…
…
விஸ்வரூபமெடுத்து, ஏழரை கோடி தமிழக மக்களுக்கு “நீதி” கேட்க புதிய தலைவராக அவதாரம் மேற்கொண்டுள்ளவர் பற்றி வருத்தம் தரும் செய்திகள் வெளிச்சத்திற்கு வருகின்றன…
துவக்கத்திலிருந்தே இந்த வலைத்தளத்தில் அவரை விமரிசனம் செய்து வந்ததன் முக்கிய காரணமே அவர் –
“ஆணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வதற்கு – கல்யாணம் என்னும் சடங்கு எதற்கு…?”
-என்று தன் கொள்கையை பிரகடனப்படுத்தி ஒரு சமூக விரோத கருத்தை தொடர்ந்து பேசி வந்ததால் தான் என்பது இந்த வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு தெரியும்.
அவர், தான் மட்டும், தன் தனி வாழ்க்கையில் இதை கடைபிடிப்பதில்
நமக்கு நஷ்டம் ஏதுமில்லை; ஆனால் சமூகத்திற்கும் இந்த கொள்கையை
உபதேசிப்பது சமூக சேர்கேட்டிற்கும், பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும்
அயோக்கியத்தனத்திற்கும் வழி வகுக்கும் என்று தான் நாம் கூறி வந்தோம்.
அந்த கவலை இப்போது உறுதிப்படுத்தப்படுகிறது.
அவரை நம்பி, அவருடன் இணைந்து வாழ்ந்த ஒரு பெண்மணிக்கு
அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
– அவருடன் 13 ஆண்டுகள் – அவரது கொள்கைப்படி –
இணைந்து வாழ்ந்து, அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி புகார்
சொல்லும்போது நாம் அதைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது….
எப்போது அந்த பெண்மணி, பொதுவெளியில் தனது குறைகளை எடுத்துச் சொல்கிறாரோ அப்போது, அதற்கு தீர்வு காணச்சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது சமூகத்தினரின் கடமையாகிறது…
திருமதி கௌதமி தடமல்லா – தனது சமூக வலைத்தளத்தில், சில நிகழ்வுகளையும், அதனால் தனக்கு ஏற்பட்டுள்ள துயரங்களையும் மிகவும் நாகரிகமான முறையில் விவரித்திருக்கிறார் ….
முழு விவரம் அறிய விரும்புவோர் அந்த இடுகையை படிக்கலாம்…
…

…
—————————————
சுருக்கமாக, அவர் சொல்வது –
– அக்டோபர் 2016-ல் தவிர்க்க முடியாத காரணங்களால் நாங்கள் பிரியவேண்டிய அவசியம் ஏற்பட்டது…
– அதற்கு முன்னரே, இரண்டு வருட காலத்திற்கும் மேலாக – நான் அங்கே சொல்லவொண்ணா துயரங்களையும், நிம்மதியற்ற வாழ்வையும்
எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
– நாங்கள் இணைந்து வாழத் துவங்கியபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும், நன்னடத்தை குறித்த ஒப்புதல்களும் அவரால் மீறப்பட்டது எனக்கு அளப்பரியா வருத்தத்தையும், நிம்மதியின்மையையும் கொடுத்தது.
– அவருடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில், நான் என் சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழந்து, அவைகளை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்…
-வேறு வழி இல்லை.. அதே இடத்தில் மேலும் நான் தொடர்ந்து வாழ
நேர்ந்தால், என் தன்மானத்தை நான் முற்றிலுமாக இழக்க நேரிடும் என்பதோடு,
எதிர்காலத்தில் – நானும், என் பெண் குழந்தையும் எந்தவித நிச்சயமும்,
பத்திரமும் இல்லாத சூழ்நிலையில் கைவிடப்படுவோம் என்கிற நிலைக்கு ஆளானோம்.
– மூளை செயல்படாத நிலையில்( …? ), தேவையே இல்லாமல், அவர்
காலை ஒடித்துக் கொண்டது, என்னை பெருத்த சங்கடத்திற்கு
உள்ளாக்கியது. இருந்தாலும், என் துயரங்களை எல்லாம் ஒருபுறம்
ஒதுக்கிவைத்து விட்டு, அவர் முற்றிலுமாக உடல்நலம் பெற்று நடக்கும் வரையில் நான் அவருக்கு துணையாக இருந்தேன்.
