டாக்டர் சு.சுவாமிக்கு “ராஜ” மரியாதை… !!! அனைத்தும் “பத்மாவதி” யின் அருள்…..!!!


ஜெய்பூரில், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அவர்களுக்கு
இணையாக, டாக்டர் சு.சுவாமிக்கு பானர்கள், ப்ளெக்ஸ் போர்டுகள்
எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன…

காரணம்….?

“பத்மாவதி” திரைப்படம் குறித்தும், நடிகை தீபிகா பதுகோன் குறித்தும்
அவர் அள்ளித்தெளித்திருக்கும் அமுத வார்த்தைகள் … !!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to டாக்டர் சு.சுவாமிக்கு “ராஜ” மரியாதை… !!! அனைத்தும் “பத்மாவதி” யின் அருள்…..!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    என்ன சொன்னார் என்று நீங்கள் எழுதாததுனால நெட்ல தேடவேண்டியதாகப் போய்விட்டது. அப்படி ஒரு செய்தியில் வாசகர் ஒருவர் எழுதியிருந்த பதில் இன்டெரெஸ்டிங் ஆக இருந்தது.

    matrvat para-daresu மாத்ருவத் பர தரேஷு
    para-dravyesu lostravat பர த்ரவ்யேஷு லோஸ்த்ரவத்
    atmavat sarva-bhutesu ஆத்மவாத் சர்வ பூதேஷூ
    yah pasyati sa panditah ய: பஸ்யதி ச பண்டிதா:

    “One who considers another’s wife as his mother, அடுத்தவர் மனைவியைத் தாயாகக் கருதுபவனும்
    another’s possessions as a lump of dirt அடுத்தவர்கள் பொருளைத் தூசாக எண்ணுபவனும்
    and treats all other living beings as he would himself, மற்ற எல்லா உயிர்களையும் தன் போல் கருதி நடந்துகொள்பவனும்
    is considered to be learned.” படித்தவன் என்று எண்ணப்படுகிறான்.

    ‘அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்”

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    ” பத்மாவதி ” யின் அருள் சு.சுவாமிக்கு மட்டுமில்லை … படத்தின் நடிகை மற்றும் இயக்குனரின் தலையை வெட்டி வருபவர்களுக்கும் தான் …!

    என் மனைவிக்கு வாக்கு அளிக்காவிட்டால் என்று மிரட்டுபவர்… தலையை வெட்டி வாருங்கள் எனபவர் …கை மற்றும் விரல்களை வெட்டுவேன் என்பவர் … பாேன்ற வீர தீர சூரர்களைப்பற்றியும் நினைக்காமல் இருக்க … மனசாட்சி மறுக்கிறது … !!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பிரனீஷ் – இந்த மாதிரி வீரர்களின் ‘ஜிஹாத்’தைப் படிக்கும்போது, (தலைக்கு 10 கோடி, மூக்கை அறுக்கவும், ‘காதலர் தினம்’ ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைப்போம் என்றெல்லாம்), எப்படி சட்டம் ஒழுங்கு இவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது என்று புரியவில்லை. இந்த மாதிரி ‘தீவிரவாதிகள்’போல் பேசுவதே சட்டத்திற்கு எதிரானது அல்லவா? ஏன் போலீஸ் உடனே எஃப்.ஐ.ஆர் போடக்கூடாது? யாராவது விளக்குவார்களா?

      • பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

        உங்களின் ” கை வந்த கலையை ” காட்டிவிட்டீர்களே … சபாஷ் … !திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்பது அருமையான.வரிகள் …!!

        • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

          சபாஷ் பிரனீஷ்,

          நம்புங்கள், இவர் ஆர்எஸ்எஸ்ஸையோ பாஜகவையோ சேர்ந்தவரில்லை…! இதற்கும் சத்தியமிட்டு பின்னூட்டமிடுவார் பாருங்கள்.

