில அநாகரிகமான செயல்கள் …. – TamilBlogs
//ஒரு அசிங்கமான, அவமானகரமான அரசியல் கலாச்சாரம் தலைவரின்
கால்களில் நிர்வாகிகளும், தொண்டர்களும் விழுந்து எழுவது…//
Have you ever wrote it with this much of strong words, when JJ is available? That is why people call you that you are not neutral..
Arun
கே.எம்.சாரை குறைகூறுவது ஒருபக்கம் இருக்கடும்.
காலில் விழும் கலாச்சாரத்தை ஸ்டாலின் விரும்புவது குறித்து உங்கள்
மேன்மையான அபிப்பிராயம் என்னவோ ?
அதே போல் கலைஞரின் துக்க காலம் முடிவதற்குள்ளாகவே –
ஸ்டாலின் ஏற்பாடு பண்ணியுள்ள -குத்தட்டம், கொண்டாட்டம், பட்டாசு வெடிப்பு, இனிப்பு டிஸ்டிரிபியூஷன் –
இவையெல்லாம் பற்றியும் கொஞ்சம் கருத்து கூறுங்களென்.
Dear Arun,
It should be definitely stressed here because KM Sir shows a soft corner towards JJ. It is very much evident in the way the names are used in this article – “ஜெயலலிதா அவர்கள்” is used in this article wherever JJ’s name is to be used. But same was not done for Stalin and for Kalaignar too. At least “thiru” could have been added.
KM Sir,
Why you are also acting like Dinamalar, trying to undermine or portray DMK only in bad light ?(again I stress upon here that I am not a DMK follower). MKS is taking charge as leader of a party, the presence of which is very important in the present era of a feudal-style central government.
I have been reading your articles for long. For a guy like me, your views are really eye-openers. I respect your unbiased way of writing. But……… When it comes to DMK, I think you got a feel of irritation.
Thanks
சன்மத்,
உங்கள் எடைபோடும் திறனில் முன்னதாக எனக்கு நம்பிக்கை இருந்தது. பல வருடங்களாக, உங்கள் கேள்விகளுக்கெல்லாம் அவ்வப்போது விளக்கம் அளித்து வந்தேன்… ஆனால், அண்மைக்காலமாக நீங்களும் ஒரு பக்கம் சாய்ந்து விட்டீர்கள் என்பது தெரிந்தது.. எனவே தான் உங்களுக்கு பதில் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.
ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் என் கருத்துகளை, எண்ணங்களை – எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல்
திறந்த புத்தகமாக இங்கே, இந்த தளத்தில் எழுதி வருகிறேன். இவற்றை வைத்து, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி… அது என் மனநிலையை பாதிக்கப்போவதில்லை.
ஜெயலலிதா அவர்கள் மீது நிச்சயமாக எனக்கு மதிப்பு உண்டு. அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதையை
நான் என்றும் மறைத்ததில்லை. இன்றிருக்கும் எந்த அரசியல்வாதியும் அவருக்கு எந்த விதத்திலும் சமமாக மாட்டார்கள்… அதே சமயம் அவரிடம் இருந்த நெகடிவ் குணங்களை நான், நியாயப்படுத்தியதும் இல்லை… ஆதரித்து எழுதியதும் இல்லை.
கலைஞரைக்கூட நான் நிறைய விமரிசனம் செய்தாலும், இன்றுவரை மரியாதைக்குறைவாக ஒரு வார்த்தை கூட
எழுதியதில்லை… அவரை வெறுமனே கருணாநிதி என்று எனக்குத் தெரிந்து நான் எழுதியதே கிடையாது.
இந்த இடுகையில் கூட, நான் திரு.ஸ்டாலினைப்பற்றி எங்கேயாவது மரியாதைக் குறைவாக எழுதி இருக்கிறேனா -?
உங்கள் அரசியல் பக்கங்கள், ஆதரவு நிலைகள் மாறி இருக்கலாம். அதற்காக உங்கள் விருப்பப்படியெல்லாம் நான் எழுத வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டாம். இந்த வலைத்தளம் எனது மனசாட்சி. என் மனதில் தோன்றுவதைத் தான் நான் எழுதுவேன். என்னை யாரும் இப்படித்தான் எழுதவேண்டுமென்று நிர்பந்தப்படுத்த முடியாது.
