…
…

…
கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக்
கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டுக்கால
ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருவதாக
சொல்கிறார்…
தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு
கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்வதை
வழக்கமாகக் கொண்டிருக்கிறார்….!
– கடைசியாக, சில மாதங்கள் முன்னர், வாசித்த ஆற்றுப்படையில்,
ஆண்டாளின் பிறப்பைப்பற்றி ஏடாகூடமாகப்பேசி, ஏகப்பட்ட பிரச்சினைகளை உண்டுபண்ணி, தினமணி ஆசிரியருக்கு தீராத தலைவலியை தந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்….
ஒருமுறை பட்டதே போதுமென்று, தினமணி நாளிதழ் ஒதுங்கி
விட்டது போலும்… இந்த முறை “தமிழ் இந்து” அதற்கான
பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது….!!!
– வைரமுத்து அவர்களது ஆற்றுப்படையின் சுருக்கமும்,
தமிழ் இந்துவில் (14/06/2018) பிரசுரம் ஆகியிருக்கிறது……( அவரது சொந்த முயற்சியிலேயே இந்து நாளிதழுக்காக சுருக்கித் தரப்பட்டுள்ளது…)
இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள்,
உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி,
கண்ணதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன….என்று சொல்லப்பட்டிருக்கிறது.
( தமிழின் 3000 ஆண்டுக்கால ஆளுமைகள் என்று சொன்னாலும், இன்றைய மக்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்களைப் பற்றியே இதுவரை “தமிழ்ப்படை” ஆற்றி வந்திருக்கிறார் என்று தெரிகிறது… பிரபலம் அல்லாதவர்களைப்பற்றி எழுதினால்… கூட்டத்திற்கு – கூட்டம் வராதே… !!! )
இத்தகைய நிகழ்ச்சிகளில், மற்றவர்களை கொண்டாடுகிற சாக்கில் கவிஞர் தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் இவர் மீது எழுகிறது….காரணம் – நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அவரது சொந்த அமைப்பாகிய வெற்றித்தமிழர் பேரவையே …
வைரமுத்து கூறும்போது, ‘‘இந்தியாவின் உயர்ந்த
இலக்கியப் பரிசு என்று கருதப்படும் ‘ஞானபீடம்’, இதுவரை தமிழுக்கு 2 முறைதான் வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனுக்குப் பிறகு ‘ஞானபீடம்’ பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆவார். . எனவே, ‘தமிழாற்றுப்படை’
வரிசையில் சேர்வதற்கு ஜெயகாந்தனுக்கு தகுதி உண்டு… என்றார்.
அப்படியானால், “ஞானபீடம்” பெற்றிருக்காவிட்டால்,
ஜெ.கே.வுக்கு இவரது ஆற்றுப்படையில் இடம் கிடைத்திருக்காதோ…?
‘ஞானபீடம்’ பற்றி இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை
சொல்ல வேண்டும்… – இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க திருமதி
சிவசங்கரியை – வைரமுத்து அவர்கள் அழைத்திருந்தார்.
செய்நன்றி மறக்காத திருமதி சிவசங்கரி அவர்களும் – தன்னை தலைமை தாங்க அழைத்தமைக்காக, வைரமுத்துவுக்கு நன்றி கூறுகையில், அடுத்த “ஞானபீடம்” விருது வைரமுத்துவுக்குத் தான் என்றும் சொல்லி விட்டு போய் விட்டார்.
ஜெயகாந்தனை பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கூட்டத்தில், தலைமை தாங்கிய திருமதி சிவசங்கரி அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் பேசினார்….
அதில் முதல் 10 நிமிடங்கள், வைரமுத்து அவர்களின் திறமையைப்பற்றியும், ஆளுமையைப் பற்றியும் புகழ்ந்து பேசினார்.
அடுத்த சுமார் 8 நிமிடங்கள், தான் எழுதிய நூலைப்பற்றியும், தான் மேற்கொண்ட அகில இந்திய பயணங்கள் குறித்தும், தான் சந்தித்த
எழுத்தாளர்களைப் பற்றியும் பேசினார்.
