…
தூத்துக்குடியில் பேசிய திரு. ரஜினிகாந்த் சில முக்கியமான விஷயங்களை வலியுறுத்திச் சொல்லத் தவறி விட்டார் என்று முதல் நோக்கில் தோன்றுகிறது….
வழக்கமான அரசியல்வாதிகளைப்போல், சுற்றி வளைத்து, மூடி மறைத்து பேசாமல், மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசிய முறையை வரவேற்கலாம் என்றாலும் கூட, அவர் சில விஷயங்களை இன்னமும் தெளிவாகப் பேசி இருக்க வேண்டும்…..
…

…
– தமிழக அரசு – 100 நாட்களாக ( உண்மையில் – 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்று தான் சொல்ல வேண்டும்…) அமைதியான முறையில் போராடி வந்த தூத்துக்குடியின் பாதிக்கப்பட்ட பொது மக்களையும் –
அரசுக்கு எதிராக வன்முறை வழியில் போராட வேண்டும், அதற்கு அந்த மக்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து போராட்ட களத்தில் இறங்கிய வன்முறையாளர்களையும் தனித்தனியே பிரித்து கையாண்டிருக்க வேண்டும்….
வன்முறையாளர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதை விட்டு விட்டு, அப்பாவி மக்களின் மீது அடக்குமுறை பாய்ந்தது அரசின் இயலாமை – முதிர்ச்சியின்மை….. இந்த பிரச்சினையை கையாள்வதில் அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என்பதை சுட்டிக் காட்டி இருக்க வேண்டும்….
– அதே போல், தூண்டுதல் என்னவாக இருந்தாலும் கூட – பொது மக்களை குறிபார்த்து போலீஸ் சுட்டது மனிதத்தன்மையே இல்லாத மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் சரி – அவர்களை அரசு மூடி மறைத்து பாதுகாக்காமல், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்…
– இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் விசாரணையின் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பதால். அதனை கைவிட்டு விட்டு,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே நீதியும், நிவாரணமும் கிடைக்கவும், உண்மையில் தவறு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படவும் –
– பதவியில் இருக்கும், உரிய அதிகாரங்களைக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு, பாரபட்சமற்ற,
நம்பகத்தன்மையோடு கூடிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்…..
.
————————————————————————————————————————–



yes
//ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால்தான் கலவரம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும்//
Do you agree with this statement of him?
இதையும் சேர்க்கனும்.
சமூக விரோதிகள் யார் என்று தனக்கு தெரியும் என்று சொல்லியுள்ள ரஜினியிடம் காவல்துறை அந்த சமூக விரோதிகள் யார் என்ற விவரத்தை(பட்டியலை) பெற முயற்சிக்கனும்.
அல்லது, ரஜினி தானாக முன்வந்து தனக்குத் தெரிந்த அந்த சமூக விரோதிகள் யார் என்ற பட்டியலை கொடுத்து போலீஸாரையும், ஆட்சியரகத்தையும் தாக்கியவர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.
இது நடக்கும்…!?
அந்த இளைஞனின் ஒற்றை கேள்வியால் (நீங்கள் யார்?) நிலைகுலைந்து போன ரஜினி சென்னை விமான நிலையத்தில் தான் யார் யாருக்காக அரசியலுக்கு வருகிறேன் என்பதை அப்பட்டமாக ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்திவிட்டார்.
இதுக்கு அப்புறமும் அவர் பின்னால பாஜக இல்லை சொந்தமா யோசிக்குறாருன்னு யாரும் சொல்வார்கள்…!?
இது காலம் போட்ட வேடத்தை ஒரே நாளில் தோலுரித்து காட்டிய அந்த இளைஞருக்கு நன்றி. மேலும், அந்த 13 இன்னுயிருற்ற போராளிகளுக்கும் உரித்தாகுக.
Arivalku sir avar bjp kku aatharavu enpathai eppadi appattamaga velipadunaar endru sollungal sir please
அருள்,
ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் இரண்டை யும் பாஜகவினர் எப்படி கொச்சைப்படுத்தினார்களோ அதில் இவர் எந்தளவுக்கு வேறுபடுகிறார்.
இந்த அரசு பாஜகவின்
பினாமி என்பதை இந்தியாவே அறிந்த ஒன்று. இவரின் இன்றைய பேட்டி அரசின் ஊதுகுழலாக இல்லையா…?
அப்ப யாரை காப்பாற்ற யாருக்காக இவர் இப்படி பேசுகிறார்…?
