…
…
3 – 4 நாட்களாக தலைமறைவாக இருந்த ஜஸ்டிஸ் லோயா அவர்களின்
மகன் திரு.அனுஜ் என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை, மும்பை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து –
தன் தந்தையின் இறப்பை பற்றி, தனக்கோ, தங்களது குடும்பத்தினருக்கோ எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் –
அவரது இறப்பு விஷயத்தில் அனைத்தும் சரியாகவே நடந்திருக்கிறது என்றும் – அவரது தந்தை மாரடைப்பால் தான் இறந்தார் என்று தங்கள் குடும்பத்தினர் எந்தவித சந்தேகமும் இன்றி, உறுதியாக நம்புவதாகவும் கூறி இருக்கிறார்.
( முன்னதாக, இதற்கு மாறான கருத்தை, தொலைக்காட்சி பேட்டிகளில்
ஜஸ்டிஸ் லோயா அவர்களின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் கூறியது பற்றி இவர் எதுவும் கூறவில்லை…. அவர்கள் மனநிலை பிறழ்ந்து அப்படி கூறி இத்தனை குழப்பங்களை ஏற்படுத்தி விட்டார்கள் என்றும் சொல்லவில்லை… அதையும் சொல்லி இருந்தால், விஷயம் ஒருவழியாக முழுமை பெற்றிருக்கும்…. அதை எப்படி யோசிக்காமல் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை…)
மேலும், புலனாய்வுத்துறையின் மீதும், தன் தந்தையின் சக நீதிபதிகளின் மீதும் தங்கள் குடும்பத்திற்கு அளப்பரியா நம்பிக்கை இருக்கிறது என்றும்
தெரிவித்திருப்பதாக இன்று காலை செய்தி வெளியாகி இருக்கிறது.
வெறுமனே வாயில் சொன்னால் போதாது என்று அவருக்கு அறிவுரை
சொல்லப்பட்டதோ என்னவோ அதையே எழுத்து பூர்வமாகவும்,
கொடுத்து விட்டார்….
இப்படியாக ஜஸ்டிஸ் லோயா அவர்களின் மரணம் பற்றிய சர்ச்சைகள் ஒருவழியாக முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது… மன்னிக்கவும் – முடிவிற்கு வந்திருக்கிறது.
சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டபடியால்,
நமக்கும் இது பற்றி இனி எந்தவித சந்தேகமோ, குறையோ ….
இருக்க வழி இல்லை..
எனவே ஜஸ்டிஸ் லோயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு நாமும் சாந்தியடைவோமாக…




நெஞ்சக்குத் தேவை மனசாட்சி! – அதை
மோதி ஆட்களும் புதைச்சாச்சு! 😀
// ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள் உண்மையின் கண்களை மூடி வைப்பார் பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே மூடிய கண்களை திறந்து வைப்பார்….! //என்பதை பாேல … தற்காலிக ” மங்களமாக இருக்கட்டும் ” … நீதியின் கண்கள் திறக்கும் …?
அய்யா…! பலருக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு சந்தேகத்தை தீர்ப்பீர்களா …? ” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ” அவர்களுக்கு ஏன் இவ்வளவு ‘ முக்கியத்துவம் ‘…?
முதல் இரண்டு பாகங்களை படிக்கும் போதே, உங்கள் கதவையும் ஒரு கும்பல் குறி வைக்குமோ என பதற்றம் ஏற்பட்டது. இறைவன் உங்களை பரி பூரணமாக காப்பாற்ற வேண்டும். இந்திய அளவில் அதிகாரவர்க்கத்தை எதிர்த்தால் இது தான் நிலை, அது எந்த மாநிலமாக இருந்தால் என்ன ? நீதி நேர்மை எல்லாம் நாம் நாட்டை விட்டே ஓடிவிடும் போல. அதிகார மையம் அனைத்திலும் குஜராத்திகளே இருத்த படுகிறார்கள், விசுவாசமாக இருக்க வேண்டாமா ?இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் ஒரு செய்தி நமது பிரதமர் “இந்திய பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கபடுகிறது’ என்பதாக, என்ன சொல்ல ?
புது வசந்தம்,
// உங்கள் கதவையும் ஒரு கும்பல் குறி வைக்குமோ என பதற்றம் ஏற்பட்டது. //
எனக்கும் பயமுறுத்தல் வந்தது…3-ஆம் பாகம் எழுதி இருந்தால், அது செயலளவில் நிகழ்ந்திருக்கும்….
