…
…
திரு.ஸ்டாலின் அவர்கள், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் இல்லத்தில் வருமான வரி இலாகா சோதனை நடத்தியதாக தொடர்ந்து பேசியதையோட்டி, கோபமடைந்த சைதை
திரு.துரைசாமி, திரு.ஸ்டாலினுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறார்…..
…

…
————————
மு.க.ஸ்டாலினிடம் நான் 3 கேள்விகளை முன் வைக்கிறேன் –
1) சேகர் ரெட்டிக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா? இல்லையா? அவருடன் உங்களுக்கு நட்பு இருக்கிறதா? இல்லையா?
சேகர் ரெட்டிக்கும் ரெட்ஜெயிண்ட் பட நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
2) 2ஜி ஊழல் புகாரில் சிக்கிய ஸ்வான் நிறுவன அதிபர் ஷாகித்
பால்வாவை நீங்கள் 2 முறை சந்தித்து கலைஞர் தொலைக்காட்சிக்கு
ரூ.200 கோடி கொடுக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா இல்லையா? பால்வாவுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்த சாதிக் பாட்ஷா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சொல்வீர்களா?
3) ரூ.22 கோடி மதிப்புள்ள ஹம்மர் சொகுசு கார்கள் இறக்குமதியில்
உங்கள் மகன் உதயநிதி மற்றும் மு.க.அழகிரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் வீட்டிலும் மு.க.அழகிரி பண்ணை வீட்டிலும்
சி.பி.ஐ. சோதனை நடத்தியதா? இல்லையா? அந்த ஹம்மர் கார்
உதயநிதியிடம் எப்படி வந்து சேர்ந்தது?
இந்த 3 கேள்விகளுக்கும் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.
நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.
வருமான வரித்துறை என்னிடம் சோதனை நடத்தி நான் முறைகேடாக
பணம் சம்பாதித்திருக்கிறேன் என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால்
பொதுவாழ்வில் இருந்து நான் வெளியேறுகிறேன்.
அதேபோல சேகர் ரெட்டிக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
பணத்தொடர்பு உள்ளது என்பது உறுதியானால் நீங்கள் என்ன செய்ய
போகிறீர்கள்?
—————————————————–
திரு.சைதை துரைசாமி சவால் விட்டு, ஒரு வாரம் ஆகி விட்டது.
திரு.ஸ்டாலின் இது குறித்து எந்தவித பதிலோ, விளக்கமோ
இதுவரை கூறவில்லை…!!!
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்கள் க்யூவில், முதலில்
இடம் பிடித்திருக்கும் தளபதி, போயும் போயும் திரு.சைதை துரைசாமி
அவர்களுக்கு பயந்து இப்படி ஒதுங்கலாமா…?
சுடச்சுட பதில் கொடுக்க வேண்டாமா…?
திரு.ஸ்டாலின் அவர்களின் பதிலுக்காக, திரு.சைதை துரைசாமி
காத்திருக்கிறாரோ இல்லையோ, நாம் நிச்சயம் ஆவலுடன்
காத்திருப்போம்…!



பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களே. ரொம்ப வெள்ளந்தி சார் நீங்க.
சார் உங்களுக்கு ரொம்ப ஆசைதான்.
ஸ்டாலின் பதில் சொல்லமுடியாத விசயங்களுக்கெல்லாம் “இதற்க்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை”எனச்சொல்வதுண்டு.
அதுதான் இப்பவும் இதற்கு பதில்.
இத்துனை பதிவு எழுதுகிறீர்களே
அதென்ன சார் ஸ்டாலின்க்கு மட்டும் தனியாத் தரம்.
அதற்கு மட்டும் ஒரு பதிவு தாருங்கள்
வாழ்க வளமுடன்
சார் உங்களுக்கு ரொம்ப ஆசைதான்.
ஸ்டாலின் பதில் சொல்லமுடியாத விசயங்களுக்கெல்லாம் “இதற்க்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை”எனச்சொல்வதுண்டு.
அதுதான் இப்பவும் இதற்கு பதில்.
இத்துனை பதிவு எழுதுகிறீர்களே
அதென்ன சார் ஸ்டாலின்க்கு மட்டும் தனியாக தரம்.
