…
…
அண்ணன், தம்பிக்கிடையே பதவிக்காக போட்டி, சண்டை
என்று வெளியில் செய்திகள் சொல்லப்படுகின்றன…….
ஆனால், உண்மையில் போட்டியும், சண்டையும் – கட்சியில் பதவியைப்
பிடிக்கவா நடக்கிறது…?
திமுகவின் சாதாரண தொண்டர்களில் எத்தனை பேருக்கு,
சகோதரர்களுக்கிடையே நடக்கும் இந்த புதிய மஹாபாரதப் போரின்
உண்மையான காரணங்கள் தெரிந்திருக்க முடியும்….?
தான் இறக்கும் வரையில், தந்தை ஏன் யாரையும் தன் ஆசனத்தில் அமர
விடவில்லை….? இடையில், அவரால் அவர் செயல்பட
முடியாத நிலையில் இருந்தபோது,
அவரது அதிகாரங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்பட்டனவே தவிர, அந்த அதிகாரங்கள் அவரால் மனமுவந்து கொடுக்கப்படவில்லையே… ஏன்…?
நடப்பதெல்லாம் தற்காலிக விளையாட்டு; இறுதியில், உரிய முறையில்
பாகப்பிரிவினை செய்து விட்டுத்தான் தந்தை செல்வார் என்று தமையன்
நினைத்திருந்தது கானல் நீராகி விட்டது….
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, தற்காலிக தீர்ப்பை இளையவர்
நிரந்தரப்படுத்தினால் மூத்தவர் வெகுண்டெழுவதில் அதிசயப்பட என்ன இருக்கிறது….?
ஏற்கெனவே பொதுவெளியில், ஆர்வமுள்ளவர்களால், ஓரளவு யூகிக்கப்பட்டது தான்; இருந்தாலும் – எவ்வளவு பிரம்மாண்டம் என்பது இப்போது கூட கோடி தான், சில கோடிகள் தான் காட்டப்பட்டிருக்கிறது….
முழு வடிவமும் தெரியவில்லை….
மொத்தம் 40,000 கோடியை தாண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த காலத்தில் குடும்ப சொத்தாக இருந்தாலும் கூட, அதனை
அறக்கட்டளையாக மாற்றி நிர்வகிப்பது தான், வரிச்சிக்கல்களையும்,
வேண்டாத கேள்விகளையும் சமாளிக்கவும், லாபகரமாக இயங்கவும்
வசதியானது என்பது பணம் படைத்தவர்களுக்கு தெரிந்த கலை…
கட்சி சொத்துக்களையும் அறக்கட்டளையாக மாற்றுவது,
கட்சிக்கு ஆபத்து வரும்போது – அல்லது – கட்சி நிர்வாகம்
கையை விட்டுப்போகும்போது,
சொத்தை காப்பாற்றிக் கொள்ள உதவும் என்பது
அரசியல் ஞானிகளின் தீர்க்கம்….
1) திமுக கட்சியின் சொத்துக்கள்….
2) திமுக அறக்கட்டளை சொத்துக்கள்..
3) முரசொலி அறக்கட்டளை சொத்துக்கள்…
மூன்று விதங்களில் பிரிக்கப்பட்ட சொத்துக்களில், அதிகமான
சொத்துக்களை வைத்திருக்கும் அறக்கட்டளையின் நிர்வாகத்தை –
கலைஞர் குடும்பத்திலிருந்து –
திரு.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர்
கவனித்து வருகின்றனர்… குடும்ப உறுப்பினர்கள்
வேறு யாருக்கும் அதில் இடமில்லை என்பது –
– சண்டைக்கான முதல் காரணமென தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன.
—————–
மற்ற இரண்டு அறக்கட்டளைகள் பற்றிய விவரங்கள் இதுவரை மிகவும்
ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன…
தற்போது தெரிய வந்துள்ள திமுக கட்சியின்
சொத்து விவரங்கள் –
வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள –
நிரந்தர வைப்புத் தொகை ———— சுமார் 162 கோடியே 7 லட்சம்…
இதர கணக்குகளில் வைக்கப்பட்டிருப்பவை –
—————————————சுமார் 1 கோடியே 61 லட்சம்..
