…
…

…
இதை எழுதியது நானல்ல….
தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் வெளியாகியுள்ள,
ஆனால், நேற்று நான் எழுதிய ஒரு இடுகையுடன் தொடர்புள்ள –
ஒரு கட்டுரை இது….
————————————————
ஸ்விஸ் வங்கிகளில் குவியும் கறுப்புப் பணம்: வரிசையில் நின்றது
வீண்தானா?
Published : 02 Jul 2018 09:14 IST
Updated : 02 Jul 2018 09:14 IST
செ. இளவேனில்
ஸ்விஸ் வங்கிக் கணக்கில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் தொகை 2017-ல் 50% அதிகரித்திருக்கிறது எனும் செய்தி, இந்தியப் பொருளாதார வட்டாரங்களில் மட்டுமல்ல, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் நேரடியான பாதிப்பை உணரும் சாமானியர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.3,200 கோடி, பிற வங்கிகளின் மூலமாக ரூ.1,050 கோடி, பாதுகாப்பு உத்தரவாதங்கள் மூலமாக ரூ.2,640 கோடி அதிகரிக்கிறது என்கிறது சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை.
இந்த மூன்று பிரிவுகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை கடந்த ஆண்டுகளில் குறைந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்திருப்பது எப்படி என்ற கேள்வி இந்திய மக்களிடையே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
உடனடியாக கவனத்தை வேறு பக்கமாகத் திருப்ப முற்படுகிறது அரசு. “சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது அனைத்தையுமே கறுப்புப் பணமாகக் கருத முடியுமா?” என்ற கேள்வியை எழுப்புகிறர் நிதியமைச்சர் பியூஷ் கோயல்.
“இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய விவரங்கள் 2019-ல் ( ??? 🙂 🙂 🙂 ) கிடைக்கும்.
கறுப்புப் பணம் என்று கண்டறியப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியிருக்கிறார். “அது சரி, கறுப்புப் பண முதலைகள் மீது ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்று கேட்கிற மக்களின் கேள்விக்குப் பதில் அளிக்க யாரும் இல்லை.
கறுப்புப் பணமா, இல்லையா?
2006 நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்த தொகை ரூ.23,000 கோடி. கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய அச்சத்தின் காரணமாகவே அத்தொகை படிப்படியாகக் குறைந்துவந்து, 2016-ல் ரூ.4,500 கோடியாக இருந்தது.
எனவே, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிற தொகை அனைத்தும் கறுப்புப் பணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றில் பெருமளவு கறுப்புப் பணமாகத்தான் இருக்கிறது என்பதே உண்மைநிலை.
வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டிருக்கும் இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று இரவு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பயன் என்ன என்ற கேள்வி பிரதானமாக முன்வைக்கப்படுகிறது. கறுப்புப் பணத்தை வேரோடு பிடுங்கி எறியத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நடவடிக்கையின் முடிவில், குறைந்தபட்சம் ரூ.4 லட்சம்
கோடியாவது கணக்கில் திரும்ப வராது. லாபமாகக் கிடைக்கும் அந்தத் தொகையை இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது.
கறுப்புப் பணம் மட்டுமல்ல, கள்ள நோட்டுகளின் புழக்கமும் கட்டுப்படுத்தப்படும், பயங்கரவாதிகளிடம் உலவிக்கொண்டிருக்கும் பணமும் செல்லாததாக்கப்படும் என்று துணைக் காரணங்களும் கூறப்பட்டன. இதற்கிடையே வங்கி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பரிமாற்றங்களுக்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பலன் என்ன?
எந்தெந்தக் காரணங்களுக்காகப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ, அந்தக் காரணங்கள் எதுவுமே நடந்தேறவில்லை என்பதையே கடைசியாக வெளிவந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் 30, 2017-ல் அளித்த ஆண்டறிக்கையின்படி, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 தாள்களின் மொத்த மதிப்பு ரூ.15,44,000 கோடி. அந்தத் தாள்களில் ரூ.15,28,000 கோடி மதிப்புடைய தாள்கள் திரும்ப வந்துவிட்டன. அப்படியென்றால், திரும்பி வராத பணம் வெறும் ஒரே ஒரு சத வீதம்தான்.