          அந்த கூட்டங்களுக்கே என்னதான் அம்மனமானாலும் அல்லது ஆக்கப்பட்டாலும் கொஞ்சம் கூட வெக்கம் இருந்ததே இல்லை.

          • suryajSurya's avatar suryajSurya சொல்கிறார்:

            எனக்குத் தெரிந்த வரை புதியவன் அவர்கள் BJP யை ஆதரித்து அவ்வப்போது எழுதினாலும், ஒரேயடியாக நடு நிலை பிறழ்ந்து எழுதுவதில்லை. நாகரீகமாகவே அவர் தன் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார். அவர் கருத்துக்களோடு நான் 100 சதவீதம் ஒத்துப் போவதில்லை. ஆனாலும் இவ்வாறு அவர் எதை எழுதினாலும் உள்நோக்கம் கற்பித்து அவரைத் தாக்குவது அழகல்ல. குறிப்பாக இந்தப் பதிவில் அவரைக் குற்றம் சொல்வது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    நண்பர்களே ….! // matrvat para-daresu மாத்ருவத் பர தரேஷு
    para-dravyesu lostravat பர த்ரவ்யேஷு லோஸ்த்ரவத்
    atmavat sarva-bhutesu ஆத்மவாத் சர்வ பூதேஷூ
    yah pasyati sa panditah ய: பஸ்யதி ச பண்டிதா: // …. இதை அப்படியே படிக்கலாமா .. உச்சரிப்பு மாறி விட்டால் எதுவும் ஏடா…கூடமா … ஆகி விடுமாே என்கிற பயம் … என்ன…செய்வது …வழிக்காட்டுங்கள் …!!!

  4. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    சு.சு.அவர்களுக்கு வெறியர்களை கவரும் வித்தை நன்றாக தெரிந்திருக்கிறது.
    கூடிய சீக்கிரம் மோடிஜியை கூட மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. சு.சு.அவர்களின் இறுதி குறிக்கோள் பிரதமர் நாற்காலி தான்.

  5. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    //எனக்குத் தெரிந்த வரை புதியவன் அவர்கள் BJP யை ஆதரித்து அவ்வப்போது எழுதினாலும், ஒரேயடியாக நடு நிலை பிறழ்ந்து எழுதுவதில்லை. //

    பரவாயில்லையே. புதியவன் சாருக்கும் ஒரு ரெக்கம்மண்டேஷனா ?
    கூடவே இந்த வார்த்தையையும் சேர்த்திருந்தால் ஆமோதித்திருப்போம்;

    ” இடுகை பாஜகவை /மோடிஜியை சீண்டுவதாக அமைந்திருந்தால் மட்டும் நைசாக
    திசை திருப்பி விடுவார். அவ்வளவு தான்.”

    சரி தானே புதியவன்சார் ? 🙂 🙂

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இளங்கோ – எனக்கு உங்களைப்போல் மோடிக் காய்ச்சல் இல்லை. நான் இடுகையைப் படித்திருந்தால், அதற்கு பின்னூட்டம் இடவேண்டும் என்ற உந்துதல் வந்தால் எழுதிவிடுகிறேன். சமயத்தில் பிஸியாக இருக்கும்போது, (சில சமயம் வாரங்களில்), மொத்தமாகப் படிக்க நேர்கிறது. அப்போதுதான் கருத்து விட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.

      ‘திசை திருப்புவது’ – ஆமாம். இது நான் பெரும்பாலும் நினைக்கின்ற பின்பற்றிய ஒன்று. இதன் காரணம், ‘இந்தப் பிரச்சனைக்காக இவர் மீது தவறு கூறுகிறார்களே, மற்ற எல்லோரும் எப்படி நடந்துகொண்டார்கள் என்று மேற்கோள் காட்டத்தான்’. பிறகு எனக்குத் தோன்றியது, ‘அப்படி ஒரு நிலை எடுத்து பின்னூட்டங்கள் அமைந்தால், யாரைப் பற்றியும் ஒரு செய்தியும் ஒரு விமர்சனமும் போடமுடியாது, அதனால் முடிந்த அளவு கொடுக்கப்பட்ட செய்தியை ஒட்டிய பின்னூட்டம் இடணும், அவசியமிருந்தா’. பார்க்கலாம், எவ்வளவுதூரம் இதனை நான் பின்பற்ற முடிகிறதென்று.

