…
…
சந்துகளுக்கிடையில், சத்தம் போடாமல்
ஒரு செய்தி வெளிவந்துள்ளது….
பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான
‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்கு 2015-லேயே உலக வங்கி
1.5 பில்லியன் டாலர்கள் கடன் அனுமதித்துள்ளது.
ஆனால் இது இன்னும் கைக்கு வரவில்லை…
காரணம் – ஸ்வச் பாரத் குறித்த சர்வே முடிவுகளை..
( நம்பகமான புள்ளி விவரங்களை…? )
உலக வங்கியை திருப்தி செய்யும் விதத்தில்
இந்தியாவால் அளிக்க முடியவில்லை…!
ஆனாலும் இன்னும் கைக்கு வராத,
பயன்படுத்தாத இந்தக் கடனுக்காக இந்தியா –
0.5% ‘பொறுப்புக் கட்டணம்’ (Commitment fee)
ரூ.12.75 கோடியை செலுத்தி வருகிறது.
ஆச்சரியமாக இருக்கிறது…
கடந்த 3 ஆண்டுகளில்,
நாடு முழுவதும் எத்தனை கோடி டாய்லெட்
கட்டி இருக்கிறோம் என்று பல செய்தித்தாள்களிலும்,
தொலைக்காட்சிகளிலும், சினிமா தியேட்டர்களிலும்
விளம்பரம் செய்து வரும் மத்திய அரசு,
உலக வங்கி கேட்கும் தகவல்களை தராமல்,
வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டி வருவது ஏன்…?
உள்ளூர் விளம்பரங்களில் கதை விடுவது போல்,
நம்பததகுந்த உண்மையான ஆதாரங்களின்றி –
உலக வங்கிக்கு புள்ளி விவரங்களை
கொடுக்க முடியாதே – என்பது தான் காரணமா…?
…

இந்த கணக்கு படி பார்த்தால் பீஹாரில் மட்டுமே ஒரு விநாடிக்கு
1.4 கழிப்பறைகள் கட்டியுள்ளனர்…. 🙂 🙂 (அ)சத்யமேவ ஜெயதே…..
.
———————————————————————————



எங்கே சார் யாரையும் காணோம் ?
ரீலா, ரியலான்னு அவங்களுக்கும் தெரியலை போலிருக்கு.
மணி,
அவசரம் வேண்டாம்….
கேள்விகள் தனியே வந்திருக்கின்றன…
நாளை விவரமாக எழுதுகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
விளம்பரத்திலேயே ஆட்சியை ஓட்டுகிறார் அல்லவா ..மற்றவர்களை நம்ப வைப்ப தற்கும் திறமை வேண்டும்…..சரியான எதிர் கட்சிகள் இல்லையே …