கட்சிக்கு பல்வேறு வகைகளில், 2016-17 ஆண்டில்
கிடைத்துள்ள வருமானம் ———— சுமார் 85 கோடியே 66 லட்சம்…
அசையா சொத்துக்கள் (நிலங்கள்…) மதிப்பு –
சுமார் 7 கோடியே 41 லட்சம்.
வாகனங்கள் மதிப்பு – சுமார் 2 கோடியே 74 லட்சம்…
கட்டிடங்களின் மதிப்பு – சுமார் 9 கோடியே 30 லட்சம்…
( கட்டிடங்களின் மதிப்பு, சொத்துக்கள் வாங்கப்பட்டபோது சொல்லப்பட்ட மதிப்பு… இப்போது அவற்றின் மதிப்பு பலமடங்கு உயர்ந்து விட்டது…! )
மேற்கண்ட நிதி ஆதாரங்கள் அனைத்தும், திமுக வின் சொத்து
அறக்கட்டளையுடையவை மட்டும் என்றும் –
முரசொலி அறக்கட்டளை மற்றும் திமுக அறக்கட்டளை விவரங்கள்
தனி – என்றும் தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.
————-
இந்த சொத்துகள் யாவும் முறைப்படி அறக்கட்டளை வசம்
இருக்கின்றன. முறைப்படி நியமிக்கப்பட்ட உறுப்பினர்களால் தான்
இந்த அறக்கட்டளையின்
சொத்துக்கள் நிர்வகிக்கப்படுகின்றன….
இதில் சம்பந்தம் இல்லாத வெளி நபர்களுக்கு சட்டபூர்வமாக இதில்
எந்த உரிமையும் இல்லை…. இதைப்பற்றி அவர்களால் எந்தவித
பிரச்சினையும் பண்ண முடியாது என்று, இளையவர் தரப்பு –
வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருந்தாலும் –
மூத்தவரால் எந்த விதத்தில் பிரச்சினைகளை அரசியல் ரீதியாகவும்,
சட்ட ரீதியாகவும் உருவாக்க முடியும் என்பதற்கு சில விஷயங்கள்
கோடிட்டு காட்டப்படுகின்றன…..
————
எத்தகைய பலவீனங்கள்….?
– அறக்கட்டளை சொத்திலிருந்து சில நிர்வாகிகளுக்கும்,
அவர்கள் கைகாட்டும் நபர்களுக்கும் –
வட்டியில்லா கடனாக பெருத்த தொகைகள்
கொடுக்கப்பட்டிருக்கின்றன….
– அப்படி பெறப்பட்ட கடன் தொகைகள் – சிலருக்கு திரைப்படங்கள் எடுக்கவும், வணிகம் செய்யவும், நிதிநிறுவனங்களை நடத்தவும் உதவின…
– பெறப்பட்ட கடன் தொகைகள் இன்னமும் கூட, முழுமையாக திரும்பப்
படவில்லை….
– சட்டரீதியாக கட்சி நிதியை இப்படி தனியாரின் வர்த்தக பயன்பாட்டிற்கு கடன் கொடுக்க பயன்படுத்துவது தவறு…..
– இப்படி, கடன் கொடுத்ததற்கான, அதில் ஒரு பகுதியை திரும்ப கொடுத்ததற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் தயாராக உள்ளன.
இவையெல்லாம் வேண்டுமென்றே இப்போது கசிய விடப்பட்டுள்ள சில
தகவல்கள்.
———–
சரி – இந்த தகவல்கள் இப்போது யாரால், எதற்காக
கசிய விடப்பட்டுள்ளன….?
தமையனார் தரப்பா….? சான்ஸ் இல்லை….
அங்கே கோபமும், முரட்டுத்தனமும் தான் தெரிகிறது….