அதே சமயம், இந்த வலைத்தளத்தின் கோட்பாட்டிற்கு பாதகமின்றி, மாற்றுக்கருத்து கூறுபவர்களையும் நான் அனுமதித்துக் கொண்டு தான் இருக்கிறேன்…. நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
என் எழுத்தின் தரத்தை தினமலருடன் ஒப்பிடும் அளவிற்கு நீங்கள் நினைக்கக்கூடும் என்றால், அதில் என் குறை எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை… நான் எழுதும் விஷயங்கள், எடுக்கும் நிலைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை … அவ்வளவு தான்.
என் மீது நீங்கள் முன்னொரு காலத்தில் வைத்திருந்த நம்பிக்கைக்கும்,
அன்பிற்கும் நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
KM Sir,
First of all thanks to you for responding to a direct criticism. It is a good lesson. Above all, I still respect you and so wrote previous comment. Also doing now. Never ever I sensed disrespect in your article on anyone or anything. Even a hard criticism have been put up by you in a civilized and politically-correct manner. This is again a lesson.
///உங்கள் அரசியல் பக்கங்கள், ஆதரவு நிலைகள் மாறி இருக்கலாம். அதற்காக உங்கள் விருப்பப்படியெல்லாம் நான் எழுத வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டாம். இந்த வலைத்தளம் எனது மனசாட்சி. என் மனதில் தோன்றுவதைத் தான் நான் எழுதுவேன். என்னை யாரும் இப்படித்தான் எழுதவேண்டுமென்று நிர்பந்தப்படுத்த முடியாது.///…..Sorry to make you say this for second time……I tried to ask a question “why” ? I have not said you are biased towards ADMK. My question is about your soft-corner on JJ’s ADMK(please note I am using “JJ’s ADMK”) and hard-hit on DMK.
Thanks once again.
சன்மத்,
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
இன்னும் ஒரு விஷயத்தையும் நான் இங்கு தெளிவுபடுத்தி விடுகிறேன்.
இந்த விமரிசனம் வலைத்தளம் ஓரளவு popular -ஆக இருக்கிறது என்று
உங்களுக்கு தோன்றுகிறதா…?
அதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்…?
நான் நடுநிலையாக இருக்கிறேனா இல்லையா என்பதை விட, நான் உண்மையாக இருக்கிறேனா…? சுயநலம் இல்லாமல், பொது நோக்கத்தோடு எழுதுகிறேனா இல்லையா என்பது தான் முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது…
அந்தந்த கால கட்டத்தில், அந்தந்த நிகழ்வுகளின்போது, சமூகத்திற்கு எது நல்லது என்று என் மனதிற்கு தோன்றுகிறதோ – அதை எழுத முயற்சிக்கிறேன். ஒருவேளை என் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்… ஆனால், அது நிச்சயம் பொய்யாகவோ, சுயநலமுடையதாகவோ, சமூக நலனிற்கு எதிரானதாகவோ இருக்காது.
– இந்த வலைத்தளத்தில் இந்த 9 வருடங்களில், இதுவரை நான் பொய்யான தகவல் எதையும் தந்ததில்லை; எழுதியதும் இல்லை.
பல கட்சிக்காரர்களும் இந்த வலைத்தளத்தை விரும்பி படிப்பதற்கான முக்கிய காரணம், நான் உண்மையை எழுதுகிறேன் என்பதால் தான். விமரிசனம் என்பது எனது கருத்து… ஆனால் நான் சொல்லும் செய்தி முற்றிலும் உண்மையானது…. எப்போதாவது உறுதிப்படுத்த முடியாத செய்தியை சொல்கிறேன் என்றால் – அதையும் அப்படியே வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்…
3-4 நாட்களுக்கு முன்னர், ஒரு நண்பர் இதே பின்னூட்டம் column-ல் எழுதி இருந்தார்… “நீங்கள் துக்ளக்’கில் எழுத வேண்டியவர் ” என்று…
நீங்களோ, நான் தினமலர் type-ல் எழுதுகிறேன் என்று சொன்னீர்கள்….
இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். பின் ஏன் வித்தியாசமான கண்ணோட்டங்கள்…?
பாஜகவிற்கு எதிராக எழுதுவதை –
அடக்கி வாசியுங்கள் என்று ஒருவர் எழுதி இருந்தார்…
திமுகவுக்கு எதிராக ஏன் எழுதுகிறீர்கள் –
என்று நீங்கள் கேட்கிறீர்கள்…
எல்லாரும், அவரவர் பார்வையிலிருந்தே எந்தவொரு விஷயத்தையும்
நோக்குகிறார்கள்…
ஒவ்வொருவரும் விரும்புகிற விதத்தில் நான் எழுதுவது முடியுமா…?
அது சரியாக இருக்குமா…?
எனவே தான் – நான் என் மனசாட்சி சொல்வதை எழுதுகிறேன். தங்களுக்கு
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், உங்களைப்போன்ற நண்பர்கள் குறைந்த பட்சம் – நான் என் போக்குப்படி எழுதுகிறேன் என்பதையாவது ஏற்பீர்கள்…
நிறைய எழுதி விட்டேன்… நீண்ட நாட்களாக பழகும் ஒரு நண்பரை
புரிந்து கொள்ளாமை காரணமாக இழக்க நான் விரும்பவில்லை. நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Weldone, KM!
காலில் விழும் கலாச்சாரத்தை ஸ்டாலின் விரும்புவது குறித்து உங்கள்
மேன்மையான அபிப்பிராயம் என்னவோ ?//
Ig he encourages the habbit, definitely it should be condemned.
I also couldn’t digest the way his followers celebrated the event.
Arun sir
Even in this essay he has written what you have asked. It is not about neutral. I am following this blog for almost 10+ years now. There was never a imbalance / un-neutral blog was written. Always according to the demand of the situation, you get a blog. This is just to clarify your query.
Good response. I appreciate you.
நண்பரே …! இந்த தளம் ஆரம்பித்ததே 29
ஜூலை 2009. அன்றுதான் முதல் இடுகையே வெளிவந்தது அப்படியிருக்க நீங்கள் // I am following this blog for almost 10+ years // கூறியுள்ளது எப்படி சாத்தியம் ……?
Selvarajan,
Haha, nice spot..
செல்வராஜன்,
அந்த நண்பர் செய்தது சிறிய தவறு…
அதை சுட்டிக்காட்டுவதன் மூலம் நீங்கள் பெற விரும்பிய ரிசல்ட் என்ன…?
இது தானா…?
இப்போது சந்தோஷமா…?
நீங்கள் சொல்லிக்காட்ட வேண்டிய அளவிற்கு அதில் பெரிய
பொருள் /கருத்து குற்றம் இருந்ததா…?
அல்லது அவர் பொய் சொல்கிறார் என்று நிரூபிக்க விரும்பினீர்களா…?
-காவிரிமைந்தன்
நீங்கள் குறிப்படுகிற எதுவுமே எனக்கு இல்லை ..அது அவருயை ஆர்வக் காேளாறு …மீண்டும் இது பாேல பத்து வருடங்களுக்கு மேலாக என்று பதியாமல் இருக்கத்தான் …! நான் செய்ததை தள கர்த்தாவான தாங்கள் அவருக்கு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் …!
செல்வராஜன்,
//நான் செய்ததை தள கர்த்தாவான தாங்கள் அவருக்கு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் …! //
Yes….உங்கள் கூற்றுப்படியே, அந்த தவறை சரி செய்யும் பொறுப்பை “தள கர்த்தா”வான என்னிடம் அல்லவா நீங்கள் விட்டிருக்க வேண்டும்…..?
மாறாக நீங்களே ஏன் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அந்த நண்பர் பொய் சொல்கிறார் என்கிற அர்த்தம் வரும் வகையில் பின்னூட்டம் போட்டீர்கள்… ?