இந்த ஒரே ஒரு சதவீத தாள்களை முடக்கி வைப்பதற்காகத்தான் மக்கள்
மத்தியான வெயிலில் வரிசையில் நின்றார்கள். முதியவர்களும் நோயாளிகளும் மயங்கி விழுந்துச் செத்தார்கள். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவசரச் செலவுகளுக்கும் திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் திண்டாடினார்கள்.
கள்ள நோட்டுகளாவது கண்டறியப்பட்டிருக்கின்றனவா என்றால்
அதுவும் திருப்திகரமாக இல்லை. திரும்பப் பெறப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகளின் மதிப்பு வெறும் ரூ.41 கோடி மட்டும்தான். அதாவது பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 0.0027%.
ஆனாலும், மக்களைத் துயருக்கு ஆளாக்கிய இந்தத் தவறான திட்டம்
தோல்வியடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவோ
அறிவிக்கவோ தயாராக இல்லை.
மாறாக, இத்திட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக மக்களை நம்பவைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு புழக்கத்தில் இருக்கும் தாள்களின் எண்ணிக்கை 17% குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த நடவடிக்கைக்குப் பிறகு ஏ.டி.எம். இயந்திரங்கள் வழக்கம்போல செயல்படவில்லை. ஒரு நாளில் மிகச் சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கின. ஒரு செயற்கையான பற்றாக்குறை உருவாக்கப்பட்டது என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருமே அறிவார்கள்.
நவம்பர் 2016 முதல் மே 2017 வரை கணக்கில் வராத பணமாகக் கண்டறியப்பட்ட தொகை ரூ.17, 526 கோடி. பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.1,003 கோடி.
இந்தத் தொகைக்கான வரியை வாங்குவதற்கு நீதிமன்றம், வழக்குகள், தீர்ப்பு, மேல்முறையீடு என்று இன்னும் வெகுகாலம் காத்திருக்க வேண்டும். எனவே, இந்தப் பறிமுதல் நடவடிக்கைகளாலும்கூட உடனடிப் பயன் ஏதுமில்லை. ‘போலி நிறுவனங்களைக் கண்டறிந்துவிட்டோம், பினாமி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்துவிட்டோம்’ என்று மத்திய அரசு தனக்குத் தானே பெருமிதப்பட்டுக்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னும் அதன் பயன் என்னவென்று கணக்கிட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சரி, இந்தியாவையே டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிவிட்டோம் என்று
பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்றால், அதுவுமில்லை.
பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதே தவிர, பரிவர்த்தனை செய்யப்படும் தொகையில் பெரிய மாற்றங்கள் இல்லை.
ஆனால், இந்த நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இந்தியா எப்போது மீண்டெழும் என்று தெரியவில்லை. அதற்குள் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு, அதன் பாதிப்புகளும் உணரப்பட்டிருக்கின்றன.
தொடர்விளைவுகளாய், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும்சரிவைச் சந்தித்தது. சிறு குறு தொழில்நிறுவனங்கள் முடங்கிவிட்டன. சுய வேலைவாய்ப்புகளுக்கு வழி அடைக்கப்பட்டுவிட்டது.
தொழில்முனைவோர் தொழிலாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இதோ, இப்போது ரூபாய் மதிப்பும் சரிய ஆரம்பித்திருக்கிறது. சுவிஸ் வங்கி அறிக்கை பல மாயைகளை உடைத்துப்போட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!
நன்றி : http://tamil.thehindu.com/opinion/columns/article24308961.ece?
utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication
———————————————————————————————————-



பிங்குபாக்: வரிசையில் நின்றது வீண்தானா…? – TamilBlogs
அந்த நடவடிக்கையில் தோல்வி, இந்த நடவடிக்கையில் தோல்வி, எல்லாத்திலும் தோல்வி. மொத்தத்தில் மோடி ஆட்சியே தோல்வி.