கடைசியில் மறக்காமல் ஒரு 2 நிமிடங்கள் ஜெயகாந்தனுக்காகவும் ஒதுக்கி, அதில் தனக்கும் ஜெயகாந்தனுக்குமான நட்பைப்பற்றியும் பேசினார்…..!
இந்த கூட்டத்தில் ஜெயகாந்தன் அவர்களது குடும்பத்தினர் யாரும்
கலந்துகொண்டதாகத் தெரியவில்லை…( அவர்கள் அழைக்கப்பட்டனரா
என்பது குறித்து தகவல் இல்லை…)
வைரமுத்து தனது எழுத்தின் மூலம் தமிழில் சிறந்தவர்களை,
இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதாகச் சொல்கிறார்…
ஆனால், அவரது தமிழாற்றுப்படையை கவனிக்கும்போது, தன்னுடைய
எழுத்தாற்றலை நிரூபிப்பதற்காகவே எழுதுவது போல், கடினமான
தமிழ் நடையை பின்பற்றுகிறார்.
இன்றைய கணிணிக்கால இளைஞர்களை இத்தகைய எழுத்துகள் ஈர்க்குமா…? அந்த அளவிற்கு அவர்களுக்கு பொறுமை இருக்குமா..? இளைஞர்கள் தான்
இதற்கு பதில் சொல்ல வேண்டும்…!
அவரது “தமிழாற்றுப்படை”யில் தமிழோடு கலந்துவிட்ட,
தமிழ் தான் என்று நினைக்கப்படுகிற சில வடமொழிச் சொற்களை பார்க்க முடிகிறது.
எதேச்சையாக ஒரு சொல்லை கவனித்தேன்….வைரமுத்து அவர்கள்
தான் எதை எழுதினாலும், அது தமிழ் தான் என்று ஏற்றுக்கொள்ளப்படும்
என்று நினைக்கிறார் போலும்…
புதிதாக ஒரு தமிழ்ச் சொல் கண்டுபிடித்திருக்கிறார்.. ” துர்ப்பேறு ”
துரதிருஷ்டம் என்றால் வடமொழியாகி விடும்… எனவே அதிர்ஷ்டம்
என்பதற்கு பேறு என்று தமிழ்ப்படுத்தியாகி விட்டது….
பிறகு அந்த “துர்” -க்கு தமிழில் எதுவும் சொல் கிடைக்கவில்லை போலும். எனவே, துர்+பேறு = துர்ப்பேறு…!!!
” உங்களுக்கு என்னய்யா கடுப்பு… ஒரு நல்ல நிகழ்ச்சியை ஏன் குறை
கூறுகிறீர்கள் ” என்று சில புதிய நண்பர்கள் கேட்கக்கூடும்…
என்ன செய்வது “போலி”களை (hypocrites) ஜீரணிப்பது நமக்கு கடினமான
விஷயமாக இருக்கிறதே.. பார்த்தால், கேட்டால் – எரிச்சல் வருகிறதே…
கோபம் வருகிறதே…
ஜெயகாந்தனின் மதுப்பழக்கங்களை
அவர் என்றைக்கு மறைத்திருக்கிறார்..?
யாருக்குத்தான் அவை பற்றி தெரியாது.
ஜெ.கே.யின் ரசிகர்கள் அவரைப்பற்றி முழுவதுமாக அறிவர்.
அதையெல்லாம் தாண்டித்தான் ஜெ.கே.யை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
அது குறித்து இவர் இந்த விழாவில் பேச வேண்டிய அவசியம் என்ன…?
இருந்தாலும், தேவையே இல்லாமல், ஜெயகாந்தனை ‘குடிகாரர்’ என்றும், தன்னை குடிப்பழக்கம் இல்லாத மனிதர் என்று மறைமுகமாக உயர்த்தியும் கூறிக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கள்ளத்தனம் … மற்றும் –
ஜெயகாந்தன் அவர்கள் – மரணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கையில், அவரது கைகளில் இவரது புத்தகத்தை திணித்து புகைப்படம் எடுத்து, விளம்பரம் செய்துகொண்டவர்களின் கொடுஞ்செயலை மனது மறக்க மறுக்கிறதே…!