ஒரு போராட்டத்தை முறியடிக்க மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் போலிஸ் நடந்து கொண்டாலேயே போதும் …கூட்டத்தில் உள்ளவர்கள் கலவரம் செய்வார்கள் …அதன் மூலம் மக்களை அடித்து விரட்டி போராட்டத்தை நீர்த்து போக செய்யலாம் …தூத்துக்குடியில் என்ன நடந்தது ,,,மக்கள் கலைக்டரை பார்த்து மனு கொடுக்க திட்டமிடப் பட்டு அறிவித்து விட்டு தானே சென்றார்கள் …கலைக்டரும் வேண்டும் என்றே மக்களை சந்திப்பதை தவிர்த்து கோவில்பட்டி சென்றார் …இளைஞர்கள் கோபமுற்று கலைக்டர் ஆபிஸ் மீது கல்லை எறிந்தார்கள் ..போலிஸ் அடிக்க இவர்கள் திருப்பி அடிக்க என கலவர பூமியாகியது…இது அதிகாரார்க்கத்தினரின் திட்டமிடப் பட்ட செயல் …..
பிங்குபாக்: சில முக்கியமான விஷயங்களை சொல்லத்தவறி விட்டார்…. – TamilBlogs
கே.எம்.சார்,
நீங்கள் சொன்னவற்றில் ஒரு விஷயத்தை நான் நிறைய தடவை யோசித்துப்
பார்த்தேன். செய்தி தளங்களில் பார்க்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களின்
கருத்துரைகளில் பார்க்கிறேன். ரஜினிக்கு எதிராக தொடர்ந்து கருத்து சொல்லும்
தளங்களில் பார்க்கிறேன். எங்கும் இத்தகைய ஒரு கருத்து சொல்லப்படவில்லை.
// இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் விசாரணையின் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பதால். அதனை கைவிட்டு விட்டு,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே நீதியும், நிவாரணமும் கிடைக்கவும், உண்மையில் தவறு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படவும் –
– பதவியில் இருக்கும், உரிய அதிகாரங்களைக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு, பாரபட்சமற்ற,
நம்பகத்தன்மையோடு கூடிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்…..//
எல்லா கட்சிகளும் சேர்ந்து இந்த கருத்தை ஏற்கெனவே வலியுறுத்தி இருக்க வேண்டுமே. ஏன் செய்யவில்லை ?
எனக்கென்னவோ, முழு உண்மையும் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதில் மட்டும் எல்லாருமே ஒரே நிலைப்பாடுடன் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
அப்படி ஒரு விசாரணை நடந்தால், அவரவர் பங்கு வெளிப்பட்டு விடுமே என்கிற
அச்சம் தான் காரணமா ?
இன்றைய விவகாரத்தை நான் வேறு விதமாகப் பார்க்கிறேன்.
ரஜினி தூத்துக்குடி போவதாக செய்தி வெளியானவுடன், முதலில், காலா படம் வெளிவரப்போவதால், மக்களை தாஜா செய்வதற்காக போகிறார் என்று கருத்துகள்
வெளியிடப்பட்டன…அதே கருத்தை முன்வைத்து நிறைய கிண்டல்களும் உருவாயின.
ஆனால், மதியம் / மாலையில் அவர் பேட்டி வெளியான பிறகு, நிலைமை அடியோடு மாறி, ரஜினி, பாஜகவின் கருத்துகளையே பிரதிபலிக்கிறார் என்றும் பாஜகவின் பினாமி தான் ரஜினி என்கிற மாதிரியும் வெகு தீவிரமாக கருத்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ரஜினி இன்று கூறியுள்ள கருத்துகளை நான் ஏற்கவில்லை என்றாலும் கூட – அவரது நிலைப்பாடை நான் சந்தேகிக்கவில்லை….
அவர் கருத்துகளை நாம் ஏற்காவிட்டாலும் கூட – அவரது உண்மைத்தன்மை சந்தேகிப்பதற்குரியது அல்ல என்பது என் கருத்து.
மற்ற எல்லா அரசியல்வாதிகளையும் போல, அவரும் தூத்துக்குடி போனபோது, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, உதவிகளைச் செய்துவிட்டு,
அரசாங்கத்தின், போலீசின் அராஜகங்களை கண்டிப்பதாகச் சொல்லி விட்டு வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, தனக்கு சரியென்று
தோன்றுவதை, தான் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று தெரிந்திருந்தும் கூட – தைரியமாகச் சொல்லி இருக்கிறார்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தான் unpopular ஆவோம் என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும், தன் மனதுக்கு பட்ட உண்மையை தைரியமாகச் சொல்லும் ஒரு நேர்மையான மனிதராகவே நான் அவரைப் பார்க்கிறேன்.