ஒரே ஒரு விசயத்தை தவிர, அது பொய்.
எல்லாத்திலும் பொய்.
எதை எடுத்தாலும் பொய்.
இதில் தான் அவர்கள் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
பொய்யிலும் புரட்டிலும் நாட்களை கடத்தும் ஆட்சி எவ்வளவு நாளைக்கு…?
பொய்யை அடிப்படையாக கொண்டு திரித்து மாய்மாலம் செய்து அழுது புலம்பி இப்படி எல்லாத்தையும் செய்து அந்தந்த வட்டார மாநில பிரச்சனைகளை கிளப்பி அடையும் மாநில தேர்தல் வெற்றி, தான் செய்யும் அத்துனை தவறுகளையும் மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று தன்னை தானே சொறிந்து விட்டுக் கொண்டிருக்கிறது.
மாநில தேர்தல் மாதிரி அல்லாமல் 2019 பொது தேர்தலில் ஒரு பெருத்த அடி கொடுக்க மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது இந்திரா காந்திக்கு கொடுத்ததை விடவும் பெரிதாக இருக்கும் என்று நம்பலாம்.
YES.
டி மானிடைசேஷன் நல்ல திட்டம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், மத்திய பாஜக அரசு சரியான நடவடிக்கைகளை (குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது) எடுக்கவில்லை. அதுவும்தவிர, வெளிவந்த செய்திகளின் பிரகாரம் ‘அ….ஷா’வுக்காக பணம் மாற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது (டிமானிடைசேஷனுக்கு சற்று முன்போ பின்போ) இப்படி சில ட்வியேஷன் இருக்கும்போது எப்படி இந்த நடவடிக்கை பலன் கொடுக்கும்? பலன் தெரியாததற்குக் காரணம் பாஜக அரசுதான். (அதாவது பிரதமர்தான் பொறுப்பு).
பாஜக அரசு அமைந்தபிறகு எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை, 2 ஜி, கேடி பிரதர்சின் டெலெபோன் ஊழல் போன்று எல்லாமே. இதற்கும் பாஜக அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
ஸ்விஸ் வங்கி, கறுப்புப் பணம் என்றெல்லாம் பஜனை பாடினால் அது மக்களை நிச்சயம் ஈர்க்காது. பாஜக ஆட்சியில்தான் லலித் மோடி, விஜய் மால்யா போன்று ஆயிரக்கணக்கான கோடிகளை ஏமாற்றியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியது. அதிலும் வெளியுறவுத்துறை அமைச்சரே, லலித் மோடி தப்பியதற்கு முக்கியக் காரணம் (அதிலும் ஜேட்லியின் கைங்கர்யம் இருந்திருக்கும்).
மொத்தத்தில், ‘நாங்கள் யோக்கியவான்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் தகுதி யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. மோடி எந்த ஊழலும் செய்யவில்லை என்று சொல்பவர்கள், அப்படி அவருக்கு நல்ல எண்ணம் இருந்தால், ஏன் கட்டுச்சோற்றில் அருண் ஜேட்லி, சுஷ்மா போன்ற பெருச்சாளிகளை வைத்துள்ளார் என்பதையும் விளக்கினால் தேவலை.
The demonetisation exercise is a total failure and it did not serve its purpose. But its consequences are felt by the people. we saw job lossess, small and medium industries are in dolldrums, people put to hardship. innocent people about 100+died, while standing in the line, we saw bundles of new currencies were easily available for certain previleged class,while other large sections of people suffered to pull on their day-to-day life, we saw the 3 main reasons on which this was brought were not successful.Now the recent information on swiss bank account is yet another proof. The demonetisation is a very big scam. It must be probed thoroughly by the next govt. People should know the entire truth of demonetisation decision.
R.Srinivasan,
நீங்கள் சொல்வதை 100 சதவீதம் ஏற்கிறேன்.
என் கருத்தும் இதுவே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thank You for accepting my views. It is unfortunate that the educated urban middle class still support BJP/Modi, in spite of the fact that they themself got affected in demonetisation decision and GST implementation. That is a point to be taken for research by the political pundits.