…
…

…
ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்பதையே நம்ப முடியவில்லை…
அவர் இறந்ததாக கூறப்படும் பின்னணியையும் நம்ப முடியவில்லை…
என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருக்கிறது…
ஒளிந்து, மறைந்து – வெளிவரும் சில நுணுக்கமான செய்திகள்
மர்மத்தை இன்னும் கூட்டவே செய்கின்றன.
ஏதோ மறைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது…
சம்பந்தப்பட்டவர்களே விவரமாகச் சொன்னால் தான் தெரியும்…
நம் அனைவரின் மனமும் வருந்துகிறது…
சிறு வயதிலேயே நடிக்க வந்து.
பல தமிழ்ப்படங்களில் நடித்து,
தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்து –
பின்னர் வடக்கே பறந்து போனார்…
அங்கும் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்…
அகில இந்தியாவும் வியந்து பாராட்டும் தாரகை ஆனார்…
என்ன குறை இருக்க முடியும் அவருக்கு…?
ஏன் இப்படி…?
எது எப்படியாக இருந்தாலும்,
நட்சத்திரம் ஒன்று உதிர்ந்து விட்டது என்பது நிஜம் தான் …
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
வளர்ந்த குழந்தையாக –
ஒன்றும் அறியாத பெண்ணாக –
அவர் நடித்த, மறக்க முடியாத காட்சியொன்று –
( மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் –
இறுதியாக எழுதிய பாடல்,
பாலு மகேந்திராவின் படப்பிடிப்பில்…
இளையராஜாவின் இசையில்…..)
கண்ணே… கலைமானே…
————————————————————————————————————-



அதே உணர்வோடு தான் தங்களின் கருத்தை அறியலாம் என்று கேட்டிருந்தேன். நன்றி.
‘Behind-the-breaking news’ என்று எதுவும் இருக்கோ என்னவோ? கொஞ்சம் நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனித்து வாருங்கள் ஐயா.
ஏனென்றால், இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர்கள் நம்மை ஒரு விதமான சந்தேகத்திலேயே ஒரு விதமான பதட்டத்திலேயே வைப்பது தான் அவர்களின் வழிமுறைகளாக இருக்கிறது. ஆனால், அதுவே நாளை பெரும் தீங்காக முடியும் என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள்.
சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், அது ஜெயலலிதா மற்றும் ஸ்ரீதேவி போன்றவர்களாக இருந்தாலும் சரியே, இன்றைய சூழ்நிலையில் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள். தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கூடுதல் ஆபத்தில் இருக்கின்றார்கள் போல் நாட்டு நடப்புகளை பார்க்கும் பொழுது சந்தேகமாக இருக்கிறது.
திடீர் மாரடைப்பு மரணங்கள் நாட்டில் பெருகி வருகிறது. இது மிகுந்த கவலையளிக்க கூடிய விசயம்.
அறிந்து கொள்ளட்டும். இது அவர்களுக்குமே நாளை நடக்கக் கூடும்.
எல்லாவற்றையும் சந்தேக கண்ணனுடன் பார்க்க வேண்டுமா
எல்லாவற்றிலும் சந்தேகம் அல்ல –
காரணமாகத்தான் சந்தேகம்.
மிகவும் புகழ்பெற்ற ஒருவர்,
நிறைய சொத்து இருப்பவர்,
நிச்சயமாக உதவியாளர்கள் உடன் இருந்திருப்பார்கள்…
ஆனாலும்,
” பல மணி நேரங்களாக அறையை விட்டு வெளியே வரவில்லை.”
” பாத்ரூமில் விழுந்து கிடந்தார்”
– என்று வளைகுடாவிலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
சம்பந்தப்பட்டவர்கள் – முடிவு எப்படி நேர்ந்தது, கூட இருந்தது யார்,
பல மணி நேரங்களாக யாரும் கவனிக்காதது ஏன்…?
போஸ்ட்மார்டம் ஏன்..?
போன்ற விவரங்களை வெளியிடாமல் மறைப்பது சந்தேகங்களை
எழுப்பவே செய்யும்.
சார்… சாதாரண நடுத்தரக் குடும்பங்களிலேயே, கல்யாண பார்ட்டி நடக்கும்போது குடும்பத்தில் யாரோ ஒருவர் மட்டும் அறைக்குத் திரும்புவது சாதாரண செயல். உடனே அவரைத் தேடி யாரும் வரமாட்டார்கள். பெரிய இடங்களில் இதுபோன்றவை மிகச் சாதாரணம்.
நான் தனியாக ஒருமுறை ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அலர்ஜி அறிகுறியால் குளிக்கச் சென்றேன். அப்புறம் அங்கேயே பிரஷர் குறைவால் மயங்கியிருக்கிறேன், எழுந்துகொள்ள நினைத்தபோது அங்கேயே மீண்டும் விழுந்திருக்கிறேன். அப்புறம் கொஞ்சம் சுமாராக ஆனதும் அப்படியே தள்ளாடி எழுந்து படுக்கையில் விழுந்தேன். பத்து நிமிடங்கள் கழித்து எழுந்தபோது தலையணையில் இரத்தத்தைப் பார்த்து பயந்து என் நண்பனை வரச்சொன்னேன். எதுக்கு சொல்றேன்னா, இதுமாதிரி மயங்கி விழுவதோ, அடிபட்டுக்கொள்வதோ சாதாரணம்.
அதுனால, அவங்க மரணத்தில் ரொம்ப சந்தேகம் தேவையில்லை.
//ஏதோ மறைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது// – எனக்குத் தெரிந்து இதில் சந்தேகப்பட ஒன்றும் இல்லை. மேல்மட்ட மனிதர்களுக்கு நிறைய பழக்கம் இருக்கலாம் (மது போன்றவை). கொண்டாட்டத்தில் தளர்ச்சி அடைந்திருக்கலாம்.
பொதுவா, நம்ம நாடு மாதிரி இல்லாமல், வெளி நாடுகளில் அவர்கள் கண்டிப்பாக ப்ரொசீஜரை ஃபாலோ செய்வார்கள். அது எந்த மரணமாக இருந்தாலும் (இந்த மாதிரி) போஸ்ட்மார்ட்டம் இருக்கும். அதே சமயம் ரொம்ப காஸிப் இல்லாமலும் பார்த்துக்கொள்வார்கள் (அவர் முக்கியஸ்தர் என்பதால்)
Simple case…closed.
Not only, Drunk and Drive kills.! Drunk and Dive also kills.