(பகுதி-2) – மீடியாக்கள் சொல்வதெல்லாம் உண்மையா…..!!!


இங்கே நான் எழுத முற்படுவது, டெல்லியிலிருந்து செயல்படும், ஆங்கில தொலைக்காட்சி சேனல்களைப்பற்றி… அநேகமாக இவை எல்லாவற்றிற்குமே “ஹிந்தி” பதிப்பும் உண்டு. எனவே, இவற்றை ஆங்கில மற்றும் ஹிந்தி தொலைக்காட்சிகள் என்றும் சொல்லலாம்.

இந்த இடுகையின் முதல் பகுதியில், கோப்ரா போஸ்ட் வெளிப்படுத்திய
தளங்கள் எல்லாம் சின்ன,சின்ன மீன்கள். தூண்டில் போட்டால் மாட்டி விடும்… அதிக பட்சம், வலை தேவைப்படும்…வலையில் சிக்கி விடும் அளவிற்கு பலவீனமானவையே….!

ஆனால், பிரம்மாண்டமான திமிங்கிலங்கள் சிலவும் (மீன்கள் என்று அவற்றை சொல்ல முடியாது) இந்த துறையில் இருக்கின்றன. தாங்கள் உருவாக்கும் பிம்பங்களின் மூலம் அரசாங்கங்களை படைக்கவோ, சிதைக்கவோ, ஆட்டி வைக்கவோ கூட முடியும் என்கிற அளவிற்கு – ஆற்றல் படைத்தவை அவை.
அவற்றை எல்லாம் கோப்ரா போஸ்ட் ஆசை காட்டியது போலெல்லாம்
ஆசை காட்டி விலைக்கு வாங்கி விட முடியாது.

இத்தகைய ஊடகங்கள், மிகப்பெரிய தொழிலதிபர்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மலாட்ட கருவிகள்…. அந்த தொழிலதிபர்கள் – ஒன்று அரசால் தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதாயங்களுக்கு தகுந்தாற்போல் செயல்படுவார்கள். அல்லது, அரசை பகைத்துக் கொள்வதால், தங்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்ட, நஷ்டங்களை எண்ணி – அதற்குத் தகுந்தாற்போல் ( நெகிழ்வுத்தன்மையுடன்…? ) செயல்படுவார்கள். ஆனால், இதெல்லாம் சாதாரண – அமைதிக் காலங்களில் தான்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்கள் செயல்படுவது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். தேர்தலுக்குப் பின், எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை தீவிரமாக கணிக்க ஆரம்பிப்பார்கள்….

அதற்கு தகுந்தாற்போல், நெளிவு சுளிவுகளுடன் செயல்படத் துவங்குவார்கள். ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் கட்சிகளை அவர்கள் கணித்து, அவற்றிற்கு சாதகமாக செயல்படத்துவங்குவார்கள்.

சில சமயங்களில், மீடியாக்கள் போகும் போக்கை வைத்தே கூட தேர்தல்
முடிவுகளை நம்மால் அனுமானிக்க முடியும்….

டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில சேனல்களில் முக்கியமானவையாக கீழ்க்கண்ட 5 சேனல்களை சொல்லலாம்….

REPUBLIC –


பாஜக பாராளுமன்ற (ராஜ்ய சபா) உறுப்பினரும் கோடீஸ்வர தொழிலதிபருமான, கேரளாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் அவர்களை இதன் உரிமையாளர் என்றே சொல்லலாம்…( 30 கோடி ரூபாய் முதல் போட்டு, மெஜாரிடி ஷேர் ஹோல்டராக இருக்கிறார்…!!!)

எனவே, இந்த தொலைக்காட்சி, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதில்
வியப்பேதும் இல்லை…

ஆனால், டைம்ஸ் நவ்-தொலைக்காட்சியில் பணி புரிந்துகொண்டிருந்த வரையில் (நவம்பர், 2017), மிகவும் மதிக்கத்தக்கவராக பணியாற்றிக் கொண்டிருந்த இதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி,

– ஆளும் பாஜக சார்பாக இந்த தொலைக்காட்சியில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு – அவரது செயல்பாடுகள் காரணமாக மிகக்கேவலமாக மதிக்கப்படுகிறார். மற்றவர்களை பேசவிடாமல், குலைத்துக் கொண்டே இருப்பதும், ஒரே சமயத்தில் ஏகப்பட்ட பேரை அலற வைத்து, கூச்சல் சந்தையாக்குவதும் இவருக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது….

