இப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….!!!



– முன் குறிப்பு – இந்த இடுகையில் இருப்பது அனைத்தும் செய்திகளே… நமது கருத்தோ, எழுத்தோ, எதுவுமே இங்கே இல்லை…(தலைப்பைத் தவிர…! )

—————-

வசிஷ்டர் ஆன ஸ்டாலின் :

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், முதல்வர் பதவி விலகக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழகம் முழுதும் திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று (மே 25) ஆர்பாட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலும், சோத்துப்பாக்கத்திலும் இரு திருமண நிகழ்ச்சிகளுக்கு இன்று தேதி கொடுத்திருந்தார் ஸ்டாலின். அதனால் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு மதுராந்தகத்திலேயே ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளத் தீர்மானித்தார்.

இன்று காலை அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் மகன் பிரகாஷுக்கும், மதுராந்தகம் நகர செயலாளர் மகளுக்கும் திருமணத்தை அச்சரப்பாக்கத்திலுள்ள மோனோலட்சுமி திருமண மண்பத்தில் நடத்தி வைத்தார் ஸ்டாலின்.

இந்தத் திருமண விழாவில் மேல்மருவத்தூர் ஆதிபராக்தி அடிகளாரின் மூத்த மகனான அன்பழகன் பேசுகையில் –

“திமுக விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

நிறைவாக ஸ்டாலின் பேசுகையில், “வசிஷ்டர் வாக்கு பலிக்கும் என்று சொல்வார்கள். அதுபோல அன்பழகன் அவர்கள் வாக்கு பலிக்கும். அவர் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைவருமே இன்று இதைத்தான் சொல்கிறார்கள்.

இன்று நாம் திருமண விழாவில் இருக்கிறோம். ஆனால் நாட்டின் நிலைமை சரியில்லை. இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாம் போராட இருக்கிறோம். இன்னும் சில மணி நேரங்களில் இதே மண்டபத்தில் நாம் கைதாகி அடைக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை’’ என்று தெரிவித்தார்.

ஆனால் ஸ்டாலின் வாக்கே வசிஷ்டர் வாக்காகி சில மணி நேரங்களில் அதே மோனோ லட்சுமி திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு ஸ்டாலின் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். மண்டபம் கொள்ளாத அளவுக்கு தொண்டர்கள் அடைக்கப்பட்டன.

மதுராந்தகத்தில் இருந்து அச்சரப்பாக்கம் வரவே சில மணி நேரங்கள் ஆகிவிட்ட நிலையில் திருமண மண்டபத்திலேயே அனைவருக்கும் சாப்பாடு சமைக்கப்பட்டது.

தொண்டர்களோடு அமர்ந்து சாம்பார் சாதம், ரசம் தாசம், மோர் சாதம் சாப்பிட்ட ஸ்டாலின் மதிய உணவுக்குப் பிறகு கட்சியினருடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்துவிட்டார்.

காஞ்சி மாவட்டத்திலுள்ள ஒன்றிய செயலாளர்கள், மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், செய்யூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் தம்பு உள்ளிட்டோரை அழைத்து கள ஆய்வுக்குப் பின் கட்சி எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆலோசனை நடத்தினார். மேலும் அண்மையில் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப அணிக்கு மாவட்டம் முழுதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்களா என்று கேட்டார். கிளை அளவில் பூத் அளவில் தகவல் தொழில் நுட்ப அணியின் நிர்வாகிகளை வரவழைத்து அவர்களோடு பேசி, ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் பல சீனியர் கட்சிப் பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து கட்சி இப்போது எப்படி இருக்கிறது என்றும் கேட்டறிந்தார். தனக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புக் காவல்படை வீரர்களை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, திருமண மண்டபத்திலேயே இன்று காஞ்சி மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார் ஸ்டாலின்.

தொண்டர்களுக்கும் செயல் தலைவரைப் பார்த்து பேசி புகைப்படம் எடுத்ததில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.

மாலை ஆறு மணி அளவில் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்….

( ஆக, தூத்துக்குடியில் 13 பேரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நடத்திய மாபெரும் போராட்டம் இனிதே வெற்றிகரமாக நடந்து முடிந்தது…!!! )

மாலை 7, வெள்ளி, 25 மே 2018

25

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….!!!

  1. பிங்குபாக்: இப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….!!! – TamilBlogs

  2. BVS's avatar BVS சொல்கிறார்:

    இதில் யார் வசிஷ்டர் ?
    இங்கே திரிசங்கு தானே கண்ணுக்கு தெரிகிறார்?

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    // திருமண மண்டபத்திலேயே அனைவருக்கும் சாப்பாடு சமைக்கப்பட்டது.//

    ஏன் சார், போரட்டம் நடத்தியவர்களுக்கு கல்யாண சாப்பாடா ?
    அதுவும் அரசாங்க செலவிலா ?
    இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்களா ?

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஏனுங்க கட்சி பணியாற்றியது ஒரு குத்தமாய்யா…..!?

    அத எழவு வூட்லயாய்யா போய் செய்வீங்க….?

    அவ்வ்வ்…..!

