…
…

…
தமிழில் ஒரு சொல்வழக்கு உண்டு..
உப்பு தின்னா தண்ணி குடிக்கணும் –
தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும்…
ஏற்கெனவே தெரிந்தவை தான் என்பதால்
நடப்பவை குறித்து நமக்கு அதிர்ச்சியோ, ஆத்திரமோ,
கோபமோ, ஏற்படவில்லை…ஏற்கெனவே 50 ட்ரெயிலர்களை
பார்த்து, முழுக்கதையும் வெளியாகிவிட்ட
படம் பார்க்கும் அனுபவம் தான்….
ஆனால் –
ஏற்படுவது ஒரு சந்தேகம், பலத்த சந்தேகம்….!
இந்த அரசின் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் –
முன் அனுபவங்கள் மூலமாக ஏற்படும் சந்தேகம் …
எப்பவோ தெரிந்த விஷயத்திற்கு – இப்போது,
இந்த நேரம், இந்த முகூர்த்தம் –
தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன…?
தலைப்பு செய்திகளை மாற்ற வேண்டும் என்றா…?
மீடியாக்களில், தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் –
பதினொன்றாயிரம், இருபதாயிரம், இருபத்திஐந்தாயிரம் என்று
கோடியை தூக்கிக் கொண்டு ஓடிய மோடியை பற்றிய
தலைப்பு செய்திகள் மாற்றப்பட வேண்டுமென்றா…?
…

…
————————————————————————————————-



ஓன்று புரிகிறது. எதிர் கட்சி தப்பை கண்டுபிடித்தால் உடனே வெளியிட்டால் நாட்டுக்கு நல்லது. நாம் பிரச்சனையில் இருக்கும்போது வெளியிட்டால் நமக்கு நல்லது! இதில் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் பிஜேபி என்பது தெரிகிறது!
என் மனதில் தோன்றியதை அப்படியே நீங்கள் எழுதி விட்டீர்கள்.
காவிரிமைந்தன் சார்,
வழக்கின் விவரங்களை பார்த்தால் மிகவும் பல்வீனமாக இருக்கிறது
போலிருக்கிறதே; நிற்குமா ?
ராமச்சந்திரன்,
மிகுந்த புத்திசாலித்தனத்துடனும், ஏகப்பட்ட முன்னேற்பாடுகளுடனும் நடத்தப்படும் சட்டவிரோதச் செயல்களை கண்டு பிடிக்கவும், நீதிமன்றங்கள்
ஏற்கத்தகுந்த ஆதாரங்களை வெளிக்கொண்டு வரவும், சட்டத்தின் முன்
நிரூபிக்கவும் – அதிசாமர்த்தியம் மிகுந்த அதிகாரிகளும், வழக்குரைஞர்களும்,
முக்கியமாக – அமைச்சர்களும் தேவைப்படுவார்கள்…
ஒருவேளை சு.சு. நிதியமைச்சரானால், அது நடக்ககூடும்.. ஆனால் அந்த அத்தைக்கு மீசை முளைக்குமா…?
எனக்கென்னவோ, இவை தலைப்புச் செய்திகளுக்கு தீனி போட மட்டுமே உதவுமென்று தோன்றுகிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
about :http://www.dinamani.com/tamilnadu/2018/mar/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2872461.html
KM sir my basic concern
1. what about Tiruvarur MLR duty. from day one he was not turned up there.
2. without MLA function there what is his roll. but every month he is getting salary.
3. if EC checked the status (health condition) and do something for re- election will be the right action for the local people.
4. why media not a single time opened their mouth about this instead they are telling playing, laughing, learning . almost mr vajpay also in same condition but he is not in active politics. no body bother about him. such a way why this MK is not doing .
we do not have idea how long it will go like this.
expecting your view on this case.
சேஷன் – இதற்கு நான் பதில் எழுதுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஜன’நாயகம் என்பது மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுவது. மக்கள் ‘பூலான் தேவி’தான் தங்கள் எம்.பி என்று தேர்ந்தெடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
1. மாறன் மத்திய அமைச்சராக, போர்ட்போலியோ இல்லாத அமைச்சராக, அப்போலோவில் முழு சிகிச்சை இலவசமாகப் பெறும் காரணத்துக்காக ஒரு வருடங்களுக்குமேல் இருந்தார். அவர் மறைந்த உடனேயே, திமுக பாஜகவை விட்டு வெளியே வந்தது என்று ஞாபகம். அவருடைய சிகிச்சைக்காக, பல்லாயிரம் கோடி சம்பாதித்த கேடி பிரதர்ஸ், ஒரு பைசா செலவழிக்கவில்லை. ஓகே இது கருணானிதி தேர்தெடுத்த ராஜ்ஜியசபா எம்பின்னு வச்சுக்கலாம்.
2. கருணானிதி தான் தேர்தல் பிரச்சாரத்துக்கு வீடு வீடாகப் போகமுடியாத வயதான நிலையிலும் திருவாரூர் மக்கள் அவர்தான் எம்.எல்.ஏவாக இருக்கணும்னு நினைத்தாங்க. எம்.எல்.ஏவின் எந்த ஒரு கடமையையும் அவரால் நிறைவேற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை என்பது அவர்கள் எண்ணம். அதை உபயோகப்படுத்திக்கொள்கிறார் கருணானிதி. இதில் அவர் தவறு என்ன? அவர் என்ன, நான் காந்தி போல, மனசாட்சி உள்ளவன் என்று சொல்லியிருக்கிறாரா என்ன?
தொகுதிக்கே செல்லாமல் இருந்தவர்களை எம்.எல்.ஏக்களாக கேரள மக்களும் தமிழக மக்களும் (தமிழகமாவது பரவாயில்லை. எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியிருந்தார். அவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது) தேர்ந்தெடுக்கும்போது, இதில் நீங்கள் குறை கண்டால், நீங்கள் மக்களைத்தான் குறை சொல்லவேண்டும்.
‘கடமை’, ‘நேர்மை’ போன்றவற்றை நீங்கள் பேசினால், அதற்கும் பெரும்பாலான எம்.பிக்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும். அவர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள வீடுகளில் உள் வாடகைக்கு விட்டிருக்கிறார்களா, பாராளுமன்றத்தில் அவர்கள் யாருக்காக கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள் என்பதெல்லாம் ஆராய்ந்தால் உடனே உங்களுக்கு பதில் கிடைத்துவிடும்.
Thanks புதியவன். for detailed ,our democratic pathetic condition (function).