அதே காரணங்களால், பெரும்பாலான பார்வையாளர்கள் இவரை
ஏளனமாகவே பார்க்கிறார்கள்….!!! (ஆனால், அதைப்பற்றி இவர் சற்றும்
கவலைப்படவில்லை என்பது வேறு விஷயம்…)
இவரை HIS MASTER’S VOICE…!!! என்று சொல்லலாம்.
ஒரு புகழ்பெற்ற, திறமை வாய்ந்த செய்தியாளர், பணத்திற்கு அடிமையானால், அவர் கதி என்ன ஆகும் என்பதற்கு அர்னாப் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

இது பாஜக சார்பாக செயல்படும் டிவி என்பது வெளிப்படையாக
தெரியும்… அதை மறைக்க அவர்கள் முயற்சிக்கவும் இல்லை…!!!

TIMES NOW –


இது டைம்ஸ் க்ரூப் நிறுவனத்தின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி.
இதன் துணை தொலைக்காட்சி நிறுவனங்கள் –
Zoom, ET Now, Movies Now, Romedy Now, MN+, MNX, Mirror Now…etc…

உலகின் மிகப்பெரிய, மிகப்புராதனமான ஒரு செய்தி நிறுவனம். பல மொழிகளில், ஏகப்பட்ட செய்தித் தாள்கள் இந்த நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றன. இது ஒரு குடும்ப நிறுவனம்…. ஜெயின்
குடும்பத்தினருக்கு சொந்தமானது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தற்போதைய ஆசிரியர் குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் –

திருமதி நாவிகா குமார், ராஹுல் சிவசங்கர்,
அனந்த் நரசிம்ஹன் ஆகியோர்…

இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட பாஜக ஆதரவாளர்களே –
(முக்கியமாக நாவிகா குமார்…மோடிஜியின் பெயரைச் சொன்னாலே
நெகிழ்ந்து பரவசமாகி விடுவார்… !!!)
(இவர்களின் பாஜக ஆதரவு செயல்பாட்டிற்கு காரணம்…..
ஆளும் கட்சியின் செல்வாக்கா, அழுத்தமா, நிதியா…? நமக்குத் தெரியாது….!!! )

அவர்கள் அளிக்கும் செய்திகளும், விவாத நிகழ்வுகளும் மத்தியில்
ஆளும் பாஜகவுக்கு ஆதரவான திசையிலேயே பயணிக்கும்…

CNN -news 18 –


புகழ்பெற்ற செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய் அவர்களால் துவக்கப்பட்ட செய்தி சேனல் இது… ஆனால், காலம் செய்த கோலம் இப்போது அவர் இதில் இல்லை …

இதன் தற்போதைய உரிமையாளர் திருவாளர்
அனில் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்…)

எனவே, சொல்ல வேண்டிய அவசியமே இல்லை … மோடிஜிக்கு ஆதரவாகச் செயல்படும் தொலைக்காட்சி சேனல் இது.

( இன்னும் சில மாநில மொழிகளிலும் இது செயல்படுகிறது –
News18 Lokmat, News18 Tamil Nadu, News 18 Assam/North-East
News 18 Kerala )

இதன் தலைமை செய்தி ஆசிரியராக செயல்படும் பூபேந்திர சௌபே –
அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, பல சமயங்களில் – வேறு வழியின்றி, பாஜகவை ஆதரித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது…!

INDIA TODAY –


இந்தியா டுடே குழுவினரால் நடத்தப்படும் –
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி(ஆஜ் தக்) சேனல்களோடு, பல மொழிகளில்
வெளியாகும் இந்தியா டுடே செய்திப் பத்திரிகையும் இவர்களுடையதே…

இதன் உரிமையாளர் திரு.அருண் புரி…

செய்தி ஆசிரியர்களாக – ராஜ்தீப் சர்தேசாய் அவர்களும், ராஹுல் கன்வால் அவர்களும் செயல்படுகிறார்கள்.

இரண்டு பேருமே பொதுவாக நடுநிலையாக செயல்படுவதுபோல் இருந்தாலும், உரிமையாளரின் செல்வாக்கு இந்த சேனலின் செயல்பாடுகளில் தெரியவே செய்கிறது….

