…
…

…
அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்…….?
ரசாயன பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், செயற்கை விதைகள் – ஆகியவற்றிற்கு எதிராக இயற்கை வழி விவசாயத்தை சொல்லித்தந்தவர் நமது போற்றுதலுக்குரிய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…
அவரது பல ஆண்டுக்கால உழைப்பின் பலன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழக விவசாயிகளிடையே தெரிய ஆரம்பித்திருக்கிறது….
அவரது சுவாரஸ்யமான ஒரு உரை கீழே….
விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு – ஒரு விமோசனம் – அய்யா நம்மாழ்வார் கொடுத்தார்….இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்….
ஆனால், லஞ்சம், ஊழல், மக்கள் பணத்தில் கொள்ளை ஜாதி வெறி, மதவெறி, இனவெறி – பிடித்த இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க இன்னொரு நம்மாழ்வார் வருவாரா…?
…
—————————————————————————————————————————–



பிங்குபாக்: அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்…….???? – TamilBlogs
முதலில் மக்கள் அயோக்கியர்களை தலைவர்களாக
கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். பிறகு, அவர்களிடமிருந்தே
நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.
இயற்கை தாத்தா நம்மாழ்வார் பற்றி திரு ஜெயமாேகன்…. // ஆமாம், வாழைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும் என்பதையெல்லாம் வாழைகள் நடுவே பிறந்து வளர்ந்த நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றேன்.
நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து ‘ஐயா, என்ன சொன்னீங்க? பூச்சி மருந்தா? மருந்துன்னா அது வாழ வைக்கணும் இல்லீங்களா? உயிரை வளக்கிறதுதானுங்களே மருந்து? அழிக்கிறது எப்டிய்யா மருந்தாகும்? எப்பவாச்சும் நாம விஷத்த மருந்துன்னு சொல்லியிருக்கோமா? இப்ப நம்ம மொழியிலே அப்படிச் சொல்லவச்சிருக்காங்க பாத்தீங்களா? நாம இப்ப போராடீட்டிருக்கிறது மண்ணோட இல்லீங்க, நம்ம வாயிலே இருக்கிற நம மொழியோடதானுங்க’ என்றார். பின்பு யோசித்துப்பார்த்தபோது அவரது வாழ்க்கையின் செய்தியையே அவர் சொல்லிவிட்டதாக உணர்ந்தேன். // என்று கூறுகிறார் …! பூச்சி மருந்தா ..காெல்லியா …?