…
…

…
செய்திகளுக்காக கிடந்து அலையும்
டெல்லி தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும்,
செம தீனி கிடைக்கும் தமிழக செய்திகளை இன்று
சுத்தமாக boycot / black out செய்து விட்டன….
திருவிடந்தையில் பிரதமர் பாதுகாப்புத்துறை கண்காட்சியை
திறந்து வைத்து உரையாற்றியது மட்டும், டெல்லி தொலைக்காட்சி
சேனல்களில் நேரடியாக, லைவ்’வாக காட்டப்பட்டன….
ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து பெரிய அளவில் நடந்து வரும் –
கருப்புக்கொடி, எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றியும்,
புறா, கருப்பு பலூன் விடுதல் குறித்தும்,
உயரமான பேனர்கள் மீது துணிந்து ஏறி எதிர்ப்பு காட்டியவர்கள்,
ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுவது பற்றியும் –
தமிழகத்தைப்பற்றிய வேறு எந்த செய்தியுமே டெல்லியில்
இதுவரை (மதியம் 1.30 மணி ) வெளிவரவில்லை….
பாஜக தலைவர் அமித் ஷா, ஹூப்ளியில் இன்று நடைபெற்றுவரும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்டுள்ள
செய்தி கூட முக்கியத்துவம் பெற்றிருக்கிறது……
ஆனால், உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருவதாக கூறப்படும்
” கோ பேக் ” ஹாஷ்டேக் பற்றியும் இதுவரை எந்த டெல்லி
தொலைக்காட்சி சேனலும் “மூச்” கூட விடவில்லை…
எங்கிருந்து, யார் போட்ட உத்திரவு…???
அவர்கள் வாயை அடைத்தது யார்…???
இரவுநேர “விவாத தலைப்பிற்கு” அலைபாயும் தமிழ் செய்தி
தொலைக்காட்சி சேனல்கள் இன்றிரவு ஏன் இந்த தலைப்பையே
விவாதிக்க எடுத்துக் கொள்ளக்கூடாது…….?
(தங்கள் டெல்லி “சகோதர” சேனல்களின் மௌனவிரதத்திற்கு
யார் காரணம், எது காரணம் என்று கூட (ரகசியமாக) கேட்டறியலாமே…!!! )
———————————————————————————



[…] […]