நமது விமரிசனம் தள பழைய நண்பர்களுக்கு இது நிச்சயம் நினைவிருக்கும்….
புதிய நண்பர்கள் இதை படித்தால், அவர்களுக்கு என் நியாயம் புரியும்…
…
ஜெயகாந்தனுக்குப் பின் நான் தான் ” – திருவாளர் வைரமுத்துவின் latest selfie …..!!!
…
நாம் மட்டும் தான் குறை சொல்கிறோம் என்றில்லை…நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜெயகாந்தனை நன்கு அறிந்த, மூத்த எழுத்தாளர் மாலன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கூறுகிறார் –
—————
மாலன் நாராயணன்
15 hrs ·
இன்று மாலை வைரமுத்து தனது தமிழாற்றுப்படை உரைக்கோவையில்
ஜெயகாந்தன் பற்றி பேசினார். அவர் ஜெயகாந்தனின் சிறப்பியல்புகளைக்
குறிப்பிட்டார் எனினும் உரை எனக்கு முழு நிறைவளிக்கவில்லை.
மணிக்கொடி என்ற அக்ரகாரத்துப் பூனைகளிடமிருந்த சிறுகதையை அடித்தள மக்களின் வாழ்க்கை பற்றிய தரிசனங்களாக மாற்றிய புலி ஜெகெ. அதை வைரமுத்து சரியாகக் குறிப்பிட்டார்.
ஆனால் அவை ஜெகேயின் ஆரம்பகாலக் கதைகள். சமரன், சரஸ்வதியில் எழுதிய கதைகள்.
ஆனந்த விகடனில் அவர் எழுதிய கதைகள் மணிக்கொடியினர் கையாண்ட அதே மத்திய தர வர்க்கக் கதைகள்தான். அதில் தப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெகேவிற்கு சிறப்புச் சேர்த்தவையும், தனித்த அடையாளம் கொடுத்தவையும் அவைதான்.
கதை என்பதில் சம்பவத்தைத் தாண்டி தர்க்கத்தை முன் வைத்தவை அவை (கோகிலா என்ன செய்து விட்டாள், சமூகம் என்பது நாலு பேர்,
தவறுகள் குற்றங்கள் அல்ல – ஆகியன சில உதாரணங்கள்) அதைக் குறித்து வைரமுத்து விரிவாகப் பேசவில்லை. அது ஏமாற்றம் # 1
ஜெகேயின் நாவல்கள் பற்றி வைரமுத்து மூச்சே விடவில்லை.
சாரங்கனையோ (பாரீசுக்குப் போ) ஹென்றியையோ (ஒரு மனிதன் ஒரு
வீடு ஒரு உலகம்) குறிப்பிடாமல் ஜெகேயைக் கடந்து விட முடியுமா?
அது ஏமாற்றம் # 2
ஜெகே ஜொலித்துக் கொண்டு வெளிப்படுவது அவரது பெண் பாத்திரங்களில் கெளரிப்பாட்டி (யுக சந்தி) கங்கா (கங்கை எங்கே போகிறாள்) லலிதா (பாரிசுக்குப் போ) கல்யாணி (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) இவை பற்றிப் பேசவில்லை என்பது ஏமாற்றம் #3
அவரது அரசியல் பற்றி மேலோட்டமான கருத்துக்களை உதிர்த்தார். முக்கியமாக திராவிட இயக்கங்கள் மீது அவர் கொண்டிருந்த பார்வை பற்றி பூடகமாகக் குறிப்பிடவில்லை அது ஏமாற்றம் # 4
ஜெகெ என்னும் மனிதனின் முழு ஆளுமையும் வெளிப்படவில்லை. யாரையோ இடிப்பதாக நினைத்துக் கொண்டு செவிவழி கேட்ட செய்திகளைச் சொல்வது வைரமுத்துவுக்கு அழகல்ல. தவிர்த்திருக்கலாம்.
கடலை சிமிழுக்குள் அடக்கும் முயற்சி.
ஆனால் சிமிழைக் கடல் அடித்துக் கொண்டு போய்விட்டது.