புத்திசாலித்தனமோ, சாணக்கியத்தனமோ தெரியவில்லை…!
பிற கட்சிகள் எதுவும் இதில் சம்பந்தப்படவில்லை…
வெளியார் யாருமில்லை…
அப்படியானால் வேறு யார்…?
திமுகவின் முதல் குடும்பத்திற்குள்ளேயே,
தந்திரமாக, சாணக்கியதனத்துடன்,
தங்கள் இருப்பை புரியவைக்கும்படி இயங்க –
வேறு யார் இருக்கிறார்கள்…?
கொஞ்சம் யோசிப்போமே… புரியாமலா போகும்…?
அண்ணன் -தம்பிக்கிடையே மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கும்
முன்-அனுபவம் உள்ளவர்கள் யாரென்று தேடினால் போச்சு…!!!
…

…
.
———————————————————————————



பிங்குபாக்: கசியும் ரகசியங்கள் ….சகோதர சண்டை ஏன்….!!! – Site Title
அய்யா …! இந்த சவுக்கு இடுகை முன்பு படித்த ஞாபகம் …நான்காண்டுகளுக்கு முன் 04 ஏப்ரல் 2014. அன்று பதிவிட்டது …இதில் பல விவரங்கள் உள்ளன ..ஒரு முழு தி.மு.க. வரலாறே இருக்கிறது …! இந்த இடுகையில் தற்பாேது தங்களின் இன்றைய பதிவிற்காக ஒரு சிலவற்றை மேற்காேளாக எடுத்துக் காெள்ளலாம் என்பதால் : https://www-savukkuonline-com.cdn.ampproject.org/v/s/www.savukkuonline.com/5752/amp/?amp_js_v=a2&_gsa=1&usqp=mq331AQCCAE%3D#referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.savukkuonline.com%2F5752%2F
// மு.க.அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான மோதல் அரசியல் கொள்கை கோட்பாடுகள் குறித்ததல்ல. அறக்கட்டளை சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது குறித்ததே. தி.மு.க. நமது குடும்பச் சொத்து. நானும், கருணாநிதியின் மகன்தானே. ஒரு பிள்ளைக்கு மட்டும் அந்த சொத்து போனால், என்னுடைய பங்கு எங்கே? என்பது மட்டும்தான் அழகிரியின் கோபத்துக்குக் காரணம். நிதியே இல்லாமல் வீதிகளில் கையேந்தி வளர்ந்த கட்சிக்கு இன்று ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்கள். இன்று தி.மு.க. அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ஆறாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்கின்றனர் அந்தக் கட்சியினர். அறிவாலயம், அன்பகம் என்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அசையா சொத்துக்கள் மட்டும் பல நூறு கோடிகளைத் தாண்டும்.
தி.மு.க.வில் உள்ள மற்றப் பதவிகளுக்கு யாரை கொண்டுவந்தாலும் பொருளாளர் பதவிக்கு மட்டும் மிக மிக நம்பிக்கையைப் பெற்றவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும். திமுகவின் பொருளாளராக இருந்தவர் கருணாநிதி. அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆர் பொருளாளராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். பொருளாளராக இருந்தபோதுதான் கட்சிப் பணத்தை கருணாநிதி கையாடல் செய்ததையும், கணக்கில் வராமல் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் கண்டித்தார். பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரே. கணக்குக் கேட்டதால், கருணாநிதி அவரை வெளியேற்றும் வேலைகளில் இறங்கி வெற்றி கண்டார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எஸ்.ஜே. சாதிக் பாட்சா பொருளாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரு வாயில்லா பூச்சி. அதன் பிறகு நீண்ட நாட்கள் அந்தப் பொறுப்பில் இருந்தவர் ஆற்காடு வீராச்சாமி. ஆற்காடு வீராச்சாமி, மின்சார வாரியத்தில் தற்காலிக தட்டச்சராக இருந்தவர். கூடுதல் வேலையாக, சென்னையில் இருந்த ஒரு காவல் நிலையத்திற்கும் டைப்பிஸ்டு வேலை பார்த்துக் கொடுத்து, அவர்கள் வாங்கித் தரும் உணவை சாப்பிட்டு, அங்கேயே படுத்துக் கொள்வார். அப்படிப்பட்டவர், கருணாநிதியோடு நெருக்கமானதன் பின்னணி இங்கே எழுத முடியாத ரகம். அவரைத்தான் தி.மு.க.வில் நீண்ட நாட்களாக பொருளாளராக வைத்திருந்தார்கள். ஆற்காடு வீராச்சாமிக்குப் பிறகு பொருளாளரானவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின். ( இப்பாேது துரைமுருகன் )
