…
…
கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக, இந்த தளத்தில் திரு.டிடிவி தினகரன்,
துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்களை சந்தித்து பேசினார்
என்று எழுதி இருந்தோம். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது
குறித்து தெரிந்துகொள்ள நாம் எல்லாருமே ஆவலாக இருந்தோம்.
ஆனால், அப்போதைக்கு அதற்கு மேல் விவரம் எதுவும்
தெரியவில்லை…..
இப்போது, இந்த சந்திப்பு குறித்து திரு.குருமூர்த்தி அவர்களே சில
தகவல்களை வெளியிட்டிருக்கிறார்…
நமது வாசக நண்பர்களும் அந்த விவரங்களை தெரிந்துகொள்ள
விரும்புவார்கள் என்பதால், அந்த தகவல்களை, திரு.குருமூர்த்தி
அவர்களின் வார்த்தைகளிலேயே கீழே பதிந்திருக்கிறேன்.
————————————————————————————
…

…
டிடிவி தினகரன் என்னை சந்தித்ததாக கூறி, ” நான் நினைப்பதெல்லாம்
தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் ” என்று எதிர்பார்ப்பதாகவும், என்
விருப்பத்திற்கு ஏற்ப, தாங்கள் எப்படி செயல்பட முடியும் என்றும்
ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். என்னை சந்தித்ததை கூறி
இப்படிப்பேசி இருப்பதால், அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்று
துக்ளக் வாசகர்களுக்கு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னை அவர், கடந்த ஜனவரி 8-ந்தேதி, என் நண்பர் மூலமாக நேரம்
கேட்டு தனிப்பட்ட முறையில் லீலா ஹோட்டலில் சந்தித்தார்.
அந்த சந்திப்பில், முதலில், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளால்
ஈர்க்கப்பட்ட அவர், தனக்கு எப்படி ஆன்மிகத்தில் நாட்டமிருந்தது
என்றும், ஜெயலலிதா தான் தன்னை அரசியலுக்கு இழுத்ததாகவும் கூறினார்.
“என் சித்தி நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
நீங்கள் அதற்கு உதவ வேண்டும்.ஆலோசன கூற வேண்டும்.
நாணயமான அதிகாரிகள் யார் இருந்தாலும் கூறுங்கள்.
அவரை சித்தி உடனே நியமித்து விடுவார்” என்றெல்லாம் கூறினார்.
ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதே, “சித்தி தான் எல்லாம்” என்பதை
அவர் வெளிப்படையாகவே பேசினார். அவரது ஒரே வேண்டுகோள்,
“துக்ளக்” சித்தியை எதிர்க்கக்கூடாது என்பது தான். அதற்காக தான் என்னை அவர் சந்தித்தார்.
அப்போது நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். “உங்கள் குடும்பத்துக்கு மாஃபியா என்கிற ஒரு இமேஜ் இருக்கிறதே,
அதை மறுக்க முடியுமா..? என்று கேட்டேன்.
அவர் “முடியாது” என்று பதிலளித்தபோது, எனக்கு அவர் மீது மரியாதை
உருவானது.
“மாஃபியா என்கிற இமேஜுடன் நீங்கள் அதிகாரத்தில் இருக்க முடியுமா..?” என்று கேட்டேன். அதற்கு பதில் இல்லை.
மூன்றாவதாக, “நீங்கள் நாணயமான அதிகாரிகளின் பெயர்களை
கேட்கிறீர்களே, 50 ஆண்டு கால திமுக மற்றும் உங்கள் ஆட்சியில்,
எத்தனை பேர் அதுபோல் மிஞ்சி இருக்கிறார்கள்..?” என்று கேட்டேன்.
அதற்கும் பதில் இல்லை.
அடுத்ததாக, “இன்றைக்கு தமிழ்நாடு போலீஸில் பாதி பேர், அரசியல்,
கிரிமினல் பேர்வழிகளுக்கு பயந்தோ, கூட்டாளியாகவோ செயல்படுகிறார்கள் என்கிறார்களே, அதை மறுக்க முடியுமா..?” என்று கேட்டேன்.
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில், விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே
நாணயமானவர்கள் என்று மூத்த அதிகாரிகளே கூறுகிறார்களே..”
என்று கூறி, ” இந்த நிலையில் எப்படி உங்கள் சித்தி நல்ல ஆட்சியை
கொடுக்க முடியும்..?” என்று கேட்டேன். பதிலில்லை.
“உங்கள் சித்தி, சோனியா காந்தியைப் போல், அரசுப் பதவியை
நாடாமல் விலகியிருந்து, நல்ல பெயர் எடுத்து, உங்கள் குடும்பத்தின்
இமேஜை சரி செய்ய வேண்டும்” என்று கூறினேன்.
சந்திப்பின் முடிவில், ” உங்கள் குடும்பம் கட்சியையும், ஆட்சியையும்
கைப்பற்றுவதை துக்ளக் தொடர்ந்து தர்க்க ரீதியாக எதிர்க்கும். அதன்
கருத்துக்கு நீங்கள் மறுப்பு கூறினால், அதையும் பிரசுரிக்கும்.
