இவனைப் போன்ற மிருகங்களை சுட்டுக்கொல்வதில் எந்த தவறும் இல்லை…




பொறுக்கிகள், ரவுடிகள், செயின் பறிப்பவர்கள்,
கூலிப்படையினர், அடியாட்கள்,
4 வயது சிறு பெண் குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத
காமாந்தகாரர்கள் – இத்தகையோரின் எண்ணிக்கை தமிழகத்தில்
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது…

முக்கியமான காரணங்கள் –

– குற்ற வழக்குகளில் கைது ஆகின்றவர்களுக்கு வெகு சுலபமாக
ஜாமீன் கிடைக்கிறது. ஒரே மாதத்தில் வெளியே வந்து
மீண்டும் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

– ஒவ்வொரு ரவுடியின் மீதும் 10-15 வழக்குகள் நிலுவையில்
இருந்தாலும் அவர்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது…

– கிரிமினல் வழக்குகள் கூட வருடக்கணக்கில் நீடித்துக் கொண்டு
போகின்றன. 4 கொலை 5 கொலை செய்தவன் எல்லாம் வெளியே
ஜாமீனில் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கு எதிராக
செயல்படவோ, சாட்சி சொல்லவோ யாருக்கும் தைரியமில்லை.

– இந்த கிரிமினல்களுக்கு, உதவி செய்வதற்கென்றே சில கிரிமினல்
வக்கீல்கள்… அவர்களும் தொழில்முறை கிரிமினல்களே…இவர்களின்
கூட்டாளிகளே…

– பல சமயங்களில், இவர்களின் பின்னால், சில குட்டி அரசியல்
கட்சிகளின் தலைவர்கள்…

– “போலி” மனித உரிமை போராளிகள்…

– இவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் சில மீடியாக்கள்.

நேற்றிரவு நடந்தது –

சென்னையில் ராயப்பேட்டை தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
அருகே நேற்றிரவு சிலர் குடித்து விட்டு பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாக காவல்துறையின் கண்ட் ரோல் ரூமுக்கு ஒரு பெண் புகார் தந்திருக்கிறார்.

கண்ட்ரோல் ரூமிலிருந்து E-2 ராயப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தந்திருக்கிறது. இதையடுத்து E-2 ராயப்பேட்டை காவல் நிலைய முதல்நில காவலர் ராஜவேலு அங்கு விசாரிக்க சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த 5-க்கும் மேற்பட்ட, மதுவருந்திய நிலையிலிருந்த
ரவுடிகள் தகராறு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவர்களை
அங்கிருந்து செல்லுமாறு கூறி இருக்கிறார்.

இதை எதிர்த்து, அவரை சூழ்ந்து கொண்ட சுமார் 10 ரவுடிகள் காவலர்
ராஜவேலுவை சரமாரியாக கத்தியால் தாக்கினர். அவரது வாக்கி டாக்கியையும் பிடுங்கிக் கொண்டிருக்கின்றனர்…..தலையில் வெட்டுப்பட்ட ராஜவேலு அங்கிருந்து தப்பியோடி, காவல் நிலையத்திற்கும், கண்ட்ரோல் ரூமுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். ராஜவேலு
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பல்வேறு போலீஸ் குழுக்கள்
தேடிப்பிடித்திருக்கின்றனர். இந்த ரவுடிகள் கூட்டத்திற்கு தலைமை
வகித்திருப்பவன் ஆனந்தன் என்கிற ரவுடி.

இந்த ரவுடி ஆனந்தனைப்பற்றிய பின்னணி –

– ஆனந்தன் பள்ளியில் படிக்கும் போதே நிறைய ரவுடித்தனத்தில்
ஈடுபட்டிருக்கிறான்….10ம் வகுப்பு படிக்கும் போதே, பள்ளியில் சில
மாணவர்களை தாக்கி அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைவரை சென்றிருக்கிறது….

-அதன்பின் பள்ளியை விட்டுவிட்டு முழுமையாக தொழிலில் இறங்கியுள்ளான். தன் ஏரியாவில் இருந்த சில நணபர்களை சேர்த்துக் கொண்டு, சிட்டி சென்டரை சுற்றி சில சில குற்றங்கள் செய்து வந்துள்ளான். இதில் வழிப்பறி, போன் திருட்டு, கஞ்சா விற்பது, போதை பொருள் விற்பது போன்ற பணிகளையும் செய்து வந்துள்ளான். அவனுடன் எப்போதும் 10 பேராவது இருப்பார்கள் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

– ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளில் இவன்
சின்ன ரவுடியாக இருந்து பெரிய ரவுடியாக மாறியுள்ளான். அந்த பகுதிகளில் இருந்த சின்ன சின்ன ரவுடிகள் எல்லோரும் இவன் பேச்சை கேட்டு நடக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் பயனாக கடத்தல், போதை பொருள் விற்பனை, வழிப்பறி என்று மொத்தமாக இவன் மீது 12 வழக்குகள் சென்னையின் பல்வேறு போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

– இவன் ரவுடித்தனங்களில் முக்கியமானது பெண்களுக்கு தொல்லை கொடுப்பது. இவன் ஏரியாவில் இருக்கும் பெண்களை இவன் பெரிய அளவில் துன்புறுத்தி இருக்கிறான். சிட்டி சென்டர் மாலில் இருந்து தனியாக இரவு நேரத்தில் வரும் பெண்களுக்கு தொல்லை கொடுத்துள்ளான். அதேபோல் இரவில் தனியாக இருக்கும் பெண்களிடம் பிரச்சனை செய்து இருக்கிறான்.

