பாஜக டென்ஷன் ஆவது ……???


“நீ எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரி தான்
தீர்மானிக்கிறான்…” என்பது ஒரு புகழ்பெற்ற வார்த்தை…!!!

தேர்தலில் வெல்ல, பாஜக தீர்மானித்த அதே ஆயுதத்தை தான்
ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருக்கிறார் – கர்நாடகா தேர்தல்
பிரச்சாரத்தில்…!!!

தேர்தலில் வெற்றி பெற, மத உணர்வுகளை தூண்டி விடுவது
பாஜக-வின் வெற்றிக்கான தந்திரங்களில் ஒன்று…

இப்போது பாஜக டென்ஷன் ஆவது ஏன் என்பதை, ராகுல் காந்தி
பயணிக்கும் இடங்களை பார்த்தால் வெளிப்படையாகவே தெரிகிறதே….!!!

சிருங்கேரி மடம், சாரதாம்பிகை கோவில் …..


..

..

..

..

..

 

கூடுதல் பலமாக,
பாஜக போக முடியாத இடங்களும் ….
சர்ச், மசூதி, தர்க்கா….!!!
..

..

..


..

..

பாஜக டென்ஷன் ஆகாமல் என்ன செய்யும்…. 🙂 🙂 🙂

——————————————————————————-
 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to பாஜக டென்ஷன் ஆவது ……???

  1. Ramanathan's avatar Ramanathan சொல்கிறார்:

    In addition to all these, Congress can also divide society by creating new religions, which BJP can’t do.

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    எது எப்படியோ; ஓட்டு வருமில்லையா ?

  3. Sivam's avatar Sivam சொல்கிறார்:

    விமரிசனம் இப்போது காங்கிரஸ் பிரச்சார தளம் ஆகிவிட்டது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சிவம்,

      1) இப்போதைக்கு – பாஜக-வின் arrogance, நிச்சயம் கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும்…
      அதற்காக, யாரை ஆதரித்தாலும் தவறு இல்லை…

      ————-
      2) //தேர்தலில் வெற்றி பெற, மத உணர்வுகளை தூண்டி விடுவது பாஜக-வின்
      வெற்றிக்கான தந்திரங்களில் ஒன்று…

      தேர்தலில் வெல்ல, பாஜக தீர்மானித்த அதே ஆயுதத்தை ராகுல் காந்தி
      தேர்ந்தெடுத்திருக்கிறார் -//
      —————-

      – இப்படி நான் எழுதுவது உங்களுக்கு –
      //விமரிசனம் இப்போது காங்கிரஸ் பிரச்சார தளம் ஆகிவிட்டது.//
      -என்று தோன்றுகிறது….?

      நான் இந்த இடுகைக்கு போட்ட தலைப்பை
      ( பாஜக டென்ஷன் ஆவது ஏன்……??? )

      நீங்களே நியாயப்படுத்துகிறீர்கள் பாருங்கள்… 🙂 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    சிவம் மட்டும் தானா ? மேலே ராமநாதன், கீதா சாம்பசிவம் என்று ஏகப்பட்ட பேர்
    டென்ஷன் ஆகி விட்டார்களே ? நீங்கள் போட்ட தலைப்பு மிகவும் சரி தான். 🙂

    • Geetha Sambasivam's avatar Geetha Sambasivam சொல்கிறார்:

      எனக்கு எவ்விதமான மன அழுத்தமோ,இறுக்கமோ இல்லை. இடத்துக்குத் தகுந்த வேடம் போட்டு மக்களை மதரீதியாகப் பிரிக்கும் காங்கிரஸின் வேடத்தைத் தான் சுட்டிக் காட்டி இருக்கேன். இதுக்கு முன்னர் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் இம்மாதிரியே ஓட்டுக் கேட்டிருந்தால் இப்போது நடப்பவை ஒத்துக் கொள்ளக் கூடியவை! ஆனால் ஓட்டுக்காக இப்போது ஒவ்வொரு விதமான வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறது. முதல்லே அவங்களைக் காவிரி நீர் மேலாண்மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கும்படி சொல்லச் சொல்லுங்க! பார்ப்போம். அப்போது தான் அது உண்மையான தேச நலனுக்குப் பாடுபடும் கட்சி!

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        Geetha Sambasivam,

        நான் சில விஷயங்களை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

        – காங்கிரஸ் செய்வது “சரி” என்று நான் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். மதத்தையும், அரசியலையும் சேர்த்து குழப்புவதை நான் என்றும் ஏற்க மாட்டேன்.

        ஜாதி, மதவெறியர்களால் தான் இந்த நாட்டின் அமைதியும் ஒற்றுமையும் கெடுகிறது. அனைத்து ஜாதியினரும், அனைத்து மதத்தினரும் இங்கே ஒற்றுமையாக வாழ வழி வகுக்க வேண்டும். அதற்கு தடையாக யார் / எந்த கட்சி இருந்தாலும் அவர்களை ஒதுக்க வேண்டும்.

        மத உணர்வுகளை தூண்டி விட்டு ஜெயிக்க நினைப்பதும் தவறு.. அதே போல், மைனாரிடி ஓட்டுகளைப்பெற
        வாக்கு வங்கி அரசியல் நடத்துவதும் தவறு தான்.