ஸ்டாலின் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று திமுகவில் சிலர் வாதாடக் கூடும். சொந்த தங்கையின் வளர்ச்சியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்கு எதிராக அரசியல் செய்து அவரை ஒழித்துக் கட்ட முயற்சிப்பவர்தான் ஸ்டாலின். 2ஜி ஊழலில் வந்த பணத்தில் பெரிய பங்கை பெற்றவர் ஸ்டாலின்தான். ஆனால், அந்த ஊழல் குறித்து எதுவுமே தெரியாதது போல இன்று நடந்து கொள்கிறார். //
கொஞ்சம் கொஞ்சமாக, மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகிய இருவர் மட்டுமே
திமுகவின் நிதி விவகாரங்கள் முழுவதையும் கவனிக்கத் துவங்கி விடுவார்கள்.
அண்ணன் அழகிரி கேட்பது பதவியில் பங்கல்ல. சொத்து நிர்வாகத்தில் தான்.
ஆனால், கொஞ்சம் இடம் கொடுத்தால், அழகிரி பின்னாளில் பெருத்த போட்டியாகி விடுவாரெண்று பயப்படுகிறார் ஸ்டாலின். இப்போதைக்கு ஸ்டாலின் பொதுமக்கள், கூட்டணி கட்சிகள் ஆகிய அனைவரின் இரக்கத்தையும் சம்பாதித்திருக்கிறார். இதன் துணையோடு, பக்கத்தில் வைத்துக்கொண்டு நிரந்தரமாக பயப்படுவதை விட, வெளியில் வைத்து வீழ்த்தி விடலாமென்று ஸ்டாலின் நினைக்கிறார். ஒரு விதத்தில் இது புத்திசாலித்தனமான முடிவு தான்.
அப்பாவுக்கு சரியான வாரிசு என்பதை துவக்கத்திலேயே நிரூபிக்கிறார் இளைய மகன்.
KM Sir,
Who else other than KD brothers could effectively navigate like this ? People could recall their role in 2g leaks. Their connections are not just usual like any other MP or businessman. Their connections extend to international investment kingpins like Wilbur Ross(This man is now in Trump’s administration, starting his career in Rothschild & Sons). If my guess is right they are weaving things very carefully. MK had district secretaries and party functionaries who were pulled towards him for leadership and party policies or whatever reason. There were people with MK who were not able to be bought by money. But the present functionaries with MKS are not the same. There is no big pull. KD brothers will make the present party functionaries to dance to their tunes very easily, with money. KD brothers may wait for another 10 or 15 years to topple and capture everything, when power transforms from MKS to his son. They will not do the same mistake once again – like how they portrayed younger KD earlier. Let’s wait and see. For youngster like me, lot more political lessons to be learnt. KD brothers may start their full-fledged work slowly by getting in to party functionaries. MK is said to be knowing everything through so many sources, as all those sources were able to contact MK easily. MKS is not the same – to reach him, any info or personnel have to cross so many circles. So MKS will get to know only the bigger damage rather than knowing the conspiracy well in the beginning.
Thanks.