இருந்தாலும் கூட, ராஜ்தீப் சர்தேசாய், மோடிஜிக்கு அஞ்சவில்லை என்பது விவாதங்களூடே பல சமயங்களில் வெளிப்படும்….
பல சமயங்களில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது போல் காட்டிக்கொண்டு ஆனால், கிட்டத்தட்ட நடுநிலையாக செயல்படுகின்றனர்…..!!!

NDTV 24×7 –
New Delhi Television Limited (NDTV) –


இந்தியாவில் முதன் முதலில் நிறுவப்பட்ட செய்தி தொலைக்காட்சி
நிறுவனங்களில் முக்கியமானது என்று இதைச் சொல்லலாம்…

திருமதி ராதிகா ராய், திரு.பிரனாய் ராய் – இதன் உரிமையாளர்கள்
என்று சொல்லப்பட்டாலும், ( காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில பிரமுகர்களுக்கு, முக்கியமாக சிவகங்கைக்காரருக்கு, இதில் பெருமளவில் மறைமுகமான பங்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது….)

பாஜகவுக்கும், அதன் முக்கிய பிரமுகரான திருவாளர் சுப்ரமணியன்
சுவாமிக்கும் சற்றும் பிடிக்காத தொலைக்காட்சி இது.

பாஜகவை ஆதரிப்பதை இந்த தொலைக்காட்சி நிறுவனம் விரும்பாது என்றாலும் கூட, பாஜக டெல்லியில் ஆட்சியை பிடித்த பிறகு, தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தின் மீது நடத்தப்பெற்ற Income Tax, Enforcement Directorate -ஆகியவற்றின் ரெய்டுகள் காரணமாக –

வெளிப்படையாக பாஜகவை எதிர்க்க திராணி இல்லாமல் பலவீனமாக
செயல்படுகிறது…. பாஜகவுக்கு எதிரான செய்தி எதாவது கிடைத்தால்
(உள்ளுக்குள்) இதற்கு மகிழ்ச்சியே…!!!

————–

மன்மோஹன் சிங் அவர்களின் 10 ஆண்டுக்கால ஆட்சியின்போது, மீடியாக்கள், எந்தவித கட்டுப்பாடும் இன்றி, சுதந்திரமாக, தைரியமாக செயல்பட்டு வந்தன. மத்திய அரசுக்கு எதிராக பல ஊழல்களை,
( 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த், நிலக்கரி – ஊழல்கள் ),
அவை வெளிக்கொண்டு வந்து, காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கும்,
செல்வாக்கிழப்பிற்கும் முக்கிய காரணமாக இருந்தன.

அன்னா ஹஜாரே அவர்களின் India Against Corruption movement -க்கு
கிடைத்த பேராதரவிற்கு தொலைக்காட்சி ஊடகங்களே முக்கிய காரணம்.

ஆனால், பாஜக ஆட்சியை பிடித்த பின், மீடியாக்களின் செயல்பாட்டு
சுதந்திரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியின் செல்வாக்கு, அரசு ஏஜென்சிக்களின்
அழுத்தம்/மிரட்டல், அல்லது பெரிய அளவில் விளையாடும் பணம் (…?) ஆகியவற்றில் எதாவது ஒன்றின் பிடியில் முக்கிய சேனல்கள் சிக்கி இருப்பதை உணர முடிகிறது.

பொதுவாகவே, பெரிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும்,
மத்தியில் ஆளும் கட்சியின் மறைமுகமான கட்டுப்பாட்டில் இருப்பது
தொடர்ந்து இவற்றை கவனித்து வரும் நடுநிலையாளர்களுக்கு
நிச்சயம் புரிய வரும்….!!!

ஆனால், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் – இவற்றில்
சிலவற்றின் போக்கு மாறலாம்.

———————————————————————————
(தொடர்கிறது – அடுத்த பகுதி-3-ல்
தமிழ் செய்தி தொலைக்காட்சிகள்…)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to (பகுதி-2) – மீடியாக்கள் சொல்வதெல்லாம் உண்மையா…..!!!

  1. பிங்குபாக்: (பகுதி-2) – மீடியாக்கள் சொல்வதெல்லாம் உண்மையா…..!!! – TamilBlogs

  2. N S Raman's avatar N S Raman சொல்கிறார்:

    You missed out Pranoy Roy is a relative of Karat family. Also Barkha Dutt and her famous connection with Neera Radia brokers of Congress party.

    Also please include how popular papers like Hindu giving mis leading views in your remaining parts.

