ரெண்டரைப் பக்கம் : அடுத்த செவ்வாய் – இப்படியும் நடக்குமோ….?


……… கூடுகிறது.

……: கர்நாடகா வக்கீலைப் பார்த்து – என்ன… தமிழ்நாட்டிற்கு 4 டி.எம்.சி. நீர் திறந்து விட்டீர்களா…?

க.வ…..: யுவர் ஹானர்… ஒரு சிறிய சந்தேகம்… விளக்கம் தேவைப்படுகிறது. விளக்கம் கொடுத்து விட்டால் அதன் பிறகு செயல்படுகிறோம்.

……..: அப்படி என்ன சந்தேகம்…?

க.வ. : அப்படி பெரிதாக ஒன்றுமில்லை. முன்னால் மத்திய அரசுக்கு “ஸ்கீம்” என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போயிற்றே… அது மாதிரி தான்…!

……….: உங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்திரவில் என்ன சந்தேகம்…?

க.வ.: மை லார்டு… டூ ப்ளஸ் டூ ; ஃபோர் டி.எம்.சி என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்த ஃபோர் டி.எம்.சியை எந்தெந்த அணையிலிருந்து கொடுக்க வேண்டும் என்பதில் தான் சந்தேகம். நன்றாகவே படித்துப் பார்த்து விட்டோம். அதைப்பற்றி உத்திரவில் எதுவும் இல்லையே… 4 அணைகள் இருக்கின்றனவே… எது எதிலிருந்து எத்தனையெத்தனை டி.எம்.சி. கொடுப்பது….?

……….: இது வழக்கை தேவையில்லாமல் இழுத்தடிக்கும் வேலை. இத்தகைய போக்கை அனுமதிக்க முடியாது.

க.வ.: இந்த வழக்கில், இதற்கெல்லாம் ஏற்கெனவே முன்னுதாரணம் இருக்கிறது. இந்த மாதிரி அர்த்தம் புரியாமல் விளக்கம் கேட்பது சகஜம் தான் மை லார்டு.

………: நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் 4 டி.எம்.சியை கொடுத்தேயாக வேண்டும்… இந்த உத்திரவை நிறைவேற்றத் தவறினால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

க.வ.: இங்கே மீண்டும் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது மை லார்டு. ஆனால், இந்த விளக்கத்தை அடுத்த முறை கூடும்போது கேட்டுக்கொள்கிறோம்.

……..: நீங்கள் மீண்டும் மீண்டும் தாமதப்படுத்த முயற்சிக்கிறீர்கள்… என்ன விளக்கம்… இப்போதே கேளுங்கள்…

க.வ.: ஒன்றுமில்லை மை லார்டு. சின்ன விஷயம் தான். உத்திரவை நிறைவேற்றவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று இங்கு கூறப்பட்டது…. அந்த கடுமையான விளைவு என்ன என்பதையும் சொல்லி விட வேண்டுகிறோம்.

………: அதை இப்போது சொல்ல வேண்டியதில்லை. எதிர்நோக்கும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்…. ஆமாம் – அதை ஏன் இப்போது கேட்கிறீர்கள்….? நீங்கள் உத்திரவை நிறைவேற்றப்போவதில்லையா…?

க.வ.: இல்லை மை லார்டு… அந்த கடுமையான விளைவு என்னவென்று தெரிந்தால், உத்திரவை நிறைவேற்றுவதா அல்லது கடுமையான விளைவை எதிர்கொள்வதா என்று அனைத்து கட்சிகள் கூட்டம் ஒன்றை கூட்டி, தீர்மானிக்க வசதியாக இருக்கும்…!!!

ம.அரசு வக்கீல் குறுக்கிட்டு, எங்களுக்கு இன்னும் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும் மை லார்டு….

………: ஏன்… எதற்காக….?

ம.அ.வக்கீல் : கேபினட் செக்ரட்டரி மாமியார் வீட்டிற்கு 10 நாட்கள் லீவில் போயிருக்கிறார். அவர் அலமாரியில் தான் ஃபைல் இருக்கிறது…. அவர் வந்தால் தான் ஃபைலை எடுத்து வேலை செய்ய முடியும்….

………: உங்களுக்கு இதே வேலையாகி விட்டது. இனி யாருக்கும் எந்தவித கால அவகாசமும் கொடுக்க முடியாது……

ம.அ.வ. : ஓகே மை லார்டு… கோடை விடுமுறை முடிந்த பிறகு அடுத்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.

———————————————————————————————-

பின் குறிப்பு – இடுக்கண் வருங்கால் நகுக (வேறு என்ன செய்ய முடியும் நம்மால்…??? )

—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ரெண்டரைப் பக்கம் : அடுத்த செவ்வாய் – இப்படியும் நடக்குமோ….?

  1. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    Excellent Satire.

  2. BVS's avatar BVS சொல்கிறார்:

    கே.எம்.சார்,
    இப்படித்தான் நடக்குமென்று தோன்றுகிறாது.
    யாருமே சின்சியராக இல்லை.
    கோடை விடுமுறைக்கு முன்பாக நமக்கு ஒரு தீர்ப்பு கிடைத்தால்
    அதை ஒரு அதிசயமாகத்தான் பார்க்க வேண்டும்.

  3. பிங்குபாக்: ரெண்டரைப் பக்கம் : அடுத்த செவ்வாய் – இப்படியும் நடக்குமோ….? – TamilBlogs

  4. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    நல்ல நகைச்சுவை. சார்! நீங்கள் அதிகம் இதை முயற்சிக்கலாம்.

  5. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    // துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
    என்று சொல்லி வைத்தான் வள்ளுவனும் சரிங்க…..
    பாம்பு { தீர்ப்பு } வந்து கடிக்கையில் பாழும் உயிர் { தண்ணீர் கிடைக்காமல் } துடிக்கையில்
    யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு……
    இது கீழ் புரத்தில் இனிப்பு மேல் புரத்தில் கசப்பு..
    பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு.. { கர்நாடகாவிற்கு வெண்ணை — தமிழ் நாட்டுக்கு சுண்ணாம்பு }
    இது பட்டினத்தார் { மத்திய அரசு — மற்றும் பலர் } கையில் உள்ள கரும்பு……

    நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே
    நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே…… // ….. பாவம் சார் .. நீங்க – நாம எல்லோரும் …!!!

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காவிரி விஷயத்தில் எப்போதுமே தமிழகம் வஞ்சிக்கப்பட்டுதான் இருக்கு. 450 டி எம் சிலேர்ந்து குறைந்து குறைந்து இப்போதுள்ள நிலைக்கு வந்திருக்கு. இது இன்னும் குறைவதற்கான வாய்ப்புதான் அதிகம். நியாயம் யாரும் பேசறதில்லை. அரசியல்கட்சிகளைப் புரிந்துகொள்ளலாம். அவங்க வாக்கு வங்கியை மட்டும்தான் பார்ப்பாங்க. கோர்ட்டுமா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.