…
…
ஆங்கில பத்திரிகை “காரவான்” வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை
படிப்பவர்களை கலவரப்படுத்தும் பல கேள்விகளை எழுப்புகிறது…
காரவான் மற்றும் தி டெலகிராப் பத்திரிகைகளில் வெளியான
செய்தி கட்டுரைகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட விவரங்கள் கீழே –
2005-ஆம் ஆண்டில், குஜராத்தில் சொராபுதீன் என்பவரை தீவிரவாதி
என்று போலியாக சித்தரித்து என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக
எழுந்த புகாரை சிபிஐ விசாரித்தது. சொராபுதீன் வழக்கை விசாரித்த
சிபிஐ அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த
(தற்போதைய பாஜக அகில இந்திய தலைவர்…) திரு.அமீத் ஷாவை
கைது செய்தது. இந்த வழக்கு குஜராத்தில் தொடரப்பட்டால், சாட்சிகள்
மிரட்டப்படுவார்கள் என்று கருதப்பட்டு, உச்சநீதிமன்றத்தால்,
மும்பை சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கூடவே உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஆரம்பம் முதல் கடைசி வரை
ஒரே நீதிபதி விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்றும் உத்திரவு
பிறப்பித்தது.
இந்த சூழ்நிலையில் மே, 2014-ல் தேர்தலுக்குப் பின்னர், பாஜக அரசு
டெல்லியில் பொறுப்பேற்றது. அமீத் ஷா அவர்கள் பாஜகவின்
அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டின்
இறுதியில், டிசம்பரில், அமீத் ஷா மீதான குற்றச்சாடுகள் தள்ளுபடி
செய்யப்பட்டு, அவர் மும்பை சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக கடந்த வாரம் காரவான் ஒரு விவரமான கட்டுரையை
வெளியிட்டது. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே நீதிபதி விசாரித்து
தீர்ப்பளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டதற்கு மாறாக,
இந்த வழக்கை 3 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக
விசாரித்திருக்கிறார்கள்.
முதலில் விசாரித்த நீதிபதி ஜே.டி.உட்பட், உடல்நிலை சரியில்லை
என்று காரணம் காட்டி, தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல்
தவிர்த்த திரு.அமீத்ஷாவை கடுமையாக கண்டித்து 2014 ஜூன் 26-ந்தேதி
விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்திரவு
போட்டார். ஆனால் – விசாரணை தேதிக்கு ஒரு நாள் முன்னதாக
ஜூன் 25-ந்தேதியே அவர் புனே நீதிமன்றத்திற்கு ட்ரான்ஸ்வர்
செய்யப்பட்டு விட்டார்.
அடுத்து வந்த நீதிபதி திரு. பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா.
இவரும் திரு.அமீத் ஷாவிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டிருக்கிறார்.
விசாரணை நடந்துகொண்டிருக்கும் நாட்களில், டிசம்பர் 1-ந்தேதி,
மும்பையிலிருந்து நாக்பூருக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக
சென்ற ஜஸ்டிஸ் லோயா, நாக்பூரிலேயே திடீரென்று மரணமடைந்தார்.
அவர் மரணம் மாரடைப்பு காரணமாக நிகழ்ந்தது என்று அப்போது
சொல்லப்பட்டது.

இறந்து போன ஜஸ்டிஸ்ச் லோயா அவர்கள்
அதையடுத்து, 3-வதாக ஒரு நீதிபதி திரு. எம்.பி.கோசாவி என்பவர்
வந்தார்… ” இந்த வழக்கு பொய்யானது. அரசியல் காரணங்களுக்காக
போடப்பட்டது. என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் ”
என்று கோரி, திரு.அமீத் ஷா தாக்கல் செய்த மனுவை, அந்த 3-வது
நீதிபதி உடனடியாக, டிசம்பர் 15,17 ஆகிய இரண்டு நாட்களில் விசாரித்து
விட்டு, சிபிஐ வாதத்தை தொடரலாமென்று சொல்லி இருக்கிறார்….
சிபிஐ தரப்பு வக்கீல் ( (மத்தியில் ஆட்சி மாறிய நிலையில்…) வெறும்
15 நிமிடங்களில் தன் வாதத்தை முடித்துக் கொண்டார்.
இரண்டே வாரங்களில் வழக்கை விசாரித்து முடித்த அந்த 3-வது
நீதிபதி டிசம்பர் 30-ந்தேதி, வழக்கிலிருந்து திரு.அமீத் ஷாவை
விடுவிப்பதாக அறிவித்தார்…!
