…
…
எந்த ஹீரோ’வை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்..
அம்மாவைப்பற்றி பாடாதவரே இருக்க மாட்டார்கள்…
“தாயில்லாமல் நானில்லை” என்று பாடிய எவராவது
தந்தையில்லாமல் நானில்லை என்று பாடி இருக்கிறார்களா…?
பாவம் தந்தைகள்…
“அம்மா” வென்றழைக்காத உயிரில்லையே….சரி…
கன்னுக்குட்டி கூட – அம்மா’ன்னு தான் அழைக்குமாம்…
சரி சரி… அழைக்கட்டும்…..அழைத்து விட்டுப் போகட்டும்…!
ஆனால், அட்லீஸ்ட் ஒரு எருமைக்குட்டி… ஒரு கழுதைக்குட்டியாவது…?
“அப்பா…? ” ….ஊஹூம்…
( இந்த comments சும்மா, தமாஷுக்காக சொல்லப்பட்டது.. யாரும்
serious ஆக எடுத்துக் கொண்டு விடாதீர்கள்…இத்தகைய குறை உண்மையில் எந்த தந்தைக்கும் இருக்க வாய்ப்பில்லை… ஏனென்றால், அந்த தந்தைகளும் –
தாயைக் கொண்டாடுபவர்கள் தானே…!!! )
ஆனால், real life-ல் பிள்ளைகளுக்கு அம்மாவின் மீது பாசம் என்றால் –
பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் மீது பாசம் அதிகம்.
( அப்போ தாயின் மீது அவர்களுக்கு …? – உண்டு….அது உரிமை….!!! )
இந்தியாவுக்கும் “Father’s Day” க்கும் என்ன சம்பந்தம்…?
ஏதோ, சில வியாபாரிகளின் முயற்சி…!
அப்பா’க்கள் தினத்தன்று ஒரு அற்புதமான ” வாழ்த்து ” சித்திரத்தை பார்த்தேன்….கற்பனைக்கேது எல்லை….?
நண்பர்களும் அதை அவசியம் பார்க்க வேண்டும்…
…
.
————————————————————————————————————–



பிங்குபாக்: அப்பா’வென்றழைக்காத …. – TamilBlogs
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாய் அன்பிற்கும் தந்தை அன்பிற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. உளவியல் பிரகாரம், தந்தை என்பவர் ‘கண்டிப்பு’, ‘கோபம்’ ‘திட்டுவது’ போன்றவைகளின் மூலம்தான் தன் அன்பை வெளிப்படுத்துவார் (பொதுவா).
‘தாய்’ அன்பு, உளவியல் ரீதியானது. தந்தையின் அன்பு, ‘பிசினஸ்’ ரீதியானது. இருவரின் நோக்கமும் ‘குழந்தையின் நலன் என்று இருந்தாலும், ‘பிசினஸ்’ அன்பு என்பது இரண்டாம்பட்சம்தான். தன் வாழ்வு சிறப்பாக இருப்பதற்கு தந்தைதான் காரணம் என்று குழந்தைகள் அந்த அந்த சமயத்தில் அறிந்துகொள்ளும், ஆனாலும், தாயிடம் காண்பிப்பதுபோல் அன்பை தந்தையிடம் காண்பிக்க இயலாது.
உண்மை தான்…
ஆனால், “தாயுமானவர்”களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
என்னால் அந்த வாழ்த்து சித்திரத்தை பார்க்க முடியவில்லை
சிவா,
என் பக்கத்தில் சரியாகவே இருக்கிறதே…!
நீங்கள் இந்த லிங்க்கில் நேரடியாகவே இதை பார்க்கலாம்…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்