அறியாமையா….? அதீத ஆர்வமா…? அல்லது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா…?


திருவாளர் கமல்ஹாசன் எல்லாவற்றிலும், எல்லாரையும் முந்திக்கொள்ள
வேண்டுமென்று நினைப்பது புரிகிறது…

ஆனாலும், அவரது அதீத ஆர்வம்,
அவரை இந்த வருடத்தின்
இணையற்ற “ஜோக்கர்”
ஆக்குவதில் சென்று முடிந்திருக்கிறதே ….!

குமாரசாமி அய்யா, பெரிய மனசு பண்ணி கபினி அணையை
திறந்து விட்டது போல் –

“கர்நாடக முதல்வருடன் பேசினேன்.
கபினி அணையைத் திறந்தது குறித்து
மகிழ்ச்சி தெரிவித்தேன்…”

– என்று எல்லாரையும் முந்திக்கொண்டு ட்விட்டர் செய்தி போடும்
இந்த மனிதருக்கு, (கிட்டத்தட்ட) நிரம்பி விட்டஅணையை இப்போதும்
திறக்கா விட்டால், அது உடைந்து சிதறிவிடும் என்பது தெரியாதா..?

அல்லது, மக்கள் – இவர் சொல்லித்தான்,
திருவாளர் குமாரசாமி பெரிய மனசு பண்ணி
அணையை திறந்து விட்டிருக்கிறாரென்று
நம்பி விடுவார்கள் என்று நினைக்கிறாரா….?

இவர் போட்ட ட்வீட் செய்திக்கு,
டாக்டர் சுமந்த் ராமன் போட்ட பதில்
பொருத்தமாக இருக்கிறது…
இரண்டும் நண்பர்களின் பார்வைக்கு – கீழே –

..

..

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அறியாமையா….? அதீத ஆர்வமா…? அல்லது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா…?

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    இவர் நிச்சயம் முட்டாள் இல்லை. நம்மை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். எல்லாரையும் முட்டாள்களாக்க முயற்சிக்கிறார்.

  2. பிங்குபாக்: அறியாமையா….? அதீத ஆர்வமா…? அல்லது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா…? – TamilBlogs

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை.சார்… நீங்க எழுதியிருப்பது எனக்குத்தான் புரியலை. தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு அடிமுட்டாள்கள் இல்லைனு நான் நினைக்கிறேன். கமலஹாசன் ‘யார்’, கர்நாடக முதல்வருக்கு ரிக்வஸ்ட் செய்ய? மக்கள் ஆதரவு பெற்றவர்னு நிரூபிச்சிருக்கிறாரா?

    சுமந்த் ராமனைவிட சரியான பதிலைக் கொடுத்துள்ளது பரந்தாமன் என்பது என் எண்ணம்.

    நம்மைப் பிடித்த நல்ல நேரம். நேற்று மழை சென்னையில் பெய்தே ஆகவேண்டும் என்று கடவுளிடம் பேசினேன் என்று ட்வீட் செய்யவில்லை அவர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      ஒரு சுவாரஸ்யம்…
      நேற்று மாலை திரு.குமாரசாமி மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்திருக்கிறார்.
      அங்கே செய்தியாளர்களிடம் பேசும்போது.

      “கடவுள் அருளால், இந்த வருடம் நல்ல மழை பெய்கிறது… இது தொடர்ந்தால்,
      ——இந்த வருடம் —– தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் எந்தவித கஷ்டமும் இருக்காது
      என்று நம்புகிறேன்..கடவுளுக்கு மிக்க நன்றி ”

      என்று சொல்லி இருக்கிறார்… 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. M.Thevesh's avatar M.Thevesh சொல்கிறார்:

    கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் பின்னால்
    போகும் தமிழ் நாட்டு மக்களே படு முட்டாள்கள்

  5. Raman A V's avatar Raman A V சொல்கிறார்:

    You are totally prejudice with Kamal. If the same statement comes from Rajini you would have dealt it in different manner. In his tweat he never said because he spoke to Karnataka CM the water was released. He mentioned that he spoke to him and thanked him. You always tries to portrait yourself as unbiased, but when it comes to Kamal, Stalin and few more your writing / comments are always biased. Not sure how many of your followers will abuse me for this, but still want to register my thoughts. Thanks

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      ராமன்,

      நல்லதையும், கெட்டதையும் ஒப்பிடும்போது நடுநிலையாக இருப்பது இயலாத காரியம்.
      நல்லதை பாராட்டுவதும், கெட்டதை எதிர்ப்பதும் தான் உண்மையான நடுநிலைமை.

      இங்கே கமல் போடுவது நாடகம்… அதை குறைசொல்வது இயல்பானது என்பதை நீங்கள்
      உணர வேண்டும். மேலும், கருத்து சொல்லும்போது, ஒருவரது பழைய சரித்திரமும், பின்னணிகளும்
      நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நேற்று திருவாளர் குமாரசாமி டெல்லியில் பேசியிருப்பதை
      படியுங்கள்… கமல் எந்த அளவிற்கு உளறி இருக்கிறார் என்பது புரியும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.