குஜராத்தில் வழக்கு நடத்தப்பட்டால், சாட்சிகள் பயமுறுத்தப்படுவார்கள்,
கலைக்கப்படுவார்கள், என்றெல்லாம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு,
வழக்கை குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றும் அளவிற்கு
தீவிரமாக செயல்பட்ட சிபிஐ –
திரு.அமீத் ஷாவை விடுதலை செய்ததை எதிர்த்து, எந்த வித அப்பீலும் செய்யவில்லை ( இடையில், மத்தியில் ஆட்சி மாறியதை இங்கு குறிப்பிட வேண்டும்…..!!! )
எல்லாம் முடிந்து விட்டது என்று சம்பந்தப்பட்டவர்கள்
நினைத்திருந்த சமயத்தில், இறந்துபோன ஜஸ்டிஸ் லோயா அவர்களின்
குடும்ப உறுப்பினர்கள் சிலர் நவம்பர் 2016- வாக்கில் இந்த
வழக்கைப்பற்றி பேசத்துவங்கினார்கள்….
காரவான் ஆங்கில இதழ், இதில் ஆர்வம் காட்டி, தொடர்ந்து தனிப்பட்ட
முறையில் விசாரணைகளை மேற்கொண்டது. ஜஸ்டிஸ் லோயாவின்
தந்தை, மனைவி, சகோதரி, சகோதரியின் மகள் மற்றும் நாக்பூரில்
ஜஸ்டிஸ் லோயா இறக்கும்போது தங்கியிருந்த இடம், சூழ்நிலை, அந்த
சமயத்தில் அங்கு இருந்தவர்கள் – ஆகியோரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டது..
இறுதியாக, இப்போது ஜஸ்டிஸ் லோயா இயற்கையாக
மரணமடையவில்லை… அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என்கிற
விஷயத்தை பல காரணங்களை முன்வைத்து வெளிக்கொண்டு
வந்திருக்கிறது.
( மீதி விவரங்களுடன் அடுத்த பகுதியில் தொடர்ந்து முடிக்கிறேன்…)



இடுகையைப் படித்தேன். இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும்போது மனது கலவரம் கொள்கிறது. நாம செய்தித்தாள்களில் படிப்பதற்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம் இருப்பதும் தெரிகிறது (இதனைப்போல் புலனாய்வு செய்து ஏதாவது சொன்னால்தான் உண்டு). இதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்குமே என்னால் வித்தியாசம் காணமுடியவில்லை. இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
// The Death Of Judge Loya Should Be Raised “In Parliament, Outside Parliament”: BJP Leader Shatrughan Sinha //
By AATHIRA KONIKKARA | 26 November 2017 http://www.caravanmagazine.in/vantage/death-judge-loya-raised-parliament-outside-parliament-bjp-leader-shatrughan-sinha …. சில தினங்களுக்கு முன்பே காரவன் செய்திகள் ” டெய்லி ஹண்ட் — தீக்கதிர் ” போன்றவை செய்திகள் வெளியிட்டு இருந்தன — மற்ற தமிழக செய்தித்தாள்கள் …. ? தற்போது தங்களின் தளத்தில் …. சத்ருக்கன் சின்ஹாவின் கூற்று பற்றி ….?
// “Even some of our media friends are also so influenced by some of the influential people in politics that they are not opening up, they are not coming out.” Sinha noted, “Certain channels and media have become sarkari darbaris”—the government’s mouthpieces—“and some of them are just throwing the money of the political masters.” // —- இதுதானே தற்போதைய நடைமுறை — ” பெய்டு நியூஸ் ” போடுபவர்கள் என்று தாங்கள் அடிக்கடி கூறுவது உண்மையிலும் – உண்மை … பேனா முனை என்பதெல்லாம், …. ? ஏதோ ‘ தூண் ‘ என்றெல்லாம் கூறுவது – வெறும் வாய் ஜாலம் தானே …?
கொலைகார பாவிகள்.
மதத்தைவைத்து மக்களை மடையர்களாக்கி இவர்கள் செய்யும் கொலை பாதகங்களை மறைக்கிறார்கள், பிழைக்கிறார்கள்.
இவர்களை ஆதரிப்பவர்களும் கொலை பாதகங்கள் செய்து பிழைப்பு நடத்த விளைபவர்களே. வேறு யார் இந்த மாபாவிகளை ஆதரிக்கமுடியும்.
தெய்வம் நின்று கொல்லும்.