கலைஞருக்கு மிகவும் பிடித்த அமீத் ஷா…..!!!



கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
பாஜக தலைவர் அமீத்ஜீயை திரு.ஸ்டாலின் அழைத்திருக்கிறார்….!

அவசியம் வருவதாக அவரும் அறிவித்திருக்கிறார்.

கலைஞர் நினைவேந்தல் என்று சொல்லும்போது –

பொதுவாக, மறைந்த ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு
யார் அழைக்கப்படுவர்…?
யார் கலந்து கொள்வர்…?

மறைந்தவருடன் மிக நெருக்கமான
உறவோ, நட்போ உள்ளவர்….
பல காலங்களாக அவரை நன்கு அறிந்தவர்…
மறைந்தவருக்கு மிகவும் பிடித்தமானவர்….

கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளும்போது –
அமீத்ஜீ பல காரணங்களுக்காக, பார்வையாளர்களால்
நினைவுகூரப்படுவார்….

கலைஞரும் அமீத்ஜீயும்
சேர்ந்த மாதிரி புகைப்படம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தேன்…
குறைந்த பட்சம் ஸ்டாலினும், அமீத்ஜீயும் சேர்ந்திருக்கிற மாதிரியாவது…?
ஊஹூம் – கூகுளில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை… சந்தித்திருந்தால் தானே…. கிடைக்க?

– கலைஞரின் 94 வயதுகளில், ஒருமுறை கூட நேரில் சந்தித்தறியாத
ஒருவர், அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ள வருகிறார்…!!!

– கலைஞருக்கு மிகவும் பிடித்த “ஹிந்தி” மொழியில்
அவர் தன் நினைவுகளை பகிர்ந்துகொள்வார்….

– ஸ்டாலினும், மற்ற முக்கிய திமுக தலைவர்களும் மேடையில் உடன் அமர்ந்திருக்க, அமீத்ஜீ ஹிந்தியில் பேசப்போகிறார்…
( அபூர்வமான இந்த நிகழ்வு நீண்டநாட்களுக்கு நிச்சயம் மக்களின் நினைவில் இருக்கும்…)

– அமீத்ஜீ கலைஞரைப்பற்றி பேசும்போது,
கோத்ரா கலவரம் பற்றி கலைஞர் பேசியது, எழுதியது எல்லாம் – சொரணையற்ற, சுயநலவாத – திமுக 2-ம் கட்ட தலைவர்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம்.

ஆனால், பார்க்கின்ற மக்களுக்கு அவசியம் நினவில் இருக்கும்…!

திரு.ஸ்டாலின், அமீத்ஜீயை அழைப்பதற்கு –

– 2019 பாராளுமன்ற தேர்தல்களுக்குப் பிறகு, பாஜகவுக்கு தனியாக
மத்தியில் அரசு அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம்
கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிகின்ற சூழ்நிலையில்,

மத்திய அரசில் திமுக இடம் பிடிக்க உதவும் என்கிற
ஒரே ஒரு உன்னதமான லட்சியத்தைத்தவிர, வேறு எந்தவித
காரணங்களும் புலப்படவில்லை –

தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ – இல்லையோ ….
என்கிற கவலை திரு.ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை….
கலைஞரின் ஆன்மா இதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்….!!!

ஒரே ஒரு கேள்வி –
உண்மையில், அமீத்ஜீ … எதற்காக, யாருக்காக வருகிறார்….?

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கலைஞருக்கு மிகவும் பிடித்த அமீத் ஷா…..!!!

  1. delhipayanam's avatar delhipayanam சொல்கிறார்:

    தி மு க மற்றும் அதிமுக இந்த இரு கட்சிகளுக்கும் தந்தை பெரியார் அவர்களின் பெயரை சொல்ல கூட தகுதி இல்லை கொள்ளை அடிப்பதில் இருவருமே சிறந்தவர்கள்

  2. Ram's avatar Ram சொல்கிறார்:

    // – ஸ்டாலினும், மற்ற முக்கிய திமுக தலைவர்களும் மேடையில் உடன் அமர்ந்திருக்க, அமீத்ஜீ ஹிந்தியில் பேசப்போகிறார்…//

    அமீத்ஜீயின் ஹிந்தி “நினைவேந்தலை” மேடையில் அமர்ந்திருக்கும் யார்
    தமிழில் மொழி பெயர்ப்பார்கள் ?

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      அதற்கென்ன; மொழிபெயர்ப்புக்கு ஹெச்.ராஜாவையும்
      ஸ்டாலின் அழைத்து விட்டால் பிரச்சினை தீர்ந்தது;
      ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ;

  3. Ram's avatar Ram சொல்கிறார்:

    எங்கேயிருந்து சார் அமீத்ஜீயின் இந்த சூப்பர் போஸை கண்டு பிடிச்சீங்க ?
    அமர்க்களமான ரசனை உங்களுக்கு 🙂

  4. பிங்குபாக்: கலைஞருக்கு மிகவும் பிடித்த அமீத் ஷா…..!!! – TamilBlogs

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கலைஞருக்கு மிகவும் பிடித்த “ஹிந்தி” மொழி – ஆமாம். அந்த மொழி தெரிந்திருந்ததனால்தான் தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி தந்தேன் என்று கருணாநிதி காரணம் தெரிவித்தார். அதே காரணத்துக்காகத்தான் கனிமொழியும் பாராளுமன்ற எம்பி ஆக நியமிக்கப்பட்டார்.