ஒருவர் தெரியாமல் தவறான புள்ளி விவரத்தை தருவதும், பொய்யான கருத்தை கூறுவதும் வெவ்வேறு விஷயங்கள் அல்லவா…?
உங்கள் பின்னூட்டம், அந்த நண்பர் தந்த தகவல் தவறு என்று சொல்வதை விட, அவர் ஒரு பொய்யர் என்கிற கருத்தை வெளிப்படுத்தவே முயற்சி செய்கிறது.
அதனைத் தொடர்ந்து, உங்களுக்கு நண்பர் Arun பாராட்டு தெரிவித்திருப்பதே அதை உறுதி செய்கிறது …..
————
// நண்பரே …! இந்த தளம் ஆரம்பித்ததே 29
ஜூலை 2009. அன்றுதான் முதல் இடுகையே வெளிவந்தது அப்படியிருக்க நீங்கள் // I am following this blog for almost 10+ years // கூறியுள்ளது எப்படி சாத்தியம் ……?//
————–
தவறான ஒரு பின்னூட்டத்தை போட்டுவிட்டு, பின்னர், அதை நியாயப்படுத்த முயற்சி செய்கிறீர்கள்….
– வருந்துகிறேன்….இதற்கு மேல் எனக்கு சொல்ல எதுவுமில்லை….
-காவிரிமைந்தன்
நல்ல பதிவு …!
நேற்றே திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை மூலமாக யாரும் தனது காலில் விழ வேண்டாம் என்று கூறிவிட்டார். மேலும் 30 நாள் துக்கம் 7 நாள் துக்கம் என்பதெல்லாம் மதம் சார்ந்தது. திமுக வை பொருத்த மட்டில் ஒரு வரலாறு ஒரு சரித்திரம் மறைந்தது இன்னொரு தலைவர் உருவானார். மேற்கில் சூரியன் மறைந்தால் அடுத்த நாள் கிழக்கில் உதிக்கும். இது தான் நியதி. அவ்வாறே இந்த நிகழ்வு.
மேலும் மறைந்த முன்னால் திமுக தலைவர் ஏற்கனவே தளபதி தான் தி மு க வின் அடுத்த வாரிசு அடுத்த தலைவர் என்பதை மேடையிலேயே எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். தளபதி நினைத்திருந்தால் தலைவர் பதவியை கலைஞர் சுகவீனம் அடைந்திருக்கும் போதே அந்த பதவியை அடைந்திருக்க முடியும். ஆனால் தலைவர் பதவியில் உள்ள அதிகாரத்தில் சிலவற்றை மட்டும் எடுத்து செயல் தலைவர் என்ற பதவியை உருவாக்கி கொண்டார்.
விமர்சனம் என்ற பெயரில் வாந்தி அல்ல மது வாந்தி எடுத்துள்ளார்.
செந்தில் என்கிற இந்த நண்பருடைய பின்னூட்டத்தை என்னை அவதூறாக எழுதியிருக்கிறார் என்கிற காரணத்திற்காக நான் விலக்கி -delete – இருக்க முடியும்…
நான் அப்படி செய்யாததற்கான இரண்டு காரணங்கள் –
1) திமுக கட்சிக்காரர் ஒருவர் இந்த சம்பவங்களை எப்படி நியாயப்படுத்த முயல்கிறார் என்பதை நான் மட்டும் அறிந்தால் போதாது; மற்ற நண்பர்களும் அறிய வேண்டும் ….
2) நாகரிகமான முறையில் நான் எழுதிய ஒரு விமரிசனத்திற்கு, திமுகவிலிருந்து – எத்தகைய வசவு – பதிலாக வருகிறது என்பதையும் நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்….
-காவிரிமைந்தன்
செந்தில் ….. உங்களின் கருத்தைக் கண்டேன். நீங்கள் பத்திரிகைகளெல்லாம் படித்ததில்லை போலிருக்கிறது, முரசொலி தவிர.