பிங்குபாக்: கசியும் ரகசியங்கள் ….சகோதர சண்டை ஏன்….!!! – TamilBlogs
மேலே செல்வராஜன் சார் கொடுத்திருக்கிற சவுக்கு லிங்க்கில் இன்னும்
சில அவசியமான தகவல்கள் இருக்கின்றன ;
கருணாநிதி, மத்திய அரசில் பசையுள்ள அமைச்சரவைகளைப் பெற்று, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கோடிகளை வாரிக் குவித்தார். 2007-ம் ஆண்டில், கேடி சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்குக்குப் பிறகு, ஆ.ராசாவை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆக்கினார்.
ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அலைக்கற்றை ஊழலுக்காக முதல் தவணையாக பெற்று வழங்கிய அந்த மிகப்பெரிய தொகையைப் பார்த்ததும் கருணாநிதிக்கு மாறன்களின் மீது மிகப்பெரிய கோபம் ஏற்பட்டது. இத்தனை தொகை அவனுக்கும் வந்திருக்குமே… மொத்தத்தையும் அவனே ஆட்டையைப் போட்டுவிட்டானே. ஆனால், இவன் நம்மிடம் வந்து ஒப்படைத்துவிட்டானே என்று நினைத்து ஆ.ராசாவை உச்சி முகர்ந்தார்.
திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டால், பக்கங்கள் போதாது. கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலம் முதலாக, இன்று வரை, அவரின் மறுபெயரே ஊழல்தான். இப்படி கூச்சநாச்சமில்லாமல் ஊழலில் திமுகவும் அதன் அமைச்சர்களும் ஊறிப்போனதன் காரணம், கருணாநிதி, தலைமைப் பொறுப்பேற்ற நாள் முதலாகவே, திமுகவை ரிலையன்ஸ் நிறுவனம் போலவே நடத்தினார். திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்கு போட்டுக் கொள்ள அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் சண்டை போட்டுக் கொண்டது போலத்தான் இன்று திமுகவில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி திமுகவை ஒரு தனியார் நிறுவனத்தைப் போலவே நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகத்தான் திமுகவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும், எப்படி சம்பாதிப்பது என்ற ஒற்றை நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாநாடுகள் நடத்துவதே நிதி வசூலுக்காக மட்டுமே என்பதை உருவாக்கியது திமுகதான். சமீபத்தில் நடந்த திருச்சி மாநாட்டில் கூட, கோடிக்கணக்கில் நிதி வசூல் செய்து கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. இப்படி நிதிகள் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கையில், 10 கோடி செலவு செய்ய முடியுமா என்பதை உறுதி செய்த பிறகே சீட் வழங்கப்படுகிறது. வசூல் செய்து தரப்படும் தேர்தல் நிதி, எப்படி செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடப்படுவதில்லை. வசூல் செய்யப்படும் நிதிகள், திமுக அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் முதலீடு செய்யப்பட்டு, அந்த அறக்கட்டளைகளின் மீது, கோழி அடைக்காப்பதைப் போல ஸ்டாலின் அமர்ந்து கொண்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தேர்ந்தெடுத்த 35 திமுக வேட்பாளர்களில் ஓரிருவரைத் தவிர மீதம் உள்ள எல்லோரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டே இடத்தை ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்ட கடைந்தெடுத்த ஊழல் பேர்வழி என்பதை உணர்த்து கொள்ளலாம். கட்சியில் மூத்தவர்களுக்கோ, கட்சிக்காக உழைத்தவர்களுக்கோ இடமில்லை. பணமிருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதை அப்பட்டமாக உணர்த்தியுள்ளார் ஸ்டாலின். இவரும் கருணாநிதியின் வழித்தோன்றல்தானே…?
சவுக்கு தளம் பல செய்திகளை ஆராய்ந்து விவரமாக எழுதி இருக்கிறது.
This is old story sir now kd brothers bringing it up again.
இவரைத்தான் காந்தி அளவுக்கு உயர்த்தி எழுதுகிறார்கள், இப்போது சவுக்கு உள்பட! எல்லாம் பணம் படுத்தும் பாடு!