– அவருடைய கடினமான காலங்களில் எல்லாம் நான் அவருக்கு முழுவதுமாக துணை நின்றேன். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்தபோது, என் அத்தைகள் மட்டுமே எனக்கு துணை நின்றனர்.
– இனியும் தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து அங்கே இருக்க முடியாது என்கிற நிலையில் –
– நான் என் பெண்ணின் எதிர்காலத்திற்காகவும், எனக்காகவும் ஒரு நிரந்தர வருமானத்திற்கு வழிசெய்ய வேண்டிய நிலையில் இருந்தேன்… ஆனால், நான் திரைப்படங்களிலோ, தொலைக்காட்சிகளிலோ பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. வேறு நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றவும்
அனுமதிக்கப்படவில்லை.
– நானும், என் மகளும் நிராதரவான நிலையில் நிற்கிறோம் என்பது எனக்கு புரிந்த நிலையில் தான் வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறி எனக்கென ஒரு தொழிலையும், நிதி ஆதாரத்தையும் உருவாக்கிக்கொள்ள துணிந்தேன்.
– நானும் அவரும் இன்னமும் தொடர்பில் இருப்பதாக கதைகள் உருவாக்கி விடப்படுகின்றன…. அவரைப்பிரிந்து வெளி வந்த அந்த நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கிடையே எந்தவித தொடர்பும் இல்லை…
– ஆனால், நான் அங்கிருந்த காலத்தில் செய்த சில பணிகளுக்காக, எனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி அவரது நிறுவனத்தால் தரப்பட வேண்டி இருக்கிறது…
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற
படங்களுக்காகவும், கமல் ஹாசன் நடித்த பிற நிறுவனங்களின் படங்களிலும் நான் Costume Designer ஆக பணிபுரிந்தேன்.
இதற்காக எனக்கு தருவதாக சொல்லப்பட்ட சம்பளப்பணம் இன்னமும்
கொடுக்கப்படவில்லை.
இதைத்தவிர, அவரது நிறுவன்ம் ஒன்றில், டைரக்டராக 2010-முதல்
பணியாற்றி வந்தேன். இதற்காக கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் இதுவரை எனக்கு கொடுக்கப்படவில்லை.
இது குறித்து, பலமுறை நான் அவருக்கும், அவரது நிறுவனத்திற்கும் எழுதியும், எனக்கு வரவேண்டிய பெரும்பகுதி பணம் இன்னமும் வந்து சேரவில்லை….
என் மகளின் எதிர்காலத்திற்காகவும், எங்களின் வாழ்க்கையை
உறுதிப்படுத்திக்கொள்ளவும் எனக்கு இந்த நிதியாதாரமும் அவசியம்
தேவைப்படுகிறது. எங்களின் எதிர்கால வாழ்க்கையை – நான் தன்மானத்துடனும், தன்னம்பிக்கையுடனும், உழைத்து எதிர்கொள்வேன். என் நண்பர்களும், உறவினர்களும், எங்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அன்பு உள்ளங்களும் இதற்கு உதவுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
———————————–
ஏழரை கோடி தமிழக மக்களுக்கு “நீதி” பெற்றுத் தருவதில்
ஏற்படும் தாமதத்தை அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.
அருள் கூர்ந்து, முதலில் இந்த தனிப்பட்ட பெண்மணிக்கு,
அவரது உழைப்பிற்காக கொடுக்கப்பட வேண்டிய “நிதி”யை
கொடுத்து, அந்த கடனை முதலில் தீர்த்து வையுங்கள் என்பது இந்த
விமரிசனம் தளத்தின் வேண்டுகோள்.
ஒருவரையொருவர் எவ்வளவு தான் –
உளமாற விரும்பினாலும்,
நம்பிக்கை இருந்தாலும்,
திருமணம் என்கிற அதிகாரபூர்வமான சடங்கு ( ஒப்பந்தம்…?)
இன்றி சேர்ந்து வாழத்துவங்கினால், பெண்களுக்கு, எத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
————————————————————————————————————-



//அவர், தான் மட்டும், தன் தனி வாழ்க்கையில் இதை கடைபிடிப்பதில்
நமக்கு நஷ்டம் ஏதுமில்லை; ஆனால் சமூகத்திற்கும் இந்த கொள்கையை
உபதேசிப்பது சமூக சேர்கேட்டிற்கும், பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும்
அயோக்கியத்தனத்திற்கும் வழி வகுக்கும் என்று தான் நாம் கூறி வந்தோம்.