என் மனதிற்கு தோன்றும் சிலவற்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
– நடந்தது, பல வருடங்களாக ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் உண்மையான எழுச்சிப் போராட்டம் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை… இதை குறை கூறுபவர்கள் ஒன்று உண்மையை அறியாதவர்கள் அல்லது உள்நோக்கமுடைய அரசியல்வாதிகள் என்று தான் கூற வேண்டும்.
– தன்னெழுச்சியான அந்த போராட்டத்தில், அரசை / நிர்வாக எந்திரத்தை பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த, வன்முறைகளில் நம்பிக்கை
கொண்ட சிலரும் இருந்தனர் என்பதும், நடந்த வன்முறைகளில் அவர்களுக்கு பெரிய பங்கு உண்டு என்பதும் உண்மையே.
– வன்முறையாளர்களின் மீது கொண்ட வெறியில் – காவல் துறை, கண்மூடித்தனமாக நடந்துகொண்டு, அப்பாவி பொதுமக்களும் படுமோசமாக பாதிக்கப்பட காரணமாக இருந்திருக்கிறார்கள். பல வன்முறை நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினரும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
– இவ்வளவு பெரிய கலவரங்கள் நடந்த இடத்தில், மூத்த அதிகாரிகள் எவரும் ஏன் இல்லை என்பது அரசு எந்திரத்தின் உள்நோக்கம் குறித்து பெருத்த சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது.
– ஆட்சியில் இருப்பவர்களுக்கு – தங்கள் நிர்வாகத்தின் மீதும், அதிகாரிகளின் மீதும், காவல்துறையின் மீதும் – எந்த தவறும் இல்லை என்கிற நம்பிக்கை இருக்குமேயானால் –
உரிய அதிகாரங்கள் உடைய, தற்போது பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ( sitting judge ) ஒருவரின் தலைமையில் உடனடியாக நீதி விசாரணை ஒன்றை நடத்துவது தான் நல்லது.
– அதேபோல், இப்போது குறை சொல்லும் எதிர்க்கட்சிகள் எதுவும், அத்தகைய நீதி விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்கிற கருத்தை இன்னமும் வலியுறுத்தாமல் இருப்பது ஏன் என்று மிகுந்த ஆச்சரியமும் ஏற்படுகிறது.
/// ரஜினி இன்று கூறியுள்ள கருத்துகளை நான் ஏற்கவில்லை என்றாலும் கூட //
பாஜக கருத்துகளோடு இவர் கருத்துகளும் ஒத்து போகும் போது சந்தேகம் வருவது இயல்பு.
இன்று இந்த சந்தேகம் பரவலாக பேசப்படும் பொழுது ரஜினியும் அதை அறிந்து இருக்கனும். அவர் ஏன் தெளிவாக வெளிப்படையாக சொல்ல மாட்டேன் என்கிறார்.
சொல்லட்டும் பார்க்கலாம்.
//தன்னெழுச்சியான அந்த போராட்டத்தில், அரசை / நிர்வாக எந்திரத்தை பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த, வன்முறைகளில் நம்பிக்கை
கொண்ட சிலரும் இருந்தனர் என்பதும், நடந்த வன்முறைகளில் அவர்களுக்கு பெரிய பங்கு உண்டு என்பதும் உண்மையே.//
Can you name some of such people or organization? Even if we assume they believe in violence, there have not been a single violence in those 100 days. Moreover unless violence happened ‘cheap’ politicians might not even visit Thoothukudi.
அடுத்த இடுகையில் இருக்கும் வீடியோக்களை பார்த்து நீங்களே சொல்லுங்கள் அந்த வன்முறையாளர்கள் யாரென்று… அநேகமாக உங்களுக்கு
தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.
Do you agree with the remaining part of my comment then?
//Moreover unless violence happened ‘cheap’ politicians might not even visit Thoothukudi//
//அவர் கருத்துகளை நாம் ஏற்காவிட்டாலும் கூட – அவரது உண்மைத்தன்மை சந்தேகிப்பதற்குரியது அல்ல என்பது என் கருத்து.//
Does the same apply to H.Raja also?
அரசியல் அறிவே அறவும் இல்லாத ஆசாமி கூட அவர்கள் இருவரையும் ஒப்பிட மாட்டார்கள். இதிலிருந்து உங்கள் அறியாமை தான் வெளிப்படுகிறது.
I agree we can’t compare them both. I hoped you would understand the reason behind the question. What I meant was just because a person is genuine to his thoughts/(not acting) we should not support him blindly. Be it Rajini or H. Raja
Sir, I find that, while many appreciate the reasons for which the agitation was going, why none are touching upon the role of the church in organizing and coordinating it? How it escapes attention?
