…
…
சுப்ரீம் கோர்ட்(உச்சநீதிமன்றம்), இந்த நாட்டின் மிக உயர்ந்த பீடம்… மிக உயர்ந்த அந்தஸ்து கொண்ட இந்த நீதிமன்றத்தில் பணி புரியும் கேரளாவைச் சேர்ந்த நீதிபதிகள் – ஜஸ்டிஸ் குரியன், ஜஸ்டிஸ் ஜோசப் ஆகியோர் –
சுப்ரீம் கோர்ட் செய்தியாளர்களின் அமைப்பு, கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி திரட்ட ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு –
எந்தவித பந்தாவும் இல்லாமல் பாட்டு பாடினர்…
என்கிற நிகழ்வு பிரமிப்பைத் தருகிறது….
தங்கள் மொழி, மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்காக அவர்கள் தங்கள்
அந்தஸ்தை மறந்து, கூச்சத்தையகற்றி, இயங்கியது – பாராட்டத்தக்க செயல்…
எந்த இடத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும்,
தங்கள் மக்களை மறக்ககூடாது என்கிற அவர்களது எண்ணம், செயல்
மற்றவர்களுக்கு உதாரணமாக அமையக்கூடியது….
தமிழர்கள், மலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய
மிக முக்கியமானதொரு பண்பு இது;
கீழே ஜஸ்டிஸ் குரியன் ஜோசப் அவர்கள் ஹிந்தி பாடகர், இசையமைப்பாளர்
மொஹித் சௌஹானுடன் சேர்ந்து பாடும் வீடியோ….
WE SHALL OVERCOME …..
ஹிந்தி, ஆங்கிலம், மலையாள மொழிகளில்…..
…
…
இதனைத் தொடர்ந்து ஜஸ்டிஸ் கே.எம். ஜோசப் அவர்கள்,
“மதுபன் குஷ்பூ தேதா ஹை” என்கிற ஜேசுதாஸ் அவர்களின்
புகழ்பெற்ற ஒரு ஹிந்தி பாடலை பாடி இருக்கிறார்….
அந்த வீடியோ கிடைக்கவில்லை… அதுவும் கிடைத்திருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்….
இருந்தாலும் அவர் பாடும்போது எடுத்த புகைப்படம் கீழே –
..

..
ஜேசுதாஸ் அவர்கள் பாடிய அந்த ஒரிஜினல் பாடல் –
…
…
——————————————————————————



நீதிபதிகள் சாதி இன மொழி மாநிலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சி கண்டிக்க பட வேண்டியது.
கார்த்திகேயன்,
தவறான புரிதல் உங்களுடையது…
நீதிபதிகள் – ஜாதி, இன, மொழி -க்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அவர்கள் தங்கள் கடமையை செய்யும்போது மட்டும் தான்… மற்ற நேரங்களில் அவர்கள் சாதாரண மனிதர்களே.
தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த, தங்கள் மொழி பேசும் மக்களின் வேதனையை குறைக்க, அவர்களின் துயர் துடைக்க – இந்த நீதிபதிகள், தங்கள் அந்தஸ்தை ஒதுக்கி வைத்து விட்டு செயல்பட்டது பாராட்டத்தக்க விஷயம்…
மற்றவர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய விஷயம்.
-காவிரிமைந்தன்
பிங்குபாக்: சுப்ரீம் கோர்ட் கேரள நீதிபதிகளைப் பார்த்தாவது தமிழர்கள் கற்றுக் கொள்வார்களா…? – TamilBlogs