        நான் இந்த இடுகையில் சொல்ல முற்பட்டது, பாஜக ஒரு தவறான பாதையில் சென்று வெற்றி பெற்றதை பார்த்து, காங்கிரசும் அதே வழியை பின்பற்றுகிறது என்பதை…

        – பாஜக-வின் arrogance இந்த நிலையில் அவசியம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.. அது நடக்க, அதற்கு எதாவது ஒரு மாநிலத்தில் பலத்த தோல்வி கிடைக்க வேண்டும்…அதைத்தான் சொல்ல வந்தேன்.

        அது கர்நாடகாவா, மத்திய பிரதேசமா, ராஜஸ்தானா…? – நமக்கு தெரியாது. பாஜக ஒரு தோல்வியை சந்திக்க வேண்டும் என்று சொல்லும்போது, அந்த தோல்வியை எந்த கட்சியால் கொடுக்க முடிந்தாலும் சரி என்பது தான் என் நிலை.

        —————–

        // முதல்லே அவங்களைக் காவிரி நீர் மேலாண்மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கும்படி சொல்லச் சொல்லுங்க! பார்ப்போம். //

        ஆமாம் – கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என்ன என்பதை உணர்ந்து தான் இதைச் சொல்கிறீர்களா…?

        சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பை கூறிய ஆறு வாரத்திற்குள், காவேரி நீர் பங்கீடு சம்பந்தமான விஷயங்களை
        நிர்வகிக்க “ஸ்கீம்” அமைக்க வேண்டும் என்று சொன்னது யாரிடம்…? கர்நாடகா அரசிடமா…?
        மத்திய அரசிடமா…?

        அதை நிறைவேற்ற வேண்டிய கடமை யாருடையது..? கர்நாடகா அரசுடையதா…? மத்திய அரசுடையதா…?

        கர்நாடகா அரசு எதிர்த்தால், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்திரவை நிறைவேற்றாமல் இருக்கலாமா…?
        நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..? கோர்ட் ஏற்றுக் கொள்ளுமா…?

        பாஜக பாசம் அல்லது காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு, பார்வையை மறைக்கலாமா…? உண்மையை மறக்கலாமா…?

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

  5. மதுரைத்தமிழன்'s avatar மதுரைத்தமிழன் சொல்கிறார்:

    ஹலோ காவிரி மைந்தன் உங்களுக்கு விபரமே தெரியவில்லை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை சட்டப்படி அமைத்தால் மாநில அரசு மத்திய அரசை டிஸ்மிஸ் செய்துவிடும் அதனாலதான் மத்திய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறது ஹீஹீ

  6. மதுரைத்தமிழன்'s avatar மதுரைத்தமிழன் சொல்கிறார்:

    மோடி மட்டும்தான் மதத்தை வைத்து சீப் பாலிடிக்ஸ் பண்ணலாம் மோடிக்கு மட்டும்தான் சீப்பாலிடிக்ஸ் ஏகபோக உரிமை அதை யாரும் காப்பி அடிச்சால் அவ்ங்க சீப்பான ஆளுங்க

  7. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    வேஷம் போடுவது பாஜகவிற்கு மட்டுமான தனி உரிமையா என்ன?

    காங்கிரஸ் பிரித்துவிட்டது என்று இங்கு கூவும் சில்வண்டுகள் எடியூரப்பாவையோ மோடி, அமித்ஷா, மோகன் பகவத் ஆகியோரில் ஒருவரையாவது பேச சொல்லாமே.

    ”நாங்கள் லிங்ஙாயத் தனி மதம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று.

    கர்நாடகா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கூட‌ இப்படி அவர்கள் சொல்லலாமே.

    ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லிங்ஙாயத் என்று தனி மதமானதை ரத்து செய்வோம்” என்று.

    அது லிங்ஙாயத்களின் நீண்ட நாள் போராட்டம்.

    தமிழகத்தில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் ‘தமிழர்கள் இந்துக்களல்லர்’ என்று பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதற்கு வலு சேர்க்கும் விதமாக சில ஆராய்சி முடிவுகளும் வந்துகொண்டிருக்கின்றன.

    நீங்கள் இப்படியே இந்து மதத்திலுள்ளவர்களிலேயே, மற்ற மதக்காரர்களை விடுவோம், துவேஷங்களை விதைத்து தீண்டாமையை நிலைநாட்டி அவர்களை ஒடுக்கப் பட்டவர்களாகவே வைத்திருந்தால்….

    எல்லா அவமானங்களையும் பொருத்துக்கொண்டு இருக்கணும் என்றால்….

    ஒரு நாளில்லை மறு நாள் இப்படி நடவாது என்பது என்ன நிச்சயம்.

    சரி. இதற்கு யார் பொருப்பு.

    பிரிந்து போகின்றவர்களா…? அவர்களை அந்த நிலைக்கு தள்ளுபவர்களா…?

  8. Vicky's avatar Vicky சொல்கிறார்:

    Yaaru indha anti BJP aalu? Ivangalam katchi para nalla kaappathuvanga. Ethirkatchi sathi:)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.