1997 என்று ஞாபகம்… தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் கழுத்தைப் பிடித்தார் ஸ்டாலின் என்று ஜூனியர் விகடன் எழுதியிருந்தது (அமைச்சர் பதவிக்கு என்று ஞாபகம்). தலைகீழாக ஸ்டாலின் ஒவ்வொரு பதவிக்கும் முயற்சியெடுத்தார். ஒரு தடவை, கருணாநிதி, ஸ்டாலினுக்காக அன்பழகன் பதவியை விட்டுக்கொடுக்கப் பேசியபோது, அன்பழகன் அதை மறுத்துவிட்டு, நான் என் பதவியை (கட்சிப் பதவியை) ஒருபோதும் விட்டுத் தரமாட்டேன் என்று சொன்னாராம். கருணாநிதி முற்றிலும் செயல்பட முடியாமல் போனபோதுதான், வேறு வழியில்லாமல் ‘செயல் தலைவர்’ என்ற பதவி உருவாக்கப்பட்டது ஸ்டாலினுக்காக. அதற்கு முன்பு இரு பொதுக்குழுக்களின்போது (செயல்குழுவா ஞாபகம் இல்லை), முதல் தடவை கருணாநிதி தாமதமாக வந்தார் (தான் தான் தலைவன் என்று காண்பிக்க). இரண்டாவது முறை கருணாநிதியைக் காக்கவைத்து 1 மணி நேரம் கழித்து ஸ்டாலின் வந்தார். அப்போ கருணாநிதி ஆரம்பிக்கலாமா என்று கேட்டபோது துரைமுருகன் போன்றவர்கள் நெளிந்தார்களாம், இன்னும் ஸ்டாலின் வரவில்லையே என்று. கருணாநிதி முகம் கருத்ததாம். இதையும் so called நடுநிலைப் பத்திரிகைகள் (கருணாநிதி சார்பு) எழுதியிருந்தன.
நீங்கள் என்னவோ, ஸ்டாலின் அவர்கள் புத்தர், பதவிக்கு ஆசைப்படாதவர் என்று கதை விடுகிறீர்கள்.
புதியவன்,
இந்த மாதிரி நபர்களெல்லாம் விவாதத்திகு தயாராக இருக்க மாட்டார்கள்… பார்த்தவுடன் பொங்குவார்கள்.
தங்கள் கோபத்தை கொட்டி விட்டு போய் விடுவார்கள். அவ்வளவே.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார்
அவர் துணை முதலமைச்சர் பதவியை எவ்வாறு பெற்றார் என ஒரு கதை/வதந்தி உள்ளது அதனை பற்றி தங்களுக்கு தெரியுமா. அப்படிப்பட்ட மனிதரிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்
Better you write about the quality of those who prostrate before their so called leaders for fringe benefits. These type of people will do anything to achieve their goal including all criminal activities. True leaders will ignore them while entrusting responsibilities. Time will tell us who is the True Leader.
கீழ்க்கண்ட பின்னூட்டம் நண்பர் செல்வராஜன் அவர்களிடமிருந்து வந்தது –
(அவரால் டெக்னிகல் கோளாறு காரணமாக பதியமுடியவில்லை என்று என் தனி மெயிலுக்கு அனுப்பி இருக்கிறார்…)
செல்வராஜன்:
அய்யா ….! அநாகரிகம் என்பதை ” அவரின் ரசனை ” என்று கூறலாமா …? ஒன்னே முக்கால் வருடத்திற்கு முன் ஸ்டாலின் விடுத்த அறிக்கையும் அதைப் பாராட்டி மானமிகு வீரமணி விடுதலை இதழில் பாராட்டியதும் … இப்பாேது நினைத்தால் சிப்பு..சிப்பா வருது ….அது :
headlines»காலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்! தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு தமிழர் தலைவர் பாராட்டு! Facebook Twitter RSS
காலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்! தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு தமிழர் தலைவர் பாராட்டு!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சனி, 07 ஜனவரி 2017
http://www.viduthalai.in/headline/135983-2017-01-07-09-45-32.html … இதில் திரு வீரமணி அவர்கள் : // மானமிகு சுயமரியாதைக்காரர்!’ என்று முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் தம்மை குறிப்பிட்டுக் கொள்வார். மானமிகு சுயமரியாதைக்காரராக அந்நிலைக்கு இதன்மூலம் உயர்ந்து, சுயமரியாதை காக்க முன்வந்துள்ளார் நமது தளபதி அவர்கள்! // என்று அன்று கூறியது ..