அந்த கவலை இப்போது உறுதிப்படுத்தப்படுகிறது.//
True.
மனிரத்னமும் இந்த கேடு கெட்ட தனத்தை தான் ஒரு படத்தில் வலியுறுத்தினார். அந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது இப்படி தோன்றியது. அவரால் அவர் குடும்பத்தில் இந்த கேடு கெட்ட தனத்தை அனுமதிக்க முடியுமா? என்று.
‘அவர்களுக்கு என்ன…!?’ என்று நினத்துக்கொண்டேன்.
இங்கு குரைத்துக் கொண்டிருக்கும் சில நாய்களுக்கும் இதுதான் வழிமுறையாக இருக்கும். தலைவன் எவ்வழி அடிபொடிகள் அவ்வழி.
கௌதமி சொல்லியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. அது பிறகு.
உங்க எதிர்பார்ப்பு, ரொம்ப அதீதம்னு நான் நினைக்கறேன். தலைவர்கள் சொல்வதைச் செய்யணும் என்று எதிர்பார்த்தீங்கன்னா (இந்தியாவில்), அப்படி யாரைப் பார்த்திருக்கிறோம் என்று யோசித்தாலும் யாரும் அகப்படுவதில்லை.
கருணானிதி அவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதினாலும், அவர் கடைபிடித்த ஒரே குறள் (எனக்குத் தெரிந்து)
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.”
அதுக்காக அவர் ஊருக்கு உபதேசம் செய்வதை என்றாவது நிறுத்தியிருக்கிறாரா? கமலஹாசனும் அந்த வழின்னு எடுத்துக்க வேண்டியதுதான். நம்ம தமிழ்மக்களும் ‘ஒழுக்கம்’ போன்றவையெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் அல்லர். அதனால் கருணானிதி வழியில் கமலஹாசனும் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யமில்லை. (பிறகு அவரே, பண்பாடு, நாகரீகம் போன்றவை பற்றி கூட்டத்தில் பேசும்போது, எல்லோரும் ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு கேட்பதையும் கண்டிப்பா நீங்களும் நானும் பார்க்கத்தான் போகிறோம்)
எனக்கு ஒரு சந்தேகம்:
இரண்டு மனைவி கட்டி வாழ்க்கை கொடுத்தவர் சிறந்தவரா….!?
ஒரு மனைவி கட்டி அவரையும் விரட்டிவிட்டவரா….?
நம்ம என்னதான் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசிக்கொண்டிருந்தாலும், பொதுவா (என் கருத்து) ஆண், வயதாக வயதாக மெருகேருவான். பெண், குழந்தை பெற்றபிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழகு குறையும் (அதிலும் இந்தியப் பெண்கள் உடலில் கவனம் செலுத்தவே மாட்டார்கள். அதாவது keeping body fit). அப்போ, நாம மேற்கத்தைய வழக்கத்தைத் தொடர்ந்தால், ஆண் எப்போது வேணுமானாலும் கழட்டிவிட்டுவிடுவான்.ரெண்டுபேரும் சம்பாதிக்கணும், அவங்க அவங்களுக்குத் தனித்தனியா சேத்துவச்சுக்கணும், திருமணம் என்ற பந்தம்-சட்ட ரீதியான அந்தஸ்து இருக்கணும், இவன் சரியில்லைனா வேற என்ற மனம் பொதுவா எல்லோருக்கும் இருக்கணும். இதெல்லாம் நம்ம ஊர்ல அவ்வளவு சுலபமா நடக்கிற காரியமா? அதனால, நம்ம ஊருக்கு இந்த ‘சேர்ந்து வாழ்வோம் கான்செப்ட் சரிப்பட்டு வராது என்பது என் எண்ணம்.
கமலஹாசன் திரையுலகில் இருப்பவர். டாஸ்மாக் கடைகளில் வேலை பார்ப்பவர், மது அருந்தாதவராக இருப்பது வெகு அபூர்வம். அதனால கௌதமி அம்மா, தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுத்துட்டு இப்போ குறைகளைக் கண்டுபிடிப்பதில் என்ன பிரயோசனம்? அவ்வளவுதான் மேட்டர்.
<<டாஸ்மாக் கடைகளில் வேலை பார்ப்பவர், மது அருந்தாதவராக இருப்பது வெகு அபூர்வம்.