உண்மைக்கு புறம்பாக எழுதியிருப்பதாக, நீங்கள் சுட்டிக்காட்டினால்
மன்னிப்பும் கூட கேட்கும். ஆனால், துக்ளக், தன்னுடைய கடமையில்
இருந்து வழுவாது” என்று கூறினேன்.
” நான் எல்லாவற்றையும் சித்தியிடம் கூறுகிறேன் ” என்று கூறி விடை
பெற்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில்,
அவர் எந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் இருந்ததை நான்
இங்கு நினைவு கூர வேண்டும். இது தான் நடந்தது.
இதில் எப்படி, ” தமிழ்நாடு நான் கூறுகிறபடி நடக்க வேண்டும் ” என்று
நான் எதிர்பார்ப்பதாக அவருக்கு தோன்றியது என்று தெரியவில்லை.
பி.கு. அவர் இப்படி ஒரு பேட்டி கொடுக்கவில்லை என்றால்,
கசப்பான பல உண்மைகளை தனிப்பட்ட முறையில் அவரிடம்
கூறியதை இங்கு கூற வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்காது.
————————————————————————————————————-



இதுபோன்று வெளிப்படையாக எழுதுவது (குருமூர்த்தி அவர்கள்), நல்லது என்றே நினைக்கிறேன். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கா.மை. சார்.
நான் பார்த்த (பேட்டிகளில்) வரையிலும், தினகரன் அவர்கள் நல்ல பிம்பத்தையே தருகிறார், ஆனாலும் படித்த வரையில், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்றே எனக்குப் படுகிறது. அவருக்கு தனிப்பட்ட அபிலாஷைகள் இருக்கிறது, கட்சியில் பெரிய ஆளாக வரணும் என்றும் நினைக்கிறார், மற்றவர்களை ஓரம்கட்டிவிடவும் செய்வார் (சசிகலா முதற்கொண்டு). எப்போது ஜெ. அவர்கள் தினகரனை ஓரம் கட்டினார்களோ (ஜெ.வுக்கு வராத தகவல்களா), அப்போதே ‘தினகரன்’ சரியானவர் இல்லை என்பதே என் எண்ணம்.
// அவரது ஒரே வேண்டுகோள்,
“துக்ளக்” சித்தியை எதிர்க்கக்கூடாது என்பது தான். அதற்காக தான் என்னை அவர் சந்தித்தார். // … என்ன ஒரு வினோத வேண்டுகோள் …?
துக்ளக் பத்திரிக்கை சோ காலத்தில் எதற்கும் அஞ்சாமல் — யாருக்கும் அடிபணியாமல் கருத்துக்களை வெளியிட்டது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்:–
// கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த பல அராஜகங்களை அப்போது துக்ளக்தான் விரிவாக எழுதியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது நடந்த போலீஸ் வன்முறை, திருச்சி கிளைவ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்கியது, சேலம் திராவிடர் கழக ஊர்வலத்தில் ராமர் படம் இழிவுபடுத்தப்பட்டது, வீராணம் குழாய் – சர்க்கரைக் கொள்முதல், பூச்சி –
மருந்து ஊழல்கள் எனப் பல விஷயங்கள் பற்றிய கட்டுரைகள் வாசகரிடம் செல்வாக்கு அதிகரிக்கச் செய்தன. பதிலுக்கு துக்ளக் அலுவலகம் தாக்கப்பட்டதும் இதழ் பறிமுதல் செய்யப்பட்டதும் ‘துக்ளக்’ நாடகத்துக்கு எதிர் நாடகத்தைச் சில திமுகவினர் அரங்கேற்றியதும் சோவுக்கு மேலும் செல்வாக்கைக் கூட்டின. …… அடுத்துவந்த நெருக்கடி நிலையின்போது சோ காட்டிய துணிச்சலும் விமர்சனமும் நடுத்தர வகுப்பு வாசகர்களிடையே பெரும் பிரமிப்பை ஏற்படுத்தின. //
இவ்வாறான தன்மைகொண்ட பத்திரிக்கையை தற்போது நடத்தும் திரு குருமூர்த்தியிடம் தினகரன் வேண்டுகோளாக வைத்தததை வெளிப்படுத்திய — அவருக்கு பாராட்டுக்கள் …. தொடரட்டும் .. நடுநிலை தவறாமல் ….!!!
if Mr Gurumoorthi reveal what happen during merger between eps and ops on the last day and how much money got befitted as a broker charge also to be inform.
மைலாபூர் கணக்கு பிள்ளை இதற்கு நியாயமாக பதில் சொல்லுவாரா?
திரு. குருமூர்த்தி அவர்கள் திரு. சோ அவர்களைப் போலவே பிரமிக்க வைக்கிறார் பாராட்டுகள்.
So, all the factors conform brokersers play in ruling india