  6. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    // ஒரேயடியாக நடு நிலை பிறழ்ந்து எழுதுவதில்லை. // உண்மைதான் வெட்டுவது என்றவுடன் ” ஜிஹாத் ” என்று கூறி நடுநிலையை தக்க வைத்துக்கொண்டார் … !
    ” பத்மாவதி ” என்றவுடன் தற்போது அனைவருக்கும் நினைவுக்கு வருவது — பத்து கோடி என்பது தான் …

    இந்த இடுகை பதிவிற்கு திரு புதியவன் ஒரு மேற்கோள் காட்டி கருத்தை பதிந்திருக்கிறார் — பல நண்பர்கள் அவரை பா.ஜ . க . — ஆர் .எஸ்.எஸ். ஆதரவாளர் என்று கூறியிருக்கிறார்கள் — தற்போது அவர் மேலும் ” பரிணாம வளர்ச்சி ” அடைந்து இருப்பதை — அந்த மேற்கோளில் காட்டியிருப்பதை பார்த்தால் நன்கு புரியும் …

    அவர் ” ஒரு இனத்தை ” தூக்கி நிறுத்தவும் – தாங்கி பிடிக்கவும் தோதாக — ” ஸ்லோகம் மற்றும் திருக்குறள் ” போன்றவற்றை எடுத்தாண்டு இருக்கும் ஒரு மேற்கோளை தேடி எடுத்த்து – பதிவாக்கியிருப்பது – அவரது நடுநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு …

    என்ன ஒரு வருத்தம் என்றால் இந்த ” விமரிசனம் ” என்கிற தளம் ஆரம்பித்து இது நாள் வரையில் சாதி – மத பாகுபாடுகள் இல்லாமல் நல்ல – நாட்டுக்கு – மக்களுக்கு – பொதுநலத்திற்கு என்று பல இடுகை பதிவுகளை வெளியிட்டு வருகிறது — அதை வேறு திசையில் கொண்டுபோக சிலர் முற்படுவது — வேதனை அளிக்கிறது … இதற்கும் எதிர்மறையான கருத்துக்கள் வரலாம் — நீ .. யாரையா … அது பற்றி வேதனையடைய என்றுகூட கேட்கப்படலாம் — உண்மைதான் …

    தளத்தின் ” உரிமையாளருக்கு ” இல்லாத அக்கறை உனக்கேன் …. ? என்ன… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பாடல் ஒன்று — எமக்கு மனதிற்குள் இருந்துகொண்டு ” மனசை பார்த்துக்கோ நல்லபடி ” என்று எச்சரிப்பதால் வந்த வினை … ” உலகம் ஆயிரம் சொல்லட்டுமே – உனக்கு நீதான் நீதிபதி ” …. இது எல்லோருக்கும் பொருந்துமல்லவா … புதியவன் – உடபட …. ? இன விவாத தளமாகாமல் இருந்தால் … சரி …!!!

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பாமரன் செல்வராஜூ-உங்கள் கருத்து தவறு. கா.மை சார், சு.சுவாமி என்ன சொன்னார் என்று எழுதவில்லை. நான் அந்தச் செய்தியைப் படித்திருக்கவில்லை. கூகிளில் தேடியபோது கீழே உள்ள லிங்க் கிடைத்தது.

      http://www.firstpost.com/entertainment/padmavati-subramanian-swamy-questions-deepika-padukones-lecture-on-regression-4210547.html

      அதற்கு வந்திருந்த கருத்துக்களையும் படித்தபோது, நீலகாந்தா அவர்கள் ஒன்று எழுதியிருந்தார். அதன் அர்த்தம் புரியவில்லை என்றவுடன், அதனைத் தேடினேன். அர்த்தம் புரிந்து எழுதினேன். எழுதி முடிக்கும்போது திருக்குறளில் படித்தது ஞாபகம் வந்தது.