இந்த ஸ்டாலின் தலைவராக பதவிக்கு வந்தவுடன் காலில் விழுகிறார்கள் …அவரும் ரசித்து அதை தடுக்காமல் வரும்புகிறார் …. இப்பாேது சுயமரியாதைக்காரரின் யாேக்கியதை எந்த நிலையில் என்பதை திரு .வீரமணி விளக்குவாரா …? கலை ஞர் நினை விடத்தில் பஜனைப் பாடிய பாேது பகுததறிவும் … காலில் விழுந்த பாேது சுயமரியாதையும் காற்றில் பறந்து விட்டதா …?
ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கியதுக்கே விமர்சனம் செய்கிறீர்கள்
திருமதி துர்க்கா , உதயநிதி காலில் தொண்டர்கள் விழுந்து வணங்கிய படங்களை பார்த்தால் என்ன செய்வீர்களோ…
( படங்கள் உண்டு )
our leaders have been given a status of demi gods by their cadre and they fall at their feet so that
their leaders will be pleased and give “plump” portfolios and positions and let loot Tamilnadu by hooks or crooks . Now it has to be stopped. Now Jaya and karunanithi are nomore two of the
most corrupted leaders are gone , let us usher in a new dispensation TO RULE which doesnot have DMK AND AIADMK in the scheme of things. I think Rajini will be a major force as the days go by and he will be a greater challenge to Stalin than others.
தமிழ்மணி,
பொறுத்திருந்து பார்ப்போம்….!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார்… இடுகையைப் படித்தேன். காலில் விழும் கலாச்சாரத்தை (இதைச் செய்பவர்கள் கொஞ்சம்கூட யார் காலில் விழுகிறாரோ அவர் மீது மரியாதை உள்ளவர் என்று எனக்குத் தோன்றவில்லை… அல்லக் கைகள், தங்கள் கொள்ளை வரவுக்காக கூழைக் கும்பிடு போடும் எத்தர்கள்). தலைவர்கள் எத்தனை தடவை சொன்னாலும் திருந்தமாட்டார்கள். தலைவர்களும் இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். (சொல்லிப் பிரயோசனமில்லை). காலில் விழுபவர்களும், (கோவிலில் அட்டெண்டென்ஸ் கொடுப்பவர்கள் மாதிரி) என்றாவது எப்போதாவது தங்கள் நினைவு தலைவருக்கு வந்து ஏதேனும் பதவி கொடுக்கமாட்டாரா, அதை வைத்து கொள்ளையடித்து பணக்காரனாகிவிடலாம் என்ற ஒரே நோக்கில்தான் இதைச் செய்கிறார்கள்.
ஆனாலும் இதில் ஸ்டாலினைக் குறை சொல்ல எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். (அவர் இதற்கு முன்பு அதிமுக, ஜெ. வை இதற்காகக் குறை சொல்லியிருந்தபோதும்.. அப்போது தெரியாது, தனக்கும் இதே கதி வரப்போகிறது என்று) இப்போது அவர் இன்னும் தன் இடத்தை கன்சாலிடேட் செய்துகொள்ளவில்லை, அதில் அவர் கவனம் இருப்பதால் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆறு மாதம், ஒரு வருடத்துக்குப் பிறகு, இது நடந்தால், ஸ்டாலின் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிவரும். இதுவரை அதிமுகவைக் குறை சொன்ன உடன்பிறப்புகள், இணைய காகிதப் புலிகள், தமிழக மக்களிடம், தங்கள் மூடத்தனத்துக்கு மன்னிப்பு (சுரணை இருந்தால்) கேட்கவேண்டிவரும்.
