கோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…!!!


பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, கட்சி ரீதியாக செய்யும் பிரச்சாரங்களுக்கு மக்களிடம் மதிப்போ, நம்பிக்கையோ ஏற்படுவதில்லை என்பதால் –

அன்றாடம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஊடகங்களில் ஊடுருவி, அதன் மூலம் அவர்கள் எண்ணங்களை தங்களுக்கு சாதகாகத் திருப்பும் வழியில் – மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கும் ஊடகங்களை ரகசியமாக விலைபேசி
தங்களுக்கு சாதகமாக செயல்படுத்தும் முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டிருக்கிறது….. நடுநிலையோடு இவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ஏற்கெனவே இதனை உணர்கின்றனர்.

இப்போது, மற்ற சாதாரண பொதுமக்களும் நம்பும் வகையில், உரிய ஆதாரங்களுடன் – கோப்ராபோஸ்ட் தளம் தனது ஸ்டிங் ஆபரேஷன்களின் மூலம் பல அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது..

நம்புவதற்கே கடினமாக இருக்கும்….

பெரிய பெரிய ஊடகங்கள் கூட, கோடிகளில் பணம் பெற்றுக்கொண்டு, மத உணர்வுகளை ஊக்குவிக்கும் வகையிலும், இந்துத்வா சக்திகளுக்கு விளம்பரம் கொடுக்கும் வகையிலும் paid news வெளியிட தயாராக இருப்பது தெரிய
வருகிறது….

இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான செய்திகள் மட்டுமல்ல, சமுதாய நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அதன் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் விதமாகவும் செயல்படத் தயார் என்று சொல்லி விலைபோயிருக்கிறார்கள் பிரபல ஊடகத்தினர்.

இந்துத்துவ சக்திகள் போல தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இந்தியா முழுதும் சுமார் 24 ஊடக நிறுவனங்களை கோப்ரா போஸ்ட் செய்தியாளர்கள் அணுகியிருக்கிறார்கள்…

அவர்கள் அணுகிய ஊடகங்களில், வர்த்தமான், டெய்னிக் சம்பத் ஆகிய இரண்டே இரண்டு வங்காள மொழி ஊடகங்களை தவிர அநேக புகழ்பெற்ற ஊடகங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

கோப்ரா போஸ்ட் அணுகிய ஊடகங்களில் – அவர்களுக்கு இணக்கம் தெரிவித்தவற்றில் ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏபிபி, பிக் எஃப் எம் (ரேடியோ), தைனிக் ஜாக்ரன், தினமலர், சன் குழு, புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆகியவையும் உள்ளன….என்று சொல்கிறது கோப்ரா….!!!

இது குறித்த விவரங்களை இன்னும் முழுவதுமாக படிக்க முடியவில்லை. மேலும் செய்திகளை ஆராய்ந்த பின்னர் கிடைக்கும் தகவல்களை பின்னர் தனியே பதிவிடுகிறேன்….

இதிலிருந்து இப்போதைக்கு கிடைக்கும் உறுதியான ஒரு ஆலோசனை –

“எந்த மீடியாவையும் (ஊடகத்தை), அது எவ்வளவு பெரிதாகவும்,
புகழ்பெற்றதாகவும் இருந்தாலும் – முழுவதுமாக நம்பி விடக்கூடாது…” என்பதே…

———————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…!!!

  1. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    Dinamalar for sure. They are not publishing any news about Tuticorin incidents.

  2. பிங்குபாக்: கோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…!

  3. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    மக்கள் நலன் என்றெல்லாம் இனி ஒன்றும் இருக்காது. கறை படிந்த ஆட்சியாளர்கள் என்பது இனி ரத்தக்கறை படிந்த ஆட்சியாளர்கள் என ஆகும். ஜனநாயகம் இனி மெல்ல அல்ல வேகமாகவே சாகும். இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ? ஆம், ரத்தகறையாக…
    வலிக்குது, வருங்காலத்துக்கு என்ன மாதிரியான சமுகத்தை விட்டு வைக்க போகிறோம். 67 உயிர்கள் பலி போனதாக சொல்கிறார்கள். சில சடலங்களை வேறு மாவட்ட அரசு மருத்துவமனை அனுப்பி விட்டதாக நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார். இறந்து போன உயிர்களின் வலி அறியாமல் அதற்கும் சிலர் நியாயம் மற்றும் மதச்சாயம் பூசுகிறார்கள்.
    ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் மக்கள் வாழும் நாட்டில் Fitness challenge என்ற கேலி கூத்தில் பிரதமரும் ஈடுபடுகிறார், வெட்ககேடு.

  4. T.Thiruvengadam's avatar T.Thiruvengadam சொல்கிறார்:

    This Cobra post was involved in a scandal in West Bengal involving TMC leader and was found to operating under the best of. Foreign paymaster.KM a few years back mentioned the connection of Sibal with Tehelka which tried entangle George Fernandes and a few army officersMost of the Indian media houses are financed by external agencies through their proxies.An rTI query will bring out the subterranean and clandestine operation to destabilize the country.Thiruvengadam

  5. BVS's avatar BVS சொல்கிறார்:

    Thiruvengadam

    //An rTI query will bring out the subterranean and clandestine operation to destabilize the country.//

    ஸ்டிங்க் ஆபரேஷன் செய்து உண்மையை வெளிப்படுத்தினால்
    நாட்டைக் குலைக்க சதி என்று பொருளா ? Thiruvengadam = பாஜக அடிமை
    என்று பொருள் கொள்ளலாமா …?

  6. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    மத வெறி, மத சார்பு எல்லாவற்றையும் விட, பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இந்த ஊடகங்கள் எல்லாமே, இந்து மத எதிர்ப்பிற்கும் இதே அளவு ஆதரவு கொடுக்கும், பணம் கிடைக்கும் என்றால்.

    துரதிருஷ்ட வசமாக, இந்த கோப்ரா போஸ்ட் -உம் இதே போன்ற ஒன்று தான். இல்லையேல், பணத்திற்காக எதையும் எழுத துணிபவர்கள் என்று சொல்லாமல், இந்துத்துவாவிற்கு ஆதரவாக எதையும் செய்ய துணிபவர்கள் என்று எதற்கு சொல்ல வேண்டும்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.