…
…

…
கீழே இருப்பது – அதிகாரபூர்வமாக, கணக்கில் காட்டப்பட்டுள்ள பணம் … மற்றபடி கணக்கில் காட்டப்படாமல் கொடுத்த பணம் எவ்வளவோ…சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அறிந்த உண்மை அது…!!!
அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் 20,000 -க்கு மேல் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்தாக வேண்டும் என்கிற சட்ட விதியின் அடிப்படையில், 2013-14-ஆம் நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடை
விவரங்கள், அதன் தலைமை அலுவலகத்தால், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது…. அந்த விவரங்களை ADR (Association for Democratic Reforms) அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
அதிலிருந்து ஒரு பகுதி கீழே –
..

..
மேலே உள்ள ஆவணத்தின்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பாஜகவுக்கு, தங்களது ICICI வங்கிக்கணக்கிலிருந்து, காசோலை எண் 837331 மூலம் 4 கோடி ரூபாயும், காசோலை எண் 837332 மூலம் மூன்றரை கோடி ரூபாயும், 2014 தேர்தலுக்கு சற்று முன்னதாக அளித்திருப்பது தெரிய வருகிறது…. ஆட்சிக்கு வரப்போகிறவர்கள் யார் என்பதை அவர்களால் முன் கூட்டியே மோப்பம் பிடிக்க முடியாதா என்ன…?
2014-க்குப் பிறகு கொடுத்த விவரங்கள் இப்போதைக்கு வெளியாகவில்லை…!
இப்போதைக்கு இது ஒன்று தான் உடனடியான, ஆதாரபூர்வமான விவரமாக கிடைத்திருக்கிறது என்றாலும் கூட, 2004 முதல் 2015 வரை இதே ஸ்டெர்லைட் நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு 6 கோடி ரூபாய் “கொடை” கொடுத்திருப்பதாக இன்னொரு தகவல் சொல்கிறது.
இதைத்தவிர, நமது “லோக்கல்” கட்சிகளான, திமுக, அதிமுக -வுக்கு எவ்வளவு “கொடை” கொடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் இப்போதைக்கு கிடைக்காவிட்டாலும் இதைப்போல பலமடங்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது அநேகமாக கணக்கில் வந்திருக்காது – முக்கியஸ்தர்களின் பாக்கெட்டுகளுக்குப் போயிருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே….
தூத்துக்குடி போராட்டங்களில், நமது முக்கிய கட்சிகள் “காட்டிய அக்கறை” எத்தகையது என்பதை இந்த விவரங்களின் மூலம் “ஓரளவு” தெரிந்துகொள்ளலாம்…!
——————————————————————————————————————-



பிங்குபாக்: ஸ்டெர்லைட் – பாஜகவுக்கு கொடுத்த “கொடை” – ஏழரை கோடி…!!! மற்றவர்களுக்கு எத்தனையோ…??? – TamilBlogs
// ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பிருக்கிறது ! // http://www.puthiyathalaimurai.com/news/special-news/45801-whats-is-the-relation-between-sterlite-copper-and-bjp.html என்னமோ நடக்குது ……
// நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
” தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன் ”
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான் // என்று ” என் மகன் ” படத்தின் பாடல் வரிகள் காலத்தால் அழியாதது …!!
அய்யா …! அன்னையின் ஆணை படத்தில் ” சாம்ராட் அசோகன் ” நாடக காட்சியில் : போர் .. உச்சமான போர் .. ஒரு நாளல்ல 160 நாட்கள் போர் நடந்தது — கலிங்கம் வீழ்ந்தது … ஆனால் …. அனைத்தையும் அழித்துவிட்டு பின்னால் —- அன்பு தான் இன்ப ஊற்று .. அன்புதான் உலக ஜோதி … அன்புதான் உலக மகா சக்தி … ! என்று புரிய வைத்தது அன்று — இன்று
நாட்டில் நடப்பவைகளை பார்க்கும் போது சிவாஜியின் அசோகன் பாத்திரம் தான் நினைவுக்கு வந்தது … !!!
// சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் பண தர்மம்! // https://minnambalam.com/k/2018/05/30/25 … இப்படியெல்லாம் செய்து மக்களை ஏமாற்ற நினைப்பதற்கு பெயர் ” அரசியல் சாணக்கியத் தனமா ” … ?