தூத்துக்குடியில் என்ன நடந்தது ,,,மக்கள் கலைக்டரை பார்த்து மனு கொடுக்க திட்டமிடப் பட்டு அறிவித்து விட்டு தானே சென்றார்கள் …கலைக்டரும் வேண்டும் என்றே மக்களை சந்திப்பதை தவிர்த்து கோவில்பட்டி சென்றார் …இளைஞர்கள் கோபமுற்று கலைக்டர் ஆபிஸ் மீது கல்லை எறிந்தார்கள் ..போலிஸ் அடிக்க இவர்கள் திருப்பி அடிக்க என கலவர பூமியாகியது…இது அதிகாரார்க்கத்தினரின் திட்டமிடப் பட்ட செயல் …..யாருமே கலைக்டர் ஆபிசில் இருந்து கொண்டு அந்த மனுவை ஏன் வாங்கவில்லை என்று கேள்வி வைக்கவில்லையே …
அவர் பாஜகவின் Team B தான். அவர்கள் என்ன வார்த்தைகளை பேசினார்களோ அதையே இவரும் பேசுகிறார். Direction,script, Dialogue handled by Auditor Gurumurthy. இது ஒரு ஆழம் பார்க்கும் சம்பவம்.
ரஜினி கூறிய சில கருத்துகள், பாஜக கருத்துகளோடு ஒத்துப் போகக்கூடும்.
ஆனால், அதற்காக அவரை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும் ?
தன் மனதில் தோன்றுபவற்றை அவை பொதுவாக ஏற்கப்படாது என்றூ
தெரிந்திருந்தாலும் கூட, தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசுகிறார்.
ரஜினியின் வெளிப்படையான பேச்சை நான் பாராட்டுகிறேன். தனக்கும்
பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று அவர் கூறிய பிறகும் மீண்டும் மீண்டும்
ஏன் அவரை பாஜகவுடன் இணைத்துப்பேச வேண்டும் ?
மேலும், அவர் போராட்டம் நடத்திய மக்களை குறை கூறவில்லை.
அவர்களை பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்று தான் கூறுகிறார்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டும் தான் குறைகூறுகிறார்.
அவர்களையும், அரசாங்கம் தனியாக identify செய்து புகைப்படத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
மேலும் one man commission -ஐ தான் நம்பவில்லை என்றும் வெளிப்படையாக
கூறி இருக்கிறார். ரஜினியின் கருத்துகளை ஏற்பதோ மறுப்பதோ அவரவர்
விருப்பம். அதற்காக தரக்குறைவாகப் பேசி அவரை அவமானப்படுத்துவது சரியல்ல.
போராட்டமே கூடாது என்று சொன்னால்….?
போராடுவது மக்கள் தானே…?
அவர் வெளிட்ட ‘காலா’ பட ட்ரைலரில் போராட மக்களை கூட்ட சொல்கிறார்.
ஏன் இந்த முரண்பாடு…?
ஒரு திரைப்படத்தில் , கதையின் போக்குக்கு ஏற்ப வரும் வசனத்துடன் ஒப்பிட்டு நிஜ வாழ்வில் ஏன் அப்படிப் பேசவில்லை என்று கேட்கும் அளவிற்கு அறிவு வளர்ச்சியுள்ளவர்கள் எல்லாம் இங்கு போடும் பின்னூட்டம் இப்படித்தானே இருக்க முடியும் ?
‘அறிவழகு ‘ பொருத்தமான பெயர்;
திரைப்படத்தின் பிரபலத்தை நம்பிதானே இவர் அரசியலுக்கு வருகிறார்….
குருடனுக்குக் கண்ணாயிரம் என்றும் முடவனுக்கு நடராஜா என்றும் பெயர் வைப்பது நம்ம மக்களுக்கு வாடிக்கைதான்.
“நாகரீகமா விவாதம் செய்யுங்கள்” என்று அறிவழகு சொல்வது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக். அவருடைய பழைய பின்னூட்டங்களை படித்தாலே அவர் எவ்வளவு பண்புடன் “விவாதம்” செய்கிறார் என்பது எல்லோருக்கும் புரிந்து விடும்.
ரஜினியை கொண்டு ஒரு Take Diversion mode க்கு முயற்சி செய்கிறார்கள்.
ஒரு வேலை ரஜினி அமைதியாக இருந்திருந்தாலும் அவரை கொச்சை படுத்தாமல் விடவா போகிறோம்.
ஒரே நாளில் ரஜினிக்கு எதிராக, இத்தனை தலைப்புகளில் வேண்டுமென்றே
ஒரு செய்தி தளம் மூட்டி விடுவது ஏன் ? யாரிடம் பெட்டி வாங்கினார்கள் ?
