காலம் செய்யும் கோலம் – பிரமிப்பூட்டுகிறது….பயமுறுத்துகிறது….!


நேற்றிரவு, கலைஞர் வீட்டின் வாயிலில்
மு.க.முத்துவை இரண்டு பேர் தாங்கி நிற்கும்
ஒரு புகைப்படத்தில் பார்த்தேன்… அதிர்ந்து விட்டேன்…!

அன்றைய இந்த மு.க.முத்து எங்கே….

..


இன்றைய இந்த மு.க.முத்து எங்கே …?

நடுவில் வேட்டி,சட்டையில் இருப்பவர் தான் மு.க.முத்து

..

இதைப் பார்த்த பிறகு – பழைய நினைவுகள் தோன்றியதை
தவிர்க்க முடியவில்லை. கலைஞரிடமிருந்து எம்.ஜி.ஆர்.
பிரிவதற்கான முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர்.

எம்.ஜி.ஆரின் ரசிகர்களை பிரித்து இழுப்பதற்காக,
எம்.ஜி.ஆர். போலவே ஒப்பனை செய்து, அவர் ஸ்டைல்,
மேனரிசம் எல்லாவற்றையும் imitate செய்து,
தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து
– 1972 வாக்கில் சில திரைப்படங்களை தயாரித்து
வெளியிட்டார் கலைஞர்.

அதனைத் தொடர்ந்து, திமுகவின் ஒரு அங்கமாக இருந்த
எம்.ஜி.ஆர். மன்றங்களை கலைக்கச் சொல்லி உத்திரவு பிறந்தது….

இப்படி பல சம்பவங்களின் கூட்டு விளைவாகத்தான்,
எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து
வெளியேற்றப்பட்டு அதிமுக தோன்றியது….

அப்பப்பா …காலம் தான் என்னவெல்லாம் செய்கிறது….!!!

.
——————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to காலம் செய்யும் கோலம் – பிரமிப்பூட்டுகிறது….பயமுறுத்துகிறது….!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    திரு . மு.க.முத்து நடித்தப்படங்கள் : பிள்ளையாே பிள்ளை , பூக்காரி , சமையல்காரன் , அணையா விளக்கு …சில படங்களில் பாடியும் இருக்கிறார்..!

    // இறுதி மரியாதையின்போது,
    அவர் மீது போர்த்தப்பட்ட மூவர்ண தேசியக்கொடி யாரிடம் அளிக்கப்பட்டிருக்க
    வேண்டும்…. அவரது குடும்பத்தின் மூத்த வாரிசு / மகன் அங்கேயே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும்போது, அந்த கொடி, 2-வது மகனிடம் கொடுக்கப்பட்டது எப்படி….?
    மூத்த மகன் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருக்கலாம். // ….இது தங்களின் நேற்றைய பின்னூட்டத்தில் பதிவிட்ட மறுமாெழி … சரியான கேள்வி .. அதற்கு முழு தகுதியானவர் திரு மு.க முத்துதானே ..?

    மு.க.முத்து படத்தில் ஒரு பாடல் மிகவும் பிரபல்யம் ..அது : ” சாெந்தக்காரங்க எனக்கு ராெம்பபேருங்க ” என்னும் பாடல் ..உண்மைதான் நியை சாெந்தங்கள் அவருக்கு ..இருந்தும் …?

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    #மரணத்தின்பாடம்

    கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்…..

    👇

    அவரின் குடும்பம்….

    உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்….

    கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது. அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்…..இவைகள் தான்.

    அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம்.

    ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார்.

    கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ….நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான்.

    குடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே…

    பதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ….எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை…..

    கலைஞர் பாதுகாத்தார் …பாதுகாத்து கொண்டார்….ஒட்டு மொத்த குடும்பத்தின்
    கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்….

    நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்….அவர்களே நம்முடைய சொத்துகள்.

    மரணம்இயற்கையானது..
    மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது…….ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்……

    உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்….நாளை நம்க்கும் மரணம் வரும்….மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்… இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்……

    சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ……மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்…..

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சைதை அஜீஸ், இதை அன்றே வாசித்தேன். இப்போதுதான் மறுமொழி இடுகிறேன்.

      நீங்கள் எழுதியுள்ளது, ஏதோ, ‘உறவு’ என்பதினால் சொந்தங்கள் எல்லோரும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி அழுதார்கள் என்று தொனிக்கிறது. இவர்கள் ‘உறவாக’ இருக்கலாம், ஆனால் கருணாநிதியைச் சூழ்ந்து நின்றது அவர் கொடுத்த ‘வரவு’க்காகத்தான்.
      கலாநிதி மாறன் – தினகரன் அலுவலகம் எரித்தபோது, ‘நான் இருக்கிறேன், உங்களுக்கு நியாயம் பெற்றுத்தருவேன், யார் எதிர்த்தாலும் சரி’
      கருணாநிதி – ‘மு.க. அழகிரியை கட்சியை விட்டு விலக்குகிறேன். என் மகனை ஸ்டாலினை, இன்னும் சில மாதங்களில் இறக்கப்போகிறார்’ என்று சொன்னார். அவரும் செல்வியிடம், ‘குடும்பச் சண்டையில், நீ எங்களுக்கு ஆதரவாக இருக்காமல், மாறன் சகோதரர்களுக்காக வந்து பேசுவதென்றால் நீ வராதே’ என்று சொன்னார் (பத்திரிகைச் செய்தி)
      இதுபோல் அவ்வப்போது ஒவ்வொருவரும் சொன்னதைப் படித்திருக்கிறேன்.

      ஜெ.வும் எம்ஜியாரும் விசுவாசிகளைச் சம்பாதித்தார்கள். அதிலும் சொத்தைகள் இருக்கலாம் எம்ஜியாருக்கும் உறவுகள் கிடையாது. அவர் இறப்பில் தமிழக மக்களும் விசுவாசிகளும் மட்டுமே முன்நின்றனர்.

      ஜெ. அவர்களுக்கு ‘உறவு’, தமிழக மக்கள் மற்றும் அவரது தளபதிகளாக இருந்தவர்கள். ஒருவர் இறந்தபின்பு அவர் செய்த சாதனைகள்தான் அவரை நினைவுகூறவைக்கும்.

  3. பிங்குபாக்: காலம் செய்யும் கோலம் – பிரமிப்பூட்டுகிறது….பயமுறுத்துகிறது….! – TamilBlogs

  4. SAKTHIVEL's avatar SAKTHIVEL சொல்கிறார்:

    Excellant words from azeez.
    நாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்….அவர்களே நம்முடைய சொத்துகள்.

    மரணம்இயற்கையானது..
    மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது…….ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்……

    உறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்….நாளை நம்க்கும் மரணம் வரும்….மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்… இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்……

    சுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ……மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்…..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.