      இதில் உள் நோக்கம் இல்லை என்று உறுதியாக நான் சொல்லமுடியும். உங்களில் பெரும்பாலானவர்களைப் போல், ‘குறுகிய’ இடங்களில் ‘குறிப்பிட்டவர்களுடன்’ பழகியவனல்ல நான். பல இடங்களுக்குப் பயணிக்கிறவன் (வெளி’நாடுகளில்). எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களுடனும் வேலைபார்ப்பவன். நான் எழுதுவது, நான் படித்ததிலிருந்தோ அல்லது பார்த்ததிலிருந்தோ. நான் ‘மதங்களுக்கு’ என்னை அர்ப்பணித்தவனல்ல, ஆட்டுவிக்கப் படுபவனல்ல. எனக்குத் தவறு என்று தோன்றுவது, தவறுதான்.

      எனக்கு எது சரி என அப்போது தோன்றுகிறதோ, அதை எழுதுகிறேன். சில சமயம் அந்தச் சமயத்தில் ‘சரி’ என்று தோன்றும், பிறகு நாட்கள் கழிந்தபின்பு, ‘சரியில்லையோ’ என்று தோன்றும். அப்போது பின்னூட்டமும் மாறும். இதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. படித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு, புதிய செய்திகள் கிடைக்கும்போது, பழைய நிலைப்பாடு மாறத்தான் செய்யும். ‘தவறு’ என்றால் மாற்றிக்கொள்வதில் என்ன பிரச்சனை?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இன்னொன்று பாமரன் செல்வராஜு.

        ” ஒரு இனத்தை ” தூக்கி நிறுத்தவும் – தாங்கி பிடிக்கவும் தோதாக”

        இந்த வாக்கியம் தவறு. எந்த இனத்தையும் தூக்கி நிறுத்தவும் தாங்கிப்பிடிக்கவும் என்னைப்போன்றவர்கள் தேவையில்லை, எனக்கும் அந்த வேலையில்லை.

        நான் ஓரளவு தமிழைப் படித்தவன். இப்போ யோசிக்கிறேன், எது உங்களை மேலுள்ள மாதிரி எழுதத் தூண்டியிருக்கும்னு. நான் எழுதியதில் திருக்குறள் சொன்னதைத் தாண்டி வேறு எதுவும் சொன்னதில்லை.

        திருவள்ளுவருக்கு வேறு வேலையில்லாமல் ‘உலகப் பொதுமறை’ என்று நாம் கொண்டாடும் அந்த நூலில் ஒரு ‘இனத்தைப்’ பற்றி எழுதியிருப்பாரா? என்ன குறுகிய சிந்தனை உங்களுக்கு.

        ‘அந்தணர்’ என்பது இனமில்லை (பல்வேறு உரைகளைப் படித்ததனால் நான் அறிந்துகொண்டதைச் சொல்கிறேன். மனிதர்களில் ‘உயர்ந்தவர்’ என்பது, பிற உயிர்களிடம் இனிமையாக நடந்துகொள்பவர்கள். இதேபோல், அவர், ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்றும் எழுதியிருக்கிறார்.

        “அந்தணர் என்பது சாதிப் பெயரன்று; எல்லா உயிர்களுக்கும் அருள் நலம் செறிந்த தண்ணளியை வழங்கி ஒழுகி வாழ்பவரே அந்தணர்.” – இது குன்றக்குடி அடிகளாரின் உரை. தொல்லாசிரியர்கள் மணக்குடவர், பரிமேலழகர் போன்றோர், ‘துறவறத்தார்களைக் குறிக்க ‘அந்தணர்’ என்ற பதத்தை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்று கூறியிருக்கின்றனர்.

        விளக்கம் என் நோக்கத்தை உங்களுக்குப் புரியவைக்கிறதா?

        • paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

          // உங்களில் பெரும்பாலானவர்களைப் போல், ‘குறுகிய’ இடங்களில் ‘குறிப்பிட்டவர்களுடன்’ பழகியவனல்ல நான். // நாங்களெல்லாம் குறிகிய வட்டத்திற்குள்ளும் ஒரு சார்பு நிலையுடனும் குறிப்பிட்டவர்களுடன் தான் பழகிக்கொண்டு இருக்கிறோம் — உங்களை போன்று இல்லாமல் நாங்கள் குண்ட சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள் தான் … உங்களைப்போன்று அறிவுஜீவியாக நாங்கள் இல்லை என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம் உங்களின் மிக பரந்த மனது — நோக்கம் எல்லாம் நன்றாக புரிந்தது — புரிகிறது — அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் எழுத முடியும் — அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல …. !!! திருவள்ளுவர் — திருக்குறள் — என்பதையெல்லாம் அறிமுகப்படுத்தியதற்கு — நன்றி … உங்களின் விளக்கத்தை படித்தபின் எங்களின் சிந்தனை – விசாலமாகிவிட்டது அதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் … உங்களின் நோக்கம் எங்களுக்கு புரிந்தே விட்டது …. !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Selvarajan

      As I am travelling, I am unable to write in detail / in tamil.

      You need not have any such worries.
      This vimarisanam Blog will remain free from the influence of
      any caste / religion for ever.

      with all best wishes,
      Kavirimainthan

      • paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

        நன்றி அய்யா …. ! 2009 ம் வருடம் ஜூலை 29 ல் — முதல் இடுகை திரு .S.Ve.சேகர் ?? !!! என்பதில் ஆரம்பித்தது — அதன் துவக்கமே // S.Ve.சேகர் !!!
        அவர் தலப்பெழுத்தை பார்த்தவுடனே புரிந்து கொள்ளலாம் – தன்னை நம்புபவர் அல்ல – தலையெழுத்தை –
        அதிருஷ்டத்தை, ஜோசியத்தை – நம்புபவர் என்று !!! // என்று ஆரம்பித்ததில் இருந்து இன்றைய இடுகை // என்ன நடந்தது -??? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களை திரு.டிடிவி.தினகரன் சந்தித்தபோது….? // என்பது வரை ஓரளவு பதிவுகளை வாசித்திருக்கேன் — வெறும் வாசகனாகவே இருந்த நான் பல ஆண்டுகள் கடந்தபின் தான் ” பின்னூட்டமே ” இட ஆரம்பித்தேன் … முதல் இடுகையில் முதல் பின்னூட்டம் இட்ட நண்பர் திரு . ஜவகர் ஆவார் …. நல்ல ஆரம்பம் …

        எத்தனையோ நண்பர்கள் — பின்னூட்டங்கள் – மறுமொழிகள் – அறிவு சார்ந்த விவாதங்கள் போன்றவை மட்டுமின்றி — தங்களோடு நெருங்கி பழகிய நண்பர்களின் பதிவுகளை தொடர் இடுகையாக வெளியிட்ட பெருமையும் உங்களுக்கு — உண்டு ….இன்னும் பல சிறப்புகளோடு இருப்பது தொடர வேண்டும் என்கிற அவா தான் — என்னைபோன்றவர்களுக்கு — பல மாதங்களுக்கு முன்பே இதுபற்றி மின்னஞ்சலில் தெரிவித்து இருப்பதும் தாங்கள் அறிந்ததே ….

        தற்போது சில மாதங்களாக ஒருசில காரணங்களினால் தொடர் பின்னூட்டங்கள் இடுவதை தவிர்த்து இருப்பது தாங்கள் அறிந்ததே — சில நேரங்களில் மட்டுமே தலைகாட்டுகிறேன் — இன்றைய பின்னூட்டம் ” தங்களுக்கு ஒவ்வாததாக இருந்தாலோ — தவறாக இருந்தாலோ — மன்னித்துவிடுவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு — நன்றியுடன் பாமரன் செல்வராஜன் … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.