…
…

…
உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதிக்கு அடுத்த,
இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் அவர்கள், தற்போது, டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர் கரன் தாபருடன் பேசிக் கொண்டிருக்கிறார்….
பல பரபரப்பான தகவல்கள் அதில் வெளியாயின….
அந்த உரையாடலில் இருந்து ஒரு சிறு பகுதி –

வீடியோவை பெற முயற்சித்தேன்…
ஒலிப்பதிவு தெளிவாக இல்லை…
விரைவில் தனியே கிடைக்கும் என்று நம்புகிறேன்…
அப்போது அதையும் பதிவு செய்கிறேன்…
இப்போதைக்கு –
…
—————————————————————————–



இன்று காலை செய்தி தளத்தில் வெளிவந்திருக்கும் தகவல் –
நீதிபதி செலமேஸ்வர், ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது அவ்வழக்கு ஒதுக்கப்பட்ட விதம் பற்றியும் கூட சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
இது நீதித்துறையில் மட்டுமல்ல…. தமிழ்நாட்டு அரசியலிலும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விருப்பத்தின்பேரில் சில அமர்வுகளுக்கு வழக்குகள் மாற்றப்படுவது குறித்து கரன் தாப்பரிடம் பேசிய நீதிபதி, இது பொதுமக்களின் நம்பிக்கையையும், இந்த அமைப்பின் மீதான அக்கறையையும் சிதைத்துவிடும் என்றார்.
”இந்த (நீதிமன்ற) அமைப்பை மாற்றுவதற்கான தேவை குறித்து ஆலோசிக்க வேண்டுமா?” என்ற கரண் தாப்பரின் கேள்விக்குப் பதிலளித்த செலமேஸ்வர், “அதுகுறித்த, ஒருவகையான திரும்பிப்பார்த்தல் தேவைப்படுகிறது” என்றார்.
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கும் அதுபோன்றதே…
வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவது குறித்த ரோஸ்டர் முறை குறித்துப் பேசிய செலமேஸ்வர், அதை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உள்ளது என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.
ஆனால், அந்த நடவடிக்கை மக்களுக்குப் பயன் தரும் வகையிலும், விசித்திரமாக இல்லாமலும் இருக்க வேண்டுமென்று கூறினார்.
மேலும், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிந்த பிறகும், அதன் தீர்ப்பு வெளியாக ஓராண்டு ஆனதாகத் தன் பேச்சில் சந்தேக தொனியில் குறிப்பிட்டார் செலமேஸ்வர்.
உச்ச நீதிமன்றத்தில் பணியில் இருக்கும் மூத்த இரண்டாவது நீதிபதியின் இந்த கருத்து தமிழக அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நீதிபதி செலமேஸ்வரின் இந்த கருத்தின் மூலம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்க ஒரு வருட காலம் ஆனது பற்றியும், தீர்ப்பு வழங்கப்பட்ட சூழல் பற்றியும் விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது.
( நன்றி – https://minnambalam.com/k/2018/04/08/37 )
எனக்கு நீங்கள் சொல்ல வருவது சரியாகப் புரியவில்லை காமை சார். என்னைப் பொறுத்தவரை தீர்ப்பு (குன்கா) தவறு.
புதியவன்,
இந்த இடுகையில் இதுவரை – என் கருத்து எதையும் சொல்லவில்லை…
நீதிமன்ற செயல்பாடுகளைப்பற்றி கருத்து சொல்லும்போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்… இப்போது கூட, முன்னதாகவே சொல்லி விடுகிறேன்….எந்த அளவுக்கு சொல்லலாமோ, அந்த அளவிற்கு மட்டுமே சொல்ல முயற்சிக்கிறேன்.
இதை என் கருத்து என்று சொல்வதை விட ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர்
என்ன சொல்ல முயல்கிறார் என்று யூகித்து சொல்ல முற்படுகிறேன்.
அந்த யூகித்தல், இந்த ஒரு பேட்டியை மட்டும் வைத்து அல்ல.. கடந்த சில மாதங்களாக அவர் வேறு சில விஷயங்களையும் பேசி இருக்கிறார்… அவற்றையும் வைத்து தான் இந்த விளக்கத்தை தர முயற்சிக்கிறேன்.
ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் எப்படி “வழங்க”ப்படுகின்றன என்பதைப்பற்றி விளக்குகிறார்…உ.நீ.ம.காரிடார்களுக்கு