உண்மையான மக்கள் போராட்டங்களை ரஜினி உணர மறுப்பது ஏன்? Posted By: Lakshmi Priya May 30, 2018, 19:44 [IST]
மக்களை குழப்பும் ரஜினிகாந்த்-
Lakshmi Priya
கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய ரஜினி
Lakshmi Priya
சமூக விரோதிகளை உங்களுக்கு தெரியும்னா… பலியான 13 பேரும் எந்த இயக்கம்னு சொல்லுங்க சார்? – Lakshmi Priya
தமிழ்நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத்தான் போராட்டமே- திருமாவளவன் பதிலடி – Lakshmi Priya
மெல்லிசான அந்த கோடு.. இவ்வளவுதாங்க ரஜினிகாந்த்துக்கும், விஜயகாந்த்துக்கும் உள்ள வித்தியாசம்! – Veera Kumar
இன்று அத்தனை கட்சிகளும் ரஜினியை தங்கள் எதிரியாக பார்க்கின்றன.
காரணம் ? அவர் களத்தில் இறங்கினால் தங்கள் வாய்ப்பு கெடும் என்பதாலா ?
அவர் கூட்டு சேர்த்துக்கொள்ள தயார் என்றால் இதில் எவ்வளவு பேர் பல்டி அடிக்கத்தயாராக இருப்பார்கள் ?
யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி? – கா.சு. வேலாயுதன்
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article24038815.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
இந்த விரிவான அலசலில் பல கேள்விகளையும் ரஜினியின் இரட்டை நிலையையும் விரிவாகவே பேசுகிறார் வேலாயுதன்.
அதில் highlights ஆக உள்ளது,
“இங்கே அவர் மோடியின் குரலாக மட்டுமல்ல, தொழிலதிபர்களின் குரலாய், தமிழக ஆட்சியாளர்களின் குரலாய், அதிகார வர்க்கத்தின் குரலாய் ஒலித்தாரேயன்றி மக்களின் குரலாய் ஒலிக்கவில்லை. ஒரு வேளை, ‘இதுதான் அவரின் அசல் குரல்!’ என்றால் தமிழக அரசியலுக்கான குரலாக அது இருக்காது.”
ஆம்! தமிழக மக்களின் குரலாக எப்போது ஒலிக்க போகிறார்.
இன்னொரு முக்கியமான விஷயம். அதிலேயே வேலாயுதன்,
“ரஜினி தூத்துக்குடி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும். நிருபர் சந்திப்பில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்!’ என்றெல்லாம் தெளிவுபட எடுத்துரைத்தாராம்.”
அந்த அரசியல் ஆலோசகர் யாராக இருக்கும்…? குருமூர்த்தி…?
யாராக இருந்தாலும், இன்று தமிழகத்தில் மோடி மீதும் பாஜக மீதும் இருக்கும் வெறுப்பு அவர்களோடு வந்தால் ரஜினியும் வெளங்காமல் போய்டுவாரே என்ற ஆதங்கம் தான்.
வேற என்ன.
“அறிவு+அழகு”
இடம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் இங்கே எழுதிக்கொண்டே இருப்பீர்களா ? உங்கள் ரஜினி வெறுப்பை வெளிப்படுத்த இது தான் இடமா ?
கே.எம்.சார் ஏன் இந்த அர்த்தமற்ற பிதற்றல்களையெல்லாம் தொடர்ந்து அனுமதிக்கிறார் என்றே தெரியவில்லை.
அறிவு+அழகு விடம் சில கேள்விகள்:
யார் இந்த கா.சு.வேலாயுதன் ? உங்களுக்கு தெரியுமா ?
ஊர் அறிந்த எழுத்தாளரா? அரசியல்வாதியா ? புகழ்பெற்ற செய்தியாளரா ?
இவர் எழுதியதை ‘டமில் தி ஹிந்து’ அவசர அவசரமாக போட வேண்டிய அவசியம் என்ன? டமில் தி ஹிந்து-விற்கு இதில் என்ன ஆர்வம் ? ரஜினிக்கு எதிராக பப்ளிக் ஒபினியன் உருவாக்க வேண்டும் என்பதைத் தவிர ?
‘டமில் தி ஹிந்து’ மிகவும் நம்பகமான பத்திரிகையா ? யார் முதலாளி ?
” ரஜினி தூத்துக்குடி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும். நிருபர் சந்திப்பில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்!’ என்றெல்லாம் தெளிவுபட எடுத்துரைத்தாராம். ஆனால் அதையெல்லாம் அவர் சுத்தமாக மறந்து விட்டார்.”
-இதை காசு வேலாயுதன் கூட இருந்து கேட்டாரா ? பார்த்தாரா ?