—————————————————————————————————–



நிறைய இடுகைகள் திரு வைரமுத்துவைப்பற்றி இந்த தளத்தில் பதிவாக வந்திருந்தாலும் — இன்றைய இடுகைக்கு ஏற்றாற்போல் முந்தைய இரண்டு இடுகைகள் { இதையும் மிகவும் பழமையானது என்று அய்யா கூறாமல் இருந்தால் — என்பாக்கியம் …! }
1 . // வித்தியாசக் கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே எடுக்கும் விழா…..!!!
Posted on ஜூலை 10, 2014 by vimarisanam – kavirimainthan // ………// இத்தகைய நிகழ்ச்சிகளில், மற்றவர்களை கொண்டாடுகிற சாக்கில் கவிஞர் தனக்குத்தானே விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் இவர் மீது எழுகிறது….காரணம் – நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அவரது சொந்த அமைப்பாகிய வெற்றித்தமிழர் பேரவையே … // தனக்கு தானே விழா எடுப்பதற்கு ஒரு உதாரணம் மேலே உள்ள இடுகை …. !
2 . // திருவாளர் வைரமுத்து என்னும் மிக மிக மிக மிக பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆல்ரவுண்டர் ….
Posted on ஏப்ரல் 23, 2015 by vimarisanam – kavirimainthan // ஜெயகாந்தனுக்கு அவர் ஆற்றிய தொண்டு ? பற்றியது இந்த இடுகை ….இதில் தான் தற்போது தாங்கள் குறிப்பிட்ட // ஜெயகாந்தன் அவர்கள் – மரணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கையில், அவரது கைகளில் இவரது புத்தகத்தை திணித்து புகைப்படம் எடுத்து, விளம்பரம் செய்துகொண்டவர்களின் கொடுஞ்செயலை மனது மறக்க மறுக்கிறதே…! //
பிங்குபாக்: கவிஞர் வைரமுத்துவும்….ஜெயகாந்தனை அவர் “ஆற்றிய” விதமும்….!!! – TamilBlogs
மாலன் மிகவும் மிதமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
வைரமுத்து 100 % சுயநலமி. தனக்கு லாபம் இல்லாதவற்றை, தனக்கு பலன்
தராத எதையும் தொடவே மாட்டார். இங்கே ஜெ.கே. பெயரைச் சொல்லி
ஒரு selfie புகழ். திருமதி சிவசங்கரி அதை சரியாக செய்து விட்டார்.
இன்றைய கால கட்டத்தில் ஞானபீடம் அவர்டு வேண்டுமானல், திருமதி சிவசங்கரி
ரெகம்மண்டேஷன் எல்லாம் போதாது. இவர் ஹெச்.ராஜாவை வேண்டுமானால் அணுகிப் பார்க்கலாம் 🙂
நிறைகுடம் தளும்பாது
குறைகுடம் கூத்தாடும்.
விளம்பரங்கள் மூலம் ‘பட்டங்கள்’ பெற்றுவிடலாம் என்பதை நம்புபவர் வைரமுத்து. அதற்காக ஒரு ‘கழகத்தையே தன்னிடம் வைத்துள்ளவர் அவர். எப்படி, ‘விகடனை வளைத்து தனக்கு அவ்வப்போது புகழாரத்துக்கு இடம் பிடித்துக்கொள்கிறாரோ, சிலர் இறப்பை வைத்து புகழாரம் சூட்டுவதுபோல் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறாரோ, அதுபோன்ற செயல்கள் ஒருபோதும் கவுரவங்களைக் கொண்டுவந்து சேர்க்காது.
அவரது அடுத்த குறி “ஞானபீடம்” …
அதற்காக எதையும்( …!!! ) அவர் செய்யக்கூடும்….
ஐயா, கீழ்கண்ட சுட்டிகளைப் பாருங்கள்:
https://www.jeyamohan.in/105307#.WynZhNIzaUk
https://www.change.org/p/bjnanpith-gmail-com-stop-giving-bharatiya-jnanpith-for-vairamuthu-tamil-literature
அன்புடன்,
கண்ணன்
கணபதி கண்ணன்,
பார்த்தேன்.. ஒன்றை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.
நன்றி நண்பரே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்