பட்ட துன்பம் அனைத்தும் இதற்குத்தானா ……?


நிறைய விஷயங்கள் எழுத விரும்புகிறேன்…
ஆனால்….சூழ்நிலை ….. முடியவில்லை…

நினப்பதையெல்லாம் சொல்லும் சுதந்திரம் –
இன்று எமக்கில்லாமல் இருக்கலாம்….

ஆனால், நினைவைத் தடுப்பதற்கு யாரால் முடியும் … ?

.
————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to பட்ட துன்பம் அனைத்தும் இதற்குத்தானா ……?

  1. பிங்குபாக்: பட்ட துன்பம் அனைத்தும் இதற்குத்தானா ……? – TamilBlogs

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நான் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எதையும் எழுத விரும்பவில்லை…

    சில கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன் –

    – மொத்தம் எத்தனை பேர் ( துப்பாக்கியால் சுடப்பட்டு) சடலங்களாக கண்டெடுக்கப்பட்டார்கள்…?

    – ஒரே இடத்திலா…? வெவ்வேறு இடத்திலா…? எங்கெங்கே…? அந்தந்த இடங்களில் எத்தனை பேர்…?

    – துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஒரே சமயத்திலா…? அல்லது வெவ்வேறு தருணங்களிலா…?

    – துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் எத்தகைய பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது…?

    – துப்பாக்கி சூடு நடந்த இடங்களில் எல்லாம் அத்தகைய பதவி வகிக்கும் அதிகாரிகள் இருந்தார்களா…?

    – இப்போதெல்லாம் காவல் துறை நடவடிக்கை எடுக்கும் இடங்களிலெல்லாம் வீடியோவும் எடுக்கப்படுகிறது.. இந்த துப்பாக்கி சூடு நடந்த இடங்களிலெல்லாம் வீடியோ பதிவு எடுக்கப்பட்டிருக்கிறதா…?

    – செய்திகள் (வதந்திகள் அல்ல… செய்திகள்) சொல்வதில் தணிக்கை முறை எதாவது அமல்படுத்தப்பட்டிருக்கிறதா…?

    – மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கண்டு, பொதுமக்களுக்கு தெரிவிக்கும் கடமையும், வாய்ப்பும் மீடியாக்களுக்கு மட்டுமே இருக்கிறது… அவர்கள் அதைச் செய்யத் தவறியது/ தவறுவது ஏன்…?

    – மனசாட்சியுள்ள மீடியாக்கள் இப்போதாவது முழு உண்மையை சொல்ல வேண்டும்…. இந்த சமயத்தில் வதந்திகள் பரவாமல் தடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்… அதற்கு – உண்மைகள் சொல்லப்படுவதும் அவசியம்.

    மீடியாக்கள் தங்கள் கடமையை செய்யுமா…?

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    Seiyathu.

  4. mani's avatar mani சொல்கிறார்:

    Entire media in Tamilnadu is biased..They want to thrust their own opinion on the people .It is very dangerous to spread rumours and lies. Media should not sensationalise any issue and only tell the truth to the people. responsible journalism should be there But most of the TV media is owned by
    politicians. That is where the problem starts.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // சபாஷ் விகடன்! //
    Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/daring-journo-tames-gun-bearing-police-tuticorin-320633.html : … இந்த நிருபருக்கு ஒரு ராயல் சலுயூட் …!

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்னும் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன….

    இவை அனைத்தையும், அங்கேயிருந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள்,
    காமிராமென்கள் அறிவார்கள்…. ஆனால் அவர்களது முதலாளிகள் –
    மீடியா முதலாளிகள் – அவற்றை பிரசுரிக்கத் தயாராக இல்லை…

    ஏனோ ….என்ன காரணமோ… ? அவர்களுக்கும், ஆண்டவனுக்கும்,…. ஆள்கின்றவர்களுக்கும் தான் தெரியும்.

    கொஞ்சம் சூடு குறைந்த பின்னர், நிறைய உண்மை விவரங்கள் வெளியே வரும்
    என்று நம்புவோம்.

    – தூத்துக்குடி மண்ணும், மக்களும் விரைவில் அமைதி பெற வேண்டுவோம்.

    .

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      இந்த நாடு tyrant ஆட்சியை நோக்கி நகர்த்தபடுகிறதா?

      1. மீடியாக்களுக்கு தடை.
      2. அறவழிப் போராட்டங்களை கலவரங்களாக மாற்றுவது.
      3. அதிகார வர்க்கத்தை காவி மயமாக்கும் முயற்சி – ஐஏஎஸ், ஐபிஎஸ் – சேவை மற்றும் கேடரை முடிவுசெய்ய ஒரு கூடுதலான அடுக்கு மதிப்பீடு முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருவது.
      4. நாட்டில் என்ன அட்டூழியம் நடந்தாலும் வாயே திறக்கமாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருக்கும் பிரதமர்.