பின் அவர் சொல்லும் இந்த ‘சொன்னாராம் – கேட்டாராம்’ போன்ற “ராம்”களை நீங்கள் எப்படி சீரியசாக எடுத்துக் கொள்கிறீர்கள் ? ஒருவேளை நீங்களும் அந்த “ராம்” ரசிகரோ ?
இடம் கிடைத்தது என்பதற்காக இங்கே வந்து உங்கள் ரஜினி வெறுப்பை
கொட்டுவதை இத்தோடு நிறுத்துங்கள். உங்கள் பிதற்றல் எல்லாம் உங்களின்
அறியாமையையும், வெறுப்பையும் தான் வெளிப்படுத்துகின்றன. எந்த வித உண்மையையும் அல்ல.
ரஜினி பக்தருக்கு அல்ல அடிமைக்கு,
சொல்லும் வார்த்தைக்கு பதில் கொடுக்கும் திராணியற்று சொல்பவர்களை தூற்றும் உம்போன்ற சிந்தனா சக்தியற்றவர்கள் தான் ரஜினி மாதிரி பொது வெளியில் இருக்கிறோம் என்ற சுய நினைவு அற்று “யேய்” என்று அழைக்கும் ஒரு நடிகருக்கு தேவை.
ஏன் இந்த பதட்டம் உம்ம தலைக்கு நேற்று வந்தது போலவே…?
இது மேலுள்ள உம்ம பின்னூட்டத்திற்கும் சேர்த்தே. நாகரீகமாக விவாதம் செய்ய தெரிந்தால் தொடரலாம்.
“அறிவு+அழகு”
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் விளக்கம் அளியுங்கள் பார்க்கலாம்.
// யார் இந்த கா.சு.வேலாயுதன் ? உங்களுக்கு தெரியுமா ?
ஊர் அறிந்த எழுத்தாளரா? அரசியல்வாதியா ? புகழ்பெற்ற செய்தியாளரா ?
இவர் எழுதியதை ‘டமில் தி ஹிந்து’ அவசர அவசரமாக போட வேண்டிய அவசியம் என்ன? டமில் தி ஹிந்து-விற்கு இதில் என்ன ஆர்வம் ? ரஜினிக்கு எதிராக பப்ளிக் ஒபினியன் உருவாக்க வேண்டும் என்பதைத் தவிர ?
‘டமில் தி ஹிந்து’ மிகவும் நம்பகமான பத்திரிகையா ? யார் முதலாளி ?
” ரஜினி தூத்துக்குடி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும். நிருபர் சந்திப்பில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்!’ என்றெல்லாம் தெளிவுபட எடுத்துரைத்தாராம். ஆனால் அதையெல்லாம் அவர் சுத்தமாக மறந்து விட்டார்.”
-இதை காசு வேலாயுதன் கூட இருந்து கேட்டாரா ? பார்த்தாரா ?
பின் அவர் சொல்லும் இந்த ‘சொன்னாராம் – கேட்டாராம்’ போன்ற “ராம்”களை நீங்கள் எப்படி சீரியசாக எடுத்துக் கொள்கிறீர்கள் ? ஒருவேளை நீங்களும் அந்த “ராம்” ரசிகரோ ?//
வேலாயுதன் யாராக இருந்தால் என்ன… அவர் சொன்ன கருத்தை கேளுங்கள்….
அறிவார்ந்த ரஜினி அடிமைக்கு,
என்னை உமக்கு தெரியுமா?
நான் யார் என்ன ஊர் எந்த விபரம் எதுவுமே தெரியாமல் என் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லுகிறீரே எப்படி…?
போலவே, இந்த தளத்திற்கு வருபவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்தே தான் வருகிறார்கள்.
நீரும் கூட யார் என்றே தெரியாது.
யார் எவர் என்று அறியாமலே அவர்கள் தம் கருத்துகளுக்கு பதில் சொல்லி இங்கு விவாதம் நடைபெற வில்லையா…..!?
உம்மை போல விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு அறிவே இருக்காது என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கா… ?
பதில் சொல்ல திராணி இல்லை என்றால் ஏன் மேலும் மேலும் தன் அறிவு கெட்ட கேள்விகளால் தன்னை தானே கேவலப் படுத்திக்கொள்கிறீர்.
ஒன்னு ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லும், திராணி இல்லையா ஒதுங்கி ஓடும்.
இல்லை, இதற்கு பதில் பின்னூட்டம் இடுகிறேன் என்று சொல்லி மேலும் நகைப்புக்கு இடமாகி நிற்காதீர்.
Sir Arivalagu sir intha pathivukku ungal pathil enna? athey Tamil HINDU VIL:
http://tamil.thehindu.com/tamilnadu/article24042443.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read
அறீவு+அழகு
ஒம்ம பின்னூட்டங்களை பாத்து இந்த வலைத்தளமே சிரிக்குதய்யா.