அதற்கு மட்டும் ஒரு பதிவு தாருங்கள்
வாழ்க வளமுடன்
சைதை துரைசாமி அவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டு பல வாரங்களாகிவிட்டதே. அப்போவே நீங்கள் இடுகை போடுவீங்களோன்னு நினைத்தேன்.
கருணானிதி அவர்களை இந்த மாதிரி கேள்வி கேட்டால், ‘நானும் லாவணி பாட விரும்பவில்லை’ என்று கடந்துசென்றுவிடுவார். ஸ்டாலின் அவர்கள், ‘இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை’ என்று சொல்லிவிடுவார்.
கேட்ட மூன்று கேள்விகளும், ஸ்டாலினால் பதில் சொல்லமுடியாத கேள்வி. வாயைத் திறந்தால் மாட்டிக்கொள்ளும் கேள்விகள்.
இன்னொன்று இந்த இடத்தில் சொல்லலாம் என நினைக்கிறேன் (Deviate பண்ணலை). இந்த அரசியல்வாதிகள், வெளியில் வாய்ச்சவடால் விடுவது எல்லாமே வெற்று அரசியல் கோஷம்தான். அதற்கு அர்த்தம் ஒன்றும் கிடையாது. ‘மதுவிலக்கைக்’ கொண்டுவாருங்கள் என்று சொன்னால், அது ‘அரசியல் கோஷம்’ மட்டும்தான். அதை சீரியசா எடுத்துக்கிட்டு, ‘மதுவிலக்கு’ கொண்டுவந்தா, அவங்க கட்சி வரவு போயிடுமே. சரத்குமார் ஜெ. ஆதரவு நிலை, அதிமுக கூட்டணியில் இருந்தார், தேதிமுக விஜயகாந்த் அதிமுக கூட்டணியை சரமாரியாக எதிர்த்துவந்தார். ஆனால் சரத்குமாரும், விஜயகாந்த் மச்சான் சதீஷும் பிஸினெஸ் கூட்டாளிகள் (துபாயில் இருவரும் இந்த விஷயமாக சந்தித்துக்கொண்டனர்). இதுபோல்தான், அதிமுக தலைகளுக்கும் திமுக தலைகளுக்கும் பிஸினெஸ் டீல் நிறைய இருக்கும், இருவருக்கும் common ரெட்டிகள் இருப்பர். பொதுமக்கள்தான், திமுக, அதிமுக என்று பிரிந்து சண்டையிட்டுக்கொண்டிருப்பர்.
// (Deviate பண்ணலை).//
நன்றி புதியவன் சார் 🙂 🙂
”இந்த அரசியல்வாதிகள்”
இதில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் இன்னும் அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் பொருந்தும். எல்லாரையும் ஒன்று என்று சொல்லிக்கொண்டே ஒரு கட்சிக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிப்பதும் குறிப்பிட்ட சில வியாதிகளுக்காக பொங்கியெழுந்து வருவதும்…!
முதலில் வேஷமில்லாமல் இருப்போம். அரசியல் வியாதிககள் போலல்லாமல்.
Interesting observation.
பிசாத்து ….! வெறும் மூன்றே மூன்று கேள்விகள் . இதற்கெல்லாம் பதில் கூறனுமா …செயல் தலைவர் …? அவருடைய தகுதிக்கு குறைந்து ‘ சதம் ‘ கேள்விகளாவது கேட்க வேண்டாமா …? பயமா … ஹ..ஹ.ஹா … எங்களுக்கா ..!! நாங்க யாரு ” புறாவுக்கே பெல் ” அடிகிறவங்களாச்சே …. !!!
DMK and ADMK has to abolished from TN. The root cause for TN’s worst condition. MK and JJ spoiled the state
ரவிக்குமார் – தீதும் நன்றும் பிறர் தர வாரா. தமிழக மக்களை (இவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்த), இவர்களோடு கூட்டணியில் இருந்த அரசியல் கட்சிகளை முதலில் abolish செய்யவேண்டும். அவர்களால்தான் மாறி மாறி இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தன என்று சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்.