2019-ல் மோடிஜியை தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்….!!!


யார் என்ன சொன்னாலும் சரி….
நமது பண்பாடு காக்கப்பட வேண்டுமென்றால்,
2019 தேர்தலில் மீண்டும் மோடிஜியை
தேர்ந்தெடுப்பது தான் சரியாக இருக்கும்….

இந்தப்பேச்சு இப்போது ஏன் வருகிறது என்கிறீர்களா…?

முதலில், தினமணி’யிலிருந்து ஒரு செய்திச் சுருக்கத்தை
பாருங்கள் –
————————————

பிரதமர் கடந்த 48 மாதங்களில் 41 முறை அரசு முறைப்பயணமாக
உலகில் உள்ள 52 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதாவது அவர் தனது பிரதமர் பதவிக் காலத்தில் 165 நாட்களை
வெளிநாடுகளில் சுற்றுப் பயணமாகவே கழித்துள்ளார். இதற்காக
ஒட்டுமொத்தமாக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளது.

————————————

அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தந்திருக்கும்
புள்ளி விவரங்களைப் பாருங்கள்…
—————

Jpeg

—————-

இப்போது விஷயத்திற்கு வருவோம்.
உலகில் மொத்தம் 196 நாடுகள் இருக்கின்றன.
கடந்த 4+ ஆண்டுகளில் இதுவரை மோடிஜியால்,
52 நாடுகளை மட்டும் தான் பார்க்க முடிந்திருக்கிறது.

மேலேயுள்ள map’ஐ பார்த்தால், பல தென் அமெரிக்க நாடுகளிலும்,
பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இன்னமும் அவர் கால்கள்
படவே இல்லை என்று தெரிகிறது……

சில நாடுகள் மிகவும் சிறியவை….
சில நாடுகளில் பிரதமரின் விமானம் இறங்கக்கூடிய
அளவிற்கு வசதி இல்லை என்பது
சரியான காரணமாக இருக்க முடியாது….
( விமான நிலையம் இல்லையென்றால் – விட்டு விட
முடியுமா…? நாமே கட்டிக் கொடுக்க வேண்டியது தான்… )

அடுத்த 10 மாதங்களுக்குள் அதிக பட்சம் அவரால் இன்னும்
எத்தனை நாடுகளை பார்த்து விட முடியும்…?

உலகின் அத்தனை நாடுகளிலும் தன் கால்களை
பதிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்…!

மூன்றில் ஒரு பங்கு நாடுகளைக் கூட இன்னமும்
பார்த்திராத நிலையில், திடீரென்று அவரது
பதவிக்காலத்தை முடிவிற்கு கொண்டு
வருவது சரியல்ல…..

மோடிஜி பதவியில் இருந்தபோது /இருக்கும்போது, நமக்காக
என்னவெல்லாம் செய்திருக்கிறார் – கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்….

நமக்காக இவ்வளவு செய்திருக்கும் ஒரு மா-மனிதருக்கு
நாம் இது கூட செய்ய மாட்டோமா…?

எனவே, 2019-ல் மீண்டும் அவரை பிரதமராக
தேர்ந்தெடுத்து அவரது விருப்பத்தையும் முழுமையாக
நிறைவேற்றி, நமது பாரத பண்பாட்டையும் காத்து,
மகிழ்வோமாக…!!!

.
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to 2019-ல் மோடிஜியை தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்….!!!

  1. பிங்குபாக்: 2019-ல் மோடிஜியை தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்….!!! – TamilBlogs

  2. sursubra's avatar sursubra சொல்கிறார்:

    Now all BJP bhakths do not know what to respond to this message. May be, they are feeling happy!

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    //மோடிஜி பதவியில் இருந்தபோது /இருக்கும்போது, நமக்காக
    என்னவெல்லாம் செய்திருக்கிறார் – கொஞ்சம் யோசித்துப்
    பாருங்கள்….

    நமக்காக இவ்வளவு செய்திருக்கும் ஒரு மா-மனிதருக்கு
    நாம் இது கூட செய்ய மாட்டோமா…?//

    🙂 🙂 🙂 Nice K.M. Sir.

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    You are putting them in trouble –
    to welcome this article or to oppose 🙂

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    /// ( விமான நிலையம் இல்லையென்றால் – விட்டு விட
    முடியுமா…? நாமே கட்டிக் கொடுக்க வேண்டியது தான்… ) ///

    உங்களுக்கு இந்த அளவுக்கா குசும்பு வரும்….!

    இதற்கு தான் பெரும் முதலாளிகளை தப்ப விடுகிறது. என்ன பிரிஞ்சிதா…!?

    சும்மா வாரா கடன், வாரா கடன் என்று கூவிக்கிட்டு.

    ஹி…ஹி…!

    ( மொக்க தான், ச்சும்மா..)

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் பேங்க் கணக்குகளிலும் ரூபாய் 15 லட்சம் போடுவோம் என்று போன தேர்தலில் சொன்னோம் அல்லவா… இப்ப என்னன்னு பார்த்தா எல்லாம் வெள்ளையாக மாரிடிச்சி.

      ஆகையால், அடுத்த தேர்தலிலும் எங்களுக்கு ஓட்டு போடுங்கள்…ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் அதாவது கருப்பு வெள்ளையாக மாறாது இருந்தால் கொண்டு வந்து போடுவோம்.

      நம்புங்கள் எங்களை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.