    கோத்ரா கலவரம் பற்றி கலைஞர் பேசியது, எழுதியது – ஈழத் தமிழர்களை, ராணுவம் கொண்டு அடக்கிக் கொன்று குவித்தபோது, கருணாநிதியும் ஜாலியாக மெரினாவில் இணை துணையுடன் ஏர் கூலரில் 3 மணி நேரம் காற்று வாங்கிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, அந்த ஆபரேஷன் நடந்தபோது கருணாநிதியும் என்ன என்ன செய்து தமிழர்களைக் கொன்று குவிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆலோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தார் (மத்திய அரசு உயர் அதிகாரி, கருணாநிதியின் வீட்டிற்கு வந்து என்ன நடக்கிறது, என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்தியது எல்லோருக்கும் தெரியும்தானே)

    ஆனைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டதா இப்போது. பிறகு உங்களுக்கு என்ன பிரச்சனை கா.மை சார்… அமித்ஷா கருணாநிதியின் நினைவுக் கூட்டத்துக்கு வருவதில்? ஹாஹாஹா. கருணாநிதிக் கூட்டத்தில் கொள்ளையைத் தவிர, கொள்கையை எதிர்பார்க்கிறீர்களே… அதிலும் இத்தனை வருடங்களாக துக்ளக் வாசகராக இருந்துகொண்டு….

    ஸ்டாலினுக்கு எப்படியும் முதல்வராக ஆகணும். தனியாக நடக்காது என்பதால், பாஜகவுடன் சேருவதுதான் நல்லது என்று நினைப்பாராயிருக்கும். இந்தச் சாக்கில், பாரதரத்னா, வழக்குகளை நீர்க்கச் செய்வது போன்றவைகளையும் செய்துமுடித்து விடுவார். ஸ்டாலினுக்குத் தன்னுடைய பிரச்சனைகள்தான் இப்போ முக்கியம். ஒரு முறை ஆட்சியில் அமர்ந்து தன் பிம்பத்தைச் சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்திருப்பாராயிருக்கும்.

    தமிழக திருமாவளவன், எந்தக் கூட்டணியிலும் துண்டு போட்டு இடம் பிடிக்க முயல்வதைப் போல, அகில இந்திய திருமாவளவன் (சாரி…. ராகுல் காந்தி அவர்கள்), அதிமுகவில் துண்டைப் போட்டார் (ஜெ. வை ஆஸ்பத்திரியில் வந்து பார்த்த ஒரே தலைவர். நண்பர் என்ற வேடத்தைப் போட்ட மோடி அவர்கள் வரவே இல்லை. இதைவிட பெரிய துரோகத்தை நான் கண்டதில்லை), பிறகு திமுகவைத் தக்கவைக்க துண்டைப் போட்டார், ஒருவேளை, மூன்றாவது அணி வருமோ என்று திருமாவளவனையும் தில்லியில் சந்தித்தார். பாவம்.. காங்கிரஸ் காரர்கள். காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன்…… கதையாக மாறாமலிருக்க அவர்களுக்கு என் ப்ரார்த்தனைகள். ஹா ஹா ஹா. இருந்தாலும், ராகுல் காந்தி அவர்கள், ஜெயலலிதாவை அப்போலோவில் வந்து பார்த்ததன்மூலம் நயத்தகு நாகரிகம் காண்பித்தார் என்றுதான் நான் நினைக்கிறேன். அதற்காக அவரிடம் எனக்கு சாஃப்ட் கார்னர் எப்போதும் இருக்கும்.

    அமித்ஷா அவர்களின் முதல் இலக்கு, பாஜக எம்பி சீட்டுகள் தமிழகத்திலிருந்து பெறுவது, அடுத்த பாஜக ஆட்சிக்கு அடிகோலுவது. அதற்கு ஏற்றமாதிரி காய்களை நகர்த்துகிறார். அவரை இதில் குறை சொல்வதில் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை.ஹாஹா.

    கைத்தடிகள் (அல்லது அல்லக்கைகள்), கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றோர் இதனை எப்படி நியாயப்படுத்தலாம் என்பதில் இப்போது முனைந்திருப்பார்கள். இந்த விழாக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போது, தங்கள் வீடுகளில், தங்களின் முகத்தில் படிந்திருக்கும் கரியைத் துடைப்பதில் இருவரும் மும்மரமாக இருப்பார்கள். திமுக இணையப் புலிகள், சூடு கண்ட பூனைகளைப் போல் பம்மியிருப்பார்கள். ஹாஹாஹா.

  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    கூடா நட்பு கேடாய் முடியும் என நைனா கருணாநிதி அவர்கள் அன்று கூறினார் … எதற்காக , எந்த காலகட்டத்தில் அதை கூறினார் என்பது புதல்வருக்கு தெரிந்திருக்கும் ..! புதல்வர் தற்பாேது அதே டயலாக்கை மீண்டும் கையில் எடுப்பாரா ..? அவரது வருகை , இவர்களது நெருக்கம் எல்லாமே பதவிகளுக்காகத்தானே …? மக்கள் நலன் …? வழக்கம் பாேல …அப்படித்தானே …?

    எச். ராஜாவும் வைரமுத்துவும் …? முகமூடி பாேட்ட மனிதர்கள் சங்கமிக்கும் சுவாரசியமான நிகழ்ச்சியாக இருக்குமா ..? ஊடகங்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சூடு , சாெரணையற்ற செயல்களை செய்திகளாக பாேட்டு சப்பைக் கட்டு கட்டுவார்கள் ..மக்கள் ரசிப்பார்கள் …!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.