என்ன ஒரு logic ?
<<அதனால கௌதமி அம்மா, தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுத்துட்டு இப்போ குறைகளைக் கண்டுபிடிப்பதில் என்ன பிரயோசனம்?
கவுதமி மட்டுமல்ல – அவர் தாலி கட்டிய மனைவியும் இதே போல் குற்றச்சாட்டை சொன்னார்
இந்த ஆசாமி ஒரு வடிகட்டிய கஞ்சன். அந்த பெண்
கவுதமியை போட்டால், costume designer சம்பளம் மிச்சம்
என்று நினைத்து தான் அவரை போட்டிருப்பார். டைட்டிலிலும்
போட்டு விட்டு வருமான வரி இலாகவிற்கு செலவு கணக்கு
காட்ட, 10-20 லட்சம் என்று அக்கவுண்டில் காட்டி இருப்பார்கள்.
இந்த அப்பாவிப்பெண் தனக்கு அந்த பணம் ஊதியமாக கிடைக்கப்
போகிறது என்று நினைத்திருக்கிறார். நிஜமாகவே கொடுக்க
நினைத்திருந்தால், படம் ரிலீசாகும்போதே கொடுத்திருக்க
மாட்டாரா? வெறும் டுபாக்கூர்;
மானம் வெட்கம் உள்ள ஆசாமியாக இருந்தால் கவுதமியின்
லெட்டர் /ட்விட்டரை பார்த்தவுடனேயே பணத்தை தூக்கி
போட்டிருக்க மாட்டாரா ? இவரிடமிருந்து அந்த பெண்மணி
பணத்தை எதிர்பார்ப்பது கல்லிலிருந்து நார் உரிப்பது போல தான்.
நம்பிய பெண்ணை இப்படி ஏமாற்றும் இவர் தான் தமிழ்நாட்டுக்கு
நீதி வாங்கி தரப்போகிறாரா ? இவர் பின்னாலும் சில பினாத்துகள்
அலைகின்றன பாரதியின் பெயரைக் கெடுத்த
அந்த போலி கம்யூனிஸ்ட் கிருஷ்ணகுமார்; எலிமெண்டரி ஸ்கூல்
வாத்தியார் வேலைக்கு கூட லாயக்கில்லாத பேருக்கு ஆசிரியர்
அஞ்ஞானசம்பந்தன் என்றெல்லாம். அத்தனையும் அப்பாவி மக்களை ஏமாற்றும்போலிகள்; டுபாக்கூர்கள்;
அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் மக்கள் பெரிதும் ஒழுக்க சீர்கேட்டில் இருந்தாலும் நாட்டின் தலைமையை அவ்வாறு இல்லாதவர்களாக பார்ப்பார்கள். அவர்கள் வகுத்துக் கொண்ட ஒழுக்க நெறிகள் அடிப்படையில் உள்ளவர்கள் தான் நாட்டின் தலைமைக்கு வரமுடியும்.
ஆனால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தாலும் சாபக்கேடோ என்னவோ தம் தலைவர்களை அந்த அளவுகோல் கொண்டு தேர்ந்தெடுக்க தவறுகிறார்கள்.
அப்படி மக்கள் பார்த்திருந்தால் மோடிக்கள் வரமுடியுமா என்ன…!?
Hi KM,
Hope you know that I am a reguLet follower of your blog. Kind of personal attacks you face these days really hurts me as a reader. But do you feel that your articles these days are unbiased? I don’t say a word about your ignorance in the matters of forgeries done by Rijini’s family members. Because you have the choice and freedom to write whatever you want in your blog. At the same time you have a history of credibility among neutral readers that you will go beyond and explore the facts behind the news. Don’t you really see any hidden facts of the time this concern is raised by Gowthami? Or the fact about the producers of the movies mentioned?
Antony,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பவர், நான் ஏன் இதை இப்போது
எழுதி இருக்கிறேன் என்றும் கொஞ்சம் யோசிக்கலாமே…?
என்னைப் பொருத்த வரையில் சமூக நலனும், ஒழுக்கமும் தான் முதல் priority.. சமூகத்தை கெடுக்கக்கூடிய, பாதிக்கக்கூடிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன்.