ஒங்களைப்பத்திய மத்தவங்க கமெண்டை கொஞ்சம் படிச்சு பாரும்.
கன்னா பின்னான்னு ஒளராம இனியாவது கொஞ்சம் அடக்கி வாசியும்.
நான் கேட்ட எந்த கேள்விக்கும் ஒம்மால பதில் சொல்ல முடியலை.
இன்னும், இது வரைக்கும் பதில் சொல்லல்லை. இன்னும் ஒரு சான்ஸ்; அறிவு+அழகு என்பது உண்மையானால், மொதல்ல அதுக்கு பதில் சொல்லும் அய்யா.
தற்போதைய தொடர்ந்து நூறு நாட்கள் போராட்டத்தில் கலந்துக்கிட்டவர் — கோஷம் போட்டவர் — பேரணியில் கால் வலிக்க நடந்தவர் — அங்கே கிடைக்கின்ற அசுத்த தண்ணீரை குடித்தவர் — மூச்சு விட சிரமத்தில் இருப்பவர் — பல வித உடல் நோய்களால் பாதிப்புக்கு உள்ளானவர் — இவர் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிற மனிதர்களை நம்பி அரசியலுக்கு வர நினைக்கும் இவர் — ஒரு பரிதாப கேஸ் … ?
செந்தில், கோவை
அட்ரஸ் இல்லாதவர் பேச்சை எல்லாம் எதற்காக கேட்க வேண்டும் ?
முதலில் அவர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
கண்டவர் பேச்சை யெல்லாம் கேட்டு ஆடுவதற்கு நான் ஒன்றும் சுய அறிவு இல்லாத
அறிவு (+அழகு) அல்ல.
The reception given to Mr Rajini by the people of Thoothukudi could not be digested by the anti
BJP forces of Tamilnadu. The political parties which were subdued when Jayalalitha was in
power has thouht that this is the right moment to throw their hats in the ring were now pondering over now. If Rajini enters politics he will spoil many people’s aspirations esp DMK cong and thiruma. Tamilnadu needs some change. WHY CAN”T IT BE RAJINI?
Mani,
If Rajini enters politics he will spoil many people’s aspirations esp DMK cong and thiruma. Tamilnadu needs some change. WHY CAN”T IT BE RAJINI? //
I also join you…. IT SHOULD BE RAJINI and ONLY RAJINI
ரஜினி அரசியல் கோழை பொய்யர் குருமூர்த்தியின் ஆலோசனை மட்டுமே கேட்கிறார் என்பதற்கு இது சாட்சி, (பார்த்தசாரதி) மருமகன் இப்படித்தான் பேசுவார்.
அப்போ இந்து ராம் சம்பந்தி ஸ்டாலின் எப்படிப் பேசுவார் என்றும் சொல்லுங்களேன்
அது எப்படி எந்த அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஒருவர் ஒரு மாநிலத்தை ஆள முடியும்? அவர் நடிகரோ வேற்று இனத்தவரோ ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு அரசியலில் எந்த முன் அனுபவமும் இல்லை என்றால் எடுப்பார் கைப்பிள்ளையாக தானே இருக்க முடியும்? இவர் தான் தமிழகத்தின் விடிவெள்ளி என்று இங்கே இத்தனை மெத்த படித்த மேதாவிகள் சொல்லும் அரசியல் உண்மையாகவே எனக்கு புரியவில்லை !!!!
raajsree,
அவர் ரொம்ப நல்லவர் இல்லையா…!?
BVS,
அறிவு இருந்தால் தானே இடுகின்ற பின்னூட்டத்தை புரிந்து கொள்ள முடியும். உமக்கு தான் அது இல்லன்னு ஆகிப்போச்சே. நீர் தான் என்ன செய்வீர்.
//கா.சு.வேலாயுதன் யார். //
தெரியனும்னு அவசியம் இல்ல. கருத்து, செய்தி தான் முக்கியம்.
இதற்கு நான் கொடுத்த பதில்,
//என்னை உமக்கு தெரியுமா?
நான் யார் என்ன ஊர் எந்த விபரம் எதுவுமே தெரியாமல் என் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லுகிறீரே எப்படி…?
போலவே, இந்த தளத்திற்கு வருபவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்தே தான் வருகிறார்கள்.
நீரும் கூட யார் என்றே தெரியாது.
யார் எவர் என்று அறியாமலே அவர்கள் தம் கருத்துகளுக்கு பதில் சொல்லி இங்கு விவாதம் நடைபெறவில்லையா…?//
என்று சொல்லி இருந்தும் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் பதில் சொல்ல சொல்லி பின்னூட்டமிடம் உம்ம பார்த்து சிரிக்காமல் என்ன செய்ய….!?