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:
  6. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    பழைய பின்னூட்டம் யாம் இட்டது மே 22, 2018 அதில் இருந்து ஒரு சில பகுதிகள் — நடந்தது — நடக்கிறது — இனி நடக்கபோவதும் … எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வெகு சூப்பர் …. !! // கைதாகி குளிர்சாதன வசதியுள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்கி உயர் ரக உணவை உண்டு — உறங்கி மாலையில் விடுதலையாகி கம்பீரமாக வெளியே வருகிறோம் … நாங்கள் இந்த கிளை சிறைச்சாலை — மத்திய சிறைச்சாலை பக்கமெல்லாம் சென்று பல வருடங்கள் கடந்து விட்டன …! சட்டசபைக்குள் சென்றதும் — உடனே வெளிநடப்பு செய்து ” கின்னஸ் ” சாதனைக்காக காத்திருக்கிறோம் …!! —-

    தினம் ஏதாவது ஒரு வாழ்வாதார பிரச்னை அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதால் இப்போதெல்லாம் எங்களால் முடிந்தது – ஒரு அறிக்கை விடுவது – அப்புறம் குறட்டை விட்டு அடுத்த அறிக்கைக்கு ரெடியாவது — தனியே செய்துக் காட்டிய போராட்ட சூடு – சொரணை எல்லாம் — தற்போது ” மரத்து போய் ” தோழமை என்று கூட்டாக செய்து காட்டும் நிலையில் இருக்கிறோம் …! // —-
    போராட்டம் — என்னும் பிற காரணங்களினால் // பல உயிர் இழப்புகளுக்கு – அரசு நிர்ணயிக்கிற உயிருக்கான விலையை — நாங்கள் கொஞ்சம் அதிகமான விலையை நிர்ணயித்து கொடுக்க சொல்லி அறிக்கை விடுகிறோம் — இறந்தவரின் வீடுகளுக்கே சென்று ” ஒப்பாரி ” வைத்து கண்ணீர் சிந்தி எங்களது திறமையைக் காட்டுகிறோம் …சிபிஐ விசாரணை என்று கூக்குரல் இடுகிறோம் … ! // இதுல வசிஷ்டர் ஆதிபராக்தி அடிகளாரின் மூத்த மகனான அன்பழகன் கூறிட்டார் அடுத்த ஆட்சி திமுக அமைக்கும் என்று – அப்புறம் என்ன திருமண மண்டபங்கள் — விருந்துகள் — ஓய்வு — ஸ்டெரைட்டா முதல்வர் நாற்காலி தான் …!!!

  7. Senbagapandian's avatar Senbagapandian சொல்கிறார்:

    அய்யா , நீட் தொடர்பான அனிதா தற்கொலை விஷயத்தை எப்படி கடந்து போனீர்களோ அப்படியே தூத்துக்குடி ஸ்டெரிலைட் தொடர்பான காவல் துறை துப்பாக்கி சூட்டையும் தி மு க வை நய்யாண்டி செய்து விட்டு எப்படி இவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடிகிறது ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      கடந்து சென்று விட்டதாக நீங்களாக ஏன் கற்பனை செய்து கொள்கிறீர்கள்…?

      எதிர்க்கட்சித் தலைவர் நடத்தும் விளம்பர நாடகங்களை நையாண்டி செய்யக்கூடாது என்று சொல்கிறீர்களா…?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்…. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் காரணத்தை முடிந்தால் செக் பண்ணிப் பதிவிடவும். ஸ்டெர்லைட் ஆலையை யார் எதிர்க்கிறார்கள், யார் அந்த ஆலையினால் பயன் பெற்றவர்கள் என்பதையும் புலனாய்வு செய்தால் திமுகவின் சுய உருவம் தெரிந்துவிடும். போராட்டம் நடத்துபவர்கள், சிரிப்பு சேனல் மற்ற சேனல்களை நடத்துவது ஏன்? அவர்கள் தொலைக்காட்சிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கவேண்டியதுதானே. ஸ்டெர்லைட் ஆலைக்கான காண்டிராக்ட் வேலைகளை திமுக எடுத்துச் செய்யவில்லையா?

        ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கார்னெட் மணல் கொள்ளையையும் மக்கள் எதிர்க்கவேண்டாமா? ஆறுகளில் மணல் கொள்ளைக்கு திமுக காரணமில்லையா? அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா? காங்கிரஸ் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியபோது திமுகதானே மத்தியில் இருந்தது? அவர்களும்தானே இதற்கு உடந்தை?

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          தூத்துக்குடி சம்பவங்கள் தொடர்பாக என்னிடம் சில சங்கடமான செய்திகள் இருக்கின்றன… ஆனால், அவற்றை பதிவிடுவது அல்லது இந்த வலைத்தளத்தை தொடர்ந்து நடத்துவது என்கிற இரண்டு options -ல்
          இரண்டாவதை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்… மன்னித்துக் கொள்ளவும்.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

  8. mani's avatar mani சொல்கிறார்:

    So far all the dramas enacted by Mr Stalin failed miserably including the recent sterlite incidident..
    The people who are crying foul now should have opposed the formation of the factory when it was
    shunted out of from Maharashtra .Kerala does not want any industry in their soil and their people
    are working in gulf for their livelihood. But Tamilnadu is not like that, it should be industrialsed enough with non polluting, environment friendly industries
    for employment of lakhs of people who are coming out of colleges every year. If sterlite is not safe why you allowed them to start the factory in the first place? politicains were paid huge sums of money then for formation of factory and all the clearences
    to start the factory. . But now for political reasons these opportunistic leaders who initially gave the permission are now opposing it.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.