// “ஆணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வதற்கு – கல்யாணம் என்னும் சடங்கு எதற்கு…?” //
என்கிற கருத்து, இத்தனை ஆயிரம் ஆண்டுக்காலமாக நாம் உருவாக்கி கட்டிக் காத்து வரும் குடும்பம் என்கிற சித்தாந்தத்தையே அழிக்கக்கூடிய விஷம்… அமிலம்…!
அந்த கருத்தை பரப்புகிற ஒருவர் இந்த சமுதாயத்திற்கு கேடு செய்பவர் ஆகிறார்… அவர் அரசியலில் நுழைந்து வளர்ச்சி பெறுவது இந்த சமூகத்திற்கு கேடு….
எனவே, இந்த இடுகையை எழுதுவது என் கடமை ஆகிறது.
மேற்கண்ட இடுகையின் கடைசி பத்தி, இதை உங்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டுமே…
// ஒருவரையொருவர் எவ்வளவு தான் –
உளமாற விரும்பினாலும்,
நம்பிக்கை இருந்தாலும்,
திருமணம் என்கிற அதிகாரபூர்வமான சடங்கு ( ஒப்பந்தம்…?)
இன்றி சேர்ந்து வாழத்துவங்கினால், பெண்களுக்கு, எத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். //
ஏன் …. அவர் சொல்வதும், செய்வதும் – அவரது தத்துவமும்
சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா…? அவற்றை ஏற்றுக் கொள்வீர்களா..?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//ஏன் …. அவர் சொல்வதும், செய்வதும் – அவரது தத்துவமும்
சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா…? அவற்றை ஏற்றுக் கொள்வீர்களா..?//
Definitely not. But I don’t see him encouraging or propagating his idea of loving together. I see much of his followers also taking their own stances when it comes to cultural values. They have been good enough to decide what to take and not take from him. (Of course barring the language they used here 😦 )
I was under the same impression as you when I read KM’s kamal articles – means they are biased.
But, look at Gauthami’s blog..the kind of wordings chosen by her 😦
Seems the way in which Kamal treats women is 😦 😦
This is not the first time – in fact this is the third time .. what good to expect from a person if he cannot treat women with due respect.
You can check Vani Ganapathi’s past interviews
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒரு தனிமனிதனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.அதுவே அவன்(அவள்) பொது வாழ்வில் நுழைய முயற்சித்தால் அவன் முற்பிறவி முதல் அவன் குணநலன்கள் அலசி ஆராயப்படும்.இது அப்படியே தலைகீழ் பாடம் நம் நாட்டில்.இதுதான் நம் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம்.
//துவக்கத்திலிருந்தே இந்த வலைத்தளத்தில் அவரை விமரிசனம் செய்து வந்ததன் முக்கிய காரணமே அவர் –“ஆணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வதற்கு – கல்யாணம் என்னும் சடங்கு எதற்கு…?”
-என்று தன் கொள்கையை பிரகடனப்படுத்தி ஒரு சமூக விரோத கருத்தை தொடர்ந்து பேசி வந்ததால் தான் என்பது இந்த வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு தெரியும்//
“கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விட கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்…
– நமது புருஷர்கள் இரண்டு பொண்டாட்டிகளோடு வாழ்வதை போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களோடு வாழ்வது தவறில்லை என்பது நமதபிப்ராயம்”
இதை சொன்னவரு யாரு கமலஹாசனா மிஸ்டர் காமை? உமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதினால் …. இதை சொன்னவர் பெரியார்… எங்க அவரை எதிர்த்து எழுத உமக்கு துணிச்சலிருக்கிறதா?
பெரியாரும் கமலஹாசனும் துணிச்சலாக திருமணத்தை எதிர்த்து ஓபனாக பேசிவிட்டார்கள். ஆனால் … https://3.bp.blogspot.com/-_xFURNkmb2g/WEaVcTP4m6I/AAAAAAAACms/3rVEvNHujnw297Qg0Ocxf1fJbFJfOl1_wCLcB/s640/1373920677-191.jpg இந்த படத்துக்கு என்ன அர்த்தம்? இருவரும் என்ன அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்களா? இப்படி கமுக்கமாக திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர்தானே உங்க தலைவி!
இந்த பின்னூட்டத்தை நீக்காமல் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!!! அது உம்மால் இயலாது, அடலீஸ்ட் இனியாவது கமலின் சொந்த வாழ்வினை விட்டுவிட்டு அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும்.