ரஜினி என்பவரை யாருக்கு தெரியும்?
திரைப்படத்தை வைத்து தான். அவர் சினிமாவில் செய்யும் சேட்டைகளையும் வீர தீர பராக்கிரமங்களையும் பார்த்து தான் அப்பாவி தமிழன் அவரை தன் ஆதர்ச புருசனாக வறித்துக் கொண்டு அவர் கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் எல்லாம் செய்து அவர் படங்களை வெற்றியடைய வைக்கிறான். அவர்களில் நீரும் ஒருவராக இருக்க கூடும்.
“சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்”
பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல். தூத்துக்குடியில் அந்த பையனின் ஒற்றை கேள்வியில் நிலைகுலைந்து
போய் எழுப்பி வைத்திருந்த கனவு கோட்டை தவிடு பொடியானதோ என்ற பதட்டத்தின் விளைவு சென்னையில் ரஜினியின் கோபாவேசமும் அதனால் ஏற்பட்ட நிதானமின்மையும். பின் வருத்தம் தெரிவித்தலும். போகட்டும்.
சினிமா மூலமாக கிட்டிய பேரையும் புகழையும் வைத்து தான் முதல்வர் கனவு காணவைத்துள்ளது. அதன் மூலமாக தான் அப்பாவி தமிழனை மூளைச்சலவை செய்து நடிகர்களுக்கு காவடி தூக்கவத்துள்ளது. அதில் நீரும் ஒருவராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அதற்காக கொள்கை முடிவுகளில் பாரதூரமான இரட்டை நிலை எடுக்க வேண்டுமா…? என்பது தான் கேள்வி. இதை எதற்காக இந்த இடத்தில் சொல்கிறேன் என்று புரிந்து கொள்ள முடிகிறதா…?
இன்றைய தமிழக அரசை யார் ஆட்டிவைக்கிறா என்பதை தமிழகமே ஏன் இந்தியாவே அறியும். முதல்வர் சட்டசபையில் கூட அறிவித்தாரே எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த உறவும் இல்லை என்று. நம்பத்தான் ஆளில்லை.
ரஜினியும் அதுபோலவே ஏதோ சொன்னார். ஆனால் நடப்பு…!
போங்கப்பு போய் இறைவனிடமே கையேந்துங்கள் உங்களுக்கு புரிந்து கொள்ள கூடிய அறிவை தரச்சொல்லி.
இதற்குப் பிறகும் வருவீர். ஏதாவது ஒரு வார்த்தையை தூக்கி கிட்டு. கண்டுக்க போரதில்லை.
அறிவு + அழகு
நீர் எழுதியிருப்பது ;
////கா.சு.வேலாயுதன் யார். //
தெரியனும்னு அவசியம் இல்ல. கருத்து, செய்தி தான் முக்கியம்.//
அதற்கு முன்னால் நான் கேட்டது :
” ரஜினி தூத்துக்குடி செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே அவருக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும். நிருபர் சந்திப்பில் கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்!’ என்றெல்லாம் தெளிவுபட எடுத்துரைத்தாராம். ஆனால் அதையெல்லாம் அவர் சுத்தமாக மறந்து விட்டார்.”
-இதை காசு வேலாயுதன் கூட இருந்து கேட்டாரா ? பார்த்தாரா ?
பின் அவர் சொல்லும் இந்த ‘சொன்னாராம் – கேட்டாராம்’ போன்ற “ராம்”களை நீங்கள் எப்படி சீரியசாக எடுத்துக் கொள்கிறீர்கள் ? //
காசு வேலாயுதம் யாரென்று தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறீரே. அதெப்படி ? அட்ரஸ் இல்லாத அநாதைகள் சொல்வதை எல்லாம் எப்படி நம்ப முடியும் ? ஒன்று, காசு அந்த அரசியல் ஆலோசகர் அல்லது ரஜினிக்கு நெருக்கமானவராக இருந்திருக்க வேண்டும்; உடனிருந்து கேட்டிருக்க வேண்டும் அல்லவ்து பார்த்திருக்க வேண்டும்; அல்லது உமக்கு தெரிந்தவராக, நம்பகமானவராக இருக்க வேண்டும்.
இந்த இரண்டும் இல்லாத தெருவில் போகிறவர்கள் சொல்வதையெல்லாம்
நம்பி இங்கு பின்னூட்டம் போடும் மனிதரை என்ன சொல்வது ? இனி நீர்
அறிவு+அழகு கூட இல்லை; மைனஸ் அறிவு+அழகு தான்,