ஆனாலும், சசிகலாவைக் குறை சொன்ன ஸ்டாலின் அவர்கள், கடந்த தேர்தல்களில், அவரது கிச்சன் கேபினட்டுக்குப் பணம் செலுத்தி எம்.பி, எம்.எல்.ஏ வேட்பாளர் லிஸ்டில் பலர் இடம் பெற்றார்கள் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தபோது என்ன செய்துகொண்டிருந்தார் எனத் தெரியவில்லை.
நீங்கள் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற அல்லக்கைகளைப் பற்றி எழுதவே வேண்டாம். அவர்கள், ‘ஈனமிகு’ என்பதற்குப் பதில், ‘மானமிகு’ என்று எழுத்துப் பிழையில் போட்டுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒட்டுவாரொட்டி. அவ்வப்போது, தங்களுக்கு மட்டும் ‘கடவுள் இல்லை, தாலி அறுப்பு’ என்று நாடகம் நடத்துவார்கள். கருணாநிதி மனைவிகளுக்குத் தாலி இருக்கிறதே என்று யாரும் அவர்களிடம் கேட்டுவிடக்கூடாது. ஏனென்றால், அவர்கள் எஜமானரிடம் வாலாட்டி, ஏமாந்தவர்களைப் பார்த்துக் குரைப்பவர்கள்.
செல்வராஜ் அவர்களுக்கு நன்றி, என் தவறை சுட்டிக்காட்டியமைக்கு. ஏதோ கவனக்குறைவில் செய்த பிழையை சற்று மிகைப்படுத்தப்பபட்டு ஏதோ நோக்கத்துடன் செய்தது போன்ற பிம்பம் ஏற்பட்டதாக கருதுகிறேன். அது என் நோக்கம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மேலும் மக்களாகிய நம் நிலையை கண்டு வலிப்பதில் நீங்கள் சொன்ன அதே ஆர்வக்கோளாறினால் நடந்தது இது.
காமை ஐயா குறுக்கிட்டு தெளிவு படுத்தியதற்கும் நன்றி
உங்களை எப்படி அழைப்பது என்பதே புரியவில்லை அதனால் திரு இ ….ம் அவர்களை இந்த மறுமாெழியை நீங்கள் நான் பதிவிட்டவுடனே காெடுத்திருந்திர்கள் என்றால் திரு கா.மை அவர்களுக்கு சிரமம் குறைந்திருக்கும் எனபதுதான் என்கருத்து … உங்களுக்காக திரு .காமை .அவர்கள் பதிவிட நீங்கள் காெடுத்து வைத்தவர் என்பது மட்டும் நிஜம் …!!!
kadamai,kanniyam kattuppadu katrodu poyitru,Rowdeism on the march
கட்சிக்காரர்கள் ஸ்டாலின் காலில் விழுவதில்நமக்கு ஆட்சேபம் இருக்க முடியாது.ஆனால் காலில் விழுபவர்களுக்குத்தான் காரியம் நடக்கும் என்ற நிலையை அவர் உருவாக்காமல் இருந்தால் போதும்.மேலும் தமிழகம் கண்டதில் மிக மோசமான முதல்வர் JJ தான் என்பதும் என் கருத்து! திரு.காவிரிமைந்தன் மன்னிக்கணும்
கண்பத்,
நீங்கள் சு தந்திரமான மனிதர்…!!!
என் கருத்தை நீங்கள் ஏன் ஏற்க வேண்டும்…?
உங்கள் கருத்து உங்களுக்கு… என் கருத்து எனக்கு… 🙂 🙂
//கட்சிக்காரர்கள் ஸ்டாலின் காலில் விழுவதில் – நமக்கு – ஆட்சேபம் இருக்க முடியாது.//
ஆனால் எனக்கு இருக்கிறதே…! 🙂 🙂
பொதுவாழ்வில் இருப்பவர்கள் சில நெறிகளை அவசியம் கடைபிடித்தாக வேண்டும் என்று
நான் எதிர்பார்க்கிறேன். எனவே, மன்னிக்கவும் – நான் இதை ஏற்பதற்கில்லை….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்