3-வது பிள்ளைக்கு யார் பெயரை வைப்பீர்கள்….??? !!!


( பகுதி-3) “மாயா உலகம்” – முடிவில்லாத கேள்விகள் …. இங்கே

…..

ஒரு தந்தை. அவனுக்கு 3 பிள்ளைகள். அவர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பது தன் கடமை என்று நினைத்தான்.

முதல் பிள்ளையை டாக்டருக்கு படிக்க வைத்தான்..
2-வது பிள்ளையை ஆடிட்டருக்கு படிக்க வைத்தான்…
3-வது பிள்ளையை வக்கீலுக்கு படிக்க வைத்தான்…

அவர்களை கல்லூரிக்கு அனுப்பும்போது அவர்களிடம் சொன்னான். உங்களை நன்றாக படிக்க வைப்பது என் கடமை என்று நினைத்து படிக்க வைக்கிறேன். உங்களிடமிருந்து பதிலுக்கு நான் எதையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை…..

ஆனாலும், ஒரு தகப்பனாக நான் செய்ததை, நீங்கள் நன்றியுடன் நினைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதை வெளிப்படுத்தும் வகையில், நான் இறந்து போகும்போது, என் சவப்பெட்டியில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாயை உடன் வைத்து புதைக்க வேண்டும் என்றான்.
( கேள்வியெல்லாம் கேட்காதீர்கள்…:-) )

பின்னொரு நாளில் தந்தை இறந்து போனார். அவரை அடக்கம் செய்யும் வேளையில், பிள்ளைகளுக்கு தங்கள் தந்தை தங்களிடம் சொன்னது நினைவிற்கு வந்தது….

பிள்ளைகள் 3 பேருமே புத்திசாலிகள்….
என்ன படித்திருந்தாலும் –
3 பேருமே அரசியல்வாதிகளாகி விட்டனர்.

முதல் பிள்ளையான டாக்டர், 200×500 (பழைய) ரூபாய் நோட்டுக்களை
சவப்பெட்டியில், தந்தையின் உடலுக்கு கீழே வைத்து விட்டுச் சென்றான்.

2-வது பிள்ளையான ஆடிட்டர், 100x 1000 (பழைய) ரூபாய் நோட்டுகளை
தந்தையின் உடலுக்கு கீழே வைத்து விட்டுச் சென்றான்.

3-வது பிள்ளையான வக்கீல் – அழுதுக்கொண்டே வந்து, தன் செக் புக்கை எடுத்து 3 லட்ச ரூபாய்க்கு ஒரு செக் எழுதி தந்தையின் உடலுக்கு அடியே வைத்து விட்டு, அங்கே இருந்த இரண்டு லட்ச ரூபாய் 500 மற்றும் 1000 (பழைய)ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, சவப்பெட்டிக்கு ஆணி அடித்தான்….. 🙂 🙂 🙂

ஒரு நல்ல கதையை எழுதியாகி விட்டது…
இப்போது எல்லாருக்கும் பெயர் வைக்க வேண்டும்…

இப்போது அந்த 3 பிள்ளைகளுக்கும்,
3 அரசியல்வாதிகளின்
பெயரை வைக்க வேண்டுமென்று
தீர்மானித்தாகி விட்டது.

அவர்கள் யாரென்றும் தீர்மானமாகி விட்டது…..
அவர்களின் புகைப்படங்கள் கீழே –

ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் பாக்கி…..
எந்த பிள்ளைக்கு யார் பெயரை வைப்பது….???

அந்த அதிபுத்திசாலியான – 3-வது பிள்ளைக்கு…
முதலில் பொருத்தமான பெயரை வைத்து விட்டால்
மற்றவர்களுக்கு பெயர் வைப்பது சுலபம்…..!

3-வது பிள்ளைக்கு – பெயர்….

நண்பர்களே – மிகவும் பொருந்தக்கூடிய அந்த
பெயரை கீழேயிருந்து தேர்ந்தெடுத்து நீங்களே சொல்லலாம்… 🙂 🙂 🙂


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to 3-வது பிள்ளைக்கு யார் பெயரை வைப்பீர்கள்….??? !!!

  1. Selvaraju's avatar Selvaraju சொல்கிறார்:

    Anna Super

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    மிகவும் இலகுவான கேள்வி தான்.

    யாருக்கும் பாகுபாடு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், மூன்று பேருமே 3-வது பிள்ளைக்கு தகுதியானவர்களே.

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    மூன்று மிகப்பொருத்தமான பெயரை கொடுத்து விட்டு, அதில் எதாவது ஒன்றை
    தேர்ந்தெடுக்கச்சொன்னால் எப்படி சார் ? மூவருமே மிகப் பொருத்தமானவர்கள்.
    கில்லாடிக்கு கில்லாடி; வல்லவருக்கு வல்லவர்கள்.
    கொஞ்சம் ஜெண்டில்மேன் மாதிரி லுக் இருந்தால் ஜெட்லிஜி பெயரை வைக்கலாம்.
    ஆனால் 3-வது பிள்ளை எல்லாரையும் விட கில்லாடி என்பதால் மோடிஜி பெயர் பொருத்தமாக இருக்கும்.

  4. பிங்குபாக்: 3-வது பிள்ளைக்கு யார் பெயரை வைப்பீர்கள்….??? !!! – TamilBlogs

  5. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    கே.எம்.சார்,
    ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே. 3-வது பிள்ளை, 2 லட்சம் ரூபாய்க்கு பழைய 500,1000 நோட்டுகளை வைத்திருக்கிறார். அவர் அதை மாற்றக்கூடிய சாமர்த்தியம் உள்ளவராக இருப்பார்; அதனால் தானே எடுத்து வைத்திருக்கிறார். பழைய 500,1000 நோட்டுகளை மாற்றுவதில் எக்ஸ்பர்ட் வேறு ஒருவர் அகில இந்திய தலைவர் இருக்கிறாரே; அவர் பெயரை இங்கே சேர்க்க
    மறந்து விட்டீர்களா ?

  6. Candyman's avatar Candyman சொல்கிறார்:

    மூன்றாவது பிள்ளைக்கு பொருத்தமான பெயர் – இட்லி ச்சே அருண் ஜெட்லீ

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.