ஆனால், அதற்குள்ளாக – துவங்கிய இடத்திலேயே கதை முடிக்கப்பட்டு மங்களம் பாடி விட்டார்கள். இனி நம் அளவில் அந்த மிரட்டல்கள் தேவைப்படாது….
-உங்கள் பரிவுக்கு நன்றி நண்பரே.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அந்த 3-ம் பாகத்தில் இருக்கு உண்மை. அது வெளிவர வாய்ப்பில்லை.
இப்படித்தான் இவர்களுக்கு எதிரான அனைத்து உண்மைகளும் மெளனித்து போகின்றன, போய்விட்டன.
இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பத்திரிகைகள் என்றுமே அவர்கள் சார்புடையவைகள். இவர்கள் வெளியிடும் செய்திகள் உண்மை, உண்மயைத் தவிர வேறிருக்காது.
உலக வரலாற்றை பார்ப்போமானால் அநியாயக்காரர் அட்டூழியக்காரர்கள் சில காலம் நின்று ஆடிவிட்டு பின் அழிந்தேபோயுள்ளார்கள். இவர்கள் எவ்வளவு நாள். காலம் பதில் சொல்லும்.
நிர்வாகம், நாடாளுமன்ற விவகாரங்களில் நீதிபதிகள் தலையிடக் கூடாது: மத்திய சட்டத் துறை அமைச்சர் வலியுறுத்தல் – இது எப்படி இருக்கு ?
சாதிக் பாட்சா அவராகவே தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது மனைவியும் உறவினர்களும் சொன்னதைப் படித்திருக்கிறேன். சங்கர்ராமனும் அவராகவே தன்னை வெட்டிக்கொண்டார் என்றும் கேள்விப்பட்டேன். அதனால் அவருடைய கேசை அவரது மனைவியும் மகனும் தொடரவில்லை. பிரமோத் மஹஜனை, அவரது சகோதரரே சுட்டுக் கொன்றுவிட்டார் என்றுதான் முடிவானது.
போனவர்கள் போய்விட்டார்கள், இருப்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா? நம்ம நாட்டு நிலைமை இப்படி இருக்கிறது என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியிருக்கிறதா?
where is your face ….rumour mongers national enemy
அடிமைகள், ஜால்ராக்கள்,
கண்மூடிபக்தர்கள், வெறியர்கள் ;
திருத்தப்பட முடியாத பிறவிகள் – ஆகியோர் எந்த உண்மையையும்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
// இரண்டாம் இதயம்: “அதிகபட்சமா உயிர்போகும்… அவ்வளவுதானே!” //
https://www.vikatan.com/juniorvikatan/2017-dec-03/society-/136616-social-activists-pon-thangavel-sharing-experience.html நல்ல காரியம் இவரைப்பாேல செய்ய முயலுவாேம் …!
நம்ம நாடு இருக்கற இருப்புக்கு கணிதமேதை குமாரசாமி மாதிரி ஆளுங்க ஜட்ஜ் ஆவறதுதான் நல்லது. வாங்குனோமா, தீர்ப்பை சொன்னோமா, செட்டில் ஆனோமான்னு இருக்கணும். இல்லாமல் சினிமா நாட்டமை போல “நீதிடா நேர்மடா” ன்னு டயலாக் பேசுனா, இப்படித்தான் போட்டோ வைச்சு மாலை மாட்டீருவாங்க!
Dear Sir, I have been following the news about justice Loya’s mysterious death. The latest news is that the family of justice Loya are in undisclosed place, far from the eyes of anybody including the journalists. Caravan’s political editor in his tweet never mentioned about the details of the letter handed over to the bombay high court by the family. So far no news papers and tv channels shown this important letter and the contents of it. If this report is true, the media by this time, flash the news 24 x 7, as this is the news they want to give to the viewers which will help those powerful people to protect their skin. Therefore, if you kindly clarify in which media the contents of the letter mentioned, which was given by judge loya’s son to the court as per your claim in this report of yours.
Further to my above comment, i wish to add that caravan magazine political editor did mention that a letter was handed over to court by the family 8 days after the news was broken. But he too did not mention about the contents nor anybody anywhere mentioned the content of the letter.
Srinivasan,
Times of India has published this news without giving much
importance in a small area on 29th Nov. 2017.
As such You can take this as an authorised news item.
About its content – my above article deals with it.
with best wishes,
Kavirimainthan