//
அவர், தான் மட்டும், தன் தனி வாழ்க்கையில் இதை கடைபிடிப்பதில்
நமக்கு நஷ்டம் ஏதுமில்லை; ஆனால் சமூகத்திற்கும் இந்த கொள்கையை
உபதேசிப்பது சமூக சேர்கேட்டிற்கும், பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும்
அயோக்கியத்தனத்திற்கும் வழி வகுக்கும்
//
கமல் உபதேசித்தார். ஜெ உபதேசிக்கவில்லை.
உபதேசித்ததால் தான் எதிர்ப்பு!
கமல் எப்போது உபதேசம் செய்தார்? அவரது சொந்த வாழ்வினை குறித்து கேள்வி வரும்போது சமாளிக்க ஏதாவது சொல்லியிருப்பார். அந்த கருத்தினை கொண்டவர் ஏன் இருமுறை திருமணம் செய்தார்?
அவ்வளவு, ஏன் ரஜினியே ஒரு தடவை, குடும்ப முறை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது, அமெரிக்கர்கள் குடும்பத்தை பற்றி கவலைபடாமல் முன்னேறுகிறார்கள் என்று சொல்லியிருந்தார்.
இது அவர்களது கருத்து, அவ்வளவுதான்.சினிமாக்கார்கள் சொல்வதே உபதேசம் என்பது நம்ம போக்காயிருக்கிறது.
<< சொந்த வாழ்வினை விட்டுவிட்டு அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும்.
கவுதமி மூன்றாவது பெண்.. சொந்த வாழ்வில் சுத்தம் இல்லாதவர் எப்படி பொது வாழ்வில் சுத்தம் பேணுவார் ?
வடிவேலு,
அவ்வப்போது இங்கே வந்து ஆபாசமான பின்னூட்டங்களை போட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ளும் உங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் கூட …
உங்களை விட சற்றாவது அதிகமாகவே பெரியார் அவர்களை உணர்ந்தவன் நான்… எனவே, எனக்கு பெரியார் பற்றி கற்றுக்கொடுக்கும் முயற்சி தேவையற்றது.
அதே போல், பெரியாரின் எந்த கருத்துகளை ஏற்க வேண்டும் – எதை நிராகரிக்க வேண்டும் என்கிற உரிமை என்னுடையது… என் பழைய இடுகைகளை பார்த்திருந்தால் உங்களுக்கு இது புரிந்திருக்கும்.
பெரியார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால், சமுதாயம் எப்படி இருந்த சூழ்நிலையில் அதைச் சொன்னார் என்பது தெரிந்திருக்க வேண்டும்… அந்த அடிப்படையே உங்களுக்கு தெரியவில்லை என்பது உங்கள் பின்னூட்டத்திலிருந்து புரிகிறது. பெரியாரின் இந்த கருத்துக்கான காலம் மாறி விட்டது. இன்றைய சூழ்நிலையில், அவரது இந்த கருத்துகளுக்கு தேவை இல்லை.
ஏன் பெரியாரின், கமல் ஹாசனின் கருத்துக்கு வக்காலத்து வாங்கும், நீங்கள் அதனை உங்கள் வாழ்வில் செயல்படுத்தத் தயாரா …? நீங்கள் இருக்கும்போதே உங்கள் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொள்ள
சம்மதிப்பீர்களா..? பிதற்றல்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்.
பெரியார் அவர்கள் உயிருடன் இருந்து, இப்போது இந்த கொள்கையை பிரச்சாரம் செய்தால், அதை எதிர்த்து எழுதவும் எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. என் கருத்தை நான் சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும்…?
என்னைப் பொருத்த வரையில் – சமுதாய நலனுக்கு, உறுதி செய்யப்பட்ட குடும்ப வாழ்வு மிக மிக முக்கியம். இல்லையேல் மீண்டும் காட்டுமிராண்டிகள் காலத்திற்கு தான் நாம் திரும்பப் போவோம். நாடு முழுவதும் அநாதரவாக கைவிடப்பட்ட பிள்ளைகள் அலைந்து கொண்டிருக்கும்.
பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டும் கருதி, வரிசையாக, இணைந்து – பின் துறந்து – ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆசாமிக்கு தன்னை தலைவன் என்று சொல்லி பிறருக்கு வழிகாட்ட எந்தவித தகுதியும் இல்லை.
ஏன்… நீங்கள் ஏற்கிறீர்களா இவரை தலைவராக…?
வழிகாட்டியாக…?
