…
…

…
விடாக்கண்டரான ரங்கராஜ் பாண்டே…
வழக்கம் போல் பேட்டி காண…….. முயல்கிறார் …!!!
ஆனால் கொடக்கண்டரான
சத்குருஜியிடம் அது பலிக்குமா…?
-ஸ்டெரிலைட்டா…?
ஸ்டெரிலைட்னா, வேதாந்தான்னு 2 நாள் முன்னாடி தான்
எனக்கு தெரியும்…!!!
– துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 30 நாட்கள் கழித்து
கமெண்ட் கொடுத்தது எப்படி….?
– 30 நாட்களில் நான் 9 நாடுகளில் சுற்றிக்கொண்டிருந்தேன்.
டெல்லியில் வந்து இறங்கியவுடன் என்னைக் கேட்டால்….?
– உங்கள் முதல் கமெண்ட் 13 உயிர்கள் பலியானது பற்றி
இருந்திருந்தால் பிரச்சினை இல்லை… ஆனால், ஸ்டெரிலைட்
ஆலையை மூடுவது சரியா என்று தானே இருந்தது….?
– நான் ஸ்டெரிலைட் ஆலை பற்றி சொல்லும்போதே
அதில் உயிரிழப்பு வந்து விட்டதே…!!!
– நீங்கள், பாபா ராம்தேவ் என்று…..
– நான் கமெண்ட் சொன்ன 2 நாள் கழித்து, லண்டனில்
ராம்தேவ், அனில் அகர்வாலை பார்த்து விட்டு கமெண்ட்
கொடுத்தார்… இரண்டுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்…?
– அனில் அகர்வால்(ஸ்டெரிலைட் அதிபர்) உங்களைப்
பார்த்தாரா…?
( கேள்வி அகர்வாலை உங்களுக்கு தெரியுமா…?
எப்போதாவது சந்தித்திருக்கிறாரா என்று இருந்திருக்கலாம்…
அப்படி இல்லாதது, கொடாக்கண்டருக்கு வசதியாக
போய் விட்டது…! )
– இல்லையே…
– controversial – ஆன விஷயங்களையே பேசுகிறீர்களே…?
வேண்டுமென்றேயா — பசுவதை தடுப்பு, ஜல்லிக்கட்டு,
ஸ்டெரிலைட்….
– இல்லையே…பசுவதைத்தடுப்பு ஏற்கெனவே பல மாநிலங்களில்
இருந்தது தானே…? ஒரே லாரியில் 100 மாடுகளை ஏத்திக்கிட்டு
போறாங்க…. etc. etc…
– மரங்களை அழித்து, விவசாய நிலங்களை பாதித்து –
அப்படியாவது சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை
அவசியமா…?
– அப்போ மாட்டு வண்டியிலேயே போய்க்கறோம்னு சொல்றீங்களா…?
வளர்ச்சியே வேண்டாமா…?
– டெல்லியில் 16,000 மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு…
இங்கே பசுமை வழிச்சாலை என்று சொல்லிக்கொண்டு,
பல்லாயிரக்கணக்கான மரங்களை அழிக்க ஆதரவா…?
– அங்கே பாப்புலேஷனை பார்க்க வேணும்…
– 18,000 அடி உயரத்தில் அத்தனை உடைகளை
சுமந்துகொண்டு, யோகா செய்ய முடியுமா…? அவசியமா…?
…..ஊஹூம் – இதற்கு மேல் என்னால்
கவர் பண்ண முடியவில்லை…!!! நீங்களே பேட்டியை
பார்த்து விடுவது தான் நல்லது.
பாண்டே முதல் தடவையாக கேள்விக்கென்ன பதில்
நிகழ்ச்சியில் நொந்து நூலாகி இருப்பார் என்று தோன்றுகிறது…
சுவாரஸ்யமான, அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி…!!!
தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்க்க
இயலாத நண்பர்களுக்காக, அந்த பேட்டி கீழே –
…
.
————————————————————————————————————-



பிங்குபாக்: ஒரு கொடாக்கண்டரை, விடாக்கண்டர் எடுத்த பேட்டி…. சத்(?) குருஜி – ரங்கராஜ் பாண்டே…!!! – TamilBlogs
விடாக்கண்டர், கொடாக்கண்டர் : இந்த இரண்டு பேரில் யார் அதிக புத்திசாலியென்று நினைக்கிறீர்கள் ?
மணி,
இருவருமே அவரவர் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.
மிகப்பெரிய ஆன்மிகவாதியாக இருந்தாலும் கூட, ஜக்கி அவர்களிடம், சளைக்காமல், தயங்காமல், தான் கேட்க வேண்டிய கேள்விகளை பாண்டே விடாமல் கேட்கிறார்….எனவே அவர் தனது பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
திருவாளர் ஜக்கி, ஒரு போலி…. எனவே, எடக்கு மடக்காகவும், கேட்கப்படுகின்ற கேள்விக்கு நேர்மையாக இல்லாமலும், தன் வசதிக்கு திசை திருப்பி பதில் சொல்கிறார்…எனவே, அவர் இயல்புக்கேற்ற பணியை
அவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
புத்திசாலியான பார்வையாளர்கள், எப்படியும், புரிந்து கொள்ள வேண்டியதை புரிந்து கொள்வார்கள்.
இந்த தளத்து நண்பர்களுக்கு நான் சொல்லவே வேண்டியதில்லை..
செய்தியை அவர்களிடம் கொண்டு சேர்த்தால் போதும்…(presentation itself is enough ..) தங்களுக்கு தேவையானதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்… 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
அய்யா, இந்த வீடியோவுக்கு youtube தளத்தில் மக்கள் போட்டிருக்கும் comments படித்தீர்களா? நேரமிருந்தால் ஒருமுறை மேலோட்டமாகவாவது படித்து பாருங்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனை பேர் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். பாமர மக்கள் இவர்களை விட தெளிவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அல்லது இவர்களுக்கும் எல்லாம் தெரிகிறது. ஆனால், மாற்று மதத்தினரின் பிரமாண்டமான மத நிறுவனங்கள் மேலுள்ள பொறாமை அல்லது வெறுப்பினால் இப்படி அநியாயத்திற்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள். இப்படி மாற்று மதத்தினரிடமுள்ள வெறுப்பில் தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொள்வது மடத்தனமில்லையா?
ஏற்கனவே பாண்டே தினகரனை எடுத்த பேட்டியில் நொந்து நூலாகியிருக்கிறார்.