      நாடு பெரும் அழிவை சந்திக்கப் போகிறதோ?

      இறைவா காப்பாற்று.

      • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

        ‘நியூஸ் 7 கேள்வி நேரம்’ தூத்துக்குடியில் தொடரும் போராட்டம் : நீடிக்கும் பதற்றம் : என்ன செய்ய வேண்டும் அரசு? விவாத நிகழ்சியில், பாலதண்டாயுதபானி என்கிற ஓய்பெற்ற காவல் அதிகாரி, அருமையான உண்மையான விளக்கங்களை தந்து முக்கியமான ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

        ”அமைதியாக வன்முறையில்லாமல் போராடி வந்த மக்களை வன்முறை நோக்கி தூண்டியது யார்?”

        நான் காவல் துறையில் இருந்தவன் என்றாலும் இந்த கேள்வியை ஏன் கேட்கிறேன் என்று நினைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டே கேட்கிறார்.

        Well said sir. I really appreciate and solute you sir.

  7. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    நடந்தது என்ன ? அது மறைக்கப்படுகிறது .
    ஸ்டெர்லைட் ஆலை நிறைய சம்பாதித்து கொடுத்து உள்ளது .
    அரசியல் செய்த எல்லோரும் நன்றாக கவனிக்கப்பட்டார்கள் .
    94 ல் இருந்து இது நடக்கின்றது .
    இப்ப உள்ளூர் ஆட்களுக்கு பிரச்னை – காற்று ,நீர் ,நிலம் எல்லாம் மாசு .
    இதை சரி செய்ய கட்சிகளுக்கு அவசியம் இல்லை .
    கிராம மக்களே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்தனர் .

    இதை ஸ்டெர்லைட் சமாளிக்க வழி என்ன ?
    காசு பணம் துட்டு மணி – வேலை செய்யாது .
    ஆலையை மூடுவது ஒன்றே வழி – அது முடியாது .

    போராட்டம் செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் .
    அதை செய்ய ஏவல் துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள் .

    போலீசுக்கு கூட்டத்தை நோக்கி சுடும் அதிகாரம் இல்லை .
    கூட்டம் வன்முறையில் ஈடுபட்டால் அதை கலைக்க அதிகாரம் உண்டு .
    முதலில் பேச்சு நடத்த வேண்டும் – கட்டுக்குள் வரவில்லை என்றால்
    பிறகு கண்ணீர் புகை , தடியடி நடத்தலாம் .( See TN police standing Orders )

    வன்முறை நிகழ்ந்தால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் .
    சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்க்க வேண்டும் .(Law & Order)
    சுடும் உத்தரவு டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் மட்டுமே அளிக்க முடியும் .

    வன்முறை நடந்து இருக்கிறது – அதை கட்டுக்குள் கொண்டு வர
    துப்பாக்கி சூடு நடத்த நேரிட்டது என்பது அரசு தரப்பு வாதம் .

    இது வரை வேன் மீது நின்று குறி பார்த்து சுட்டது கிடையாது .
    இது இஸ்ரேல் , பாலஸ்தீனரை அடக்க செய்வது .
    இறந்தவர்களில் எவரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை !

    இப்போது தீவிர வாதத்தை கட்டுக்குள் கொண்டு வர
    இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை வரும்

    • மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

      தூத்துக்குடியில் அமைதி திரும்ப வேண்டுமானால் போலீசை
      வெளியேற்ற வேண்டும் – இது அங்குள்ள மக்களின் கோரிக்கை .

      போலீஸ் காவல் துறை போன்று இல்லாமல் கம்பெனியின்
      அடியாள் போன்று செயல்பட்டிருக்கிறது .
      சாதாரண மக்கள் தாக்கப்பட்டு மிரட்டப்படுகிறார்கள் .

      வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட இவ்வளவு மோசமாய் நடந்ததில்லை .
      இப்ப இருக்கிற ஐ பி எஸ் அதிகாரிகள் வெள்ளைக்காரனுக்கு
      பிறந்தவர்கள் போல துரைத்தனம் செய்கிறார்கள் .

      செய்திகள் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்துள்ளன .
      இது ஒரு பாடம் – யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்று .

      என்ன செய்ய வேண்டும் ? முதலில் அமைதியாக இருந்து
      செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் .

      Habeas Corpus ! உயிருடனோ பிணமாகவோ கொண்டு வர சொல்லும் மனு .
      அடுத்தது நெறைய வீடியோ சான்றுகளை திரட்டி தயார் செய்ய வேண்டும் .
      மூன்றாவது கோர்ட் நடவடிக்கையில் ஒரு கட்சியாக சேர்ந்து கொள்ள வேண்டும் .

      சாட்சியங்கள் வலுவாக இருந்து கூடவே கேஸையும் நடத்தினால்
      ஊத்தி மூட முடியாது – வேணுமானால் வாய்தா வாங்கலாம் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.