    • PRIYAN's avatar PRIYAN சொல்கிறார்:

      ராமன் சார், அதெல்லாம் இந்த காமாலை கண்ணன் காவேரி மைந்தன் கண்ணுக்கு தெரியாது.
      இவரை பொறுத்த வரை தினமும் பாஜக காரன் பட்டக்ஸை மோந்து பார்த்து விடணும், இல்லனா இந்தாளுக்கு தீனி இறங்காது

      • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

        பிரியன் – நானும் ஒரு காலத்தில் பாஜக மோகத்துடந்தான் இருந்தேன். யார் எழ்துறாங்கன்னு பார்க்காதீங்க. என்ன எழுதியிருக்குன்னு பாருங்க. அர்னாப், மோடி அவர்களைவிட பாஜக சப்போர்டரா மாறியிருக்கார். நாம என்ன தெரிஞ்சுக்கணும்னு தொலைக்காட்சிகள் தீர்மானிக்கின்றன. அவைகள் உண்மையைப் பேசுவதில்லை.

        இதை யோசிக்காம, எழுதியவர் மோசம்னு சொல்றது மிகச் சுலபம்.

        இன்னொன்று, எனக்கு இந்த ஆட்சில என்ன நன்மை கிடைத்திருக்குன்னு நான் யோசிக்கிறேன். மக்கள் கிரெடிட்/டெபிட் கார்டு உபயோகம் அதிகமாயிருக்கு. அக்கவுன்டபிலிட்டி வந்திருக்கு. அதைத் தவிர எனக்கு ஒன்றும் கிட்டலை. நீங்களும் இதை யோசித்துப்பாருங்க.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        PRIYAN,

        என்னும் பெருந்தகையே…மிக்க நன்றி…!!!

        நான் நான்கு பக்கம் எழுதினாலும் நம்பாதவர்களை உங்களுடைய இந்த ஒரு பின்னூட்டம் நம்ப வைத்து விடும்…

        என்னவென்று….?

        உங்கள் மாபெரும் தலைவர்களான மோடிஜியும், அமீத்ஜீயும் ஆட்சியை பிடித்ததன் மூலம், எப்பேற்பட்ட “தறுதலை”களை இந்த நாட்டில் வளர்த்து விட்டிருக்கிறார்களென்று.

        இந்த இடுகையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் யாரிடமாவது கேட்டு, புரிந்துகொண்டு பிறகு பின்னூட்டம் போட்டிருக்கலாம்.

        இருக்கட்டும்…. எல்லாம் நல்லதற்கே…!!!

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      N S Raman,

      இது குறித்து என்ன எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களோ,
      அதை நீங்களே பின்னூட்டத்தில் எழுதுங்களேன். உங்கள் பார்வையிலேயே
      அதை பார்க்கலாம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    By the way, why all anchors at NDTV24x7, Times Now, Headlines Today and Republic are always shouting? Almost all news items are becoming ‘BREAKING NEWS’ as if the Heavens will fall down on their heads! Particularly, please watch Republic TV. Arnab Goswami wins hands down in this shouting match! Of late, Tamil channels are following suit in terms of ‘BREAKING NEWS’ even for insignificant events.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்தக் கட்டுரை ஓரளவுக்குத்தான் கன்வின்சிங் ஆக இருக்கு. தொலைக்காட்சி என்பது வியாபாரம். அதன் அப்போதைய உரிமையாளர்களின் விருப்பமும் இருக்கு (ஹிந்துவின் ராம் இடதுசாரி, திமுக ஆதரவு, விகடன் திமுக ஆதரவு போன்று). அர்னாப் எப்போதுமே ரொம்ப டாமினேட்டிங்காகப் பேசுகிறவர். அவரது தற்போதைய ரிபப்ளிக் சேனல் (அதற்கு முன்பே) விவாதங்களில் அவர் கொஞ்சம் அதிகமாகவே பாஜக சார்பாகப் பேசுகிறார். அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், ராகுலை நகையாடுவதைத்தான் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

    எல்லாத் தொலைக்காட்சிகளும் முதல் 4 வருடங்களுக்கு ஆளுங்கட்சி சார்பாகவும், கடைசி 6 மாதம் நடு நிலை (அல்லது அடுத்து யார் வருவார்களோ அதை ஒட்டியும்) வேஷம் கட்டுவதும் இயல்புதான்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      //இந்தக் கட்டுரை ஓரளவுக்குத்தான் கன்வின்சிங் ஆக இருக்கு. //

      இந்த கட்டுரையில் நான் யாரையும் குறை சொல்ல முற்படவில்லை.
      எதார்த்தம் என்னவென்பதை எனக்கு தெரிந்த /புரிந்த வகையில் அலச
      முற்பட்டிருக்கிறேன்… அவ்வளவே…!