நான் சுதந்திரமானவன்…
எந்த கட்சியிலும் உறுப்பினர் அல்ல…
என் ஆயுளில் ஆகவும் மாட்டேன்.
யாரையும் விமரிசிக்கும் உரிமை எனக்கு உண்டு.
அதே சமயம், அவர்களின் விசேஷமான சில குணங்களுக்காக – எனக்குப்பிடித்த சில தலவர்களும் உண்டு. அதையும் வெளிப்படுத்துவதில்
எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதற்காக அவர்கள் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை…..அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் ஏற்றாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.
நான் எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பது முற்றிலும் என் விருப்பம். அதை தீர்மானிக்க உங்களுக்கோ – வேறு யாருக்குமோ உரிமை இல்லை.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எதிர்கருத்து என்பதே ஆபாசமா? அடக் கடவுளே. நீங்கள் இந்தியா நாட்டின் பிரதமரையே எதிர்த்து எழுதுவீர்கள் (தவறேதுமில்லை அதில்) ஆனால் அவரோடு ஒப்பீட்டளவில் (பலகோடி பேரின் விதி அந்த பதவி வகிப்பவரின் கையில்தான்) ஒன்றுமில்லாத உங்களை கேள்வி கேட்டால் அது ஆபாசமா?
எதையும் எழுத உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதை எதிர்த்து கேட்கும் எங்களுக்கு உரிமை உண்டல்லவா? அப்படி கேட்டால் அந்த கேள்வியை நீக்க உங்களுக்கு உரிமை உண்டு. அதை எதிர்க்கவும் எமக்கு உரிமை உண்டல்லவா?
பெரியாருக்கோ கமலுக்கோ வக்காளத்து வாங்கவில்லை நான். கமலை எதிர்க்க இது சரியான காரணம் இல்லை என்பதுதான் எனது கருத்து. பெரியார் எவ்வளவோ நல்ல கருத்துக்களை சொன்னார். இந்த கருத்தை மட்டும் வைத்து பெரியாரை நிராகரிப்பது முட்டாள்தனமாது அல்லவா?
அதே போல் கமலின் பிற திட்டங்களை அல்லது அதன் இல்லாமை குறித்தோ விவாதித்து நிராகரிப்பதே சரியானதல்லவா? அதே நேரம் அவர் முதலைச்சரானால் குடும்பத்தை சட்டரீதியாக ஒழிப்பேன் என்றால் அவரை நிராகரிப்பது சரியானதாக இருக்கும்.
வடிவேலு,
இன்னமும் உங்கள் பின்னூட்டம் ஒன்று நீக்கப்படாமல் மேலே இருக்கிறது. அதன் மொழி நடை (language) எப்படி இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
இங்கு பின்னூட்டம் இடும் மற்ற நண்பர்கள் எப்படி பண்பாக, நாகரிகமாக எழுதுகிறார்கள் என்பதையும் பாருங்கள்.
வலைத்தளத்தில் மிக அதிகமாக பின்னூட்டங்களை பெறும் தளம் இது. அதிக அளவில் விவாதம் நடைபெறுவதும் இங்கு தான்.
நீங்கள் இதற்கு முன்பாக எழுதி, நான் நீக்கிய பின்னூட்டங்கள் எல்லாம் உங்கள் வசம் இருக்கும். அதையெல்லாம் நீங்களே இப்போது மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். நாகரிகமாகவா எழுதி இருக்கிறீர்கள்…? உங்கள் மனசாட்சியே ஏற்குமா அதை…?
உண்மையான ஆர்வத்தோடு விவாதத்தில் பங்கெடுக்க விரும்புபவர்கள் அனைவரும் எப்போதும் இந்த தளத்தில் வரவேற்கப்படுகிறார்கள்/அனுமதிக்கப்படுகிறார்கள். மாற்றுக்கருத்தை முன்வைப்பது ஒரு பிரச்சினையே அல்ல.
ஆனால், பொறுப்பற்றும், போக்கிரித்தனமாகவும், விதண்டாவாதத்திற்காகவும் வருபவர்களுக்கு இங்கே நிச்சயமாக இடம் இல்லை. அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதில் உங்கள் நிலை எது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே தான்.
உங்களது அடுத்த பின்னூட்டம் இங்கு இடம் பெற வேண்டுமானால், அதற்கு தகுந்தாற்போல் எழுதுவது உங்கள் பொறுப்பு.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்