கடைசியாக பெண்களிடம் பிரச்சனை செய்த போதுதான் போலீஸ் வந்து
காவலர் ராஜவேலுவை கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடி இருக்கிறான்.

– இறுதியாக தான் ஒளித்து வைத்திருந்த
வாக்கி டாக்கியை எடுக்கப்போனபோது, அதனுடனேயே மறைத்து
வைத்திருந்த கத்தியையும் எடுத்து, உடன்வந்த காவலர்களை தாக்க முற்பட்டிருக்கிறான்.

விளைவு, என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.

உடனே சில மனித உரிமை அமைப்புகளும், தொலைக்காட்சிகளும்
தங்கள் வாத, விவாதங்களை துவக்கி விடும்.

செத்தவன் என்ன பெரிய சமூக நல போராளியா…?
அப்பாவியா…? அஹிம்சாவாதியா…?

ஏதோ ஒரு அப்பாவியை அநியாயமாக காவல்துறை சுட்டுக்கொன்று
விட்டது போல் விவாதங்கள் துவங்கி விடும்….

மக்கள் நிம்மதியாக நடமாட வேண்டுமானால், இவனைப்போன்ற
ரவுடிகள் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்….
இவனைப் பிடித்து வழக்கு போட்டாலும், அடுத்த மாதமே ஜாமீனில்
வந்து தன் குற்றச்செயல்களை இன்னும் தீவிரமாக தொடர்வான்.
நான் போலீஸ்காரரையே போட்டுத் தள்ளியவன் தெரியுமா என்று
வீரமும் பேசுவான்….

இந்த ஒரு மிருகம் மட்டுமல்ல, இந்த மாதிரி நிச்சயமாக குற்றவாளி தான் என்று தெரியும் எந்த மிருகத்தையும், காவல் துறை அழித்தால் -அதை மக்கள் முழுமனதோடு வரவேற்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
மக்கள் மனதிற்கு நன்கு தெரியும்… எத்தகைய என் கவுண்டர்கள் நியாயமானவை..என்று. தவறான என்கவுண்டர்கள் நடக்கும்போது, மக்களே அதை எதிர்ப்பார்கள்.

நாட்டில் குற்றச்செயல்கள் குறைய, நீதிமன்றங்களை மட்டும் நம்பி
பயனில்லை. எதையாவது செய்து குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்…
அவர்களை காப்பாற்றவென்றே சில வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள்,
போலி மனித உரிமை ஆர்வலர்கள்- எப்போதும் துடிப்புடன் செயல்பட்டு
வருகிறபோது, இவனைப்போன்ற குற்றவாளிகளை
சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிப்பதற்குள் இரண்டு மாமாங்கங்கள்
ஆகி விடும். அதற்குள் இவன் இரண்டு டஜன் கொலைகள், கற்பழிப்புகளை செய்திருப்பான்.

கடமையுணர்வுள்ள, துணிச்சலான காவல் துறை அதிகாரிகள்
அடையாளம் காணப்பட்டு, இத்தகைய ரவுடிகளை ஒழிக்கும் பணி
அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்….

இந்த மிருகத்தை அழித்த –
காவல்துறையை நான் மனதார பாராட்டுகிறேன்…
குறைகள் சொல்வோரைப்பற்றி கவலைப்படாமல்
மக்களை காக்கும் பணியில்
காவல்துறை இதே போல் துணிந்து செயல்பட வேண்டும்.

நிஜமான, தேவையான – இதுபோன்ற என்கவுண்டர்களை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.

குற்றவாளிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது…!
மற்ற கிரிமினல்கள் கொஞ்ச காலத்திற்காவது அடங்கி இருப்பார்கள்…!!

END JUSTIFIES THE MEANS ….!!!

.
———————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இவனைப் போன்ற மிருகங்களை சுட்டுக்கொல்வதில் எந்த தவறும் இல்லை…

  1. பிங்குபாக்: இவனைப் போன்ற மிருகங்களை சுட்டுக்கொல்வதில் எந்த தவறும் இல்லை… – TamilBlogs

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    // END JUSTIFIES THE MEANS ….!!! //

    மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள். சில விஷயங்களை சட்டப்படி, முறைப்படி
    என்று சொல்வதை விட, நியாயப்படி, தர்மப்படி என்றூ சொல்வது தான் சரியாக இருக்கும். இவனை போல் இன்னும் எண்ணற்ற குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து மேலும் மேலும் ஊரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
    இவனைப் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களை மக்கள் நன்றாக
    புரிந்தே வைத்திருக்கிறார்கள். இந்த ரவுடி செத்ததற்கு சாதாரண பொது மக்கள்
    மகிழ்ச்சியே தெரிவிக்கிறார்கள். போலி மனித உரிமையாளர்கள், இந்த மாதிரி திருட்டுப்பயல்கள், கொலைகாரர்களிடம் பணம் வாங்கிப் பிழைக்கும் கிரிமினல் லாயர்கள், தொலைக்காட்சி டிபேட்டாளர்கள் ஆகியோர் தான் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    இந்த மாதிரி பொறுக்கிகளையும், ரவுடிகள், கொலைகாரர்களையும் ஒழித்துக்கட்ட
    காவல்துறையில் தனியாக ஒரு டீம்’ஐ உருவாக்கி அதற்கு விசேஷ அதிகாரங்கள்
    கொடுக்கப்பட வேண்டும் -007 மாதிரி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.