கொஞ்ச நாட்கள் வந்து பாருங்கள்… உங்களுக்கே புரியும் என்று சொல்கிறார்…! ஜூனியர் ஜட்ஜ்கள் தலை சொல்படி கேட்பவர்கள்….
முக்கியமான வழக்குகளில், தாங்கள் எதிர்பார்க்கிறபடி தீர்ப்பு வரவேண்டுமானால், தலை, அவற்றை ஜூனியர் ஜட்ஜ்களிடம் கொடுப்பது வசதி. எந்த வழக்கிற்கு, எத்தகைய பென்ச்’சை அமைப்பது, மற்றும்
எந்தெந்த ஜட்ஜு(களு)க்கு எந்த வழக்கை அல்லாட் செய்வது என்பதை தலைமை தான் தீர்மானிக்கிறது… அந்த தலைமையை, வேறு ஒரு “தலை” இன்ஃப்ளூயன்ஸ் செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன…. தீர்ப்பின் முடிவை தீர்மானிப்பதிலும், அதை எப்போது வெளியிடுவது என்பதை தீர்மானிப்பதிலும், வெளியில் உள்ள “தலை”கள் தீர்மானிக்க தற்போதைய சிஸ்டத்தில் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் கூற முயற்சிக்கிறார்…. ( அவருக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.. ஓரளவிற்கு மேல் வெளிப்படையாக பேச முடியாது. )
ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நான் எழுதியிருப்பதை படியுங்கள். உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.
நீங்கள் சொல்கிறீர்கள் – //என்னைப் பொறுத்தவரை தீர்ப்பு (குன்கா) தவறு.//
நான் மேலே எழுதியிருப்பவற்றை படித்த பிறகு உங்களுக்கே புரியுமே…
முதலாவதே கோணல்… முதலைப் போன்றே முடிவும்….?
மனசாட்சியே இன்றி சிலர், கொடிய முறையில் வஞ்சம் தீர்க்க செயல்பட்டதன் விளைவு தான்…. அந்த “முடிவு”
முடிவை முடிவு செய்தவர்கள் தான் ஜட்ஜ் லோயாவின் முடிவிற்கும் காரணம்
என்று சொன்னால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்…
I expect judge can also give reasons for delay in cases handled by him like salmon Khan case and try to work transparent way. Like bar council and lawyers split in to party basis soon we can expect SC Congress bench and BJP bench very soon.
உண்மை. ஆனால் இந்த விஷவித்து ஊன்றப்பட்டது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான்.
Judgements should be viewed as a voice of law rather than view of individual judges. Giving political colour to judgements will lead to total collapse of legal system.
Instead of holding press conference let them show in their work like judge Chandru or sh. T.N Sheshan.to improve the system with their position.
SC Judge working like a local union leader for sensation and for media glamour is really shocking.
The most beneficiary due to Jaya case delay is JJ and sasi company. Worst affected party is voters of Tamil Nadu.
// மனசாட்சியே இன்றி சிலர், கொடிய முறையில் வஞ்சம் தீர்க்க செயல்பட்டதன் விளைவு தான்…. அந்த “முடிவு” // இதைச்சொல்வதன் மூலம் காமை சார்! நீங்கள் சொல்ல வருவது,” குன்ஹாவின் தீர்ப்பில் தலையீடு இருந்தது! பழிவாங்கல் இருந்தது” என்பதாகும்! பழி வாங்கலே இருந்தாலும் தலையீடு இருந்தாலும் தீர்ப்பு சரியானதே!
chellamuththu periyasaamy
அது உங்கள் கருத்து என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
கொலைகாரர்கள் நாட்டின், கட்சியின் உயர்ந்த பதவிகளில்
அமர்ந்திருக்கும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இதை சொல்லும்
அருகதை கூட கிடையாது.
What a put committed judges and the emergency and the judge who facilitated the imposition by staying the orders of justice Sinha.Judiciary can control the interference by doing what Justice Lakshmanan did a couple of decades.Chalemeshvar has done nothing but Kumaramangalam formula of wrecking from within.Thiruvengadam