      அதில் கூட, நான் நினைப்பது போல், மற்றவர் நினைக்காமல் இருக்கக்கூடும்.
      பார்வைகள், கோணங்கள் -அவரவர்க்கேற்ப மாறலாம். அவற்றை பகிர்ந்து
      கொள்ளத்தானே இந்த பதிவு.

      உங்கள் பார்வையை நான் புரிந்துகொள்கிறேன்.
      “தொலைக்காட்சி என்பது வியாபாரம்”…உண்மை. ஆனாலும்,
      அந்த வியாபாரத்திலும் ஒரு நேர்மை வேண்டும் அல்லவா…?

      -வாழ்த்துகளுடன்,
      கவிரிமைந்தன்

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இங்கு பின்னூட்டம் இடும் பாஜக வெறியர்களுக்கு அல்லது நடுநிலை வேடம் போடுபவர்களுக்கு தர்மம் நியாயம் என்றெல்லாம் பேச கொஞ்சமாவது அருகதை இருக்கா…?

    பத்திரிகா தர்மம் என்று எதோ ஒரு வஸ்த்து இருக்கே அது……!

    அது சரி. பாஜக என்றாலே அதுவெல்லாம் ஓடி ஒளிந்துவிடும் என்பது இயல்புதானே.

  6. Thiruvengadamthirumalachar's avatar Thiruvengadamthirumalachar சொல்கிறார்:

    The problem is pinkos and closet communists are replaced by saffron it’s blatant fastest ably funded by influence peddling corporates and externally fund NGOs.Thiruvengadam

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Thiruvengadamthirumalachar,

      சார் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை –
      இன்னும் கொஞ்சம் எல்லாருக்கும் புரிகிற மாதிரி எழுதலாமே…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. venkat's avatar venkat சொல்கிறார்:

    There is nothing called Truth – There are only ‘your version’ and ‘my version’. Going by that saying, people see what they want to see, hear what they want to hear and form their opinion with their own prejudice. TV channels, new papers, bloggers are no exception to this.

    don’t forget the fact that THE GREAT KM SIR, also quotes the same news paper, magazine and TV clipping/articles to underscore his stand. My conclusion is that like all other media, this blog is also biased, which is what i keep repeating in all my posts. you can brand me as baktha, jalra etc.,

    now go and read the first line….There is nothing called Truth – There are only ‘your version’ and ‘my version’

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வெங்கட்,

      மேலே உள்ள இடுகையில், என் எழுத்தைப்பற்றிய உங்கள் கருத்து இது –
      //My conclusion is that like all other media, this blog is also biased //

      உங்கள் கருத்தைப்பற்றி நீங்களே சொல்வது இது –
      – //There is nothing called Truth – There are only ‘your version’ and ‘my version’. people see what they want to see, hear what they want to hear and form their opinion with their own prejudice. //

      அதெப்படி சார் நீங்களே உங்கள் கருத்தைப்பற்றி இப்படி விமரிசனம் செய்கிறீர்கள்…??? 🙂 🙂 🙂

      ( நடுநிலை என்றால் என்ன என்பதைப்பற்றி ஆசிரியர் சோ அவர்கள் ஒருமுறை ஒரு பேட்டியில் மிக அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார்…. அதைப்பார்த்திருக்கிறீர்களா…? நான் தேடிப்பார்க்கிறேன்… கிடைத்தால் உங்களுக்காக பதிப்பிக்கிறேன்…)

      ஒரு விஷயம்… நான் உங்களை “பக்தன்” என்று சொல்லவில்லை.
      நீங்களே தான் சொல்லிக் கொள்கிறீர்கள்…!!!
      என்ன இருந்தாலும், உங்கள் “பக்தி” மெச்சத்தகுந்ததே… !
      மேலே PRIYAN என்கிற “பக்தன்” போல் அல்லாமல் நாகரிகமாக
      எழுதி இருக்கிறீர்களே…!!! உம்ம்ம்…. பாஜகவில் நாகரிகமாக எழுதுபவர்களும் இருக்கிறார்கள்…!!! )

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  8. Thiruvengadamthirumalachar's avatar Thiruvengadamthirumalachar சொல்கிறார்:

    Aii media are instruments for propagating information and ideas.Indian media is also dominated by various groups depending on the time and mood of the people.Pre independence the media subtly promoted anti colonialism in which local industrialist entrepreneurs had a role.Post independence saw the emergence of competing ideologies and left leaning groups to sell different views including sub nationalism and regionalismThe present decade is dominated by saffron it’s ,I.e.rabid religious groups which is funded by corporates and externally funded NGOsThiruvengadam

  9. venkat's avatar venkat சொல்கிறார்:

    point i wanted to make was… you are also quoting link, cartoons and articles from those same medias. if you go by your own statements… if those medias are not unbiased, then how can your articles be unbiased if you pick such news/cartoons/editorials! for example you cut and paste articles from vikatan. we all know who is behind them now!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வெங்கட்,

      மீண்டும் மீண்டும் நீங்கள் கண்களை மூடிக்கொண்டே
      பார்க்க முயற்சிக்கிறீர்களே…

      நீங்கள் குறிப்பிடும் தளங்களில் உள்ள 100 % தகவல்களும்,கட்டுரைகளும் – எதிரானவை, தவறானவை என்று நான் சொன்னதே இல்லையே…
      அதில் எனக்கு தேவையானதை, என் கருத்துக்கு ஒத்து வருவனவற்றை மட்டும் நான் எடுத்து பயன்படுத்திக் கொள்கிறேன்… அதில் என்ன குழப்பம்…?

      ஏன்… உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்.
      இந்த விமரிசனம் தளத்தில் பாஜகவுக்கு/ மோடிஜிக்கு எதிராக எதாவது எழுதப்படும்போது மட்டும், நீங்கள் எங்கே இருந்தாலும், பொத்’தென்று
      வந்து குதிக்கிறீர்கள். சாடுகிறீர்கள்…பின்னூட்டம் எழுதுகிறீர்கள்.

      அதே சமயம், இந்த தளத்தில் வரும் மற்ற கட்டுரைகளை விரும்பித்தானே படிக்கிறீர்கள்… அதனால் தானே தொடர்ந்து இங்கே வருகை தருகிறீர்கள்… the same logic applies here too …!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  10. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    When a news channel seems to lean towards the ruling party we hear things like “they are afraid of raids,,they are getting money from the ruling party ” so on and so forth -But no one says that the channels against the govt is taking money from the opposition — Those who say these things never for moment think that those running channels have self respect and have enough money to run the channels – When channels support the opposition point of view constantly without fear why any channel supporting the govt should be afraid of —Doesnt make any sense to me —

    It is spot on in saying which channel supports the govt or against it –One common feature in all these channels is that when a debate seems to go against their stated stand the anchor cuts short the person and say we are out of time and winds up the debate –
    The debates are becoming increasingly noisy –They call the same spokespersons from the parties and they say the same thing over and over again – So I have stopped seeing these debates – These debates cannot create or alter narratives in people’s minds –This is just time pass — The same goes with writing for or against the govt –Just time pass —
    So really it is a worthless exercise writing comments on articles or blogs because it is your exclusive opinion and not the people’s( though we put the blame on them saying makkal pesikkollugirargal etc ) and no one cares a hoot about it –Once Cho was being interviewed by a channel -The interviewer said to Cho ‘Makkal sollugirargal —–” Cho immediately told him “dont generalise like this please bring those people here or tell me specifically who are those who are saying this “-In other words he was telling that man not to pedal his views as people’s views –When some one writes or says ‘makkal pesikkolugirargal of makkal konthalikkirargal etc ” you can discount it as a lie —

    Channels are likely to change their stance nearing or after an election -We had a glimpse of it during the Gujarat elections on the day the results were being announced and the results seem to swing this way and that —

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      // The same goes with writing for or against the govt –Just time pass —//

      It may be a just time pass for you… BUT NOT FOR ME.
      I am taking this, seriously…I am proud of doing this as a Service
      to my country, my soceity, my people…!

      // So really it is a worthless exercise writing comments on articles or blogs //

      Then why do you undertake a Worthless exercise by commenting here…?

      Have you ever seen in my Blog the words like -“makkal pesikkollugirargal”
      or “Makkal sollugirargal ” …?

  11. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    Why are u feeling guilty -Did I say you are using those words —
    It is a time pass as long as you dont become a politician and try to change the world you want it to be —

  12. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    LVISS

    Why don’t you Answer this also :

    // So really it is a worthless exercise writing comments on articles or blogs //

    Then why do you undertake a Worthless exercise by commenting here…?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.